வழக்கத்துக்கு மாறான ஒளிப்பதிவை சீமராஜாவில் கொடுத்திருக்கிறேன். : பாலசுப்ரமணியம்

வழக்கத்துக்கு மாறான ஒளிப்பதிவை சீமராஜாவில் கொடுத்திருக்கிறேன். : பாலசுப்ரமணியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Cinematographer Balasubramaniam talks about Seema Raja movieசிவகார்த்திகேயன் நடித்துள்ள சீமராஜா திரைப்படம் நாளை வெளியாகிறது.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்த பாலசுப்ரமணியம் இப்படம் தனக்கு பெரும் சவாலாக இருந்ததாக கூறியுள்ளா.

அவர் கூறியதாவது…

“எனது முந்தைய படங்களை விட இந்த படம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என நிறைய மெனக்கெட்டேன். பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில்., இமான் இசையில், என இந்த கூட்டணியில் வருத்த படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்கள் கிராமிய பின்னணியில் உருவான படங்கள் என்பதால் இந்த வித்தியாசம் தேவைப்பட்டது.

அதே பிண்ணனி என்றாலும், காட்சி அமைப்பு மிக மிக வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று உழைத்தோம். இயக்குநர் பொன்ராம், கலை இயக்குனர் முத்துராஜ், என ஒவ்வொருவரும் போட்டி போட்டு உழைத்தோம். இந்த படத்தில் உள்ள நடிகர்கள் தங்களது அனுபவத்தின் அடிப்படையில் ஓளி அமைப்புக்கு ஏற்றவாறு ஒத்துழைப்பு தந்தனர்.

சிவகார்திகேயன், சமந்தா, சூரி , சிம்ரன், நெப்போலியன் சார், லால் சார் என குவிந்து இருந்த நட்சத்திர குவியல் படத்துக்கு பெரிய அந்தஸ்தை பெற்று தந்து இருக்கிறது.

படத்தை குறிப்பிட்ட காலத்தில் , சிறந்த தரத்தில் வழங்க வேண்டும் என்பதால் மிகுந்த உடல் களைப்பு மட்டுமின்றி, மன களைப்பு கூட இருந்தது. ஆனால் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் இடைவிடாத உற்சாகம் எங்களுக்கு உத்வேகமும், உற்சாகமும் தந்தது.

24 A M ஸ்டுடியோஸ் சார்பில் ஆர் டி ராஜா தயாரிப்பில் வருகின்ற செப்டம்பர் 13 ஆம் தேதி வெளிவரும் “சீமராஜா” எங்கள் உழைப்புக்கு பெரும் அந்தஸ்தை பெற்று தரும்”என உறுதி பட கூறினார் பாலசுப்ரமணியம்.

Cinematographer Balasubramaniam talks about Seema Raja movie

அர்ஜுன் நடிப்பில் சிங்காரவேலன் தயாரிக்கும் பட ஹீரோ பெயரை லிங்குசாமி அறிவிக்கிறார்

அர்ஜுன் நடிப்பில் சிங்காரவேலன் தயாரிக்கும் பட ஹீரோ பெயரை லிங்குசாமி அறிவிக்கிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Lingusamy reveal Hero and movie title of Muli starrer movieஅர்ஜுன், ஜாக்கி ஷெராஃப், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தை மிக பிரமாண்டமாக தயாரிக்க உள்ளார் சிங்காரவேலன்.

‘கழுகு – 2’ படத்திற்கு பிறகு சிங்காரவேலன் தயாரிக்கும் இரண்டாவது படம் இது.

அறிமுக இயக்குநர் அன்பரசன் இயக்க உள்ள இந்த படத்தை ‘பேராண்மை’ , ‘பூலோகம்’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த S.R.சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ரதன் படத்திற்கு இசையமைக்கிறார். படத்தொகுப்பு – கோபிகிருஷ்ணா.

‘க்ரைம் நாவல்’ மன்னன் ராஜேஷ்குமார் திரைக்கதை எழுத, பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார்.

பெயரிடப்படாத இந்த படத்தில் நடிக்க உள்ள கதாநாயகன் யார் என்பது விநாயகர் சதுர்த்தி அன்று அறிவிக்கப்படும் என ஏற்கனேவே அறிவித்திருந்தார்கள்.

அதன்படி இயக்குனர்/தயாரிப்பாளர் லிங்குசாமி நாளை காலை 11 மணிக்கு படத்தின் கதாநாயகன் யார் என்பதையும் படத்தின் பெயரையும் அறிவிக்கிறார்.

Director Lingusamy reveal Hero and movie title of Muli starrer movie

பாகுபலி பட பட்ஜெட்டை மிஞ்சியது ரஜினிகாந்தின் 2.0 பட செலவு

பாகுபலி பட பட்ஜெட்டை மிஞ்சியது ரஜினிகாந்தின் 2.0 பட செலவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth 2point0 movie budget crossed Baahubalis budgetரஜினிகாந்த் நடித்துள்ள ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

இதன் படப்பிடிப்பு ஒரு வருடத்துக்கு முன்பே முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. ஏற்கனவே படம் வெளியாகும் தேதிகளை அறிவித்து தள்ளிவைத்து விட்டனர்.

கிராபிக்ஸ் பணிகள் முடியாததே தாமதத்துக்கு காரணம் என்றனர். வெளிநாட்டு ஸ்டுடியோக்களில் கிராபிக்ஸ் வேலைகள் முழு வீச்சில் நடக்கின்றன. இந்த படத்தின் பாடலை துபாயில் விழா நடத்தி வெளியிட்டனர்.
மிஸ்டுகால் கொடுத்து 2.0 பட டீசரை இலவசமா தியேட்டரில் பாருங்க
நவம்பர் மாதம் 29ஆம் படம் திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர்.

இந்நிலையில் 2.0 படத்தின் டிரெய்லர் நாளை விநாயகர் சதுர்த்தியில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் குறிப்பிட்ட திரையரங்குகளில் 3 டியில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் யூடியுப்பில் 2 டியில் வெளியிடப்படும் என்றும் அறிவித்து உள்ளனர். இது ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

2.0 படத்தின் டிரெய்லரை தணிக்கை செய்யும்போது பார்த்த ஒருவர் பாகுபலியை மிஞ்சுவதாக உள்ளது என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த படம் ரூ.450 கோடி செலவில் தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்டது.

ஆனால் படத்தின் செலவு குறித்த புதிய போஸ்டரை படக்குழுவினர் இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர். அதில் இந்தியாவிலேயே முதல் முறையாக வி.எப்.எக்ஸ் தொழில் நுட்பத்தில் 75 மில்லியன் டாலர் செலவிடப்பட்ட படம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

முதன்முறையாக 3D தொழில்நுட்பத்தில் ரஜினியின் 2.0 டீசர்

இந்திய பணமதிப்பில் 75 மில்லியன் டாலர் என்பது ரூ.542 கோடிக்கு அதிகம். இதனால் வியந்து போன ரசிகர்கள் அந்த போஸ்டரை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

இயக்குனர் ‌ஷங்கரும் தனது டுவிட்டரில் 2.0 படத்தில் பிரமாண்டத்தை கொண்டுவர 3 ஆயிரம் தொழில்நுட்ப கலைஞர்கள் உழைத்துள்ளனர் என தெரிவித்து உள்ளார்.

Rajinikanth 2point0 movie budget crossed Baahubalis budget

யு-டர்ன் படத்தில் என் கேரக்டர் புதுமையாக இருக்கும்..: பூமிகா சாவ்லா!

யு-டர்ன் படத்தில் என் கேரக்டர் புதுமையாக இருக்கும்..: பூமிகா சாவ்லா!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Bhumika Chawla shares her U Turn movie working experienceஇருபது ஆண்டுகள் கடந்தாலும்,தன் அழகால் நம்மை இன்றும் கவர்ந்து இழுக்கிறார் நடிகை பூமிகா சாவ்லா.

அவசர அவசரமாக நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று அவர் ஒருபோதும் நினைத்ததும் இல்லை, அதே நேரத்தில் புதுமையான தன்னை கவர்கின்ற கதாப்பாத்திரங்கள் அமையும் போது அவற்றை தவற விட்டதும் இல்லை.

எவ்வளவு பெரிய கதாபாத்திரம் என்பதை விட, குறைந்த நேரமே வந்தாலும் தாக்கத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரங்களின் மீது மிகுந்த நம்பிக்கை உடையவர். அதற்கு மிகச்சிறந்த ஒரு உதாரணம் தான் செப்டம்பர் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் ‘யு-டர்ன்’.

இந்த படம் வெறும் நட்சத்திர பட்டாளத்தை தாண்டி, மிகச்சிறந்த நடிகர்களையும் கொண்டிருப்பது படத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது.

இந்த படத்தை பற்றி அவர் கூறும்போது, “ஒரு திரைக்கலைஞர் வித்தியாசமான மற்றும் சவாலான கதாபாத்திரங்களை செய்யும்போது அங்கீகாரம் பெறுவார், அவரும் அதனால் திருப்தி அடைவார்.

‘யு டர்னில்’ என் கதாபாத்திரம் நான் கடந்த காலங்களில் செய்ததை போல் அல்ல. என் நடிப்பை ரசிகர்கள் எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்றார் பூமிகா.

பல முன்னணி கதாநாயகிகளுடன் ஒரே படத்தில் சேர்ந்து நடித்த ஒரு சில நடிகைகளில் பூமிகாவும் மிக முக்கியமானவர். உண்மையில், அவரது நட்பான, நல்ல மனது பலரது இதயங்களை வென்றுள்ளது.

உடன் நடிப்பவர்களின் நடிப்பை அவர் ஒருபோதும் பாராட்ட தவறியதே இல்லை. “சமந்தா ஒரு பிரமாதமான நடிகை, படப்பிடிப்பில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார். இந்த படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார் என்று யு-டர்ன் படத்தில் சமந்தாவின் நடிப்பை பாராட்டியுள்ளார் பூமிகா.

தற்போது பெண்களை மையப்படுத்தி உருவாகும் படங்களின் போக்கை பற்றி அவர் கூறும்போது, “நானும் பெண்களை மையப்படுத்திய திரைப்படங்களில் இடம் பெற்றுள்ளேன், மேலும் இந்த வகையிலான திரைப்படங்கள் கணிசமாக அதிகரித்து வருகின்றன. திரைக்கதை எழுத்தாளர்கள் இது போன்ற திரைப்படங்கள் மற்றும் கதாபாத்திரங்களை தொடர்ந்து எழுத வேண்டும்” என்றார்.

“தமிழ் திரைப்படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் என்னை தேடி வருகின்றன. ஆனால், கதை மற்றும் படக்குழுவும் சரியாக அமைய வேண்டும். அப்போது தான் அது சரியாக ரசிகர்களிடம் சென்று சேரும்.

நான் 1999 ஆம் ஆண்டில் சினிமாவில் அறிமுகமானேன், கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆகின்றன. என் பெற்றோர் வெற்றி, தோல்வியை எவ்வாறு சமமாக அணுகுவது என்று கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அதனால் வெற்றி, தோல்வி எதுவும் என்னை பாதிப்பதில்லை” என்று தன்னம்பிக்கையோடு முடிக்கிறார் பூமிகா சாவ்லா.

Actress Bhumika Chawla shares her U Turn movie working experience

மிஸ்டுகால் கொடுத்து 2.0 பட டீசரை இலவசமா தியேட்டரில் பாருங்க

மிஸ்டுகால் கொடுத்து 2.0 பட டீசரை இலவசமா தியேட்டரில் பாருங்க

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Just give Missed Call and watch 2point0 Teaser in theatersலைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரூ. 500 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள படம் 2.0.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்‌ஷய்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நீண்டகால தயாரிப்பில் இருந்த இப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகிவிட்டது.

நவம்பர் மாதம் 29ம் தேதி உலகமெங்கும் இப்படம் வெளியாகிறது.

முதன்முறையாக 3D தொழில்நுட்பத்தில் ரஜினியின் 2.0 டீசர்

இதன் டீசரை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13ம் தேதி 2டி மற்றும் 3டி தொழில்நுட்பங்களில் வெளியிடவுள்ளனர் என்பதை பார்த்தோம்.

தற்போது இந்த டீசரை பிவிஆர் மற்றும் சத்யம் திரையரங்குகளில் இலவசமாக பார்க்க படக்குழு ஏற்பாடு செய்துள்ளது.

அதாவது +91 9099949466 இந்த நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்தால் 2.O டீசரை தியேட்டரில் இலவசமாக பார்க்கலாம் என அறிவித்துள்ளனர்.

Just give Missed Call and watch 2point0 Teaser in theaters

செம ஃபிட் சூர்யா; இணையத்தில் வைரலாகும் சூர்யா-37 படங்கள்

செம ஃபிட் சூர்யா; இணையத்தில் வைரலாகும் சூர்யா-37 படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya 37 shooting spot photos goes viralசெல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே படத்தில் நடித்து வந்தார் சூர்யா.

ட்ரீம் வாரியர் தயாரித்து வரும் இப்படத்திற்கு யுவன் இசையைமத்து வருகிறார்.

இந்தாண்டு இறுதியில் இப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது.

இதனையடுத்து தற்போது கே.வி. ஆனந்த் இயக்கும் படத்தில் நடித்துவருகிறார்.

மோகன்லால்-சூர்யா உடன் நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்

இப்படத்தில் மோகன்லால், அல்லு சிரிஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் உள்ள சூர்யாவின் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதில் சூர்யா செம ஃபிட்டாக இருக்கிறார்.

Suriya 37 shooting spot photos goes viral

More Articles
Follows