விவசாயத்தை பாதிக்காத வகையில் 8 வழிச்சாலை அமைய ரஜினி வேண்டுகோள்

Chennai to Salem 8 Ways Road should not affect farmers says Rajinikanthஇன்று காமராஜரின் பிறந்த தினத்தில் செய்தியாளர்களை தன் போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்தார் ரஜினிகாந்த்.

அப்போது அவர் பேசியதாவது…

சென்னை முதல் சேலம் வரை 8 வழிச்சாலை போன்ற திட்டங்கள் உருவானால்தான் நாடு முன்னேறும், தொழில் வளர்ச்சி பெருகும். வேலைவாய்ப்புகளும் பெருகும். இதுபோல் செய்யும்போது இழப்பீடு என்பது சிலருக்கு வரும்.

பாதிக்கப்படுபவர்களின் மனம் திருப்தி அடையும் அளவுக்கு அவர்களுக்கு இழப்பீட்டு தொகையோ அல்லது நிலத்தையோ அரசு அளிக்க வேண்டும். முடிந்த வரை விவசாய நிலத்தை பாதிக்காத அளவுக்கு 8 வழிச்சாலை அமைத்தால் இன்னும் நல்லது.

கல்வி துறையில் மற்ற மாநிலங்களை விட, தமிழகம் சிறப்பாக உள்ளது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பாக செயல்படுகிறார். இது என்னுடைய கருத்து.

தமிழகத்தில் லோக் ஆயுக்தா சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும்.” என்றார்.

Chennai to Salem 8 Ways Road should not affect farmers says Rajinikanth

Overall Rating : Not available

Latest Post