BREAKING கொரோனா பாதிப்பு.: கோடிகளை கொட்டி கொடுத்த பவன் கல்யாண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகத்திற்கே எமனாக உருவெடுத்துள்ளது கரோனா வைரஸ்.

இந்த கொடிய நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்தியாவில் இதுபோன்ற எண்ணிக்கை அதிரித்த வண்ணம் உள்ளது.

இதனையடுத்து 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார் பிரதமர் மோடி.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்துஈடுபட்டு வருகின்றன.

பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கும் மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கும் பிரபலங்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவர் ஸ்டார் பவன் கல்யாண், கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு ரூபாய் 1 கோடி அளித்துள்ளார்.

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு தலா ரூபாய் 50 லட்சம் நிதியுதவியை அளித்திருக்கிறார்.

ஆக.. மொத்தம் ரூ. 2 கோடி நிதியுதவி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Corona Pandemic Pawan Kalyan donates Crores to Central and State Govts

லூசுங்க என்ன வேணா சொல்லிக்குங்கடா… அஜித் ரசிகர்களை கிழித்த கஸ்தூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை கஸ்தூரிக்கும், அஜித் ரசிகர்களுக்கும் ஏழாம் பொருத்தம் போல. இவர்கள் சமூக வலைத்தளங்களில் சண்டை இடாத நாட்களே இல்லை எனலாம்.

தற்போது கொரோனா பீதி இருக்கும்போதும் கூட இவர்களின் சண்டை நீடித்து வருகிறது.

இந்த முறையையும் கஸ்தூரியை அஜித் ரசிகர்கள் வம்பிழுக்க கடுப்பான கஸ்தூரி, காட்டமான ஒரு ட்வீட்டை போட்டுள்ளார்.

அதில்… ஊரையே மூடிட்டாங்க, இந்த #dirtyajithfans லூசுங்க வாயை மூடாது போல. என்ன வேணா சொல்லிக்குங்கடா.

நான் என் அறக்கட்டளையில் இருக்கற 60 குடும்பங்களுக்கு மூணு வாரத்துக்கு சோத்துக்கு வழி பண்ண ஓடுறேன். No time for nonsense. Everybody be safe. 21 days !!!!
என பதிவிட்டுள்ளார்.

Kasthuri scolds Thala fans as Dirty Ajith fans

தன் வீட்டை தற்காலிக மருத்துவமனையாக்க கமல் சம்மதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸை பாதிப்பில் இருந்து மீள இன்று முதல் இந்தியா முழுவதும் 144 உத்தரவை பிறப்பித்துள்ளார் பிரதமர் மோடி.

ஆனால் கொரோனா வைரசின் தீவிரம் புரியாமல் மக்கள் ஆங்காங்கே இன்னமும் சுற்றித் திரிந்துக் கொண்டிருக்கின்றனர்.

மத்திய மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகிறது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் தனது வீட்டை மருத்துவமனைக்கு தர தயாராக இருப்பதாக நடிகரும் மக்கள் மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது…

இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி, மக்களுக்கு உதவ நினைக்கிறேன். அரசின் அனுமதி கிடைத்தால், அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன். உங்கள் நான்’ என்று பதிவு செய்துள்ளார்.

அரசு சம்மதம் சொல்லுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

Corona Pandemic Kamal wants convert his home to hospital

பெப்சி-க்கு கமல் 10 லட்சம்; ஷங்கர் 10 லட்சம்; தனுஷ் 15 லட்சம் உதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பீதி இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

தினக்கூலியை நம்பியுள்ளவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநில அரசுகள் தங்களால் முடிந்த பண உதவியை கொடுக்க முன்வந்துள்ளது.

இந்த நிலையில் வேலையிழந்துள்ள சினிமா தொழிலாளர்களுக்கு, நடிகர் நடிகைகள் உதவிட வேண்டும் என பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் 10 லட்சம், தனுஷ் 15 லட்சம், இயக்குனர் ஷங்கர் 10 லட்சம், மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் 1 லட்சம் என பல்வேறு பிரபலங்கள் உதவி வருகின்றனர்.

Kamal Dhanush Shankar and Lokesh donates to FEFSI

உங்க அரசியல் இப்ப வேணாம்.; கமலை கண்டித்த கௌரவ் நாராயணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகமெங்கும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் இதனை கட்டுப்படுத்த இன்றுமுதல் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து கமல் கூறும்போது…

‛‛உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்க சொல்லும் நேரத்தில், அணிசேரா தொழிலாளர்கள் எங்கு பசியாற்றுவர் என்பதையும் கவனத்தில் கொள்க. பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல.

இந்திய நிதி நிலையை என்றும் காத்தவன் சிறு தொழில் செய்பவனே. அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம் என பதிவிட்டார்.

இந்த செய்தியை நம் தளத்தில் முதன்முதலாக பதிவிட்டு இருந்தோம்.

கொடூரமான கொரோனா பீதியில் கூட கமல் அரசியல் செய்கிறாரே என என கண்டனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் பிரபல இயக்குனர் நடிகருமான கௌதவ் கூறியுள்ளதாவது…

‛‛அன்புள்ள கமல் சார். அரசியல் பேசவும், அரசையும், அதிகாரிகளையும் எச்சரிக்கவும் இது நேரமல்ல. ஒரு நடிகராகவும் ஒரு அரசியல்வாதியாகவும் ஆழ்வார்பேட்டை மக்களின் தேவையை நீங்கள் நிறைவேற்றலாம்.

உங்களின் ரசிகனாக நான் தூங்கா நகரத்தில் அதை செய்கிறேன்” என கமலுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

தூங்காநகரம், சிகரம் தொடு, இப்படை வெல்லும் ஆகிய படங்களை இவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Gaurav Narayanan slams Kamal in Corona India lock down issue

Dear Kamal sir , this is not the time to talk politics or warn the government or authorities . Being an actor and an active politician u can take care of entire Alwarpet downtrodden people’s need. As a fan of urs I’m doing the same in thoonganagaram.

சிரஞ்சீவி & ராம் சரண் கூட்டணியில் இணையும் காஜல் அகர்வால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிரஞ்சீவி நடிக்கவுள்ள ஆச்சார்யா படத்தை அவரது மகன் ராம் சரண் தயாரிக்கவுள்ளார்.

இதனை கொரட்டலா சிவா இயக்குகிறார்.

இந்த படத்தில் நடிகைகள் தேர்வில் நிறைய நடிகைகள் பெயர்கள் அடிப்பட்டன.

ரெஜினா நடிப்பார் என கூறப்பட்டது. பின்னர் த்ரிஷா நடிக்கிறார் என செய்திகள் வந்தன.

தற்போது காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக காஜலும் அண்மையில் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இவையில்லாமல் பிருந்தா மாஸ்டர் இயக்கும் சினாமிகா படத்திலும், இந்தியன் 2 படத்திலும், துப்பாக்கி 2 படத்திலும் காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

Kajal Aggarwal to romance Chiranjeevi in Acharya movie

More Articles
Follows