நடிக்கிற வேலையை மட்டும் பாருடா..; சூர்யா போட்டோவை மிதித்து இந்து இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

நடிக்கிற வேலையை மட்டும் பாருடா..; சூர்யா போட்டோவை மிதித்து இந்து இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீட் தேர்வு அச்சத்தால் தமிழக மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்தனர்.

இதனால் நீட் தேர்வு எதிர்ப்பு தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

எனவே நடிகர் சூர்யா நீட் தேர்வுவை கண்டித்து கடுமையான அறிக்கையை வெளியிட்டார்.

இதனால் நீட் தேர்வை ஆதரிக்கும் பாஜக & இந்து அமைப்புகள் சூர்யாவுக்கு எதிராக திரும்பினர்.

இதனை தொடர்ந்து… திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய இந்து மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் தர்மா என்பவர், நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ1 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்த நிலையில் கோவை காந்திப்பார்க் பகுதியில் சூர்யாவை கண்டித்து இந்து இளைஞர் முன்னணியினர் இன்று போராட்டம் நடத்தினர்.

“இயலாமையில் இருக்கும் சில மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் விதமாக சூர்யா பேட்டிகள் அறிக்கைகள் உள்ளன.

சூர்யா மாதிரியான ஆட்கள் நீட் வந்து மாணவர்களுக்கு ஆகாது நீட் ங்கிற மாதிரி பேசி வருகின்றனர்” என்றார் இந்து இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகம்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சூர்யாவின் படத்தை கிழித்தும் காலில் மிதித்தும் அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

நடிப்பை மட்டும் பாருடா சூர்யா…. வேலையை மட்டும் பாருடா சூர்யா… என கோஷங்கள் எழுப்பினர்.

coimbatore hindu munnani youth protest against suriya

hindu munnani protest

ஆண்ட்ரியா நடிக்கும் ‘பிசாசு-2’..; இளையராஜா இல்லாமல் மிஷ்கின் படம்

ஆண்ட்ரியா நடிக்கும் ‘பிசாசு-2’..; இளையராஜா இல்லாமல் மிஷ்கின் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pisasu 2 andreaஉதயநிதி நடித்த சைக்கோ படத்திற்கு பிறகு துப்பறிவாளன் 2 படத்தை மிஷ்கின் இயக்கி வந்தார்.

ஆனால் அந்த பட தயாரிப்பாளரும் நடிகருமான விஷாலுடன் ஏற்பட்ட மோதலால் அப்படத்திலிருந்து விலகினார்.

இதனையடுத்து தனது அடுத்த படம் தொடர்பான அறிவிப்பை வருகிற 20ம் தேதி அவரின் பிறந்தநாளில் வெளியிடுவதாக தெரிவித்தார் மிஷ்கின்.

தன் அடுத்த படமாக ‘பிசாசு 2’ படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஆண்ட்ரியா நாயகியாக நடிக்க கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.

பெரும்பாலும் மிஷ்கின் படங்களுக்கு இளையராஜா தான் இசையமைப்பார்.

ஆனாலும் இளையராஜாவின் மூத்த மகன்தான் கார்த்திக் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

Mysskins Pisasu 2 cast and crew details

எந்த வம்புக்கு போகாதவர் அஜித்.; வீரமாக பேசி மன்னிப்பு கேட்கும் விஜய் இல்ல.. – மீரா மிதுன்

எந்த வம்புக்கு போகாதவர் அஜித்.; வீரமாக பேசி மன்னிப்பு கேட்கும் விஜய் இல்ல.. – மீரா மிதுன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

meera mithunசமீபத்தில் பிரபலமான பத்திரிகை ஒன்று நடிகர் அஜித்தை எந்த பிரச்சனைக்கும் வெளியே வராதவர் என கிண்டலடித்து டிசைன் வெளியிட்டது.

அதில்.. வெளியே வர மாட்டேன் போடா என்ற டி சர்ட்டை அஜித் போட்டு இருப்பது போல டிசைன் செய்திருந்தனர்.

இதனால் தல ரசிகர்கள் கடுப்பாகிஅந்த பத்திரிகையை கேவனமான வார்த்தைகளால் ட்ரெண்டாக்கி ட்விட்டரில் வறுத்தெடுத்தனர்.

இந்த் டிரெண்ட் குறித்து மாடலும் நடிகையுமான மீரா மிதுன் கூறியுள்ளதாவது..

அஜித் எந்த வம்புக்கும் போகாதவர்.. விஜய் போல வீரராக இசை வெளியீட்டில் பேசிவிட்டு பின்னர் மன்னிப்பு கேட்பவர் இல்லை.

தானாகவே உயர்ந்தவரை இது போல அசிங்கப்படுத்தியது தவறு. அஜித் அவர்கள் அவதூறு வழக்கு தொடுக்கும் நேரம் இது.

என பதிவிட்டுள்ளார் மீரா மிதுன்.

Meera Mithun targets Vijay again

‘முந்தானை முடிச்சு’ ரீமேக்..; சசிகுமார் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்

‘முந்தானை முடிச்சு’ ரீமேக்..; சசிகுமார் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாக்யராஜ் இAishwarya rajesh to play the lead in Mundhanai Mudichu sequelயக்கிய பல படங்கள் சூப்பர் ஹிட்டனாலும் அவர் இயக்கி நடித்த படங்களில் யாராலும் மறக்க முடியாத படம் முந்தானை முடிச்சு.

ஊர்வசி, பூர்ணிமா பாக்யரஜ், கே.கே.சௌந்தர், தவக்களை சிட்டிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

ஏ.வி.எம் நிறுவனத்தின் தயாரித்த இந்த படம் 1983-ம் ஆண்டு வெளியானது.

தமிழில் ஹிட்டானதை தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக்கானது.

இத்திரைப்படம் 37 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ரீமேக் செய்யப்படவுள்ளதாக வந்த செய்திகளை கடந்த மே மாதம் நம் தளத்தில் செய்தியாக பார்த்தோம்.

பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார்.

தற்போது ஊர்வசி கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறாராம்.

ஜே.எஸ்.பி. சதீஷ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது

இந்த படத்தில் இணைந்துள்ள குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது..

‘முந்தானை முடிச்சு’ படத்தில் இணைந்திருப்பது உற்சாகமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. தமிழ் சினிமாவில் மைல் கல் படத்தில் நடிக்கிறேன்.” என்றும் கூறியுள்ளார்.

Aishwarya rajesh to play the lead in Mundhanai Mudichu sequel

Aishwarya rajesh to play the lead in Mundhanai Mudichu sequel

கவலைப்படாதே.. புதிய கால் கிடைக்கும்..; ரசிகருக்கு சோனு சூட் உதவி

கவலைப்படாதே.. புதிய கால் கிடைக்கும்..; ரசிகருக்கு சோனு சூட் உதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

You are getting a new leg Sonu sood help needy peopleகொரோனா காலத்தில் ரீல் ஹீரோக்கள் எல்லாம் வீட்டுக்குள் ஒளிந்திருக்க ரியல் ஹீரோவானார் நடிகர் சோனு சூட்.

தமிழில் கள்ளழகர், சந்திரமுகி, ஒஸ்தி, தேவி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் கொரோனா காலத்தில் ஏழை மக்களுக்கு செய்த உதவிகளை கணக்கிட முடியாது.

இந்த நிலையில் தினேஷ் மணிகண்டா என்கிற 20 வயது இளைஞர் ஒருவர், தனது இடதுகாலை இழந்துவிட்டதால் செயற்கை கால் பொருத்த சோனு சூட் அவர்களிடம் உதவி கேட்டுள்ளார்.

இதற்கு மருத்துவர்கள் ரூ. 7 லட்சம் செலவாகும் என தெரிவித்துள்ளதாகவிம் கூறியுள்ளார்.

இதனையறிந்த சோனு சூட், “கவலைப்படாதே.. உனக்கு புதிய கால் கிடைத்துவிடும்.. உன் பெற்றோரிடம் சொல்லிவிடு” என கால் இழந்த அந்த வாலிபருக்கு தன்னம்பிக்கை கொடுத்துள்ளார்.

You are getting a new leg Sonu sood help needy people

‘அந்தாதூன்’ ரீமேக் அப்டேட்.: தமிழில் பிரசாந்த்..; தெலுங்கில் நிதின்-தமன்னா

‘அந்தாதூன்’ ரீமேக் அப்டேட்.: தமிழில் பிரசாந்த்..; தெலுங்கில் நிதின்-தமன்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Andhadhun Tamil and Telugu remake news updatesஹிந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘அந்தாதூன்’ பட தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றினார்.

ஹிந்தியில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதை இந்த படம் பெற்றது.

ஆயுஷ்மான் குரானா கேரக்டரில் பிரசாந்த் நடிக்கவுள்ளார் எனவும் இப்படத்திற்காக பிரசாந்த் 20 கிலோ உடல் எடையை குறைத்துள்ளதாகவும் வந்த செய்திகளை பார்த்தோம்.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார்.

தற்போது தெலுங்கு ரீமேக் பற்றி அறிவிப்பு வந்துள்ளது.

மெர்லபகா காந்தி இயக்க மஹதி சுவரா சாகர் என்பவர் இசையமைக்கிறார்.

ஆயுஷ்மான் குரானா வேடத்தில் நிதினும், தபு வேடத்தில் தமன்னாவும், ராதிகா ஆப்தே வேடத்தில் நபா நடேஷும் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்குகிறது.

Andhadhun Tamil and Telugu remake news updates

More Articles
Follows