முன்னணி் நடிகருக்கு ஜோடியாகும் ‘குக் வித் கோமாளி’ பவித்ரா லட்சுமி

முன்னணி் நடிகருக்கு ஜோடியாகும் ‘குக் வித் கோமாளி’ பவித்ரா லட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor kathirதனியார் விளம்பரங்களிலும், குறும்படங்களிலும் நடித்து வந்தவர் பவித்ரா லட்சுமி.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார் பவித்ரா.

இந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்துவிட்டதால் சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இவர் ஹீரோயினாக நடிக்கும் முதல் தமிழ் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இதில் நடிகர் சதீஷுக்கு ஜோடியாகிறார்.

ஹீரோவாக சதீஷ்க்கும் இதுதான் முதல் படம்.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், பவித்ரா மேலும் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.

இதில் நடிகர் கதிருக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம் இந்த குக் வித் கோமாளி பிரபலம்.

Cook with comali fame Pavithra lakshmi to romance with this top actor?

மே மாதம் ஒரு படம்.. ஜூன் மாதம் ஒரு படம்..; ஓடிடி-யில் தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

மே மாதம் ஒரு படம்.. ஜூன் மாதம் ஒரு படம்..; ஓடிடி-யில் தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் – தனுஷ் கூட்டணியில் உருவாகி தியேட்டர்களில் ஏப்ரல் 9ல் ரிலீசான படம் ‘கர்ணன்’.

இதில் லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார்..

தனுஷ் நடிப்பில் இதுவரை வெளியான படங்களிலேயே அதிக வசூலைக் குவித்து சாதனை படைத்துள்ளது கர்ணன்.

தற்போது கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் படத்தை பார்க்க முடியாமல் ரசிகர்கள் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கர்ணன் திரைப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

அதன்படி மே 9-ம் தேதி கர்ணன் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது..

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் ஜூன் மாதம் 18-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர்.

ஆக மே & ஜூன் ஆகிய 2 மாதங்களில் தனுஷ் ரசிகர்களுக்கு செம விருந்து இருக்கு…

Dhanush 2 films will release in OTT

அஜித் பட சூர்யா கேரக்டருக்கு பாராட்டு..; ‘குக் வித் கோமாளி’ கனியின் கணவருக்கு கிடைத்த பொக்கிஷம்

அஜித் பட சூர்யா கேரக்டருக்கு பாராட்டு..; ‘குக் வித் கோமாளி’ கனியின் கணவருக்கு கிடைத்த பொக்கிஷம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kani Thiruநான் சிவப்பு மனிதன், தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் திரு.

இவர் ‘குக் வித் கோமாளி’ சீசன் 2ல் டைட்டில் வென்ற நடிகை கனியின் கணவர் ஆவார்.

காதல் கோட்டை படத்தை இயக்கிய அகத்தியன் தான் கனியின் தந்தை. அதாவது திரு வின் மாமனார் அகத்தியன்.

ஒரே குழப்பமாக இருக்கா? சரி விஷயத்துக்கு வருகிறோம்.

இந்த நிலையில், இயக்குனர் திரு தனது ட்விட்டர் பக்கத்தில்..

“தேடி அலைஞ்சு இனிமே கிடைக்க வாய்ப்பே இல்லனு சோர்ந்து உக்காரும் போது உங்களுக்கு ஏதாவது கிடைச்சிருக்கா.. எனக்கு கெடச்சுது.. Yes என்னோட Wallet After 2 weeks.. காதல் கோட்டை சூர்யாக்கள் நிஜத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள் .. Thank you Mr G.Mohan #Humanity #மனிதம்” என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

இவரின் தொலைந்து போன பொருட்கள் கிடைத்திருப்பதை இப்படி பதிவிட்டுள்ளார்.

இவரது மாமனார் அகத்தியன் இயக்கிய ‘காதல் கோட்டை’ படத்தில் அஜித்தின் கேரக்டர் பெயர் சூர்யா.

அதில் ஒரு காட்சியில் தேவயாணி ரயிலில் தவறவிட்ட பொருட்களை அஜித் அவரது (நாயகி) முகவரிக்கு அனுப்பி வைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Director Thiru latest tweet goes viral

தல 61 அப்டேட்..; ட்விட்டரில் தெறிக்கவிடும் அஜித் ரசிகர்கள்

தல 61 அப்டேட்..; ட்விட்டரில் தெறிக்கவிடும் அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thala 61 (1)மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் பாலிவுட் தயாரிப்பாளருமான போனி கபூர் தயாரித்து வரும் படங்களில் நடித்து வருகிறார் நடிகர் அஜித்.

இவர்கள் கூட்டணியில் உருவான ‘நேர்கொண்ட பார்வை’ படம் 2019ல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது ‘வலிமை’ படம் உருவாகி வருகிறது. இந்த இரு படங்களையும் வினோத் இயக்கியுள்ளார்.

ஆனால் ‘வலிமை’ பட சூட்டிங் முடியாமல் தள்ளி கொண்டே செல்கிறது.

இதனால் மே 1ஆம் தேதி அஜித் பிறந்த நாளில் பர்ஸ்ட் லுக்கை கூட ரிலீஸ் செய்ய மாட்டோம் என அறிவித்துவிட்டனர்.

தற்போது கொரோனா தொற்று 2வது அலையும் இதற்கு காரணமாக அமைந்துவிட்டது.

இதனையடுத்து வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் மீண்டும் அஜீத் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை என்றாலும் அஜித் ரசிகர்கள் #தல61 என்ற பெயரில் ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

இது ஒரு புறமிருந்தாலும் தன் அடுத்த பட கால்ஷீட்டை கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியனுக்கு அஜித் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தை சூரரைப் போற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்குவார் எனவும் கோலிவுட்டில் பேசப்படுகிறது.

எதுவாக இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம் தல ரசிகர்களே…

Latest buzz on Thala 61

அனைவரும் தடுப்பூசி போட்டால் சமூக நோய் எதிர்ப்பாற்றால் உருவாகும்..; ரிஜிஸ்டர் செய்ய வேண்டிய இணையதளம் இதோ

அனைவரும் தடுப்பூசி போட்டால் சமூக நோய் எதிர்ப்பாற்றால் உருவாகும்..; ரிஜிஸ்டர் செய்ய வேண்டிய இணையதளம் இதோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரசின் தொற்றின் பரவல் அதிகரித்து வருவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ஒரு பக்கம் இரவு நேர ஊரடங்கும் மறுபக்கம் தடுப்பூசி பணிகளும் நடைப்பெற்று வருகிறது.

அனைவரும் தடுப்பூசி போட்டு கொட்டில் சமூக நோய் எதிர்ப்பாற்றால் உருவாகும் எனவும் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியும் எனவும் மருத்துவ வல்லுனர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது, 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

வருகிற மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு அனுமதி உத்தரவு போட்டுள்ளது.

அதன்படி இன்று ஏப்ரல் 28 மாலை 4 மணி முதல் முன்பதிவு செய்யலாம் என, அரசு அறிவித்துள்ளது.

தற்போது முன்பதிவும் துவங்கியுள்ளது.

இதற்கு, https://www.cowin.gov.in என்ற, இணையதளத்திற்குள் சென்று, ‘ரிஜிஸ்டர் மை செல்ப்’ என்பதை அழுத்த வேண்டும்.

அதன்பின்னர், மொபைல் போன் எண் பதிவு செய்து, பெயர், வயது உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.

ஆதார் எண் உள்ளிட்ட, அரசு அங்கீகரித்த அடையாள அட்டை எண்ணை பதிந்து, தடுப்பூசிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்..

எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வோம்.

*ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு..*

Registration for 18+ to begin on CoWin Portal

அரசு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வழங்கிய விஜய் மக்கள் இயக்கம்

அரசு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வழங்கிய விஜய் மக்கள் இயக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா 2வது அலை பல உயிர்களை கொன்று குவித்து வருகிறது.

இதனால் இந்திய நாடே செய்வதறியாமல் திணறி வருகிறது.

மஹாராஷ்டிரா, குஜராத், சட்டிஸ்கர், டெல்லி, மத்திய பிரதேசம், தமிழகம் என பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை நீடித்து வருகிறது.

மேலும் அரசு மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த திலையில், நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களும், முகக்கவசங்கள் மற்றும் கையுறைகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

VMI provide oxygen cylinders to corona patients in TN

More Articles
Follows