இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விண்னைதாண்டி வருவாயா, கோ, நீதானே என் பொன்வசந்தம், யாமிருக்க பயமே உள்ளிட்ட பல வெற்றி படங்களை RS இன்போடெய்ன்மெண்ட் சார்பாக தயாரித்த தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தற்போது எதார்த்த இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றார்.

பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த நடிகர் சூரி இப்படத்தில் முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கின்றார்.

குடும்பமாக அனைவரும் ரசித்து பார்க்கும்படி இப்படம் நகைச்சுவை விருந்தாக அமையுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

கமல் – ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் நடிக்க ஆசையா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகவுள்ள இந்தியன் 2 படத்தின் துணை வேடங்களில் நடிக்க உங்களுக்கு விருப்பமா?

இதோ ஒரு சான்ஸ்…

1996-ல் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படம் பெரிய வெற்றியடைந்தது. இந்நிலையில் இப்படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

கமல், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், வித்யுத் ஜமால், ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரியா பவானி சங்கர் போன்றோர் இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளனர்.

முதன்முறையாக கமல் மற்றும் ஷங்கர் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனம் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இந்தியன் 2 படத்தில் துணை வேடங்களில் நடிக்க ஆர்வமும் பயிற்சியும் உள்ள நடிகர்கள் தேவை என்று அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.

வயது வித்தியாசமின்று ஆண், பெண் என இரு பாலரும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளனர்.

பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரின் அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்த களவாணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் சற்குணம் தயாரித்து இயக்கியுள்ள களவாணி 2 திரைப்படம் மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

விமல் மற்றும் ஓவியாவுக்கு வில்லனாக பப்ளிக் ஸ்டார் சுதாகர் நடித்திருந்தார்.

இப்படத்தின் வெற்றியை படக்குழு சமீபத்தில் கொண்டாடினார்கள்.

இந்த நிலையில், இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், செல்லும் இடங்களில் எல்லாம், அவரிம் பேசும் பொது மக்கள், “நீங்க தேர்தலில் நின்றால், எங்கள் ஓட்டு உங்களுக்கு தான்” என்று சொல்கிறார்களாம்.

உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து உருவான ‘களவாணி 2’வில் துரை சுதாகர் வில்லன் வேடத்தில் நடித்தாலும், அவரது கதாபாத்திரம் செண்டிமெண்ட் நிறைந்த நேர்மையான மனிதராக சித்தரிக்கப்பட்டிருந்ததால், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

ஒரு கட்டத்தில் களவாணி தனம் செய்து தேர்தலில் வெற்றி பெறும் விமல் மீது ரசிகர்கள் கோபப்பட்டாலும், துரை சுதாகர் கதாபாத்திரம் க்ளைமாக்ஸில் பேசும் வசனத்திற்கு ஆரவாரமாக கைதட்டுகிறார்கள்.

இப்படி, வில்லனாக நடித்து மக்கள் மனதில் ஹீரோவாக இடம் பிடித்திருக்கும் துரை சுதாகர், தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் திரையரங்கங்களுக்கு சென்ற போது அவரை சூழ்ந்துக் கொண்ட மக்கள், “எங்கள் ஓட்டு உங்களுக்கு தான் தலைவரே…” என்றும் கோஷமிடுகிறார்களாம்.

தற்போது, வரலட்சுமி சரத்குமார் கதையின் நாயகியாக நடிக்கும் ‘டேனி’ படத்தில் முக்கியமான வேடம் ஒன்றில் நடித்து வரும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், படப்பிடிப்பில் இருந்தாலே அந்த இடத்தில் மக்கள் கூட்டம் கூடிவிட, ஒரே தேர்தல் கோஷங்களாகவே எழுகின்றதாம்.

முன்னணி ஹீரோக்கள் மற்றும் இயக்குநர்களின் படங்களில் நல்ல நல்ல வேடங்களில் நடித்து நல்ல நடிகர் என்று பெயர் எடுக்க வேண்டும், என்ற எண்ணத்தில் சினிமாவுக்குள் நுழைந்திருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரை, பொது மக்கள் அரசியல்வாதியாக ஆக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அந்த அளவுக்கு ‘களவாணி 2’ வில் அவர் நடித்த ஊராட்சி தலைவர் கதாபாத்திரமும், அவரது நடிப்பும், அவர் பேசும் வசனங்களும் மக்களிடம் ரீச் ஆகியிருக்கிறது.

புதிய கல்வி கொள்கை; நாடாளுமன்றத்தில் ரஜினி-சூர்யா வாய்ஸ் எதிரொலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2 வாரங்களுக்கு முன் அரம் அறக்கட்டளை விழாவில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக நடிகர் சூர்யா பேசினார்.

அதன்பின்னர் சில தினங்களில் நடைபெற்ற காப்பான் இசை விழாவில் சூர்யாவின் கருத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்திருந்தார்.

ரஜினி பேசினால் மட்டுமல்ல சூர்யா பேசினாலும் மோடிக்கும் கேட்கும். மாணவர்களுக்கு உதவும் சூர்யாவுக்கு புதிய கல்வி கொள்கை குறித்து பேச தகுதியுள்ளது என்றார்.

இதனால், பாஜக மற்றும் அதிமுக இடையே இந்த கருத்துக்கு அதிருப்தி உருவானது.

இந்நிலையில், மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் அவர்கள் சூர்யா மற்றும் ரஜினியின் புதிய கல்வி கொள்கை குறித்து கருத்தை பாராளுமன்ற அவையில் பேசியுள்ளார்.

அவர்கள் வெளிப்படையாகவே அமைச்சர்களால் மிரட்டலுக்கும் உள்ளாக்கப்பட்டனர் எனவும் கூறியுள்ளார்.

அந்த வீடியோ..

மரண மாஸ் காட்டும் தலைவரின் ‘தர்பார்’ ஸ்டில்ஸ் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் தர்பார் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதற்கு முக்கியமான காரணம்.. நீண்ட நாட்களுக்கு பிறகு இதில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் ரஜினி.

இப்படத்தை ஏஆர். முருகதாஸ் இயக்க லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினியின் சூப்பரான ஸ்டில்ஸ்லை வெளியிட்டுள்ளனர். அதில் ரஜினி மிக சூப்பராக உள்ளார். படங்களும் மாஸாக உள்ளது.

இது ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

Super Star Rajinis Darbar stills released Goes viral

5AM ஸ்பெஷல் ஷோ என்ற பெயரில் வெத்து பந்தா காட்டும் பிரபலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு படம் ரிலீசானால் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 4 காட்சிகள் திரையிடப்படும். பண்டிகை தினங்கள் என்றால் 5 காட்சிகள் இருக்கும்.

பெரிய நடிகர்களின் படங்கள் என்பதால் சிறப்பு காட்சியுடன் சேர்த்து 6 காட்சிகள் வரை திரையிடப்படும். இது அரசு அனுமதியுடன் அதிகாலை 6 மணிக்கு தொடங்குவது வழக்கம்.

ஆனால் அண்மைக்காலமாக இது போன்ற வழக்கம் எல்லாம் படங்களுக்கும் அதிகரித்து வருகிறது.

அதிகாலை காட்சி வைத்தால் எதிர்பார்ப்பு அதிகம் இருப்பதாக மக்கள் நம்புவார்கள் என்ற பேரில் நிறைய தயாரிப்பாளர்கள் ஏற்பாடு செய்கிறார்கள்.

இவர்களே பெரும்பாலான சினிமா டிக்கெட்டுக்களை வாங்கி திரையிட சொல்வதாகவும் கூறப்படுகிறது.

அண்மையில் சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர் லோக்கல் திரைப்படத்திற்கு அதிகாலை காட்சிகள் இல்லை.

ஆனால் அவர் நடிக்காமல் தயாரித்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்திற்கு சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் 5 மணி காட்சி இருந்தது.

படத்தில் பணியாற்றியவர்கள் அவர்களின் குடும்பத்தார் என ஒட்டுமொத்த குழுவும் படம் பார்க்க வந்தனர். இதனால் தியேட்டர் நிரம்பி வழிந்தது.

இதற்கு அவர்கள் பீரிமியர் ஷோக்கள் போடலாம். எதற்காக அவர்கள் படம் பார்க்க சிறப்பு காட்சிகள் திரையிட வேண்டும்.

படம் பார்த்துவிட்டு வெளியே வந்தால் நிறைய டிவி மற்றும் யூடிப் சேனல்கள் நபர்கள் காத்திருப்பார்கள். அவர்களிடம் தங்கள் படத்தை பற்றி அவர்களே பெருமையாக பேசிடவே இதுபோன்ற உக்திகளை கையாள்வதாக சொல்லப்படுகிறது.

இதை நம்பி மற்ற தியேட்டர்கள் உரிமையாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ரசிகர்களும் இதை நம்பி போய் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

சில தியேட்டர்களின் அதிகாலை காட்சிகள் என்ற பெயரில் போனால் பாதி டிக்கெட்டுக்கள் கூட விற்பதில்லை. ஆன்லைன் டிக்கெட் புக்கிங் பதிவை பார்த்தாலே அது தெரிந்துவிடும்.

அதிகாலை 5 மணி காட்சி என்றால் ஒரு கெத்து என்று நினைத்து சிலர் இதில் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுவது சரியா?

Reasons behind 5am early morning special shows of Tamil movies

More Articles
Follows