சந்தானத்திற்கு உள்ள தைரியம் எனக்கில்லை.. – சதீஷ் ஓபன் டாக்

Comedian Sathish going to as Villain in Tamilpadam 2point0காமெடி நடிகர்கள் விவேக், வடிவேலு, சந்தானம் ஆகியோர் தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருகின்றனர்.

இவர்களைத் தொடர்ந்து சூரி, சதீஷ் ஆகியோரும் விரைவில் நாயகர்களாக நடிப்பார்கள் என எதிர்பார்த்திருக்கின்றனர்.

இந்நிலையில் காமெடியன் சதீஷ் தமிழ்படம் 2.0 படத்தில் மெயின் வில்லனாக நடித்து வருகிறாராம்.

இதுபற்றி சதீஷ் கூறியதாவது…

’நான் அறிமுகம் ஆனதே சிஎஸ். அமுதன் இயக்கிய தமிழ் படம் பாகம் 1 இல் தான்.

இப்போது இதன் 2ஆம் பாகத்தில் வில்லனாக நடிக்கிறேன்.

இதில் எனக்கு 15 கெட்டப்கள் இருக்குது. இந்த படம் எனக்கு மட்டும் அல்ல சிவாவுக்கும் நல்ல பெயரை வாங்கித் தரும்.

ஆனால் நான் ஹீரோவாக நடித்து மக்களுக்கு கஷ்டத்தை கொடுக்க விரும்பவில்லை.

சந்தானத்தை எடுத்துக்கொண்டால் அவர் ஹீரோ ஆவதற்கான தகுதிகளை வளர்த்து பின் ஹீரோ ஆனார்.

உடலை குறைத்து சரியான கதையை தேர்ந்தெடுத்து நடித்தார். அதுதான் சரியான வழி. எனக்கு அந்த தைரியம் இல்லை.” என்றார்.

Comedian Sathish going to as Villain in Tamilpadam 2point0

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

ரஜினி, ஷங்கர் கூட்டணியில் உருவாகி இந்தியாவின்…
...Read More
ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள…
...Read More
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம்…
...Read More

Latest Post