தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
மேலும் ஜெயலலிதாவின் இயற்பெயர் என சொல்லப்படும் “கோமளவல்லி” எனும் பெயரை வில்லி வேடத்துக்கு வைக்கப்பட்டிருப்பதால் அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து அந்த காட்சிகள் நீக்கப்படும் வரை போராட்டம் நடத்துவோம் என்றனர்.
இதனால் பல தியேட்டர்களில் காட்சிகள் நிறுத்தப்பட்டன.
எனவே இன்று காலை மறு தணிக்கை செய்யப்பட்டு சில காட்சிகளை நீக்கி சில வசனங்களை மியூட் செய்துள்ளனர்.
அவை..
இப்படத்தில் வரும் கோமளவல்லி என்று பெயர் குறிப்பிடப்படும் காட்சியில் மியூட் (ஒலியடக்கம்) வைக்கப்படுகிறது.
பின்னர் இலவச பொருட்களை தீயில் தூக்கிப் போடும் காட்சிகள் நீக்கப்படுகிறது.
மேலும் பொதுப்பணித்துறை காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.
