தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
திருநெல்வேலி பகுதியில் புதிய செல்போன் கடை திறப்பு விழாவுக்கு வருகை தந்தார் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி நடிகர் புகழ்
இவரை காண ஏராளமான ரசிகர்கள் கடை முன்பு திரண்டனர்.
தற்போது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொரானா 2வது அலை வேகமாக பரவி வருகிறது.
நெல்லை மாவட்டமும் இதற்கு விதிவிலக்கல்ல.
இந்த நிலையில் தான் நடிகர் புகழைக் காண ரசிகர்கள் அதிகளவில் திரண்டனர்.
இதில் பலரும் மாஸ்க் அணியவில்லை.
மேலும் சமூக இடைவெளியையும் எவரும் பின்பற்றவில்லை.
இதனால் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
இதனையடுத்து அந்த கடை பகுதிக்கு வந்த மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா விதிகளை மீறியதாக தெரிவித்து புதிய கடைக்கு சீல் வைத்தனர்.
Cook With Komali fame Pugazh launches new mobile shop