தாத்தா கனவுல வந்து உங்களை அடிப்பார்.; கண்ணதாசன் பேரனுக்கு சிவகார்த்திகேயன் ட்வீட்

தாத்தா கனவுல வந்து உங்களை அடிப்பார்.; கண்ணதாசன் பேரனுக்கு சிவகார்த்திகேயன் ட்வீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Chellama song from Sivakarthikeyans Doctor goes viralசிவகார்த்திகேயன் எழுதி, அனிருத் இசையமைத்த டாக்டர் படத்தின் ‘செல்லம்மா’ என்ற பாடல் அண்மையில் வெளியானது.

இந்த படத்தை நெல்சன் என்பவர் இயக்கியுள்ளார்.

செல்லம்மா என்ற இந்த பாடலும் இது உருவாக்கப்பட்ட விதமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த நிலையில் கவிஞர் கண்ணதாசனின் பேரனும் நடிகருமான ஆதவ் கண்ணதாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “சிவகார்த்திகேயன் கவிஞரே பயங்கர ஃபார்முல இருக்கீங்க போல, செம கேட்சி சாங் அனிருத். அராஜகம் பண்றிங்க நெல்சன்” என்று வாழ்த்தி பதிவிட்டார்

இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், “தயவு செய்து என்னை கவிஞர் என்றெல்லாம் சொல்லாதீர்கள். தாத்தா கனவில் வந்து உங்களை அடிப்பார்” என பதிவிட்டுள்ளார்.

Chellama song from Sivakarthikeyans Doctor goes viral

 

பிறந்த நாளில் விஜய் ஆண்டனி பட அறிவிப்பு..; எந்த படத்தின் 2ஆம் பாகம்?

பிறந்த நாளில் விஜய் ஆண்டனி பட அறிவிப்பு..; எந்த படத்தின் 2ஆம் பாகம்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Antonys new film announcement on his birthday நடிகரும் இசையப்பாளரும் தயாரிப்பாளருமான விஜய் ஆண்டனி வருகிற ஜூலை 24ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார்.

அன்றைய தினத்தில் அவரின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.

அவரது ட்விட்டரில் பக்கத்தில் இது எந்த படத்தின் 2ஆம் பாகமாக இருக்கும் என கருத்து கணிப்பு நடத்தி வருகிறார்.

அதில் நான் / சலீம்.. பிச்சைக்காரன், திமிரு புடிச்சவன், கொலைகாரன் உள்ளிட்ட பட பெயர்கள் உள்ளன.

அனேகமாக இது பிச்சைக்காரன் படத்தின் 2ஆம் பாகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

விஜய் ஆன்டனி பிக்சர்ஸ் பி லிட் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் இப்படம் உலகெங்கும் 2021ஆம் ஆண்டு திரையிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி தற்போது ‘தமிழரசன்’, ‘அக்னி சிறகுகள்’, ‘காக்கி’ ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

இத்துடன் ஆனந்த் கிருஷ்ணன், விஜய் மில்டன் மற்றும் பாலாஜி கே.குமார் ஆகியோரின் பெயரிடப்படாத படங்களிலும் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Antonys new film announcement on his birthday

விஜய்யை அடுத்து அஜித் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல்; அவனுக்கு இதான் வேலையா?

விஜய்யை அடுத்து அஜித் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல்; அவனுக்கு இதான் வேலையா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

IMG-20200719-WA0101சென்னை ஈஞ்சம்பாக்கத்திலுள்ள நடிகர் அஜித் வீட்டில் வெடி குண்டு வைத்து இருப்பதாக மர்ம நபர் ஒருவன் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

எனவே வெடிகுண்டு நிபுணர்கள் அஜித் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.

போலீஸ் விசாரணையில் விழுப்புரத்தை சேர்ந்த நபர் தான் தொலைப்பேசியில் அழைத்தது தெரியவந்தது.

இதே நபர் தான் ஏற்கெனவே நடிகர் விஜய் வீட்டுக்கு மிரட்டல் விடுத்திருந்தவராம்.

வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிந்ததும், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையை முடித்துக்கொண்டனர்.

மரக்காணம் போலீசார் மிரட்டல் விடுத்த நபரை கைது செய்து, நீலாங்கரை காவல்நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்ட புவனேஸ்வரன், ஏற்கனவே நடிகர் விஜய் வீட்டிற்கும் மிரட்டல் விடுத்து கைது செய்யப்படவர் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் ரஜினி வீட்டுக்கு வெடிக்குண்டு மிரட்டல் விடுத்து மற்றொரு மர்ம நபர் போன் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thala Ajiths residence receives fake bomb threat

தியேட்டர்கள் திறப்பது எப்போது..? அமைச்சரின் அறிவிப்பால் திரையுலகினர் அதிர்ச்சி

தியேட்டர்கள் திறப்பது எப்போது..? அமைச்சரின் அறிவிப்பால் திரையுலகினர் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN Minister talks about Cinema theaters reopen after lock downகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 16-ம் தேதியே தமிழகம் மற்றும் புதுச்சேரியல் உள்ள சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன.

கிட்டதட்ட 4 மாதங்களுக்கு பின்னர் தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் இருந்தாலும் சினிமா தியேட்டர்கள் மற்றும் சினிமா சூட்டிங்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் என திரைத்துறையினர் பெரும் பொருளாதார இழப்புக்கு ஆளாகியுள்ளனர்.

எனவே சில தயாரிப்பாளர்கள் ஆன்லைன் ஓடிடி தளத்தில் படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சிலர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, “தொற்று எண்ணிக்கை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு மக்கள் சகஜமாக திரும்பும் நிலை வந்த பின்னர்தான் சினிமா தியேட்டர்கள் திறக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளது” என தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த பதிலால் திரையுலகத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

TN Minister talks about Cinema theaters reopen after lock down

விஜய் சூர்யா தனுஷ் ரசிகர்கள் போட்டி..; இதெல்லாம் எங்க போய் முடியுமோ.?

விஜய் சூர்யா தனுஷ் ரசிகர்கள் போட்டி..; இதெல்லாம் எங்க போய் முடியுமோ.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Suriya Dhanush fans clash on Common DP release recordsதங்கள் அபிமான நடிகர் பிறந்த நாள் வந்தால் அதற்காக ஒரு காமன் டிபி (COMMON DP) என்ற பெயரில் ஒரு போஸ்டரை டிசைன் செய்து ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

கடந்த ஜீன் மாதம் விஜய் பிறந்தநாளன்று சினிமா பிரபலங்கள் விஜய்யின் ‘காமன் டிபி’யை வெளியிட்டனர். அது கிட்டதட்ட 55 பிரபலங்களை கொண்டது.

அந்த பிரபலங்களின் எண்ணிக்கையை முறியடிக்க வேண்டும் என சூர்யா ரசிகர்கள் நினைத்து ஜுலை 23ம் தேதி வரவிருக்கும் சூர்யாவின் பிறந்தநாளுக்கான காமன் டிபியை 110க்கும் மேற்பட்ட பிரபலங்களை கொண்டு வெளியிட்டனர்.

அது போல் ஜுலை 28ம் தேதியன்று பிறந்தநாளைக் கொண்டாட உள்ள தனுஷ் பிறந்தநாளுக்கு பல சினிமா பிரபலங்களை ஒன்றிணைத்து ‘காமன் டிபி’யை வெளியிட்டு வருகின்றனர்.

இனிமேல் இதிலும் ரசிகர்களிடையே போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதெல்லாம் எங்க போய் முடியுமோ? என்பதுதான் தெரியவில்லை.

Vijay Suriya Dhanush fans clash on Common DP release records

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ஆவியுடன் பேசிய நபர்..; வைராகும் வீடியோ

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ஆவியுடன் பேசிய நபர்..; வைராகும் வீடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Late Sushant Singh Rajput Spirit video goes viralதோனி படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார்.

பாலிவுட்டில் தலை விரித்தாதும சினிமா வாரிசு அரசியல் தான் அவரது தற்கொலைக்குக் காரணம் என பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டினர்.

இது தொடர்பான வழக்கை மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஸ்டீவ் ஹப் என்ற நபர் சுஷாந்த் சிங் ஆவியுடன் பேசியதாக இரண்டு பாகங்களைக் கொண்ட வீடியோவை யு-டியுபில் வெளியிட்டுள்ளார்.

அதில் இடம் ஆவி என்று சொல்லப்பட்ட அந்த குரல் சுஷாந்த் சிங் குரல் போலவே உள்ளதாக அவரது ரசிகர்கள் வீடியோவின் கமெண்ட் பகுதியில் பதிவிட்டுள்ளனர்.

அப்படியிருக்கிறதா? என்பதை நீங்களே இந்த வீடியோவை பார்த்து சொல்லுங்கள்…

Late Sushant Singh Rajput Spirit video goes viral

More Articles
Follows