விஜய் படத்தை அடுத்து அஜித் பட ரீமேக்கிலும் சிரஞ்சீவி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் அஜித், சூரி, லட்சுமி மேனன், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்த படம் ‘வேதாளம்’.

கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற இந்தப் படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படவுள்ளது.

வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் முன்னணி நடிகர் சிரஞ்சீவி நடிக்க உள்ளார்.

‘பில்லா’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்த மெஹர் ரமேஷ் இந்த படத்தையும் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே விஜய்யின் கத்தி பட தெலுங்கு ரீமேக்கில் (Khaidi No. 150) சிரஞ்சீவி நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

ஆன்மிக அரசியல் யுக்தி ஆரம்பம்.; உண்ணாவிரதமிருந்து மக்களை கவர ரஜினி ப்ளான்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி தன் அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார் நடிகர் ரஜினிகாந்த்.

அதன்பின்னர் இந்த 2 1/2 ஆண்டு இடைவெளியில் தன் அரசியல் கட்சி பணிகளை கட்டமைத்து வருகிறார்.

வருகிற 2021 ஆம் ஆண்டில் தேர்தலை சந்திக்க ரஜினிகாந்த் தயாராகி வருகிறார்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் தயாராகி விட்டதாகவும் பிரச்சார கூட்டம் குறித்த யுக்திகள் அனைத்தையும் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் ரஜினியை அவ்வப்போது நேரில் சந்திக்கும் அரசியல் விமர்சகர் ஒருவர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அதில்…. ’தேர்தல் பிரச்சாரங்களில் ரஜினிகாந்த் பல்வேறு யுக்திகளை கடைபிடிப்பார்.

சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவுக்கு 2 நாட்களுக்கு முன்னர் மெரினா கடற்கரையிலுள்ள உழைப்பாளர் சிலை அருகில் ரஜினிகாந்த் உண்ணாவிரதம் இருப்பார் என்றும் அந்த உண்ணாவிரதத்தில்…

நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் தவறாது வாக்களிக்க வேண்டும்.

மக்கள் தயவு செய்து பணத்திற்காக ஓட்டு போட வேண்டாம்.. ஜாதி மதம் பார்த்து ஓட்டு போட வேண்டாம் என வலியுறுத்த போகிறாராம்.

இதுபோல பல யுக்திகளை ரஜினி வகுத்து இருப்பதாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.

பாரதிராஜாவை தலைவராக ஏற்க முடியாது.; தாணு சொல்வதை கேட்க முடியாது.. சிங்காரவேலன் சீற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கம் தொடங்க உள்ளார் என்பதை பார்த்தோம்.

இதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விநியோகஸ்தருமான தயாரிப்பாளர் சிங்காரவேலன் இதுகுறித்து ஆடியோ பதிவிட்டுள்ளார்.

அதில்…. தயாரிப்பாளர் சங்கத்தில் 1351 பேர் வாக்களிக்கும் தகுதி படைத்தவர்கள் இருக்கிறார்கள்.

இந்த சங்கத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சரியான நிர்வாகிகள் தேர்வாகவில்லை.

இதனால் தயாரிப்பாளர்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது.

பாரதிராஜா கிட்டதட்ட 100 தயாரிப்பாளர்களுடன் புதிய சங்கம் ஆரம்பித்து இருக்கிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆலோசனை கூட்டத்தில் தாணு புகார் தெரிவித்தார்

ஆனால் பத்திரிகையாளர் சந்திப்பில் தாணு பேசும் போது, பாரதிராஜா மீண்டும் சங்கத்திற்கு வாருங்கள்… உங்களுக்கு அன்னபோஸ்ட்டாக தலைவர் பதவி கொடுக்கிறோம் என கூறியிருக்கிறார்.

தாணுவின் சொந்த கருத்தை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே தொடர்ந்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் இணைந்து ஒரு அணியை உருவாக்கி இருக்கிறோம்.

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் புதிய அணியாக களமிறங்க இருக்கிறோம்” என்றார் சிங்காரவேலன்.

ஆபத்தான அம்மோனியம் நைட்ரேட்..; சென்னை துறைமுகம் உஷாராகுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் நடந்த வெடி விபத்து உலகையே உலுக்கியது எனலாம்.
இது தொடர்பான படங்கள், வீடியோக்கள் தற்போது வரை இணையத்தில் உலா வருகிறது.
பெய்ரூட் துறைமுக குடோனில் 6 ஆண்டுகளாக தேக்கி வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியதால் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
100க்கும் மேற்ப்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் 4000க்கும் மேற்ப்பட்டோர் பலத்த காயத்துடன் மருத்துவனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நகரமெங்கும் ஆம்புலன்ஸ் சத்தமே ஒலிக்கிறது. மரண ஓலம் இதுவரை ஓயவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை துறைமுகம் அருகில் உள்ள குடோன் ஒன்றில், 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் 6 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.
கரூர் நிறுவன,ம் ஒன்றுக்கு சொந்தமான அமோனியம் நைட்ரேட் பறிமுதல் செய்யப்பட்டு குடோனில் வைக்கப்பட்டுள்ளதாம்.
பெய்ரூட் துறைமுக விபத்தை அடுத்து இந்த வேதிப்பொருளை உடனடியாக பாதுகாப்புடன் அப்புறப்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்தார் தெய்வத் திருமகள்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தெய்வத்திருமகள்’, ‘சைவம்’, ‘விழித்திரு’,‘சில்லுக்கருப்பட்டி’ ஆகிய தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளவர் பேபி சாரா.
விக்ரமுடன் இவர் நடித்த ‘தெய்வத்திருமகள்’ படம் பலரின் பாராட்டையும் பெற்றது.
மும்பையைச் சேர்ந்தவர் சாரா என்றாலும் தென்னிந்திய மொழிகளில் அதிக படங்களில் நடித்துள்ளார்.
தற்போது மணிரத்னத்தின் வரலாற்று படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் சாரா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
ஆனால் படக்குழு இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை.,
பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, லால் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
ஏஆர் ரஹ்மான் இசையமைக்க மிகப்பிரம்மாண்டமாக லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
இப்பட முதல்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடத்தப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா அச்சுறுத்தலால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தில் அமேசானில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்..; ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா, சாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மாஸ்டர்.
இந்த படம் இந்தாண்டு கோடை விடுமுறைக்கே ரிலீசுக்கு தயாரானாலும் கொரோனா ஊரடங்கால் ரிலீசாகவில்லை.
தற்போது தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் நிறைய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இந்த நிலையில் அமேசான் ப்ரைம் தளத்தில் ஆகஸ்ட் 14-ம் தேதி மாஸ்டர் ரிலீஸ் என போஸ்டர் வெளியாது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து விளக்கமளித்திருக்கிறது மாஸ்டர் படக்குழு.
அமேசானில் வெளியாகும் மாஸ்டர் படம் 2016ஆம் ஆண்டு வெளியான கொரிய படம் என்றும், அது விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் அல்ல என தெரிவித்துள்ளது.

More Articles
Follows