‘இலங்கை தமிழர்களுக்காக போராடியது வருத்தமாக உள்ளது.’ சேரன்

‘இலங்கை தமிழர்களுக்காக போராடியது வருத்தமாக உள்ளது.’ சேரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director cheranஅழகான பெண்கள் என்றாலே சென்னையில்தான் இருப்பார்கள் என திருச்சியிலிருந்து சென்னை வரும் இளைஞன் பற்றிய ஒரு படம் உருவாகியுள்ளது.

‘கன்னா பின்னா’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தியா என்பவர் இயக்கி நடித்திருக்கிறார்.

நாயகியாக விஜய்சேதுபதியின் ‘வன்மம்’ படத்தில் நடித்த அஞ்சலி ராவ் நடித்திருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் தாணு கலந்துகொண்டு இசைத்தட்டை வெளியிட்டார்.

இயக்குனர்கள் கே.பாக்யராஜ், சேரன், தங்கர் பச்சான், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் & தயாரிப்பாளர் விஜயமுரளி உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

அப்போது சேரன் பேசும்போது….

‘சினிமாவில் இன்றைக்கு தயாரிப்பாளர்களின் நிலைதான் கேள்விக் குறியாக இருக்கிறது.

கபாலி மாதிரி படங்கள் தான் கோடிகோடியாக கொட்டுகின்றதே தவிர மற்ற தயாரிப்பாளர்கள் எல்லாம் கோடிகோடியாக இழந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

சினிமாவை உங்களுக்கு பிடித்த இடத்தில் உங்கள் வசதிப்படி பார்ப்பது உங்கள் உரிமை. அது டிவிடியாக இருக்கட்டும்.. ஆன்லைனாக இருக்கட்டும்.. ஆனால் அது முறையாக இருக்கவேண்டும்.

தமிழ்நாட்டில் 18 ஆயிரம் திருட்டு டிவிடி கடைகள் இருக்கின்றன. பர்மா பஜாரில் இருக்கிற அத்தனை கடைகளிலும் திருட்டு டிவிடி விற்கிறார்கள். போலீசும் அதை தாண்டித்தான் தினமும் போய்வந்துட்டு இருக்கு.

தமிழ், தமிழன்னு நாம் சொல்றபோது அப்படியே உணர்வுகள் பொங்கி எழுது. ஆனா அந்த தமிழன் தான் இந்த மாதிரி வேலையெல்லாம் பார்த்துக்கிட்டிருக்கான்.

இந்த மாதிரி திருட்டுத்தனமா படத்தை ஆன்லைனில் வெளியிடுறவங்க இலங்கை தமிழர்கள்ன்னு சொல்றாங்க. இலங்கை தமிழர்களுக்காக திரையுலகம் போராடி இருக்கிறது.

எங்களுடைய பல விஷயங்களை இழந்துட்டு போய் அவங்களுக்காக போராடி இருக்கோம்.

ஆனால் அதை சார்ந்த சிலர் தான் இதை பண்றாங்கன்னு கேள்விப்படுகிறபோது, ஏண்டா இவர்களுக்காக இதை பண்ணினோம் என அருவருப்பாக இருக்கிறது” என இலங்கை தமிழர்கள் பக்கம் தாக்குதல் கணையை தொடுத்தார் சேரன்.

பன்ச் டயலாக் பேசுவாரா ‘மக்கள் செல்வன்’ விஜய்சேதுபதி?

பன்ச் டயலாக் பேசுவாரா ‘மக்கள் செல்வன்’ விஜய்சேதுபதி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathiரத்னசிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி, லட்சுமி மேனன் நடித்துள்ள படம் றெக்க.

இமான் இசையமைத்துள்ள இப்படத்தில் சதீஷ், கபீர் துகான் சிங், கிஷோர், ஹரீஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஆரஞ்ச் மிட்டாய் படத்தை தயாரித்த கணேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார்.

வருகிற அக்டோபர் 7ஆம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் டீசரை தற்போது வெளியிட்டுள்ளனர்.

வெளியான 12 மணி நேரத்தில் 2 லட்சம் பார்வையாளர்கள் இதை பார்த்துள்ளனர்.

இதில் மதுரை மணிவாசகத்தின் மகளான லட்சுமியை காதலிக்கிறார் விஜய் சேதுபதி.

அப்போது ஒரு காட்சியில் பன்ச் டயலாக் பேசுவீர்களா? என கேட்கும் காட்சி உள்ளது.

அதற்கு பதிலளிக்கும்போது.. பன்ச் டயலாக்கு நானா? பஞ்சு மாதிரி பேசுவேன் என கூறுகிறார்.

தனுஷ் கைகொடுத்தார்; ஜீவாவுக்கு இனி ‘கவலை வேண்டாம்’

தனுஷ் கைகொடுத்தார்; ஜீவாவுக்கு இனி ‘கவலை வேண்டாம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush and jeevaயான், போக்கிரி ராஜா படங்களின் ரிசல்ட்டால் துவண்டு இருந்தார் ஜீவா.

இதில் நயன்தாராவுடன் நடித்த திருநாள் வெற்றியை பெற்றது.

எனவே தனது அடுத்த படங்களின் கதைகளிலும் அதன் வெளியீட்டின் தேதிகளிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள கவலை வேண்டாம் படத்தை அக்டோபர் 7ஆம் தேதி வெளியிடுகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் டீசரை இன்று மாலை 6 மணிக்கு தனுஷ் வெளியிடுகிறார்.

டிகே இயக்கியுள்ள இப்படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடித்துள்ளார். எல்ரெட் குமார் தயாரித்துள்ளார்.

ஹீரோ சூப்பர் ஸ்டார்; ஹீரோயின் ஸ்நேகா; வில்லன் ஆர்யா

ஹீரோ சூப்பர் ஸ்டார்; ஹீரோயின் ஸ்நேகா; வில்லன் ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor arya work out stillsஅறிந்தும் அறியாமலும் படத்தில் வில்லனாக அறிமுகமான ஆர்யா, தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மீண்டும் வில்லன் ரூட்டுக்கே திரும்பியிருக்கிறார். ஆனால் தமிழில் அல்ல மலையாளத்தில்.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கும் “தி கிரேட் பாதர்” படத்தில் கொடூர வில்லனாக நடிக்கிறாராம்.

இதில் நாயகியாக ஸ்நேகா நடிக்க, மம்மூட்டியின் மகளாக சாரா நடிக்கிறார்.

ஹனீப் அதோனி இயக்கும் இப்படத்தை ‘ஆகஸ்ட் சினிமாஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

தள்ளிப்போகும் விக்ரம் – தனுஷ் படங்கள்

தள்ளிப்போகும் விக்ரம் – தனுஷ் படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram and dhanushவிக்ரம், நயன்தாரா இணைந்துள்ள ‘இருமுகன்’ படத்தின் ட்ரைலர் வெளியானது முதல் அப்பட மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படம் இந்த வாரம் சென்சாருக்கு அனுப்பப்பட உள்ளது.

அதன்பின்னர் தொடரும் விநியோக வேலைகளை தொடர்ந்து இப்படம் செப்டம்பர் 8ஆம் தேதி வரை தள்ளிப் போகலாம் எனவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, தனுஷின் தொடரியும் தள்ளிப் போகும் எனத் தெரிய வந்துள்ளது.

செப்டம்பர் முதல் வாரத்தில் சென்சாரை முடித்துவிட்டு, செப்டம்பர் 16ஆம் படத்தை வெளியிட இருக்கிறார்களாம்.

இப்படத்தின் விநியோக உரிமையை பெற்றுள்ள சாய் வி.கிரியேஷன்ஸ், வியாபார களத்தில் இறங்கியுள்ளனர்.

அஜித் படத்தில் வில்லன் ரோல்; சசிகுமார் ரியாக்ஷன் என்ன.?

அஜித் படத்தில் வில்லன் ரோல்; சசிகுமார் ரியாக்ஷன் என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith and sasi kumarதயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் என பன்முகம் கொண்டவர் சசிகுமார்.

வெற்றிவேல் படத்தை தொடர்ந்து விரைவில் இவரது நடிப்பில் கிடாரி படம் வெளியாகவுள்ளது.

எனவே அப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

அப்போது அஜித் படத்தில் நீங்கள் வில்லனாக நடிக்கிறீர்களா? என கேட்டதற்கு…

‘அஜித் எனக்கு நண்பன். எனக்கு பிடித்த மனிதர் அவர்.

அவருக்கு வில்லனாக நான் ஏன் நடிக்க வேண்டும்? இது தொடர்பாக யாரும் என்னை அணுகவில்லை’ என்றார்.

More Articles
Follows