100 நாட்களுக்கு பிறகு FDFS கொண்டாடிய ‘சூரரைப் போற்று’.; தடை போட்ட தியேட்டர் உரிமையாளர்களை கடுப்பேற்றிய சூர்யா ரசிகர்கள்

soorarai pottru (2)சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா முரளி, ஊர்வசி, காளி வெங்கட், ஆகியோர் நடிப்பில் உருவான படம் ‘சூரரைப் போற்று’.

ஜிவி பிரகாஷ் இசையமைக்க சூர்யாவே இப்படத்தை தயாரித்து இருந்தார்.

குறைந்த கட்டணத்தில் விமானங்களை இயக்கும் முயற்சியை இந்தியாவில் முன்னெடுத்த ஏர் டெக்கான் நிறுவன தலைவர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் தியேட்டர்கள் மூடப்பட்ட சமயத்தில் இதன் ஓடிடி ரிலீசை அறிவித்தார் சூர்யா.

இதனால் சூர்யாவுக்கு பலத்த எதிர்ப்பு உருவானது.

சூர்யா தன் படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய வேண்டும்.

அவர் தன் ஓடிடி முடிவை மாற்றாவிட்டால் இனி சூர்யா நடித்த தயாரித்த படங்களை தியேட்டர்களில் திரையிட மாட்டோம் என அறிவித்தனர்.

இந்த அறிவிப்புக்கு சூர்யா ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

சூர்யா தன் முடிவை விட்டு விலகாமல் ‘சூரரைப் போற்று’ பட லாபத்தை திரைத்துறை மற்றும் மக்களுக்கு பகிர்ந்து அளித்தார்.

அந்த சூழ்நிலையில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 முதல் 50% இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதியளித்தது.

ஆனாலும் தியேட்டர்களில் படத்தை வெளியிடாமல் நவம்பர் 12ல் ‘சூரரைப் போற்று’ படத்தை அமேசான் ஓடிடியில் ரிலீஸ் செய்தார் சூர்யா.

இப்படம் ரிலீசாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. தற்போது 100 நாட்களை கடந்துள்ளது இந்த படம்.

சென்னையில் 18வது சர்வதேச திரைப்பட விழா வரும் 18ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெற்று வரும் தற்போதைய நிலையில் இதே படம் சென்னை சத்யம் தியேட்டரில் திரையிடப்பட்டது.

முதல் நாள் முதல் காட்சி FDFS போல ரசிகர்கள் இந்த படத்தை தியேட்டரில் ரசித்தனர்.

எந்த (சூர்யா) படத்தை தியேட்டர்களில் திரையிட மாட்டோம் என கூறினார்களோ இப்போது அதே படத்தை நாங்கள் திரையில் பார்த்து விட்டோம் என சூர்யா ரசிகர்கள் இணையங்களில் பதிவிட்டு தியேட்டர் உரிமையாளர்களை கடுப்பேற்றி வருகின்றனர்.

*கூடுதல் தகவல்கள்…*

18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா 18.2.2021 முதல் 25.2.2021 வரை நடைபெறவுள்ளது.

இந்திய திரைப்படத் திறனாய்வுக் கழகம் பிவிஆர் உடன் இணைந்து இவ்விழாவை நடத்துகிறது.

உலகெங்கிலும் உள்ள 53 நாடுகளில் இருந்து 37 மொழிகளில் (10 இந்திய மொழிகள் உட்பட) 92 திரைப்படங்கள் பங்குபெறவுள்ளன.

18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சி 18.2.2021 அன்று பிவிஆர் மல்டிபிளெக்ஸின் சத்யம் திரையில் நடைபெற்றது.

25.2.2021 அன்று பிவிஆர் மல்டிபிளெக்ஸின் சத்யம் திரையில் நிறைவு விழா நடைபெறவுள்ளது.

Chennai film festival turned into fans show

Overall Rating : Not available

Related News

வாழ்க்கையை உள்ளபடி அப்படியே காட்சிப்படுத்தி எடுக்கப்பட்ட…
...Read More

Latest Post