அஜித்துடன் இணையும் யோகிபாபு..; ஹைதராபாத்தில் ஹை ஸ்பீட்டில் ‘வலிமை’

அஜித்துடன் இணையும் யோகிபாபு..; ஹைதராபாத்தில் ஹை ஸ்பீட்டில் ‘வலிமை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith yogi babuவினோத் நடிப்பில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’.

போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடிக்கிறார்.

வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார்.

மற்ற கலைஞர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகாமல் ரகசியம் காத்து வருகிறது படக்குழு.

தற்போது இப்பட சூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் முதல் நடிகர் யோகி பாபுவும் இணைகிறார்.

அஜித்துடன் அவர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படலாம் எனத் தெரிகிறது.

Comedy actor Yogi Babu is a part of Thala Ajith’s Valimai

‘ஆப்பரேஷன் ஜுஜுபி’… அருண்காந்த் இயக்கத்தில் ஹீரோவாகிறார் சாம்ஸ்

‘ஆப்பரேஷன் ஜுஜுபி’… அருண்காந்த் இயக்கத்தில் ஹீரோவாகிறார் சாம்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Chaams in operation jujubiஅருண்காந்த் என்பவர் இயக்கி தயாரிக்கும் படம் ‘ஆப்பரேஷன் ஜுஜுபி’.

இந்த படம் தமிழ் & ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் தயாராகிறது.

விஜயதசமி அன்று மருதமலையில் இப்படம் பூஜையுடன் இனிதே தொடங்கியது.

பல படங்களில் காமெடியனாக நடித்த சாம்ஸ் இப்பட மூலம் ஹீரோவாகிறார்.

சுந்தர் சுகுமாறன் என்பவர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்பட பூஜை தினத்தன்றே ரிலீஸ் தேதியையும் உறுதி செய்துள்ளனர்.

அதாவது 07 மே 2021 வெள்ளித்திரையில் படத்தை காணலாம் என தெரிவித்துள்ளனர்.

#OperationJuJuPi

Comedy actor Chaams turns hero in Operation JuJuPi

_____தா ப்ளைட்ட இறக்குடா நான் பாத்துக்குறேன்…; ‘சூரரைப் போற்று’ ரிலீஸ் தேதியை உறுதி செய்த சூர்யா

_____தா ப்ளைட்ட இறக்குடா நான் பாத்துக்குறேன்…; ‘சூரரைப் போற்று’ ரிலீஸ் தேதியை உறுதி செய்த சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

soorarai pottru trailerசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்துள்ள படம் ‘சூரரைப் போற்று’.

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், விமானப்படை தரப்பிலிருந்து தடையில்லாச் சான்றிதழ் வரவில்லை என்பதால் பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சில தினங்களில் படத்துக்கு தடையில்லாச் சான்றிதழ் கிடைத்தது.

இன்று (அக்டோபர் 26) படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

அதில்… வானம் என்ன அவன் அப்பன் வீட்ட சொத்தா.. _____தா ப்ளைட்ட இறக்குடா நான் பாத்துக்குறேன்… என்ற வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த டிரைலருக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்த ட்ரெய்லரில் நவம்பர் 12-ம் தேதி ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ரிலீஸ் என அமேசான் ப்ரைம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Director Sudha Kongara’s Soorarai Pottru trailer becomes an instant hit among Surya fans

தேவையற்ற பிரச்சனையை திருமாவளவன் ஊதி நெருப்பாக்குகிறார்..; ரஜினி கட்சிக்காக காத்திருக்கும் தமிழருவி மணியன் அறிக்கை

தேவையற்ற பிரச்சனையை திருமாவளவன் ஊதி நெருப்பாக்குகிறார்..; ரஜினி கட்சிக்காக காத்திருக்கும் தமிழருவி மணியன் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thirumavalavan tamilaruvi manianஅவதூறான செய்தி குறித்து காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்….
—————————
திரு தொல். திருமாவளவனைத் தாக்கி
ஒரு தரக்குறைவான
விமர்சனத்தை வெளியிட்டு
அதன்கீழ் என் படத்தையும்
எந்த மனநோயாளி போட்டிருக்கிறார் என்று
தெரியவில்லை.

ஐம்பதாண்டுகளுக்கு மேல்
அரசியல் களத்தில் இயங்கும் நான் எந்த நிலையிலும் எவ்வளவு
தவறான மனிதரையும்
தனிப்பட்ட முறையில் தரம்
தாழ்ந்து ஒரு வார்த்தையைக்
கூடப் பேசியதுமில்லை;
எழுதியதுமில்லை.

சமூக ஊடகங்கள் ஏன் இந்த அளவு பாழ்பட்டுக்
கிடக்கின்றன என்று எனக்குப் புரியவில்லை.

கழிப்பறை எழுத்துகள்
விமர்சனம் என்ற பெயரில்
பதிவேற்றம்
செய்யப்படுவதும்
யாரும் யாரையும் இழிந்த
வார்த்தைகளில் கீழிறங்கி
விமர்சிக்கலாம் என்ற நிலை நாளுக்கு நாள் வளர்ந்து வருவதும் சமூக ஆரோக்கியத்தையே
முற்றாகச் சிதைத்துவிடும்
என்ற அச்சம் என்னை
அலைக்கழிக்கிறது.

வெறுப்பு அரசியல் எல்லை
மீறிவிட்ட நிலையில் இந்த
இழிந்த அரசியல் களத்தை
விட்டே முற்றாக விலகி
விடுவதுதான் நல்லது என்ற எண்ணம் என்னுள் எழுகிறது.

எந்த வகையிலும் மக்களுக்கு நன்மை தராத,
சமூக நல்லிணக்கத்தைப்
பாதிக்கிற ஒரு தேவையற்ற
பிரச்சனையை ஏன் திருமாவளவன் ஊதிப் பெருநெருப்பாக வளர்த்தெடுக்கிறார் என்று
புரியவில்லை. இதற்குள்
நுண்ணரசியல் இருக்கக்கூடும்.

ரஜினி அவர்கள் அரசியல் சார்ந்து செயற்படும்வரை எந்த ஊடகத்திலும் என் கருத்தை
வெளிப்படுத்துவதில்லை
என்பதில் நான் உறுதியாக
இருக்கிறேன்.

காந்திய
மக்கள் இயக்க முகநூலில்
என் கையொப்பத்துடன்
இடம் பெறும் கருத்துகள்
மட்டுமே என்னைச் சார்ந்தவை. எந்தக்
கேவலத்திலும் கீழிறங்கி எவரையாவது பழிதூற்ற
வேண்டும் என்ற மன அரிப்பு என்னுள் என்றும் எழுந்ததில்லை.

இழிந்த
வாழ்க்கை வாழ்வதற்காக
நான் அரசியலில் அடியெடுத்து வைக்கவில்லை.

தமிழருவி மணியன்

Tamilaruvi Manian on Thiruma Valavan’s controversy

சீறும் பாம்பு… ஸ்லிம் பாடி… ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்கில் அசத்தும் சிம்பு

சீறும் பாம்பு… ஸ்லிம் பாடி… ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்கில் அசத்தும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu easwaranமுதன்முறையாக சிம்பு & சுசீந்திரன் இணையும் படத்தினை மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தில் பாரதிராஜா, மனோஜ், நிதி அகர்வால், நந்திதா, பால சரவணன், முனீஸ்காந்த், யோகி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக தமன், கலை இயக்குநராக ராஜீவன் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.

‘ஈஸ்வரன்’ என இப்படத்திற்கு தலைப்பு வைத்துள்ளனர்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று (அக்டோபர் 26) விஜயதசமியை முன்னிட்டு வெளியிட்டுள்ளனர்.

உடல் எடையை குறைத்த நிலையில் ஸ்லிம் ஆகவுள்ளார் சிம்பு. கையில் பாம்புடன் காணப்படுகிறார்.

திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதன் சூட்டிங் நடைபெற்று வருகிறது. சுமார் 40% படப்பிடிப்பை முடித்துவிட்டதாம் படக்குழு.

Simbu in Easwaran first look released

பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை.; பாண்டிய மன்னனுக்கு பிறகு அள்ளிக் கொடுத்த நகைக்கடை அதிபர்!

பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை.; பாண்டிய மன்னனுக்கு பிறகு அள்ளிக் கொடுத்த நகைக்கடை அதிபர்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் உள்ள உற்சவருக்கு தியாகராய நகரை சேர்ந்த நகை கடை அதிபர் ஜெயந்திலால் சலானி என்பவர் பாண்டியன் கொண்டை என்ற 3 கிலோ தங்கத்தினால் ஆன கிரீடத்தை காணிக்கையாக செலுத்தினார்.

இதில் தங்கம் மட்டுமல்லாது வைரம் மரகதம் உள்ளிட்ட ஒன்பது வகையான விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

கடந்த 11 மாதங்களாக தனது நகை பட்டறையில் இதனை வடிவமைத்துள்ளார் ஜெயந்திலால்.

இதையடுத்து இன்று காலை தனது குடும்பத்தினருடன் கோயிலுக்கு வந்து உற்சவருக்கு சமர்ப்பித்து வழிபாடு செய்தார்.

பாண்டியன் கொண்டை என்பது ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதருக்கு பாண்டிய மன்னன் தனது ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற கிரீடத்தை காணிக்கையாக செலுத்தி உள்ளார்.

அதன் பின்னர் முதல் முறையாக இவ்வளவு விலை உயர்ந்த கிரீடம் அணிவிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

Triplicane Lord Sri Parthasarathy gets 3 kg gold crown

Triplicane Sri Parthasarathy

More Articles
Follows