சென்னை பள்ளிகள் அனைத்தையும் கொரோனா வார்டாக மாற்ற முடிவு

சென்னை பள்ளிகள் அனைத்தையும் கொரோனா வார்டாக மாற்ற முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Chennai Corporation decides to Change Chennai schools as Corona wardsகொரோனோ வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழக அளவில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தாலும் சென்னையில் கொரோனா பாதிப்புகள் தினம் தினம் அதிகரித்து வருகிறது.

சென்னையில் மக்கள் தொகை அதிகளவில் இருப்பதால் கட்டுக்குள் கொண்டு வருவது சிரமமாக உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் தெரிவித்திருந்தார்.

இன்று ஏப்ரல் 30ஆம் தேதி சென்னை கோயம்பேடு பூக்கடையில் வேலை செய்யும் 36, 71,19 வயதுடைய 3 ஆண்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. ஏற்கனவே பூக்கடைக்காரர் மகனுக்கு தொற்று உறுதியாகியிருந்தது.

இதனால் பூக்கடைகளில் மட்டும் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், அண்ணா பழக்கடையில் 36,42,29 வயதுடைய 3 ஆண்களுக்கும், பெரியார் பழக்கடையில் 30, 29 வயதுடைய 2 ஆண்களுக்கும் தொற்று உறுதியானது.

எனவே, கோயம்பேட்டில் கடைகளில் பணியிலிருந்த 9 பேருக்கு இன்று தொற்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளை கொரோனா தொற்று தடுப்பு பணிகளுக்காக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மே 2 முதல் கொரோனா தடுப்பு பணிகளுக்கு பள்ளிகளை பயன்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

Chennai Corporation decides to Change Chennai schools as Corona wards

கமல் & ஜோதிகா பற்றிய கேள்விகளுக்கு கடுப்பான கடம்பூர் ராஜு

கமல் & ஜோதிகா பற்றிய கேள்விகளுக்கு கடுப்பான கடம்பூர் ராஜு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kadambur Raju reaction for Kamal and Jyothikas recent statement தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் தூய்மைபணியாளர்கள், மற்றும் ஏழைகள் உள்ளிட்ட 1300க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நிவாரண பொருட்களை தன் சொந்த செலவில் வழங்கினார் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது கமல் பற்றி செய்தியாளர்கள் கேட்டனர்.

“உலக நாடுகளே கண்டிராத பேரிடராக கொரோனா உள்ளது. 2-ம் உலக போரை விட பாதிப்பு அதிகம். ஆனால் எந்த நேரத்தில் எதைப் பேச வேண்டும் என்பது கமல்ஹாசனுக்கு தெரியவில்லை. சினிமாவில் பேசுவதைப் போன்று பேசி வருகிறார்.

அரசியல் மேதாவியாக பேசுவது சரியா என்பதை அவருடைய எண்ணத்திற்கே விட்டுவிடுகிறேன்.

கொரோனாவை சமாளிக்க முடியாமல் மற்ற நாடுகள் திணறி வரும் போது இந்தியா சிறப்பாக கையாண்டு வருகிறது.

தமிழகத்திலும் பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகிறார்.

நடிகர் கமல்ஹாசன் பால்கனியிலிருந்து பேசுகிறார். நாங்கள் மக்களிடமிருந்து பால்கனியை பார்க்கிறோம். எங்களுக்கும் அவருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. என்றார்.

இதனையடுத்து நடிகை ஜோதிகா மற்றும் தஞ்சை பெரிய கோயில் பற்றிய கேள்விக்கு… “உலகளாவிய பிரச்னையாக கொரோனா இருக்கும் போது ஜோதிகாவின் கருத்து விளம்பரத்திற்கு தான் உதவும்.

இந்த நேரத்தில் இது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் இல்லை என்பது எங்கள் கருத்து” என்றார் அமைச்சர்.

Kadambur Raju reaction for Kamal and Jyothikas recent statement

ரொம்ப எதிர்பார்க்காதீங்க..; அஜித் ரசிகர்களை அப்செட்டாக்கிய வலிமை தயாரிப்பாளர்

ரொம்ப எதிர்பார்க்காதீங்க..; அஜித் ரசிகர்களை அப்செட்டாக்கிய வலிமை தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith fans upset with Boney Kapoors statementநேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை.

இந்தப் படத்திலும் அஜித் – டைரக்டர் வினோத் – தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணி தொடர்கிறது.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைத்து வருகிறார்.

இதன் சூட்டிங் ஹைதராபாத் மற்றும் சென்னையில் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

படத்தின் தலைப்பு மட்டுமே வெளியான நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தனர்.

மே 1 நாளை அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் அப்டேட்ஸ் கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர்.

இந்த நிலையில் வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் அதிரடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது,

“கோவிட் 19 என்னும் கொரோனா என்கிற கொடிய நோயின் தாக்கத்தில், அகில உலகமே போராடிக் கொண்டு இருக்கும் இந்த தருணத்தில் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் எந்த படத்துக்கும் எந்த விதமான விளம்பரமும் செய்ய வேண்டாம் என்று எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் ஆகியோரை கலந்து ஆலோசித்து, ஒருமித்தக் கருத்தோடு முடிவெடுத்து உள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம். அதுவரை தனித்து இருப்போம், நம் நலம் காப்போம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Ajith fans upset with Boney Kapoors statement

தல போல வருமா..? அஜித்தே சொன்னாலும் அடங்காத ரசிகர்கள்

தல போல வருமா..? அஜித்தே சொன்னாலும் அடங்காத ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thala fans started Ajith Birth day celebrationநாளை மே 1 ஆம் தேதி நடிகர் அஜித் தனது 48வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

இதனையொட்டி அவரது ரசிகர்கள் பல கொண்டாட்டங்களுக்கு காத்திருந்தனர்.

ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இதனால் மக்கள் மிகுந்த வேதனையுடன் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

ஏழை மக்கள் வருமானமின்றி தவித்து வரும் நிலையில் ரசிகர்கள் தன் பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என அஜித் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது.

ஒரு பக்கம் தல சொல்லை தட்டக் கூடாது என்றாலும் அடங்காத அஜித் ரசிகர்கள் அவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை இணையத்தில் அரங்கேற்றி வருகின்றனர்.

எங்கள் தல போல வருமா? என கொண்டாட்டங்களை ஆரம்பித்துவிட்டனர்.

விதவிதமான வீடியோக்களையும் படங்களையும் டிசைன் செய்து அஜித் பிறந்தநாளை கொண்டாட உள்ளனர்.

ஆக நாளை சமூக வலைத்தளங்களை நிச்சயம் அஜித் ரசிகர்கள் தெறிக்கவிடுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.
நடிகர் அஜித்தை நாங்களும் ரசிகர்களுடன் இணைந்து வாழ்த்துகிறோம்.

ஹாப்பி பர்த்டே தல… தல போல வருமா..

Thala fans started Ajith Birth day celebration

ரிஷி கபூர் மரணம்: இதயம் நொறுங்கியது – ரஜினி; நம்ப முடியல – கமல்

ரிஷி கபூர் மரணம்: இதயம் நொறுங்கியது – ரஜினி; நம்ப முடியல – கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini and Kamal condolence message for Actor Rishi Kapoor deathநடிகர் ரன்பிர் கபூரின் தந்தையும் பிரபல இந்தி நடிகருமான ரிஷி கபூர் இன்று காலை மரணமடைந்தார்.

ரிஷி கபூருக்கு வயது 67. இவரது மறைவு இந்தியத் திரையுலகினரையும் அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

ரிஷி கபூரின் மறைவு குறித்து ரஜினி மற்றும் கமல் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

இதயம் நொறுங்கியது.. ஆன்மா சாந்தியடையட்டும்.. என் அன்பு நண்பர் ரிஷி கபூர் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளர்.

நம்ப முடியவில்லை சின்டூஜி (திரு ரிஷிகபூர்) எப்போதும் தயாராக ஒரு புன்னகையை வைத்திருப்பார். எங்கள் இருவருக்கும் பரஸ்பரம் அன்பும், மரியாதையும் இருந்தது. நீங்கள் இல்லாத குறையை உணர்வேன் நண்பா. அவர் குடும்பத்துக்கு என் மனமார்ந்த அனுதாபங்கள் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

https://www.filmistreet.com/cinema-news/veteran-bollywood-actor-rishi-kapoor-passes-away/

Rajini and Kamal condolence message for Actor Rishi Kapoor death

BREAKING நடிகர் ரன்பிர் கபூரின் தந்தை நடிகர் ரிஷி கபூர் மரணம்

BREAKING நடிகர் ரன்பிர் கபூரின் தந்தை நடிகர் ரிஷி கபூர் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Veteran Bollywood actor Rishi Kapoor passes awayஒரு பக்கம் கொரோனா பலி பலரை அச்சுறுத்தி வரும் நிலையில் மறுப்பக்கம் பாலிவுட் நடிகர்களின் இயற்கை மரணம் திரையுலகில் அச்சத்தில் உறைய வைத்துள்ளது.

நேற்று பிரபல நடிகர் இர்பான் கான் கேன்சர் நோயால் மரணமடைந்தார்.

அந்த சோகம் மறைவதற்குள் புகழ்பெற்ற நடிகர் ரிஷி கபூர் தனது 66 ம் வயதில் மரணம் அடைந்துள்ளார் என்ற செய்தி தற்போது வந்துள்ளது.

இந்த செய்தியை நடிகர் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு “நடிகர் ரிஷி கபூர் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார். இந்த செய்தி என்னை முற்றிலும் அழித்து விட்டது” என தெரிவித்துள்ளார்.

பழம்பெரும் ஹிந்தி நடிகரான ராஜ் கபூரின் இரண்டாவது மகனும், நடிகர் ரன்பிர் கபூரின் தந்தையுமானவர் நடிகர் ரிஷி கபூர்.

கடந்த 2018- ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த இவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இதையடுத்து கடந்த 2019 செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார்.

இந்த நிலையில் நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, அவர் உடனடியாக மும்பையில் உள்ள ஹெச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மூச்சுத் திணறல் காரணமாக ரிஷி கபூர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவருக்கு நீத்து கபூர் என்ற மனைவியும், ரிதிமா என்கிற மகளும், ரன்பிர் கபூர் என்ற மகனும் உள்ளனர்.

சில தகவல்கள்…

100  படங்களுக்கு மேல் நடித்தவர்..!
* இந்திப் படவுலகின் மெகா புரொட்யூஸர்-டைரக்டர் ராஜ் கபூரின் மகன் இவர்.
‘ மேரா நாம் ஜோக்கர் ‘ படத்தில் இளம் வயது ராஜ் கபூராக நடித்து 1970-ம் வருடம் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது வாங்கியவர்.
* 1973-ம் வருடம் ‘ பாபி ‘ மெகா ஹிட் படத்தில் ஹீரோவாக டிம்பிள் கபாடியா ஜோடியாக  ரா‌ஜ்கபூரால் அறிமுகப்படுத்தப்பட்டார்.
* இவருடைய மனைவி நடிகை நீட்டு சிங்-டன் 12 படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
* ரிஷிகபூரின் மகன் தற்போதைய இந்திப் படவுலகில் ‘ லீடிங் ஸ்டார் ‘ ரன்பீர் கபூர்..!

Veteran Bollywood actor Rishi Kapoor passes away

More Articles
Follows