தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படம் வருகிற டிசம்பர் 22ந் தேதி வெளியாகவுள்ளது.
இவருடன் நயன்தாரா, பகத் பாசில், பிரகாஷ்ராஜ், சினேகா, சதீஷ், ரோபோ சங்கர், ஆர்ஜே. பாலாஜி ஆகியோரும் நடித்துள்ளனர்.
24ஏஎம் ஸ்டூடீயோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.‘
இப்படத்தில் சிவகார்த்திகேயன், 3 விதமான கெட்-அப்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்ஜி கூறியதாவது:
சென்னை வெள்ளத்தின் போது வேலைக்காரன் படத்தின் ஒரு வரிக்கதையை எனக்கு சொன்னார் டைரக்டர் மோகன் ராஜா.
அவர் சொன்ன அந்த கான்செப்ட் என்னை கவர்ந்தது, இந்த படம் நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அவரிடம் உறுதி அளித்தேன். வேலைக்காரன் வழக்கத்துக்கு மாறான ஒரு சினிமா, வருங்கால தலைமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமான படம்.
இதுவரை சிவகார்த்திகேயன் இப்படி ஒரு படத்தில் நடித்ததில்லை. இந்த படத்தில் அவரின் தோற்றம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் கவனமாக இருந்தோம்.
அவர் மூன்று விதமான பரிணாமங்களில் தோன்றுவார், அதற்கேற்ப அவரின் தோற்றத்தையும் காட்சிகளையும் உருவாக்கினோம்” என்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி.