விஜய் இயக்கத்தில் ‘டான்சிங் ஸ்டார்’ ஜானி மாஸ்டர் நாயகனாக நடிக்கும் படம்

விஜய் இயக்கத்தில் ‘டான்சிங் ஸ்டார்’ ஜானி மாஸ்டர் நாயகனாக நடிக்கும் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடன இயக்குநர் ஜானி மாஸ்டரின் திறமை தலைமுறை தாண்டிய சினிமா ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அவர் கன்னடம், தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் குறிப்பாக தெலுங்கில் பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். அவரது நடனம் பல நட்சத்திர கதாநாயகர்களையும் கவர்ந்துள்ளது.

இவர் தற்போது ‘ரன்னர்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். விஜய் டமருகா ஆர்ட்ஸ் சார்பில் விஜய் பாஸ்கர், ஜி.பனிந்திரா மற்றும் எம்.ஸ்ரீஹரி ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர்.

இதற்கு முன் ‘அரவிந்த் 2’ படத்தை தயாரித்துள்ளனர். அறிமுக இயக்குநர் விஜய் சௌத்ரி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

ஜானி மாஸ்டரின் பிறந்தநாளை முன்னிட்டு, ஆக்‌ஷன் டிராமாவாகமாக உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

காவல் துறையின் பின்னணியில் எடுக்கப்பட்ட இந்த அழுத்தமான படத்தின் மையப்பகுதியை தந்தை-மகன் உறவு ஆக்கிரமித்துள்ளது.

ஃபர்ஸ்ட் லுக்கில் ஹீரோ காக்கி பேன்ட் மற்றும் ஷர்ட் அணிந்து அதிரடியாக பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளார். ஒருபுறம் காக்கி சீருடையும் மறுபுறம் கதரும் ‘ரன்னர்’ கதையின் கருவுடன் தொடர்புடைய ஒன்றைக் குறிக்கிறது.

ஜானி மாஸ்டருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த இயக்குநர் விஜய் சவுத்ரி, அவரை ‘டான்சிங் ஸ்டார்’ என்று வர்ணித்துள்ளார்.

படம் குறித்தும் அவர் மேலும் கூறியிருப்பதாவது…

“திறமையான நடன இயக்குநரான ஜானி மாஸ்டருடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவருடைய நடிப்புத் திறமை, அவரது குணாதிசயங்கள் மற்றும் அப்பா-மகன் இருவருக்கிடையிலான சென்டிமென்ட் காட்சிகள் நிச்சயமாக பார்வையாளர்களை ஈர்க்கும்.

இது ஒரு வித்தியாசமான த்ரில்லர் திரைப்படம். மணி சர்மா அற்புதமான இசையையும் பாடல்களையும் கொடுத்துள்ளார். ஜானி மாஸ்டரின் நடன அசைவுகள் படத்தின் ஹைலைட்டாக இருக்கும். படம் குறித்தான மற்ற விவரங்களை விரைவில் வெளியிடுவோம்” என்று கூறினார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதையாக இந்தப் படம் இருக்கும்.

ஜூலை 20 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. ஹைதராபாத்தில் படப்பிடிப்பைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன” என்று தெரிவித்தனர்.

*தொழில்நுட்பக் குழு விவரம்:*

ஒளிப்பதிவு: பி.ஜி.விந்தா,
இசையமைப்பாளர்: ‘மெலடி பிரம்மா’ மணி ஷர்மா,
தயாரிப்பு நிறுவனம்: விஜய டமருகா ஆர்ட்ஸ்,
தயாரிப்பாளர்கள்: விஜய பாஸ்கர், ஜி.பனிந்திரா, எம்.ஸ்ரீஹரி,
கதை, வசனம், திரைக்கதை, இயக்கம்: விஜய் சவுத்ரி.

ரன்னர்

Choreographer Johnny Master is playing the hero in the ‘Runner’ film

‘மஞ்சள் வீரன்’ மாட்டிகிட்டாரு..; விபத்து ஏற்படுத்திய யூடியுபர் நடிகர் TTF வாசன்

‘மஞ்சள் வீரன்’ மாட்டிகிட்டாரு..; விபத்து ஏற்படுத்திய யூடியுபர் நடிகர் TTF வாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் விஸ்வரூபம் எடுத்த பின்னர் அதில் பல பிரபலங்கள் உருவாகி வருகின்றனர்.

ஒரு சிலர் தங்களுடைய திறமையை உலகறிய செய்ய இந்த வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர்.

இப்படியாக தன் பைக் சாகசங்களை instagram மற்றும் youtube இல் பதிவேற்றம் செய்து பிரபலம் அடைந்தவர் TTF வாசன். இ்வர் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

மிக அதிவேகமாக பைக் ஓட்டி அதனை வீடியோ எடுத்து யூடியுப்பில் பதிவேற்றம் செய்வார். இதனால் பல வழக்குகளை சந்தித்து காவல்துறையின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார்.

ஆனாலும் இதை தொடர்ந்து செய்து மன்னிப்பும் கேட்டு சர்ச்சைகளில் சிக்குவார் இவர்.

சில தினங்களுக்கு முன் இவர் சினிமாவில் அறிமுகமாகும் ‘மஞ்சள் வீரன்’ என்ற படத்தின் பூஜை நடைபெற்றது.

இந்த பூஜை சமயத்தின்போது கூட இவரது நண்பர்கள் போட்ட சண்டை சர்ச்சையானது.

இந்த நிலையில் டிடிஎப் வாசன் சென்னை நெல்சன் மாணிக்கம் ரோட்டில் காரை ஓட்டிச் சென்றபோது முன்னால் சென்ற பைக் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இதை வீடியோ எடுத்த நபரையும் வாசன் சகட்டுமேனிக்கு திட்டியுள்ளார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TTF வாசன்

Youtuber Actor TTF Vasan made accident

அஜித் பாணியில் சூர்யா.; மீண்டும் ‘கங்குவா’ கூட்டணி

அஜித் பாணியில் சூர்யா.; மீண்டும் ‘கங்குவா’ கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் படம் ‘கங்குவா’.

இப்படத்தில் நடிகை திஷா பத்தானி, மிருணாள் தாக்கூர், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்

‘கங்குவா’ திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘கங்குவா’ படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Suriya rejoins the siruthai siva movement

தமிழ் சினிமாவுக்கு தன்னம்பிக்கை தந்து அசத்தும் 6 அறிமுக இயக்குனர்கள்.; 2023 ஓர் அலசல்…

தமிழ் சினிமாவுக்கு தன்னம்பிக்கை தந்து அசத்தும் 6 அறிமுக இயக்குனர்கள்.; 2023 ஓர் அலசல்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த ஆண்டு 2023 ஜூன் மாதத்தை கடந்து விட்டோம். ஆறு மாதங்கள் நிறைவடைந்து தற்போது ஜூலை மாதமும் தொடங்கிவிட்டது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவுக்கு தன்னம்பிக்கை கொடுத்த அசத்தலான ஆறு அறிமுகம் இயக்குனர்களை இங்கே பார்ப்போம்.

1) டாடா – அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு

அறிமுக இயக்குனர் பாபு கணேஷ் இயக்கிய டாடா திரைப்படத்தில் கவின் அபர்ணா தாஸ் நடித்திருந்தனர்.

இந்த படம் தாய் இல்லாத ஒரு குழந்தையை ஒரு இளம் வயது தந்தை எப்படி வளர்க்கிறார் என்பதை யதார்த்தமாக குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் கொடுத்திருந்தார் இயக்குனர்.

2) யாத்திசை – அறிமுக இயக்குநர் தரணி ராசேந்திரன்

பொதுவாக சரித்திரக்கால படங்களை எடுக்கும்போது மிகப்பெரிய பட்ஜெட் தேவைப்படும். ஆனால் குறைந்த பட்ஜெட்டில் திறமையான நடிகர்களை கொண்டு பிரம்மாண்டம் காட்டி இருந்தார் இயக்குனர்.

இதில் நடித்த அனைவருமே புதுமுகங்கள் என்றாலும் எவரையுமே புதுமுகம் என்று சொல்ல முடியாமல் அசத்தலான நடிப்பை வாங்கியிருந்தார் இயக்குநர்.

3) அயோத்தி – அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி

சசிகுமார் நாயகனாக நடித்திருந்த படத்தை மந்திரமூர்த்தி என்பவர் இயக்கியிருந்தார். வடஇந்தியாவில் இருந்து தீபாவளியன்று ராமேஸ்வரத்திற்கு வரும் ஒரு குடும்பம் ஒரு விபத்தில் குடும்பத் தலைவியை இழக்கிறது. இதனையடுத்து அந்த உடலை விமானத்தில் கொண்டு செல்ல அந்த குடும்ப போராடும் போராட்டமே அயோத்தி.

இந்த படத்தை பார்த்த எவராலும் கண்டிப்பாக அழாமல் இருக்க முடியாது. அப்படி ஒரு உன்னதமான படைப்பை கொடுத்திருந்தனர்.

4) குட் நைட் – அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகர்

மணிகண்டன் ரமேஷ் திலக் ஆகியோரின் நடிப்பில் உருவான படம் ‘குட் நைட்’. நாம் சாதாரணமாக நினைக்கும் குறட்டையை மையப்படுத்தி கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகளை நகைச்சுவையாக கொடுத்திருந்தார் இயக்குனர்.

5) போர் தொழில் – அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா

சரத்குமார் – அசோக் செல்வன் ஆகியோர் நடிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கிய படம் ‘போர் தொழில்’. ஒரு க்ரைம் திரில்லர் படத்தை ஒரு சீனியர் போலீஸ் ஆபீசரும் ஜூனியர் போலீஸ் ஆபீஸரும் கையாளும் விதத்தை த்ரில்லராக கொடுத்திருந்தனர்.

இந்த வரிசையில் தற்போது ஜூலை மாதத்தில் இணைந்துள்ள படம் ‘பம்பர்’. இந்த படத்தின் பத்திரிகையாளர் காட்சி இன்று ஜூலை 4 பிரசாத் லேபில் திரையிடப்பட்டது.

வருகிற ஜூலை 7 தேதி இந்த படம் வெளியாக உள்ளது.

6) பம்பர் – அறிமுக இயக்குநர் செல்வக்குமார்

அறிமுக இயக்குநர் செல்வக்குமார் இயக்கிய இந்த படத்தில் வெற்றி ஷிவானி நாராயணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். முக்கிய வேடத்தில் ஹரிஷ் பெராடி நடித்திருக்கிறார்.

கேரளாவுக்கு செல்லும் நாயகன் அங்கு ஒரு லாட்டரி சீட்டு வாங்கி அவருக்கு 10 கோடி கிடைக்கின்ற தருவாயில் அதை தொலைத்து விடுகிறார்.

அதனை எடுத்து கொண்டு லாட்டரி வியாபாரி நாயகனை கண்டுபிடித்தாரா? என்பதுதான் படத்தின் கதை. மிகவும் உணர்வுபூர்வமாக இந்த படத்தை கொடுத்துள்ளது படக்குழு.

ஆக இந்த 6 – 7 மாதத்தில் அசத்தலான ஆறு அறிமுக இயக்குனர்களை தமிழ் சினிமா கண்டெடுத்துள்ளது.

இவை அனைத்தும் சின்ன பட்ஜெட் படங்கள் என்றாலும் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரு புதிய உற்சாகத்தையும் தன்னம்பிக்கையும் கொடுத்துள்ளது.

பெரிய படங்கள் மட்டும் தான் தமிழ் சினிமாவை தாங்கி பிடிக்கும் என முன்னணி நட்சத்திரங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் தரமான படங்களுக்கு என்றுமே தமிழ் சினிமா ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்பதற்கு இந்த படங்கள் என்றென்றும் காலத்திற்கு பதில் சொல்லிக் கொண்டே இருக்கும்.

Debut directors giving confidence to Kollywood

விபத்தில் சிக்கிய ஷாருக்கான்; ICU வில் அனுமதி

விபத்தில் சிக்கிய ஷாருக்கான்; ICU வில் அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கத்தில் ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்திருக்கும் இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.

இதை தொடர்ந்து ஷாருக்கான் மற்றொரு படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புக்காக ஷாருக்கான் அமெரிக்கா சென்றிருந்தார்.

இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த படப்பிடிப்பின்போது நடிகர் ஷாருக்கான் காயமடைந்தார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தில் ஷாருக்கானின் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிகிச்சை செய்யப்பட்டதால் மேற்கொண்டு படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு ஷாருக்கான் இந்தியா திரும்பிவிட்டார்.

ஷாருக்கான் தற்போது மும்பையில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார்

மேலும், மருத்துவர்கள் ஷாருக்கானின் இல்லத்திற்கு சென்று சிகிச்சையளித்து வருகின்றனர்.

Shah Rukh Khan undergoes surgery in US after meeting with accident

‘சந்திரமுகி 2’ பட டப்பிங் பணிகளை தொடங்கிய ராகவா லாரன்ஸ்

‘சந்திரமுகி 2’ பட டப்பிங் பணிகளை தொடங்கிய ராகவா லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சந்திரமுகி 2’.

இப்படத்தில் கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார், ராவ் ரமேஷ், ஒய். ஜி. மகேந்திரன், ரவி மரியா, சுரேஷ் மேனன், விக்னேஷ், சாய் அய்யப்பன், சத்ரு, டி. எம். கார்த்திக், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே , சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

சில தினங்களுக்கு முன்பு ‘சந்திரமுகி 2’ படம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது என படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், ‘சந்திரமுகி 2’ படத்தில் ராகவா லாரன்ஸ் தனது டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சந்திரமுகி 2

raghava lawrence started the dubbing work of chandramukhi 2

More Articles
Follows