அட நம்ம ஊர்ல ‘சினிமாவும் கற்றலும்’.: CORNER SEATS சர்வதேச திரைப்பட விழா

அட நம்ம ஊர்ல ‘சினிமாவும் கற்றலும்’.: CORNER SEATS சர்வதேச திரைப்பட விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட நம்ம ஊர்ல ‘சினிமாவும் கற்றலும்’.: CORNER SEATS சர்வதேச திரைப்பட விழா

*சென்னையில் துவங்கும் கார்னர் சீட்ஸ் சர்வதேச திரைப்பட விழா 2024 . சினிமாவும் கற்றலும் சங்கமிக்கும் பெருவிழா*

வீ எண்டர்டெயின்மென்ட்ஸ், பாரத் பல்கலைக்கழகத்தின் விசுவல் கம்யூனிகேஷன் துறை, மற்றும் ShortFlix OTT ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், கார்னர் சீட்ஸ் சர்வதேச திரைப்பட விழா 2024 ஐ பெருமையுடன் வழங்குகிறது.

இந்த ஆண்டு விழா, ஆகஸ்ட் 30 மற்றும் 31, 2024 ஆகிய இரு நாட்களிலும், காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

242 நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்களின் இத்தொகுப்பில், மாணவர்களுக்கு உலக சினிமா குறித்த பரந்த பார்வையை உருவாக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ShortFlix OTT உடன் இணைந்து செயல்படுவதன் மூலம், இந்த விழாவின் முக்கியமான அங்கமாக இத்திரைப்படங்கள் மாணவர்களுக்கு திரையிடப்படவிருக்கின்றன.

மேலும், இந்த நிகழ்வில் பல திரைப்படத் துறையின் பிரபலங்கள் பங்கேற்கிறார்கள், மாணவர்கள் சர்வதேச சினிமாக்களை பார்ப்பது மற்றும் விவாதிப்பது மூலம் அவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் உரையாடவிருக்கிறார்கள்.

எதிர்கால திரைப்பட இயக்குநர்களுக்கு ஊக்கமாக அமையும்.. இந்த உலக சினிமா விழாவில் அனைவரும் கலந்து கொள்ளலாம்

நடைபெறும் இடம்

பாரத் கலை அறிவியல் கல்லூரி,
தாம்பரம்

Welcome to the Corner Seats International Film Festival

VENUE –
Bharath Institute
Of Higher Education
& Research,
Department Of
Visual
Communication
Tiruvanchery,
Selaiyur, Chennai,

Corner Seats International Film Festival at Chennai

ஆகஸ்ட் 30-ல் ‘உழைப்பாளர் தினம்’..: ரசிகர்களுக்கு நம்பிக்கையூட்டும் ‘சந்தோஷ் நம்பிராஜன்’

ஆகஸ்ட் 30-ல் ‘உழைப்பாளர் தினம்’..: ரசிகர்களுக்கு நம்பிக்கையூட்டும் ‘சந்தோஷ் நம்பிராஜன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆகஸ்ட் 30-ல் உழைப்பாளர் தினம்..: தொழிலாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் ‘சந்தோஷ் நம்பிராஜன்’

சந்தோஷ் நம்பீராஜன் நடித்து தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உழைப்பாளர் தினம்’.

கர்நாடகாவைச் சேர்ந்த குஷி என்பவர் நாயகியாக மாலதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.. கேரளாவைச் சேர்ந்த மசூத் என்பவர் இசையமைப்பாளராக இணைந்திருக்கிறார்..

சிங்கப்பூர் துரைராஜ், ரஜேந்திரன், நம்பிராஜன், கடலூர் ஜான், பொண்ணுசாமி புருஷோத்தமன், பாண்டுதுரை, சரஸ் உள்ளிட்டோருடன் இணைந்து தயாரித்து இருக்கிறார்..

பிழைப்புக்காக வெளிநாடு சென்று (நரகத்தில்) வாழும் இந்தியர்களின் உணர்பூர்வமான கதையை சொல்ல வரும் படம் ‘ உழைப்பாளர் தினம்’

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு நம்பிக்கையூட்டும் படமாக உருவாகியிருக்கிறது “உழைப்பாளர் தினம்’.

இதில் முதல் பாதியில் காமெடி, காதல் என்று கலகலப்பாக செல்லும்..

இரண்டாவது பாதியில் வெளிநாட்டு தொழிலாளர்களின் வாழ்வியலை அழுத்தத்துடன் பதிவாகியிருக்கிறார் இயக்குனர் இயக்குனர் சந்தோஷ் நம்பிராஜன்

இதன் கிளைமாக்ஸ் யாரும் எதிர்பார்க்காத அழகான திருப்பத்துடன் முடிவடைகிறது..

இந்த நிலையில் இந்த படம் நாளை ஆகஸ்ட் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Uzhaippalar dhinam movie news

FOUR SIGNAL : ஷேர் ஆட்டோ டிரைவராக மாறிய நடிகர் புகழ்

FOUR SIGNAL : ஷேர் ஆட்டோ டிரைவராக மாறிய நடிகர் புகழ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

FOUR SIGNAL : ஷேர் ஆட்டோ டிரைவராக மாறிய நடிகர் புகழ்

*R.S.மணிகண்டன் மற்றும் மகேஸ்வரன்கேசவன் தயாரிப்பில் மகேஸ்வரன்கேசவன் இயக்கத்தில் புகழ் நாயகனாக நடிக்கும் ‘FOUR சிக்னல்’*

*காதலும், உணர்வுகளும் கலந்த கலகலப்பான திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு தயாராகி வருகிறது*

ஶ்ரீ லக்ஷ்மி சண்முகநாதம் ஃபிலிம்ஸ் மற்றும் கேசவ் புரொடக்ஷன்ஸ் பேனர்களில் R.S.மணிகண்டன் மற்றும்
மகேஸ்வரன்கேசவன் இணைந்து தயாரிக்க மகேஸ்வரன்கேசவன் இயக்கத்தில் ‘விஜய் டிவி’ புகழ் கதையின் நாயகனாக அறிமுகம் ஆகும் ‘Four சிக்னல்’ திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

அறிமுக இயக்குநரான மகேஸ்வரன்கேசவன், காதலும், உணர்வுகளும் கலந்த கலகலப்பான திரைப்படமாக ‘Four சிக்னல்’ படத்தை உருவாக்கி உள்ளார்.

நகரங்களில் வசிக்கும் வெகு ஜனங்கள் வெகுவாக பயன்படுத்தும் எளிய போக்குவரத்தான ஷேர் ஆட்டோவை சுற்றி இந்த கதை சுழல்கிறது.

சென்னையின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு தினமும் ஷேர் ஆட்டோவில் செல்லும் பயணிகளுக்கும் அதன் ஓட்டுநருக்கும் இடையில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பாக உருவாகியுள்ள ‘Four சிக்னல்’ திரைப்படத்தை வரும் அக்டோபர் மாதம் தீபாவளிக்கு வெளியிட படக்குழு தயாராகி வருகிறது.

அருவி திருநாவுக்கரசு, கல்லூரி வினோத், லொள்ளு சபா சேஷு, ஷர்மிளா, விஜய் ஆதிராஜ், யூடியூபர் காத்து கருப்பு கலை உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்க, A.J அலி மிர்சாக் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மனிதர்களின் அந்தரங்க உணர்வுகளையும் யதார்த்தங்களையும் உள்ளடக்கிய ரொமான்ஸ் டிராமாவாக உருவாகியுள்ள ‘Four சிக்னல்’ திரைப்படத்திற்கு பாலா பழனியப்பன் ஒளிப்பதிவு செய்ய, பிரியன் எடிட்டிங் செய்துள்ளார்.

படம் குறித்து பேசிய இயக்குநர், “எளிய மக்களின் வாழ்க்கையில் நடக்கும் தினசரி நிகழ்வுகளின் சுவாரஸ்ய தொகுப்பாக ‘Four சிக்னல்’ இருக்கும். தரமான திரைப்படங்களை எப்போதும் ஆதரிக்கும் தமிழ் ரசிகர்கள் இந்த திரைப்படத்தையும் ஆதரிப்பார்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன்,” என்றார்.

TV Actor Pugazh plays protagonist in Four Signal

சினிமாவை அடுத்து சின்னத்திரையிலும் கலக்கும் நடிகர் துரை. சுதாகர்

சினிமாவை அடுத்து சின்னத்திரையிலும் கலக்கும் நடிகர் துரை. சுதாகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவை அடுத்து சின்னத்திரையிலும் கலக்கும் நடிகர் துரை. சுதாகர்

சின்னத்திரையில் கலக்கும் களவாணி – 2 வில்லன்
———————————————
களவாணி-2 படத்தில் வில்லனாக அறிமுகமானவர் துரை.சுதாகர்

உலகின் மிகப்பெரிய தொழிலதிபர்களுள் ஒருவரான எலன் மஸ்க், இவர் கதாநாயகனாக நடித்த தப்பாட்டம் படத்தை பகிர்ந்ததால் உலகமெங்கும் டிரென்ட் ஆனார் துரை.சுதாகர்.

மேலும் அதர்வா மற்றும் ராஜ்கிரன் இணைந்து நடித்த ‘பட்டத்து அரசன்’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் துரை சுதாகர்..

சினிமாவை தொடர்ந்து தற்போது சின்ன திரை சீரியல்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் இவர்.

தற்பொழுது சன் தொலைக்காட்சியில் மூன்று முடிச்சு என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள இவருடைய நடிப்பு சின்னத்திரை ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறார்..

Durai Sudhakar in tv Serial Moondru Mudichi

அரசியல் திரில்லர் படத்தை தமிழர்களுக்காக உருவாக்கிய மலையாளிகள்

அரசியல் திரில்லர் படத்தை தமிழர்களுக்காக உருவாக்கிய மலையாளிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரசியல் திரில்லர் படத்தை தமிழர்களுக்காக உருவாக்கிய மலையாளிகள்

ஒரு மலையாளத் திரைப்படக் குழுவினர் தமிழில் உருவாக்கி இருக்கும் அரசியல் த்ரில்லர் ‘சேவகர்’

முழுக்க முழுக்க ஒரு மலையாளத் திரைப்படக் குழுவினர் தமிழின் மீது நம்பிக்கை வைத்து உருவாக்கி உள்ள திரைப்படம் தான் ‘சேவகர்’ இது ஓர் அரசியல் த்ரில்லராக உருவாகியுள்ளது.

‘சேவகர்’ படத்தில் பிரஜின், ஷகானா , போஸ் வெங்கட், ஆடுகளம் நரேன், மதுரை சரவணன், உடுமலை ராஜேஷ், ஹீமா சங்கரி, ரூபா, சுனில், பாலு, ஷாஜி கிருஷ்ணா, சாய் சங்கர், ஜிஷ்னு ஜித் , மனோ, ஜமீன்குமார், ஷர்புதீன், சந்துரு,ராஜ்குமார் நடித்துள்ளனர்.

இப்படத்தை சந்தோஷ் கோபிநாத் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். இசை ஆர் டி மோகன். ஒளிப்பதிவு பிரதீப் நாயர், படத்தொகுப்பு ரஞ்சித், கலை இயக்கம் ஸ்ரீகுமார் ,நடனம் ரேவதி ராவ், பாடல்கள் ராஜேஷ் முருகன், வேலன் ராஜ், அன்பழகன்.. சவுண்ட் இன்ஜினியர் கதிர். தயாரிப்பு மேற்பார்வை சதீஷ் பாலக்காடு.

சில்வர் மூவிஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ராஜன் ஜோசப் தாமஸ்,தயாரித்துள்ளார். அவருடன் சுனில் குமார் பி ஜி ,இயக்குநர் சந்தோஷ் கோபிநாத் இணைந்துள்ளனர்.

நாட்டில் எங்கு அநியாயம் அக்கிரமம் நடந்தாலும் துணிந்து நின்று தட்டிக் கேட்கும் ஒருவராக கதாநாயகன் பிரஜின். அவருக்கு உடன் நின்று கைகொடுக்க நான்கு நண்பர்கள் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் அங்கே அனைத்து அட்டூழியங்களும் செய்து கொண்டிருக்கும் அரசியல்வாதியாக ஆடுகளம் நரேன் இருக்கிறார். அவருக்குத் துணை போகும் காவல் துறை அதிகாரிகள் இருக்கிறார்கள். உற்று நோக்கிய போது அரசியல்வாதிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இந்த அநியாயத்தின் பின்னணியில் ஓர் இணைப்புப் பின்னல் இருப்பது புரிகிறது. இதைக் கண்டு நாயகன் பிரஜின் குமுறுகிறார்.

தன் இயல்புப்படி அநியாயங்களைத் தட்டிக் கேட்கும் பிரஜின், ஒரு மக்கள் சேவகனாக இருக்கும் தனது நீதியின் பாதையில் குறுக்கிடும் தீயசக்திகளை அழிக்க நினைக்கிறார். அப்போது போலீசையும் எதிர்த்துத் தாக்க வேண்டிய சூழல் வருகிறது.

இதனால் அவருக்குப் பல வகையில் தொல்லைகள். அவரைக் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். அப்படிப்பட்ட அவருக்குக் காவல்துறையில் இதயம் உள்ள ஒருவரின் புரிதல் கிடைக்கிறது.

அப்படி வரும் ஒரு காவல் அதிகாரி தான் போஸ் வெங்கட். அதன் பிறகு கதையில் ஏற்படும் திருப்பங்கள் என்ன என்பதைச் சொல்லும் படம் தான் இந்த சேவகர்.

இப்படத்தைத் தயாரிப்பாளர் ராஜன் ஜோசப் தாமஸ் தயாரித்துள்ளார். இவர் அமெரிக்காவில் இருக்கிறார்.

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், சென்னையில் சில காலம் வாழ்ந்தவர். திரைப்படங்கள் மீது அவருக்கு அளவு கடந்த ஆர்வம் உண்டு. பால்ய வயதிலேயே ஏராளமான திரைப்படங்களை ரசித்துப் பார்த்ததுண்டு.திரைப்படங்களுக்கான சுவரொட்டிகளைக்கூட ரசித்து ரசித்துப் பார்த்தவர்.

தானும் ஒருநாள் படம் தயாரித்து தனது பெயரும் இடம் பெற்றுள்ள போஸ்டர் ஒட்டப்பட வேண்டும் என்று கனவு கண்டுள்ளார். தனது உலகியல் தேவைகளுக்காகப் பொருளீட்டுவதற்காக அமெரிக்கா சென்றார்.

தனது நண்பர் சந்தோஷ் கோபிநாத் படம் இயக்க இறங்கிய போது அவருக்குக் கை கொடுத்து உதவ முடிவெடுத்து, தயாரிப்பாளராகியுள்ளார்.

அதன் வழியே தனது பால்ய காலத்துக் கனவையும் மீட்டு நிறைவேற்றிக் கொண்டுள்ளார் எனலாம்.அப்படித்தான் உருவானது ‘சேவகர்’ திரைப்படம்.இந்தப் படத்தில் பிரசன்னா பாடியுள்ள வா வா தமிழா, பாடல், மற்றும் இரண்டு பாடல்கள் படம் வெளியான பின் பேசப்படும்.

இப்படத்தில் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உட்பட படக்குழுவின் பெரும்பாலான உறுப்பினர்களும் கேரளத்தில் இருந்து வந்து படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்,முழுக்க முழுக்க தென்காசி சுற்றுவட்டாரத்தில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.

தாய்மொழி மலையாளமாக இருந்தாலும் தமிழில் புதிய முயற்சிகளுக்கு கிடைக்கும் வரவேற்பைக் கருத்தில் கொண்டு இந்தப் பட முயற்சியில் இறங்கி வெற்றிகரமாக
‘சேவகர்’ படத்தை முடித்துள்ளது இப்படக்குழு.படத்திற்கான மெருகேற்றும் பணிகள் நடந்து வருகின்றன விரைவில் ‘சேவகர்’ வெளியாகியுள்ளது.

Malayalam team political thriller Tamil titled Sevakar

முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை வென்ற ராமச்சந்திரன்

முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை வென்ற ராமச்சந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை வென்ற ராமச்சந்திரன்

மலையாள இயக்குநர் அனில் இயக்கத்தில் சவுந்தரராஜா கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‘சாயாவனம்’.

இந்தப் படத்தில் தேவானந்தா, அப்புக்குட்டி, சந்தோஷ் தாமோதரன், ஜானகி, வெற்றிவேல் ராஜா உட்பட பலர் நடிக்கின்றனர்.

இடைவிடாது மழை பெய்யும் மலைப்பகுதியில் ஒரு பெண் எதிர்கொள்ளும் சவால்கள்தான் படத்தின் மையக்கரு.

மலை, மழை மற்றும் காடுகளின் பின்னணியில் இந்தப் படம் உருவாகியுள்ளது. பெரும்பாலான காட்சிகள் சிரபுஞ்சியில் படமாக்கப்பட்டுள்ளன.

எல் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு அருள் இ சித்தார்த் எடிட்டிங் செய்துள்ளார். பாலி வர்கீஸ் இசையமைத்துள்ளார்.

தாமோர் சினிமா சார்பில் சந்தோஷ் தாமோதரன் தயாரிக்கும் இந்தப் படம் கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா உட்பட பல்வேறு பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில் தனது முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவதற்கான விருதை வென்றுள்ளார் எல் ராமச்சந்திரன்.

இந்த விருது விழானது இரண்டாவது தமிழ்நாடு திரைப்பட விழா ஆகஸ்ட் 10 – 19 தேதிகளில் நடைபெற்றது.. International Narrative Feature என்ற பிரிவில் இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

L Ramachandran won best cinematographer for Saayavanam

தனது முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை வென்றார் எல். ராமச்சந்திரன்

Congratz DOP @lramachandran 🎥

.@soundar4uall & #DevanandaSS starring #SAAYAVANAM 🌳#சாயாவனம் 🌳

Prod by @santoshdamodar
Directed by #AnilBabu
Music @polyvarghese
Editor @editorsiddharth

——-

More Articles
Follows