அஜித் பாடலை தன் படத்திற்கு டைட்டிலாக்கிய ‘குக் வித் கோமாளி’ அஸ்வின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பல பிரபலங்கள் சினிமாவில் நடிக்கின்றனர்.

இதில் பிரபலமான ஷிவாங்கி என்பவர் சிவகார்த்திகேயன் உடன் டான் படத்தில் நடித்து வருகிறார்.

அதேபோல் பவித்ரா ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் புதிய படத்தில் காமெடியன் சதீஷூக்கு ஜோடியாக நடிக்கிறார்.

அந்த வரிசையில் தற்போது அஸ்வினும் இணைந்துள்ளார்.

அறிமுக இயக்குநர் ஹரி இயக்கத்தில் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தின் மூலம் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்த படத்திற்கு ‘என்ன சொல்ல போகிறாய்’ என டைட்டில் வைத்துள்ளனர். இது அஜித்தின் சூப்பர் ஹிட் பாடலின் வரியாகும். (படம் கண்டுக் கொண்டேன் கண்டுக் கொண்டேன்)

இந்த படத்தில் புகழ் காமெடி கேரக்டரில் நடிக்க இருக்கிறார்.

மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது.

Cooku with comali Ashwin new film title revealed

தமிழகத்தை மூன்றாக பிரித்த கொரோனா ஊரடங்கு..; இன்று ஜூன் 28 முதல் ஜூலை 5 வரை என்னென்ன இயங்கலாம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா ஊரடங்கு விதிமுறைகள் இன்று ஜூன் 28 முதல் அமலுக்கு வந்துள்ளது.

கொரோனா பரவல் தன்மையை அடிப்படையாக வைத்து தமிழக மாவட்டங்களை 3 வகையாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று ஜூன் 28 முதல் ஜூலை 5 வரை என்னென்ன இயங்கலாம்..? என்பதை பார்ப்போம்

வகை 1 : கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர்.

வகை 2 :

இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர்,
அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர், விருதுநகர்.

வகை 3 : சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு

ஜுலை 5 வரை ஊரடங்கு கட்டுபாடுகள்..:

வகை 1 இல் உள்ள 11 மாவட்டங்களில் தேநீர் கடைகள் காலை 6-இரவு 7 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி.

கட்டுமானப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் காலை 9- இரவு 7 மணி வரை செயல்படலாம்.

அனைத்துத் தனியார் அலுவலகங்கள், நிறுவனங்களில் 50% பணியாளர்களுடன் இயங்கலாம்.

அரசு பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் காலை 6 முதல் இரவு 9 மணி வரை நடைபயிற்சிக்காக மட்டும் திறக்கப்படும். மேலும் மின்பொருட்கள், கல்வி புத்தகங்கள், பாத்திரக்கடைகள் உள்ளிட்டவை காலை 9- இரவு 7 மணிவரை செயல்பட அனுமதி.

வகை 2 மற்றும் 3 ஆகிய 27 மாவட்டங்களில் துணிக்கடை மற்றும் நகைக்கடைகள் இயங்கலாம்.

வகை 2 மற்றும் 3 ஆகிய இரண்டையும் சேர்த்து மொத்தம் 27 மாவட்டங்களில் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இந்த 27 மாவட்டங்களிலும் 45 நாட்களுக்குப் பிறகு போக்குவரத்து சேவை தொடங்கியது.

வகை 3இல் உள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்கனவே பேருந்து சேவை தொடங்கப்பட்ட நிலையில் தற்போது வகை 2 இல் உள்ள 23 மாவட்டங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கலாம்.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இந்த மாவட்டங்களில் வணிக வளாகங்களை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

கோயில்களில் காலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி.

இந்த 27 மாவட்டங்களில் திருமணம் சார்ந்த பயணத்திற்கு இ-பாஸ் அல்லது இ-பதிவு தேவையில்லை.

இந்த மாவட்டங்களில் அருங்காட்சியகங்கள், தொல்லியல் சின்னங்கள், அகழ் வைப்பகங்கள் காலை 10- மாலை 5 மணி வரை திறந்து இருக்கும்.

TN extends lockdown upto july 5th

நயன்தாராவுடன் திருமணம் எப்போது.? விக்னேஷ் சிவன் பதில பாருங்க.. நம்புற மாதிரியா இருக்கு.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நயன்தாராவின் காதல் இந்த தென்னிந்தியாவே அறிந்த ஒன்றுதான்.

பாஸ்.. பாஸ்.. நீங்க எந்த காதலைப் பத்தி சொல்றீங்க..?

அட இப்ப இருக்கும் காதல் பத்திதான் பாஸ்..

போற போக்குல பிரபுதேவா சிம்பு உள்ளிட்டோரை காதலித்தார் நயன்தாரா. ஆனால் தற்போது இருக்கும் விக்னேஷ் சிவன் காதல் கன்னித்தீவு கதையாக நீண்டு கொண்டே செல்கிறது.

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் நயன்தாராவுடன் திருமணம் எப்போது..? என விக்னேஷ் சிவனிடம் கேட்டுள்ளார்.

அதற்கு விக்கி பதிலளிக்கையில்… ‘திருமணம் என்றால் அதிக செலவாகும், எனவே அதற்காக நாங்கள் தற்போது பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறோம். அதுமட்டுமின்றி கொரோனா பிரச்சினை தீர்ந்தவுடன் தான் திருமணம்’ என கூறியுள்ளார்.

தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது நயன்தாரா தான். விக்னேஷ் சிவனும் இரண்டு படங்களை தயாரித்தும் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

கோடிகளில் புரளும் இவர்கள் திருமணத்திற்கு பணம் சேர்த்து வருவதாக கூறும் பதில் நம்புற மாதிரியா இருக்கு..?

மேலும் மற்ற கேள்விகளுக்கு பதிலளிக்கையில்…

நயன்தாராவின் ரகசியம் என்னவென்று கேட்டதற்கு..?

’இரவு டின்னர் முடிந்ததும் அவரே அனைத்து பாத்திரங்களையும் கழுவி வைப்பார்’

நீங்கள் நயன்தாராவுக்கு கொடுத்த முதல் பரிசு என்ன? என்ற கேள்விக்கு…

’தங்கமே பாடல்’

இவ்வாறு பதில் அளித்தார் விக்னேஷ் சிவன்.

Vignesh Shivan talks about his marriage

ரிதுவர்மா அபர்ணா சிவாத்மிகா ஆகியோருடன் கூட்டணி..; அதிர்ஷ்டக்கார அசோக் செல்வன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் அசோக் செல்வனுடன் நடிகைகள் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, சிவாத்மிகா நடிக்கும் படத்தை அறிமுக இயக்குநர் ஆர். கார்த்திக் இயக்குகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை வயகாம் 18 ஸ்டூடியோஸும், பெண்டெலா சாகரின் ரைஸ் ஈஸ்ட் எண்டெர்டெய்ன்மெண்டும் இணைந்து தயாரிக்கின்றனர்.

முன்னணி ஒளிப்பதிவாளர் ஜார்ஜி சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசையமைக்கிறார்.

இன்று பூஜையுடன் படப்பிடிப்பு இனிதே துவங்குகிறது.

தொழில்நுட்பக் குழு விவரம்

தயாரிப்பாளர் – ஸ்ரீனிதி சாகர் (ரைஸ் ஈஸ்ட் எண்டெர்டெய்ன்மெண்ட்), வயகாம் 18 ஸ்டூடியோஸ்
இயக்குநர் – ஆர். கார்த்திக்
ஒளிப்பதிவு – ஜார்ஜ் சி வில்லியம்ஸ்
இசை – கோபி சுந்தர்
கலை – எஸ் கமலநாதன்
படத்தொகுப்பு – ஆண்டனி
சண்டைப் பயிற்சி – திலீப் சுப்பராயன்
எக்ஸிகுயுடிவ் புரொடுயுசர் – S.வினோத் குமார்
ஆடை வடிவமைப்பு – நவதேவி ராஜ்குமார்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

Viacom18 Studios joins hands with Rise East Entertainment for a new movie starring Ashok Selvan

மதிய உணவு திட்டத்தில் வாழைப்பழம்..; அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருச்சியில் பள்ளி மாணவிகள் 3200 பேருக்கு விலையில்லா புத்தகங்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது…

“தமிழகத்தில் பள்ளி கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து வருகிறேன்.

இந்த அறிக்கையினை வரும் ஜூலை 1ஆம் தேதி தமிழக முதல் அமைச்சரிடம் சமர்ப்பிக்க உள்ளேன்.

இதில்… “வாழை விவசாயிகள் வாழ்வாதாரம் செழிக்கும் வகையில் மாணவர்களின் மதிய உணவு திட்டத்தில் வாழைப்பழம் சேர்க்கவும் ஆதிதிராவிட பள்ளி மற்றும் அரசுப்பள்ளிகளில் மாணவ சேர்க்கையினை உயர்த்துவது குறித்தும் திட்டமிட்டுள்ளோம்.”

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

Banannas will be included in the mid day meal scheme says minister

40 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் பெண் அமைச்சர்.; இருவருக்கும் ஒரு ஒற்றுமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கடந்த மே 7ஆம் தேதி புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார்.

சுமார் 2 மாதங்களுக்கு பிறகு இன்று ஜூன் 27ஆம் தேதி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 5 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்த அமைச்சர்கள் பட்டியலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லட்சுமி நாராயணன், ஜெயக்குமார் மற்றும் சந்திர பிரியங்கா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

பாஜக சார்பில் நமச்சிவாயம் மற்றும் சாய் சரவணன் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

40 ஆண்டுகளுக்கு பிறகு பெண் சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா என்ற பெண் ஒருவர் புதுச்சேரி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.

இவருக்கு முன்னதாக 1980ஆம் ஆண்டு காங்கிரஸ் திமுக கூட்டணியில் ஆட்சி நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரேணுகா அப்பாத்துரை என்பவர் அப்போதைய கல்வி அமைச்சராக இருந்தார்.

அவருக்குப் பிறகு 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு பெண் உறுப்பினருக்கு என்‌.ஆர்.காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் இடமளித்துள்ளது.

ரேணுகா அப்பாத்துரை & சந்திர பிரியங்கா ஆகிய இருவருக்குமே கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

A female minister Chandra Priyanka after 40 years in Puducherry

More Articles
Follows