ஒரு படம் பார்க்க 500 ரூபா கொடுப்பீங்களா.? டிக்கெட் ரேட் உயருதாம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தியேட்டரில் படம் பார்க்க வருபவர்களை நம்பி ஆயிரக்கணக்கானவர்கள் பிழைத்து வருகிறார்கள்.

பார்க்கிங் கட்டணம் முதல் பாப்கார்ன், பப்ஸ், குடி நீர் என அனைத்தையும் கறந்துவிடுகின்றனர். (இதில் சுவையும் ஒன்றும் பெரிதாக இருப்பதில்லை)

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1000 தியேட்டர்கள் உள்ளன.

இவைகளில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாநகரங்களில் மல்டிபிளக்ஸ் எனப்படும் காம்ப்ளக்ஸில் மூன்று முதல் நான்கு தியேட்டர்கள் வரை உள்ளன.

இவைகளில் அரசு நிர்ணயித்த கட்டணப்படி சராசரியாக ரூ. 120 டிக்கெட் விற்கப்படுகிறது.

ஆனால் மற்ற தியேட்டர்களில் ஹீரோக்களின் மார்கெட் பொறுத்து 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை இருக்கும்.

ரஜினியின் கபாலி படத்திற்கு ரூ. 1000, 2000 வரை விற்கப்பட்டதெல்லாம் வேறுகதை.

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக டிக்கெட் விலை உயர்த்தப்படவில்லை என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கின் மீதான விசாரணையில் மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து அரசு ஒரு மாதத்திற்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே, விரைவில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

அதாவது கிட்டதட்ட ரூ. 350 வரை பர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட் விற்கப்படலாம் எனத் தெரிய வந்துள்ளது.

நாங்க எல்லாம் படம் பாக்குறதா? வேண்டாமா? என்று நீங்கள் சொல்லும் மைண்ட் வாய்ஸை நாங்க கேட்ச் பண்ணிட்டோம் பாஸ்

கடந்த 10 வருடங்களில் ‘தெறி’ பர்ஸ்ட்… ‘வேதாளம்-ரெமோ’ லாஸ்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தேனி மாவட்டத்தில் மிக பிரபலமான தியேட்டர் கோபி கிருஷ்ணா.

இதன் உரிமையாளரான ராகுல் குமரேசன் தன்னுடைய அண்மையில் பேட்டியில் இவரது தியேட்டரில் வசூலை குவித்த படங்களின் பட்டியலை தெரிவித்துள்ளார்.

அதாவது கடந்த 10 வருடங்களில் அவரது தியேட்டரில் வெளியிட்ட படங்களில் தெறி படம்தான் வசூலில் முதல் இடத்தை பிடித்துள்ளதாம்.

இதனை தொடர்ந்து வசூலை குவித்த படங்கள் எவை என்பதை தெரிவித்திருக்கிறார்.

  1. தெறி
  2. ஏழாம் அறிவு
  3. துப்பாக்கி
  4. கத்தி
  5. ரஜினிமுருகன்
  6. வீரம்
  7. வருத்தப்படாத வாலிபர் சங்கம்
  8. எந்திரன்
  9. வேதாளம்
  10. ரெமோ

தனுஷும் மடோனாவும் இணைய ராஜ்கிரண்தான் காரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனது தந்தை கஸ்தூரி ராஜாவின் முதல் பட ஹீரோவான ராஜ்கிரணையே தன் படத்திற்கும் ஹீரோவாக்கி இருக்கிறார் தனுஷ்.

இவர் இயக்கும் பவர் பாண்டி படத்தில் ராஜ்கிரனுடன் பிரசன்னா, சாயா சிங் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

முதலில் இதில் தனுஷ் நடிப்பதாக இல்லையாம்.

ஆனால், ராஜ்கிரண்தான் நடிக்க வற்புறுத்தியிருக்கிறாராம்.

அதாவது… “நான் இப்போ கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஆகிட்டேன். படத்தின் வெற்றிக்கு ஒரு ஹீரோ இருக்கனும்.

அப்போதான் படம் ரசிகர்களிடம் ரீச் ஆகும்” என்றாராம்.

அதன்படிதான் தனுஷ் நடிக்க, இப்போது அவருக்கு ஜோடியாக பிரேமம் நாயகி மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார்.

‘அஜித் எப்படி வித்தியாசமானவர்…?’ உண்மையை உடைத்த கருணாகரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் ‘தல-57’ என்று தற்காலிக பெயரிடப்பட்ட படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

இவருடன் காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், கருணாகரன், தம்பி ராமையா, பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து தன் சமீபத்திய பேட்டியில் கருணாகரன் கூறியதாவது….

நம்முடன் பழகியவர்கள், நம்முடன் வேலை செய்பவர்களுக்கு உடம்பு சரியில்லை என்றால், நல்லா பத்திரமா பாத்துக்குங்க என்று கூறிவிடுவோம்.

ஆனால் அஜித்தோ, டாக்டரிடம் அப்பாய்மெண்ட் வாங்கி கொடுத்து, அவரை டாக்டரிடம் போக சொல்வார்.

அவரிடம் உள்ள இந்த பண்பை கண்டு வியந்து நிற்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

விஜய் தந்தை வழியில் கமல்ஹாசனின் சகோதரர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பல புரட்சிகரமான படங்களை இயக்கியிருந்தாலும் அண்மையில்தான் படங்களில் நடிக்க தொடங்கினார் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ. சந்திரசேகர்.

அதிலும் டூரிங் டாக்கீஸ் படம் இவரை பிரதானப்படுத்தியே இருந்தது.

இவ்வழியில் கமலின் சகோதரான சாருஹாசன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

86 வயதான இவர் தாதாவாக வில்லன் வேடத்தில் நடிக்கிறார். இவருடன் அரசியல் தலைவராக பாலாசிங் நடிக்கிறார்.

ஜீவா நடித்த ‘ரௌத்திரம்’ படத்துக்கு இசையமைத்த பிரகாஷ் நிக்கி, ‘பீக்காக் பிலிம் பேக்டரி சார்பாக இப்படத்தை தயாரிக்க, விஜய்ஸ்ரீஜீ இயக்குகிறார்.

தயாரிப்பாளர் ஆனது ஏன்? என்பது பற்றி பிரகாஷ் நிக்கி கூறும்போது, “விஜய்ஸ்ரீஜீ சொன்ன கதை சினிமாவையும் தாண்டி வேறொரு கோணத்தில் இருந்தது. எனவே, நானே தயாரிக்க முடிவு செய்தேன்” என்றார்.

பெயரிடப்படாத இப்படம் குறித்து டைரக்டர் விஜய்ஸ்ரீஜீ கூறியதாவது:-

“இதில் 12 முக்கிய கேரக்டர்கள் இடம் பெற்றுள்ளது.

‘பவுடர்’ என்று சொல்லப்படும் போதை மருந்து உலகின் ‘டான்’ ஆக அவர் நடிக்கிறார்.

படத்தில் நடிக்கும் யாருக்கும் ‘மேக்கப்’ கிடையாது.” என்றார்.

‘சூது கவ்வும்’ படத்தின் உதவி ஒளிப்பதிவாளர் ராஜா, இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, பிரகாஷ் நிக்கி இசையமைக்கிறார்.

ஜி.வி.பிரகாஷுக்காக வடிவேலு எடுக்கும் ரிஸ்க்… ரஸ்க் ஆகுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘புரூஸ் லீ’ மற்றும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ ஆகிய படங்கள் அடுத்த நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு, தில்லுக்கு துட்டு ராம்பாலா இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார்.

ஸ்டீபன் தயாரிக்கும் இப்படத்தில் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பதை தெரிவித்திருந்தோம்.

தற்போது வடிவேலு கேரக்டர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

காமெடி கலந்த வில்லன் வேடத்தை செய்யப்போகிறாராம் வடிவேலு.

எத்தனையோ படங்களில் காமெடியனாகவும் நாயகனாகவும் வடிவேலு நடித்திருந்தாலும், அவர் வில்லனாக நடிப்பது இதான் முதல்முறை.

அவர் ஒரு படத்தில் சொல்வதுபோல… அவர் எடுக்கும் ரிஸ்க் ரஸ்க் ஆகிறதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More Articles
Follows