Complete Details of New Education Policy 2020: புதிய கல்விக் கொள்கை முழு தகவல்கள்

Complete Details of New Education Policy 2020: புதிய கல்விக் கொள்கை முழு தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nep 2020பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த தேசியக் கல்விக் கொள்கை 34 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 1986-க்கு மாற்றாக அமையும் என்று குறிப்பிட்டுள்ள இந்திய அரசின் பத்திரிகை தகவல் நிறுவனம் (PIB) இந்த கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்களைப் பட்டியலிட்டுள்ளது.

பள்ளிக்கல்வியில் உலகளாவிய அணுகுமுறை

பள்ளிக்கல்வியின் அனைத்து மட்டத்திலும் உலகளாவிய அணுகுமுறையை உறுதி செய்தல்மழலையர் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை, அனைத்து மட்டத்திலும் பள்ளிக் கல்விக்கு உலகளாவிய அணுகுமுறையை உறுதி செய்வதை, தேசிய கல்விக் கொள்கை 2020 வலியுறுத்துகிறது.

கட்டமைப்பு வசதி, ஆராய்ச்சிக்கான கல்வி மையங்கள் போன்றவை பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்க உதவுவதுடன், மாணவர்களையும், அவர்களது படிப்புத் திறனையும் தொடர்ந்து கண்காணித்ததல், முறைசார்ந்த மற்றும் முறைசாரா கல்வி முறைகளை உள்ளடக்கிய கல்விக்கான பலதரப்பட்ட வழிகளை ஏற்படுத்தித் தருதல், ஆலோசகர்களின் ஒத்துழைப்பு அல்லது நன்கு பயிற்சி பெற்ற சமூகப் பணியளார்களை பள்ளிகளிலேயே ஏற்படுத்தித் தருவது, 3, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு, தேசிய திறந்தவெளிப் பள்ளி மற்றும் மாநில திறந்தவெளிப் பள்ளிகள் வாயிலாக கல்வி புகட்டுதல், 10 மற்றும் 12ஆம் நிலைகளுக்கு இணையான இடைநிலைக் கல்வி பாடத் திட்டங்கள், தொழிற்கல்விப் பாடங்கள், முதியோர் கல்வி மற்றும் வாழ்க்கை மேம்பாட்டிற்கான திட்டங்கள் ஆகியவையும் இலக்கினை அடைவதற்கான யோசனைகளாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிட்ட சுமார் 2 கோடி குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கவும் தேசிய கல்விக் கொள்கை 2020-இல் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

10+2 பள்ளிக் கல்வி முறைக்கு மாற்றாக…

முன்குழந்தைப் பருவ கவனிப்பு மற்றும் கல்வியை வலியுறுத்தும் வகையில், தற்போதுள்ள 10 + 2 பாடத்திட்ட முறை மாற்றப்பட்டு, முறையே 3-8, 8-11, 11-14 மற்றும் 14-18 வயதுக்கேற்ற 5 + 3 + 3 + 4 ஆண்டு பாடத்திட்ட முறை அறிமுகப்படுத்தப்படும்.

இதுவரை பள்ளிக்கு வராத 3 – 6 வயது வரையிலானவர்கள் பள்ளிப் பாடம் படிப்பதற்கு இந்த புதிய முறை உதவும். குழந்தைகளின் மனநிலைக்கேற்ற ஆசிரியர்களை உருவாக்க, இந்த காலகட்டம் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டதாக உள்ளது. புதிய கல்வி முறை, 3 ஆண்டு அங்கன்வாடி / மழலையர் கல்வியுடன், 12 ஆண்டு பள்ளிக்கூடப் படிப்பைக் கொண்டதாக இருக்கும்.

8 வயது வரையிலான குழந்தைகளுக்கு முன் குழந்தைப்பருவ கவனிப்பு மற்றும் கல்விக்கான தேசியப் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் கட்டமைப்பை (National Curricular and Pedagogical Framework for Early Childhood Care and Education – NCPFECCE) தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) உருவாக்கும்.

முன்குழந்தைப் பருவ கவனிப்பு, கற்பித்தல் மற்றும் பாடத்திட்டத்தில் நன்கு பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களைக் கொண்ட, விரிவுபடுத்தப்பட்ட மற்றும் அங்கன்வாடி, மழலையர் பள்ளிகள் போன்ற வலுப்படுத்தப்பட்ட மையங்கள் மூலம் முன்குழந்தைப் பருவ கவனிப்பு வழங்கப்படும்.

முன்குழந்தைப் பருவ கவனிப்பு மற்றும் கல்வி முறையை, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, மற்றும் பழங்குடியினர் நலத்துறைகள் மூலம் கூட்டாக மேற்கொள்ளப்படும்.

அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண் அறிவை அடைதல்
அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண் அறிவு ஆகியவை கல்வி பயில்வதற்கான இன்றியமையாத உடனடித் தேவையாக இருப்பதால் அவற்றை முன் தகுதியாக அங்கீகரிக்கும் வகையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையால், தேசிய அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண் அறிவு இயக்கம் ஒன்றைத் தொடங்க தேசிய கல்விக்கொள்கை 2020இல் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் 2025-க்குள் 3-ஆம் நிலை வரை அனைவரும் பயில ஏதுவாக, உலகளாவிய அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண் அறிவு பெறுவதற்கான திட்டத்தை செயல்படுத்த மாநில அரசுகள் தயாராக வேண்டும். தேசிய புத்தக மேம்பாட்டுக் கொள்கை ஒன்றும் வகுக்கப்பட வேண்டும்.

பள்ளிக்கூடப் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் சீர்திருத்தங்கள்
பள்ளிக்கூடப் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தலில், கற்போரின் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், அவர்களிடம் 21-ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற முக்கியமான திறமைகளை ஏற்படுத்துவதோடு, அவசியமானவற்றைக் கற்கும் திறனை மேம்படுத்துவதற்கேற்ப பாடத்திட்டத்தைக் குறைப்பதுடன், சோதனை அடிப்படையிலான கல்வி மற்றும் சிந்தனைக்கு பெருமளவு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

பாடப்பிரிவைத் தேர்ந்தெடுக்க மாணவர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படும். கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட மாட்டார்கள், பாடத்திட்டம் மற்றும் பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டவற்றையும் கற்பதற்கும், தொழிற்கல்வி மற்றும் வழக்கமான கல்வி முறைக்கும் பெரும் வித்தியாசம் இருக்காது.

பள்ளிக்கூடங்களிலேயே 6-ஆம் நிலை முதற்கொண்டே தொழிற்கல்வி பயிற்றுவிக்கப்படுவதோடு, உள்ளுறை பயிற்சிமுறையைக் கொண்டதாகவும் இருககும். புதிய மற்றும் விரிவான பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு 2020-21 (National Curricular Framework for School Education, NCFSE) தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் ஏற்படுத்தப்படும்.

பன்மொழி மற்றும் மொழியின் ஆற்றல்
குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு வரையிலும் , ஆனால் 8-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேலும் முன்னுரிமை அடிப்படையிலும் , தாய்மொழி/ உள்ளூர் மொழி/ பிராந்திய மொழி , பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என கொள்கை வலியுறுத்துகிறது. மும்மொழித் திட்டம் உள்பட அனைத்து மட்டத்திலான பள்ளி மற்றும் உயர்கல்வியில் சமஸ்கிருதம் மாணவர்களின் விருப்பமாக இருக்கும் வகையில் வழங்கப்படுகிறது.

இந்தியாவின் இதர செம்மொழிகள் மற்றும் இலக்கியங்களும் விருப்பப் பாடங்களாக இருக்கும். எந்த மாணவர் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படமாட்டாது. ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ முன்முயற்சியின் கீழ், 6 முதல் 8 வரையான வகுப்புகளில் ‘ இந்திய மொழிகள் ‘ குறித்து மாணவர்கள் வேடிக்கை செயல் திட்டம்/ நடவடிக்கைகளில் பங்கேற்கலாம்.

இடைநிலைக் கல்வி மட்டத்தில், பல்வேறு வெளிநாட்டு மொழிகளும் கற்பிக்கப்படும். நாடு முழுவதும் இந்திய அடையாள மொழி தரப்படுத்தப்படும். செவித்திறன் குறைபாடு உள்ள மாணவர்களின் பயன்பாட்டுக்காக, தேசிய, மாநில பாடத்திட்டப் பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மதிப்பீட்டு சீர்திருத்தங்கள்
புதிய கல்வி கொள்கை 2020 , சுருக்கமான மதிப்பீட்டிலிருந்து , வழக்கமான , முறையான மதிப்பீட்டுக்கு மாறுவதை எதிர்நோக்குகிறது. இது ஆய்வுகள், விமர்சன சிந்தனை, கருத்தியல் தெளிவு போன்ற உயர் திறன்களுக்கு ஏற்ற வகையில் ,திறன் அடிப்படையிலான , கற்றல் மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கிறது.

3,5,8-ஆம் வகுப்புகளில் அனைத்து மாணவர்களும் , உரிய ஆணையம் நடத்தும் பள்ளித் தேர்வுகளை எழுதுவார்கள். 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் தொடரும்.

அதேசமயம் , முழுமையான மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு, திருத்தியமைக்கப்படும். புதிய தேசிய மதிப்பீட்டு மையம், பராக் – திறன் மதிப்பீடு, மறுஆய்வு மற்றும் முழுமையான மேம்பாட்டுக்கான அறிவுப் பகுப்பாய்வு ) (PARAKH – Performance Assessment, Review, and Analysis of Knowledge for Holistic Development) நிலையான அமைப்பு ஒன்றால், உருவாக்கப்படும்.

சமமான மற்றும் உள்ளடக்கிய கல்வி
புதிய கல்வி கொள்கை 2020, எந்தக் குழந்தையும் பிறந்த சூழ்நிலை காரணமாகவோ அல்லது பின்புலம் காரணமாகவோ ,கற்பதுடன் சிறந்து விளங்கும், எந்த வாய்ப்பையும் இழந்துவிடக் கூடாது என்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பாலினம், சமூக-கலாச்சாரம், புவியியல் அடையாளங்கள், உடல் குறைபாடுகள் உள்பட சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கிய குழுக்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும். பின்தங்கிய பகுதிகள் மற்றும் குழுக்களுக்காக பாலின உள்ளடக்க நிதி, சிறப்புக் கல்வி மண்டலங்கள் அமைப்பதும் இதில் அடங்கும்.

உடல் குறைபாடு உள்ள குழந்தைகள் , வழக்கமான பள்ளிப்படிப்பை அடிப்படையிலிருந்து உயர் கல்வி வரை முழுமையாக மேற்கொள்ள இது வழிவகுக்கும். முழுமையான உடல் குறைபாட்டுப் பயிற்சி, ஆதார மையங்கள், வசதிகள், உதவிகரமான கருவிகள், பொருத்தமான தொழில்நுட்ப அடிப்படையிலான உபகரணங்கள், அவர்களது தேவைக்குப் பொருத்தமான இதர பொறிமுறை ஆதரவு ஆகியவற்றுடன் கல்வி கற்பிப்போரின் உதவியும் இதில் இருக்கும்.

ஒவ்வொரு மாநிலமும்/ மாவட்டமும் , பகல் நேர உறைவிடப் பள்ளியாக” பால பவன்கள்”_ஐ அமைக்க ஊக்குவிக்கப்படும். கலை தொடர்பான , தொழில் தொடர்பான, விளையாட்டு தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்கும் வகையில் இது செயல்படும். இலவசப் பள்ளிக் கட்டமைப்பு , சமாஜிக் சேத்னா மையங்களாகப்பயன்படுத்தப்படும்.

வலுவான ஆசிரியர் சேர்க்கை மற்றும் தொழில் பாதை
ஆசிரியர்கள் , வலுவான , வெளிப்படையான நடைமுறைகளின் அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். தகுதி அடிப்படையிலும், பல ஆதார, கால அளவிலான செயல்திறன் மதிப்பீடு, கல்வியியல் நிர்வாகிகள் அல்லது ஆசிரிய கற்பிப்பாளர்களாக உயரும் வகையிலான முன்னேற்ற வழிமுறைகளின்படியும் , பதவி உயர்வு இருக்கும். தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமம் (NCERT), மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமம் (SCERT) ஆகிய அமைப்புகள்எல்லா பிராந்தியங்கள் மற்றும் மட்டத்திலுமான ஆசிரியர்கள் மற்றும் நிபுண அமைப்புகளுடன் கலந்தாலோசித்து, ஆசிரியர்களுக்கான தேசிய தொழில்முறைத் தரம் என்ற ஒரு பொதுவான அமைப்பு உருவாக்கப்படும்.

பள்ளி நிர்வாகம்
பள்ளிகள் வளாகங்களாகவோ, தொகுப்புகளாகவோ அமைக்கப்படும். உள்கட்டமைப்பு, கல்வி நூலகங்கள், வலுவான தொழில்முறை ஆசிரியர் சமூகம் உள்ளிட்ட அனைத்து வளங்களும் கிடைப்பதை உறுதி செய்யும் விதத்தில், நிர்வாகத்தின் அடிப்படை அலகாக அது இருக்கும்.

பள்ளிக் கல்விக்கான நிலையான அமைப்பு மற்றும் அங்கீகாரம்
புதிய கல்வி கொள்கை 2020 , கல்வி தொடர்பான விஷயங்கள் மற்றும் கொள்கை வகுத்தல், முறைப்படுத்துதல், இயக்குதல் ஆகியவற்றுக்கு தெளிவான, தனி நடைமுறைகளைக் கொண்டுள்ளது. மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள், சுதந்திரமான மாநில கல்வித் தர ஆணையத்தை (SSSA) அமைத்துக் கொள்ளும்.

அனைத்து அடிப்படை ஒழுங்குமுறைத் தகவல்களையும் வெளிப்படையாகவும், பொது சுய- அறிவிப்பு வழியாகவும், மாநில கல்வித் தர ஆணையத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப அளிக்க வேண்டும். அது விரிவான பொது மேற்பார்வை மற்றும் பொறுப்புடைமையாக விரிவாகப் பயன்படுத்தப்படும். மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமம் (SCERT) , பள்ளி தர மதிப்பீடு மற்றும் அங்கீகார வரைமுறையை , தொடர்புடைய அனைவருடனும் கலந்தாலோசித்து உருவாக்கும்.

உயர் கல்வி
2035 வாக்கில் மொத்த பதிவு விகிதம் 50 சதவீதமாக ஆக உயர்த்தப்படும்புதிய கல்விக் கொள்கை 2020 , உயர் கல்வியில் மொத்தப் பதிவு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. தொழில் கல்வி விகிதத்தை 26.3 சதவீதத்திலிருந்து ( 2018) , 2035-ஆம் ஆண்டு வாக்கில் 50 சதவீதமாக உயர்த்துவது இதில் அடங்கும். உயர் கல்வி நிறுவனங்களில் 3.5 கோடி புதிய இடங்கள் சேர்க்கப்படும்.

கல்விக்கு நிதியுதவி
கல்வித் துறையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், பொதுமுதலீடு 6 சதவீதம் விரைவில் எட்டப்படும்.

வயது வந்தோருக்கான கல்வி
இளைஞர் மற்றும் வயது வந்தோருக்கான கல்வியை 100 சதவீதம் உறுதி செய்யவேண்டும்

முழுமையான பன்முகக் கல்வி

நெகிழ்வான பாடத்திட்டங்கள், பாடங்களில் படைப்புச் சேர்க்கைகள், ஒருங்கிணைந்த தொழில் கல்வி மற்றும் உரிய சான்றிதழ்களுடன் பல்முனை நுழைவு, வெளியேறுதல் ஆகியவற்றுடன், விரிவான அடிப்படையிலான , பன்முக, முழுமையான இளநிலைப் பட்ட ப் படிப்பை கல்விக் கொள்கை முன்னெடுக்கிறது. இளநிலை பட்டக் கல்வி , பன்னோக்கு வாய்ப்புகளுடன் 3 அல்லது 4 ஆண்டு கால படிப்பாக இருக்கலாம்.

இந்தக் காலத்திற்குள் பொருத்தமான சான்றிதழ் பெற வேண்டும். உதாரணமாக, ஓராண்டுக்குப் பின்னர் சான்றிதழ், 2 ஆண்டுக்குப் பின்னர் மேம்பட்ட டிப்ளமோ , 3 ஆண்டுக்குப் பின்னர் இளநிலைப் பட்டம், 4 ஆண்டுகளுக்குப் பின்னர் பட்டத்துடன் ஆராய்ச்சி சான்றிதழ் வழங்கப்படும்.

பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட கல்வி மதிப்பெண்களை டிஜிட்டல் முறையில் சேகரித்து வைக்க , அகாடமிக் கிரெடிட் வங்கி உருவாக்கப்படும். இது கடைசியாக பட்டம் வழங்கப்படும் போது சேர்ப்பதற்கு வாய்ப்பாக அமையும்.நாட்டில் உலக தரத்துக்கு இணையாக சிறந்த பன்னோக்கு கல்வி வழங்கும் மாதிரி அமைப்பாக, ஐஐடிக்கள், ஐஐஎம்கள் ஆகியவற்றுக்கு இணையாக, பன்னோக்குக் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும். உயர் கல்வியில், ஆராய்ச்சித் திறனைக் கட்டமைக்கவும், வலுவான ஆராய்ச்சிக் கலாச்சாரத்தை வளர்க்கவும், ஒரு உயர் அமைப்பாக, தேசிய ஆராய்ச்சி பவுண்டேசன் உருவாக்கப்படும்.

ஒழுங்குமுறை
மருத்துவ மற்றும் சட்டப் படிப்புகளைத் தவிர ஒட்டுமொத்த உயர் கல்விக்கும் ஒரே முதன்மை அமைப்பாக இந்திய உயர் கல்வி ஆணையம் அமைக்கப்படும். இந்திய உயர் கல்வி ஆணையம் நான்கு பிரிவுகளைக் கொண்டிருக்கும். ஒழுங்குமுறைக்காக தேசிய உயர் கல்வி ஒழுங்குமுறைக் குழு, தர நிர்ணயித்தலுக்காக பொதுக் கல்விக் குழு, நிதியுதவிக்காக உயர் கல்வி மானியக் குழு மற்றும் அங்கீகாரத்துக்காக தேசிய அங்கீகாரக் குழு. தொழில்நுட்பத்தின் உதவியுடன் முகமில்லா இடையீடு மூலமாக செயல்படும் இந்திய உயர் கல்வி ஆணையம், விதிகள் மற்றும் தரங்களைப் பின்பற்றாத உயர்கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும். ஒழுங்குமுறை, அங்கீகாரம் மற்றும் கல்வித் தரத்தில் அரசு மற்றும் தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் ஒரே மாதிரியான விதிகளின் கீழ் நிர்வகிக்கப்படும்.

நெறிமுறைப்படுத்தப்பட்ட நிறுவனக் கட்டமைப்பு
உயர்தரக் கற்றல், ஆய்வு மற்றும் சமூகத் தொடர்பை வழங்கும் மிகப்பெரிய, நல்ல வளங்களையுடய, துடிப்பான பல்துறை நிறுவனங்களாக உயர்கல்வி நிறுவனங்கள் மாற்றியமைக்கப்படும். ஆய்வில் அதிக கவனம் செலுத்தும் பல்கலைக்கழகங்கள், கற்பித்தலில் அதிக கவனம் செலுத்தும் பல்கலைக்கழங்கள் மற்றும் தன்னாட்சி பெற்ற பட்டம் வழங்கும் கல்லூரிகள் என பல்கலைக்கழகத்துக்கான விளக்கம் பல்வேறு கல்வி நிறுவனங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.கல்லூரிகளுக்கான இணைப்பு அனுமதி 15 வருடங்களில் காலாவதி ஆகும் மற்றும் கல்லூரிகளுக்கு தன்னாட்சியை கட்டம் கட்டமாக படிப்படியாக வழங்குவதற்காக பல படிநிலைகளைக் கொண்ட ஒரு அமைப்பு உருவாக்கப்படும். சில காலத்துக்கு பிறகு, ஒவ்வொரு கல்லூரியையும் தன்னாட்சியுடைய பட்டங்களை வழங்கும் கல்லூரியாகவோ அல்லது ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாகவோ மேம்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது

ஆசிரியர்கள் பொறுப்பேற்கவேண்டும்

ஊக்கம் நிறைந்த, உற்சாகமுள்ள ஆசிரியர்களை தெளிவாக வரையறுக்கப்பட்ட, சுதந்திரமான, வெளிப்படையான முறையில் பணியமர்த்தவும், பாடத்திட்டங்களை வடிவமைக்க சுதந்திரம் அளிக்கவும், திறமைக்கு ஊக்கமளிக்கவும், கல்வி நிறுவனத் தலைமையை நோக்கி முன்னேறவும் தேசியக் கல்விக் கொள்கை பரிந்துரைக்கிறது. அடிப்படை விதிகளை பின்பற்றாத ஆசிரியர்கள் அதற்கு பொறுப்பேற்க வைக்கப்படுவார்கள்.

ஆசிரியர் கல்வி
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவுடன் ஆலோசித்து புதிய மற்றும் விரிவான தேசிய ஆசிரியர் கல்வித் திட்டக் கட்டமைப்பு, 2021, தேசிய கல்வி மற்றும் பயிற்சிக் குழுவால் வடிவமைக்கப்படும். 2030-க்குள் கற்பித்தலுக்கான குறைந்தபட்ச பட்டத் தகுதி நான்கு வருட பி எட் பட்டமாக இருக்கும். தரம் குறைந்த ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கற்பித்தல் இயக்கம்
இந்திய மொழிகளில் கற்பிக்கும் திறன் வாய்ந்த மற்றும் பல்கலைக்கழக/கல்லூரி ஆசிரியர்களுக்கு குறுகிய கால மற்றும் நீண்ட கால கற்றல்/தொழில்முறை ஆதரவை அளிக்க விரும்பும் திறன்வாய்ந்த மூத்த/ஓய்வு பெற்ற ஆசிரியர்களைக் கொண்ட தேசிய கற்பித்தல் இயக்கம் அமைக்கப்படும்.

மாணவர்களுக்கு நிதி உதவி
எஸ் சி, எஸ் டி, இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் இதர மாணவ தொழில்முனைவோர் வளர்ச்சிப் பிரிவுகளை சார்ந்த நன்கு படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கல்வி உதவித்தொகையைப் பெறும் மாணவர்களின் முன்னேற்றத்தை ஆதரித்து, மேம்படுத்தி மற்றும் கண்காணிக்க தேசிய கல்வி உதவித்தொகை தளம் விரிவுபடுத்தப்படும். தங்களது மாணவர்களுக்கு அதிக அளவில் இலவச கல்வி மற்றும் கல்வி உதவித்தொகையை அளிக்க தனியார் உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கப்படும்.

திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி
கல்விபெறும் ஒட்டுமொத்த விகிதத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றும் விதத்தில் இது விரிவுப்படுத்தப்படும். இணைய வழி படிப்புகள், டிஜிட்டல் சேமிப்புத் தளங்கள், ஆராய்ச்சிக்கு நிதியுதவி, மேம்படுத்தப்பட்ட மாணவர் சேவைகள், திறந்தவெளி இணைய வழிப் படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்குதல் ஆகியவற்றுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, வகுப்புகளில் கற்பிக்கப்படும் கல்வியின் உச்சபட்ச தரத்துக்கு இணையாக இது திகழ்வது உறுதி செய்யப்படும்.

இணையவழிக் கல்வி மற்றும் டிஜிட்டல் கல்வி
தொற்று நோய்கள் மற்றும் பெருந்தொற்று சமயங்களில், சமீபத்திய நிலைமையைக் கருத்தில் கொண்டு, பாரம்பரியமான மற்றும் நேரடிக் கல்வி எங்கெல்லாம் சாத்தியமில்லையோ அங்கெல்லாம் இணைய வழிக் கற்றலை ஊக்குவிக்க, தரமான மாற்றுக் கல்வியை வழங்குவதற்கான தயார் நிலையை உறுதி செய்ய விரிவான பரிந்துரைகள் வகுக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பாடங்கள் மற்றும் திறன் வளர்த்தல் ஆகியவற்றைக் கட்டமைக்க மனித வள மேம்பாடு அமைச்சகத்தில் ஒரு பிரத்யேகப் பிரிவு உருவாக்கப்பட்டு, கல்வி மற்றும் உயர்கல்வியின் மின்-கற்றல் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.

கல்வியில் தொழில்நுட்பம்
கல்வி, மதிப்பிடுதல், திட்டமிடுதல் மற்றும் நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் யோசனைகளைத் தடையின்றி பகிர்ந்து கொள்ள தேசிய கல்வி தொழில்நுட்பப் பேரவை என்னும் தன்னாட்சி பெற்ற அமைப்பு உருவாக்கப்படும். வகுப்பறை செயல்முறைகள், ஆசிரியர் தொழில்முறை மேம்பாட்டுக்கு ஆதரவு, வசதி குறைந்த பிரிவினருக்கு கல்விக்கான அணுகுதலை அதிகரித்தல் மற்றும் கல்வித் திட்டமிடுதல், நிர்வாகம் மற்றும் மேலாண்மை ஆகியவற்றுக்கு அனைத்து மட்டங்களிலும் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு தேவையான அளவில் செய்யப்படும்.

இந்திய மொழிகளை ஊக்கப்படுத்துதல்
அனைத்து இந்திய மொழிகளின் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் துடிப்புடன் இயங்கும் தன்மையை உறுதி செய்ய, இந்திய மொழிபெயர்ப்பு மற்றும் விளக்க நிறுவனம், பாலி, பெர்சிய மற்றும் பிராக்ரித்துக்கான தேசிய நிறுவனம் (அல்லது நிறுவனங்கள்), உயர்கல்வி நிறுவனங்களில் சமஸ்கிருதம் மற்றும் இதர மொழித் துறைகள் மற்றும் அதிக உயர்கல்வி நிறுவனங்களில் தாய்மொழி/உள்ளூர் மொழியில் கற்பித்தலை உறுதி செய்தல் ஆகியவற்றை தேசியக் கல்விக் கொள்கை பரிந்துரைக்கிறது.கல்வி நிறுவனங்களுக்கிடையேயான கூட்டுச் செயல்பாடு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் போக்குவரத்து மற்றும் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களை நமது நாட்டில் வளாகங்கள் அமைக்கச் செய்வது ஆகியவற்றின் மூலம் கல்வியின் சர்வதேசமயமாக்கலுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

தொழில்முறைக் கல்வி
அனைத்து தொழில்முறை படிப்புகளும் உயர் கல்வி அமைப்பின் இன்றியமையாத அங்கமாக இருக்கும். தனிப்பட்ட தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள், சுகாதார அறிவியல் பல்கலைக்கழகங்கள் மற்றும் வேளாண் பல்கலைக்கழகங்கள் ஆகியவை பல்நோக்கு நிறுவனங்களாக ஆவதற்கு முயற்சி செய்யும்.

இளைஞர் மற்றும் வயது வந்தோருக்கான கல்வியை 100 சதவீதம் உறுதி செய்ய கொள்கை எண்ணுகிறது.

கல்விக்கு நிதி உயர்வு
கல்வித் துறையில் பொதுமுதலீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தை விரைவில் எட்ட மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து பணியாற்றும்.

மாணவர்களுக்கு நிதி உதவி
எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் இதர மாணவ தொழில்முனைவோர் வளர்ச்சிப் பிரிவுகளை சார்ந்த நன்கு படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கல்வி உதவித்தொகையைப் பெறும் மாணவர்களின் முன்னேற்றத்தை ஆதரித்து, மேம்படுத்தி மற்றும் கண்காணிக்க தேசிய கல்வி உதவித்தொகை தளம் விரிவுபடுத்தப்படும். தங்களது மாணவர்களுக்கு அதிக அளவில் இலவச கல்வி மற்றும் கல்வி உதவித்தொகையை அளிக்கத் தனியார் உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கப்படும்.

முன்னாள் ஏடிஜிபி விஜயகுமார் ஐ.பி.எஸ். எழுதிய புத்தகத்தை வெப்சீரிஸ் ஆக தயாரிக்கும் E4 என்டர்டெயின்மென்ட்

முன்னாள் ஏடிஜிபி விஜயகுமார் ஐ.பி.எஸ். எழுதிய புத்தகத்தை வெப்சீரிஸ் ஆக தயாரிக்கும் E4 என்டர்டெயின்மென்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

veerappanவீரப்பனைப் பற்றிய முன்னாள் ஏடிஜிபி விஜயகுமார் ஐ.பி.எஸ். எழுதியிருக்கும் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, வெப் சீரிஸ் மற்றும் OTT தளங்களில் படைப்புகளை உருவாக்கும் பணியில்
E4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் முனைந்துள்ளது.

துருவ் விக்ரமின் முதல் படமான ஆதித்ய வர்மா படத்தைத் தயாரித்து வெற்றிபெற்ற E4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம், ஏற்கெனவே ISHQ போன்ற மாபெரும் வெற்றிப் படங்களை மலையாளத்தில் அளித்திருக்கிறது.

தற்போது சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பற்றி முன்னாள் ஏடிஜிபி விஜயகுமார் ஐ.பி.எஸ். எழுதியிருக்கும் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு வெப் சீரிஸ் மற்றும் OTT தளங்களில் படைப்புகளைத் தயாரித்து வெளியிடவிருக்கிறது.

இந்த இரு படைப்புகளும் ‘சேஸிங் தி பிரிகண்ட் ’ (Chasing the Brigand) என்ற தலைப்பில் முன்னாள் ஏஜிடிபி விஜயகுமார் ஐ.பி.எஸ். எழுதிய பரபரப்பான புத்தகத்தில் இருக்கும் உண்மைச் சம்பவங்களைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும்.
எங்கள் மீது நம்பிக்கை வைத்து, தம்முடைய புத்தகத்தின் அடிப்படையில் திரைப்படம் தயாரிக்க அனுமதி அளித்ததற்காக, தற்போது மத்திய அரசு உள்துறை அமைச்சகத்தில் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் விஜயகுமார் அவர்களுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

திரு. விஜயகுமார் ஜம்மு மற்றும் காஷ்மீர் கவர்னருக்கு ஆலோசகராகவும்பணிபுரிந்தவர்.
இந்தப் படைப்புகளில் பணியாற்றும் நடிகர்கள், கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் பற்றிய விவரங்கள், ஊரடங்கு முடிந்ததும் வெளியிடப்படும் எனத் தயாரிப்பாளர் முகேஷ் மேதா தெரிவித்தார்.

மேலும் பல ஆண்டுகளாக அளித்துவரும் ஆதரவுக்காகப் பத்திரிகை, ஊடகம் மற்றும் சமூக வலைதள நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அதே போன்றதொரு ஆதரவை இனி வருங்காலத்திலும் அளிப்பார்கள் என நம்புவதாகவும் தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா கூறினார்.

தமிழ் சினிமாவில் இருக்கும் குரூப்பிசம் ஒழிக்கப்படனும் – சுரேஷ் காமாட்சி

தமிழ் சினிமாவில் இருக்கும் குரூப்பிசம் ஒழிக்கப்படனும் – சுரேஷ் காமாட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

producer suresh kamatchiபாலிவுட்டில் வாரிசு அரசியல் இருப்பதாக தொடர் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

இதை தொடர்ந்து நட்டி நட்ராஜ், சாந்தனு ஆகியோரும் தமிழ் சினிமாவில் குழு அரசியல் இருப்பதாக கருத்து பதிவிட்டு இருந்தனர் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

இவர்களை அடுத்து சிம்புவின் ‘மாநாடு’ பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் தயாரிப்பாளர்களிடையே குரூப்பிசம் இருப்பதாக கருத்து பதிவிட்டுள்ளார்.

சுரேஷ் காமாட்சி கூறியிருப்பதாவது…

“பாலிவுட்டில் மட்டுமல்ல குரூப்பிஸம் இங்கும் உள்ளது. நடிகர்களிடம் உள்ளதோ இல்லையோ ஒருசில தயாரிப்பாளர்களிடம் உள்ளது.

அவர்களால்தான் மிகப் பழமையான தயாரிப்பாளர்களும் ஒதுங்கியிருப்பதுவும் அதனால்தான். தான் மட்டுமே வாழவேண்டும் என நினைக்கும் அந்த பிரபல தயாரிப்பாளர் தன் பலத்தால் சில பல தயாரிப்பாளர்களை உடன் சேர்ந்துகொண்டு பலரை வாழவிடாமல் கெடுத்துக்கொண்டிருக்கிறார்.

ஹீரோக்களுக்கு போன் பண்ணி கெடுத்துவிடுவதும், ஃபைனான்சியர்களை கலைத்துவிடுவதும், படத்தைப் பற்றி கேவலமாக கிளப்பிவிட்டு விநியோகஸ்தர்களிடம் பீதியை உருவாக்குவதுமாக முன்னால் விட்டு பின்னால் செய்யும் வேலையை வெற்றிகரமாக செய்துவருகிறார்.

அதற்கு சில தயாரிப்பாளர்கள் உடன் பட்டு நிற்பதுதான் வேதனை. வெகுவிரைவில் முகத்திரைகள் கிழியும். அதற்கு நடுவில் பாலிவுட் போல யாரும் தற்கொலை அது இதுன்னு இறங்கிவிடக்கூடாது. குரூப்பிஸம் விரைவில் ஒழிக்கப்பட வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

பேய்க்கதை வெப் சீரிஸுக்காக இணையும் வடிவேலு & சுராஜ்

பேய்க்கதை வெப் சீரிஸுக்காக இணையும் வடிவேலு & சுராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vadivelu surajதமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகர்களில் ஒருவர் வடிவேலு.

இவர் இல்லாத சினிமா படங்கள் உப்பு இல்லாத உணவாகவே ரசிகர்களுக்கு இருக்கிறது.

இருந்தபோதிலும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் வடிவேலு நடித்த எலி, கத்திச் சண்ட, மெர்சல் உள்ளிட்ட பட காமெடிகள் எடுப்படவில்லை.

இந்த நிலையில் வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்கவிருக்கிறாராம் வடிவேலு.

இது காமெடி கலந்த பேய்க்கதையாக உருவாகும் என கூறப்படுகிறது.

இந்த எபிசோட்டுக்களை இயக்குனர் சுராஜ் இயக்கவுள்ளார்.

அமேசான், ஹாட் ஸ்டார் போன்ற நிறுவனங்களிடம் தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

தனுஷ் நடித்த படிக்காதவன், சுந்தர் சி நடித்த தலைநகரம், விஷால் நடித்த கத்திச்சண்டை, அர்ஜீன் நடித்த மருதமலை, கார்த்தி நடித்த அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சுராஜ்.

மேற்கண்ட படங்களில் 3 படங்களில் வடிவேலுடன் இணைந்து பணிபுரிந்திருக்கிறார் சுராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

பான்-இந்தியா படமாகும் வலிமை.?; ரஜினி-கமலை போல சாதிப்பாரா அஜித்.?

பான்-இந்தியா படமாகும் வலிமை.?; ரஜினி-கமலை போல சாதிப்பாரா அஜித்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

valimai ajithஒரே நேரத்தில் பல இந்திய மொழிகளில் ஒரு படத்தை உருவாக்கினால் அது ’பான்-இந்தியா’ திரைப்படமாகும்.

பல மொழிகளில் திரையிட்டால் வசூலை குவிக்கலாம் என தயாரிப்பாளர் நினைத்தாலும் அந்த ஹீரோவுக்கு இந்தியளவில் இமேஜ் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

தென்னிந்தியளவில் ரஜினி, கமல் படங்களுக்கு இந்தியளவில் நல்ல மார்கெட் உள்ளது. எனவே பெரும்பாலும் இவரது படங்கள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகும்.

கடந்த சில ஆண்டுகளாக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட பாகுபலி உள்ளிட்ட படங்களும் இதுபோல் பான் இந்தியா படமாக தயாராகியது.

இந்த நிலையில் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ’வலிமை’ படமும்’பான்-இந்தியா’ திரைப்படமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

’வலிமை’ படத்தை இந்தியில் டப்பிங் செய்ய தயாரிப்பாளர் போனி கபூர் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே ஷாருக்கானுடன் ‘அசோகா’, ஸ்ரீதேவியுடன் ’இங்கிலீஷ் இங்கிலீஷ்’ உள்ளிட்ட ஓரிரு ஹிந்தி படங்களில் அஜித் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி & கமலை போல வட இந்தியாவில் அஜித் சாதிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அழகிகளுக்கு சமூக அக்கறை வேண்டும்..; முன்னாள் மிஸ் தமிழ்நாடு Dr ஷீபா லூர்தஸ்

அழகிகளுக்கு சமூக அக்கறை வேண்டும்..; முன்னாள் மிஸ் தமிழ்நாடு Dr ஷீபா லூர்தஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Miss TN title winner and Techie person turns Social Activistபொதுவாகவே அழகுபோட்டிகள் நடத்தப்படுவதன் நோக்கம் ஒருவரின் புற அழகை வெளியே கொண்டுவருவது மட்டுமின்றி, அறிவையும், அக அழகையும் வெளியுலகிற்கு தெரியப்படுத்துவதற்காகத்தான்.

மேலும் அழகுபோட்டிகளுக்கு சமூக பொறுப்பும் இருப்பதால்தான், அப்போட்டிகளில் பங்குபெறுபவர்கள், நல்ல சமூக நோக்கத்திற்காக பாடுபடுவார்கள். இது தவிர அவர்கள் சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் செயல்பட்டு சமூக மேம்பாடு அடைய முயல்வார்கள்.

அழகு போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு சேவை மனப்பான்மை அவசியம் வேண்டும். உலக அளவில், பல்வேறு அழகி போட்டிகளில் கலந்து கொண்டு வென்றவர்கள், சமூக அக்கறையுடன் பல்வேறு மக்கள் நலப்பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டதை நாம் அனைவரும் அறிவோம். அழகி போட்டி மற்றும் சமூக அக்கறை ஆகிய இரண்டு விஷயங்களும் என்னை நிறையவே சிந்திக்க வைத்தது.

அதன் விளைவாகவே நான் சமூக நலப்பணியில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். அதாவது ஒரு தனிநபரான என்னால் இந்த சமூகத்திற்கு என்ன செய்ய முடியும் என தோன்றியது என்று டாக்டர் ஷீபா லூர்தஸ் கூறியுள்ளார். இவர் முன்னாள் மிஸ் தமிழ்நாடு ஆவார்.

மக்கள் அழகை மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் அதைத்தாண்டி ஒரு பரந்த, விரிந்த உலகம் இருக்கின்றது. முக்கியமாக அழகி போட்டிகளில் வென்று பட்டம் பெற்றவர்கள் சமூகத்திற்கு என்னென்ன நல்ல காரியங்களை செய்யலாம் என்று சிந்தித்து செயல்படுபவர்கள் என்று கூறும் டாக்டர். ஷீபா லூர்தஸ் ஒரு அறிவாற்றல் உளவியல் நிபுணரும் கூட.

நம் நாட்டிலுள்ள அனைத்து குடிமகன்களையும் , உலக அளவில் இருக்கும் மக்களையும் மிகவும் கவர்ந்தவர் பட்டியலில் நமது முன்னாள் ஜனாதிபதி டாக்டர். ஏ‌. பி‌. ஜெ. அப்துல் கலாம் அவர்களுக்கு என்றென்றும் முக்கிய இடம் உண்டு. அதற்கு அப்துல் கலாம் அவர்களின் எளிமையும், சிறந்த குணநலங்களும், நிர்வாகத்திறங்களும், சமூக அக்கறையும், நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளும் சான்றாகும்.

அவர் “பிறந்தநாள்” குறித்து கூறிய விளக்கம் : “அன்று ஒரு நாள் மட்டுமே நீ அழும்போது.. உன் தாய் சிரிப்பாள்”. அப்துல் கலாம் அவர்களைத்தவிர இது போன்ற சிறந்த, உணர்ச்சி பூர்வமான விளக்கத்தை யாராலும் கூறியிருக்க முடியாது.

அப்துல் கலாம் அவர்கள் நினைவு நாள் ( ஜூலை 27-ம் தேதி) அன்று எனது பிறந்த நாளும் வருகிறது. அப்துல் கலாம் அவர்கள் மறைவதற்கு முன்னால் வரை, என்னுடைய பிறந்த நாள் சாதாரண நாளாகவே கடந்து சென்றது. ஆனால் அவரது மறைவிற்குப்பிறகு, பாதிக்கப்பட மக்களின் நலங்களில் அக்கறை செலுத்த ஆரம்பித்தேன். அதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றேன்.

அதாவது ஒன்றுபட்ட சமாரியர்கள் அமைப்பு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கி கஷ்டப்படுபவர்களைக் கண்டுபிடித்து, பிரச்சனைகளில் இருந்து அவர்களை மீட்டு, அவர்களை காப்பாற்றினோம். இதையே எங்களுடைய ஒன்றுபட்ட சமாரியர்கள் அமைப்பின் பொன்மொழி ஆக்கினோம். எங்கள் அமைப்பின் குறிக்கோள் : நேசம் மற்றும் அன்பு ஆகியவற்றை இந்த சமூகத்தில் பரப்பவேண்டும் என்பதே ஆகும். குறிப்பாக பெண்கள். குழந்தைகள் நலன் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு ஆகியவற்றில் தனிக்கவனம் செலுத்தி வருகின்றேன்.

இந்த ஆண்டும் அப்துல் கலாம் அவர்கள் நினைவு நாள் ( ஜூலை 27-ம் தேதி) அன்று, மூன்று நிகழ்வுகளை நடத்தினோம். அன்று காலையில், மைலாப்பூரில் உள்ள லயன்ஸ் ஆக்டிவிட்டி சென்டர், டயாலிசிஸ் மற்றும் டயக்னாஸ்டிக் சென்டருக்கு நன்கொடை, நோயாளிகளுக்கு பழங்கள், பிஸ்கட், சானிடைசர்கள், முகக்கவசங்கள் போன்றவற்றை வழங்கினோம். இந்த நிகழ்வில் நடிகர் திரு. ரியாஸ் கான் போன்ற சினிமா பிரபலங்களும், லயன்ஸ் இன்டர்நேஷனல் இயக்குனர் திரு. ஆர். சம்பத், லயன்ஸ் டிஸ்டிரிக்ட் கவர்னர் 324 A5 திரு. ஆர்.எம். தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நான் லயன்ஸ் கிளப் ஆப் சென்னை யுனைட்டெட் சமாரிடன்ஸ், பிரெசிடெண்ட் ஆக இருப்பதால், லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் என்னை பிறந்த நாள் கேக் வெட்ட சொன்னார்கள்.

இதை சற்றும் எதிர்பார்க்காத நான், கொரோனா கொடுங்காலத்தில் இது அவசியமற்றது என்று நினைத்தேன். ஆனால் என்னை கௌரவப்படுத்த வேண்டும் என்று நினைத்த அவர்களின் நல்ல உள்ளங்களை நான் ஏமாற்ற விரும்பாமல், கேக் கட் செய்தேன்.

அடுத்த நிகழ்வாக, சித்தாலப்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், 1,000 மரக்கன்றுகள் நடும் விழாவை நடத்தினோம். இந்த விழாவில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஜான் லூயிஸ் அவர்கள் தலைமை தாங்குவதாக இருந்தது. ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான பணி நிமித்தம் காரணமாக அவரால் வர இயலவில்லை.

திரு. ராமநாதன், துணை இயக்குனர், மகளிர் திட்டம், செங்கல்பட்டு ஆட்சித்தலைவர் அலுவலகம், திரு. சிவா கலைசெல்வன், பி.டி.ஓ., சிட்லபாக்கம் மற்றும் திரு பஞ்சு பி.டி.ஓ., சிட்லபாக்கம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மேலும் செங்கல்பட்டு மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் தலைவர் திரு ராம் ஜீவன் முந்த்ரா மற்றும் செயலாளர் திரு. புலவர் ஆர். மாணிக்கம் மற்றும் லயன்ஸ் குரூப் 324 A5 முன்னாள், இந்நாள், டிஸ்டிரிக்ட் கவர்னர்களும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒன்று, இரண்டு மாணவர்களை வைத்து மரக்கன்றுகளை நட வைத்தோம். ஜூனியர் ரெட் கிராஸ் சொசைட்டியை சேர்ந்த மாணவர்கள் அப்துல் கலாம் குறித்த பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டு பேசினர். மாணவர்களுக்கு அப்துல் கலாம் அவர்களின் புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டது. மாணவர்கள் டாக்டர். அப்துல் கலாம் அவர்களின் கொள்கைகளை பின்பற்றுவோம் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். அனைவருக்கும் மூலிகை மருத்துவ குணம் கொண்ட துளசி செடி பரிசாக கொடுக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும், டாக்டர். ஏ‌. பி. ஜெ அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் குழந்தைகளோடு இருப்பதையும், அவர்களுக்கு உதவிகள் செய்வதையும் வழக்கமாக கொண்டு இருந்தேன். இந்த ஆண்டு கொரோனா காரணமாக அவ்விதம் இருக்க முடியவில்லை. ஆனால் குழந்தைகளின் இருப்பிடத்தை பசுமையாக மாற்றும் முயற்சியாக 1,000 மரக்கன்றுகளை வழங்கினேன்.

இறுதியாக ஆதனூரில் உள்ள ஹெல்பிங் ஹன்ட்ஸ் என்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அங்குள்ள குழந்தைகளுக்கு கல்வி நிதி உதவி, பள்ளி சீருடைகள்,
சானிடைசர்கள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இங்கு நாங்கள் செல்லவில்லை. பாதுகாப்பான முறையில் நலத்திட்ட உதவிகள் அனுப்பிவைக்கப்பட்டது.

அனைத்து நிகழ்வுகளும் அரசின் ஆணைப்படி, சமூக இடைவெளி நடவடிக்கைகள் மற்றும் இதர பாதுகாப்பு ஏற்பாடுகள் முற்றிலுமாக பின்பற்றப்பட்டது.

இறுதியாக நான் கூற விரும்புவது: அப்துல் கலாம் அவர்களுக்கு நம் நாடு பற்றிய தொலைநோக்கு பார்வையில் கல்வி மற்றும் தொழில்நுட்பம் போன்றவை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மக்களை காப்பாற்ற அப்துல் கலாம் அவர்கள் காட்டிய பாதையில் சென்று வெல்வோம் என்று நிச்சயமாக நம்புகிறேன்.

இவ்வாறு டாக்டர் ஷீபா லூர்தஸ் கூறினார்.

Miss TN title winner and Techie person turns Social Activist

More Articles
Follows