40 ஆண்டு அனுபவம்.. 3 கின்னஸ் சாதனை.. 100 விருதுகள்..; தற்போது செஃப் தாமுவுக்கு சர்வதேச விருது

40 ஆண்டு அனுபவம்.. 3 கின்னஸ் சாதனை.. 100 விருதுகள்..; தற்போது செஃப் தாமுவுக்கு சர்வதேச விருது

மிகப்பெரிய சர்வதேச அங்கீகாரமாக, நவம்பர் 5-ம் தேதி லண்டனில் நடைபெற உள்ள உலகளாவிய உணவு, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா சாதனைகள் விருது நிகழ்ச்சி-2021-ல், செஃப் தாமு என்று அழைக்கப்படும் பிரபல சமையல் வல்லுநர் கோதண்டராமன் தாமோதரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.

உலகத் தமிழ் அமைப்பால் (WTO-UK) நிறுவப்பட்ட இந்த விருது, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உள்ள ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கப்படும்.

கேட்டரிங் துறையில் அனுபவம் வாய்ந்த ஒருவருக்கு வழங்கப்படும் முதல் விருது இதுவாகும். இந்த விருதை பெறுவதற்கு பெருமிதம் கொள்வதாக தாமு கூறினார்.

“என்னுடைய பல ஆண்டுகள் கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக இதை நான் பார்க்கிறேன். இந்த பிரிவில் முதல் விருதை பெறுவது உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரிய தருணம் ஆகும்,” என்று அவர் கூறினார்.

மேலும், இந்த விருது இளம் சமையல் கலைஞர்களை ஊக்குவிக்கும் என்றும் அவர் கூறினார்.

“கடின உழைப்பால் நீங்கள் எந்த உயரத்தையும் எட்டிவிட முடியும் என்பதற்கு இது மற்றவர்களுக்கு உந்துதலாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

தாமு, உணவு வழங்கல் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள இந்தியாவில் பிரபலமான சமையல் கலைஞர் ஆவார். இத்துறையில் அவர் இரண்டு சதாப்தங்களுக்கும் மேலாக ஆசிரியராகவும் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.

நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளை தாமு பெற்றுள்ளதோடு, 3 கின்னஸ் சாதனைகளையும் படைத்துள்ளார்.

தற்போது அவர் தென்னிந்திய செஃப் அசோசியேஷன் தலைவராகவும் உலக சமையல் சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.

சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான தாமுவை, இன்ஸ்டாகிராமில் 500,000 க்கும் மேற்பட்டோர் அவரைப் பின்தொடர்கின்றனர்.

இல்லத்தரசிகளுக்கு 26 புத்தகங்களும், ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்களுக்கான சமையல் புத்தகங்களும் எழுதியுள்ளார்.

ஒவ்வொரு நாளும் 1 கோடியே 60 லட்சம் குழந்தைகளுக்கு உணவளிக்கும் சத்துணவு திட்டத்தில் புதிய மெனு வகைகளை அறிமுகப்படுத்திய பெருமை தாமுவுக்கு உண்டு. இதற்காக 1.5 லட்சம் பெண் சமையல் கலைஞர்களுக்கு பயிற்சி அளித்தார். இத்திட்டம் தமிழகத்தில் பெரும் வெற்றி பெற்றுள்ளது.

Chef Damu to receive International Honour

இஸ்லாமிய தாயின் பாலை குடித்தவர் தேவரய்யா…; ‘தேசிய தலைவர்’ பட நாயகன் பஷீர் உருக்கம்

இஸ்லாமிய தாயின் பாலை குடித்தவர் தேவரய்யா…; ‘தேசிய தலைவர்’ பட நாயகன் பஷீர் உருக்கம்

ஜல்லிக்கட்டு மூவிஸ் பட நிறுவனம் சார்பில் எம்.எம்,பாபு, எஸ்.எஸ்.ஆர்.சத்யா, ஜி.ஜெயந்தினி பக்தியுடன் இப்படத்தை தயாரிக்க ஜே எம் பஷீர் நடிக்கும் ‘தேசிய தலைவர்’ இசை வெளியீடு

இசைஞானி இளையராஜா இசையில் உருவாகிறது

ஜல்லிக்கட்டு மூவிஸ் பக்தியுடன் வழங்கும் படம் தேசிய தலைவர். உலகையே தன் பக்கம் திருப்பிப் பார்க்க வைத்து எழைகளுக்குக்காகவும் தன் இனத்துக்காகவும் வாழ்வையும் தன்னையும், தனது சொத்துக்களையும் அர்ப்பணித்த ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு படமாக தேசிய தலைவர் உருவாகிறது.

இதில் தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவராக ஜே.எம் பஷீர் நடிக்கிறார். மேஸ்டரோ இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார். ஊமை விழிகள் உள்ளிட்ட பலவேறு வெற்றிப்படங்களை இயக்கி அளித்த திரைப்படக் கல்லூரி மாணவர் ஆர்.அரவிந்தராஜ் இயக்குகிறார்.

பாரதிராஜா, ராதாரவி, முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

சினேகன் பாடல்கள் எழுதுகிறார். அகிலன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ. எம் சவுத்ரி மூலக்கதை அமைத்திருகிறார். வெங்கட் எடிட்டிங் செய்கிறார். மணிமொழியன் ராமதுரை அரங்கம் அமைக்கிறார். மிரக்கல் மைக்கேல் ஸ்டண்ட் அமைக்கிறார். பி ஆர் ஒ டைமண்ட் பாபு. கே.எஸ்.கே செல்வா.

தேசிய தலைவர் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு தேவர் ஜெயந்தி தினமான அக்டோபர் 30ம் தேதி சென்னையில் உள்ள சிகரம் அரங்கில் நடந்தது. இதில் படக் குழுவினர் கலந்துகொண்டு பேசினார்கள்.

கதாநாயகன் ஜே.எம்.பஷீர் பேசியதாவது:

இன்று தேவரய்யாவின் குருபூஜை. அவருடைய காலடியை தொட்டு வணங்கி பேசுகிறேன். தேசிய தலைவர் படம் எப்படி உருவானது என்றால் என்னுடைய நண்பர் சவுத்ரிதான் என்னிடம் இதை கூறினார். இந்த படத்தை இயக்க அரவிந்தராஜ் சாரிடம் பேசினேன். பிறகு எனக்கு கெட்டப் போட்டு பார்க்கப்பட்டது. இதில் ஒவ்வொரு விஷயத்திலும் தேவரய்யாவின் ஆசி இருந்தது. சில சமயம் இந்த படம் நடக்க முடியாமல் போகவிருந்த நேரத்தில் எனக்காவும் தேவரய்யாவுக்காகவும் என்னுடைய நண்பர்கள் ஜல்லிகட்டு மூவிஸ் என்ற கம்பெனியை இந்த படத்துக்காக உருவாக்கினர்கள்.

எம்.எம்,பாபு,, எஸ்.எஸ்.ஆர்.சத்யா, ஜி.ஜெயந்தினி இணைந்து இந்த படத்தை எடுக்க முன்வந்தார்கள் எத்தனை செலவானாலும் பரவாயில்லை இந்த படத்தை எடுங்கள் என்று சொன்னார்கள்.

முதன்முதலில் டத்தோ ராதாரவியை நடிக்க வைக்க வேண்டும் என்று எண்ணினேன். அதற்கு காரணம் அவருக்கு தேவரய்யா மீது அவ்வளவு பெரிய பற்று. அதேபோல் இயக்குனர் இமயம் பாரதிராஜா சார், இசைஞானி போன்ற பெரிய ஜாம்பாவன்களை அய்யா இந்த படத்தில் தானாக சேர்த்துக்கொண்டார். இந்த படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. அய்யா சமாதிக்கு சென்று ஆசி பெற்று படத்தை தொடங்கினோம்.

தேவரை போல யாரும் பிறக்கவுமில்லை பிறக்கவும் முடியாது என்ற வரிகளை சினேகன் எழுதி உள்ளார்.அவருக்கு பட தரப்பினர் சார்பில் நன்றி. தமிழ் சினிமா வரலாற்றில் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.

நான் இஸ்லாமியானாக பிறந்து சினிமாவில் நிறைய பயணித்திருக்கிறேன். எங்கும் ஒரு பெரிய ஓபனிங் கிடைக்கவில்லை. அப்போது அய்யாவின் கதாபாத்திரம் எனக்கு அமைந்தது. நூறு படம் நடித்திருந்தால் கூட இவ்வளவு வரவேற்பு கிடைக்காது. ஐய்யாவின் படத்தில் நடிக்க வேண்டும் என்று என் தலையில் எழுதி இருக்கிறது. அதனால் நடிக்கிறேன். இஸ்லாமிய தாயின் தாய்ப்பாலை குடித்து வளர்ந்தவர் தேவரய்யா. அந்த ரத்த பாசம், ஏதோவொரு ஜென்மத்தில் நான் அவருக்கு வேலைக்காரனாக பிறந்திருக்கலாம். அதனால் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. ஐய்யாவின் மறைக்கப்பட்ட வரலாறு எங்கும் தவறு செய்யாமல் இயக்குனர் செய்திருக்கிறார். இதற்கு முழுவதுமாக ஆதரவு தந்தவர்கள் என் தயாரிப்பாளர்கள் தான். அள்ளி அள்ளி கொடுத்திருக்கிறார்கள் இதுவரை கணக்கு பார்த்ததில்லை அதற்காக அவர்களுக்கு என் சார்பிலும் இயக்குனர் சார்பிலும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

டத்தோ ராதாரவி பேசியதாவது:

இப்படத்தில் நாயகனாக நடிக்கும் பஷீருக்கு என்னுடைய நன்றி கூறிக்கொள்கிறேன். எல்லாவற்றையும் கடந்து எல்லோரும் தேசிய தலைவர் படத்தில் இணைந்திருக்கிறோம். இயக்குனர் இமயம் பாரதிராஜா, இசைஞானி இளையாஜா இணைந்திருப்பது வரப்பிரசாதம் இப்படத்தில் இடம் பெரும் தேவரய்யா பாடல் வைரலாகி விட்டது. சினேகன் அற்புதமாக எழுதி இருக்கிறார். என்னுடைய வீட்டில் தேவரய்யா படத்தை வைத்து கும்பிடுகிறேன். அதேபோல் என்னுடைய அப்பா அம்மா படம், பெருந்தலைவர் காமராஜர் படம் இருக்கும்.

பெருந்தலைவர் காமராஜரை முதன்முதலில் தேர்தலில் நிற்க வைத்தது அய்யா முத்தராமலிங்க தேவர்தான். அவரை கடத்திக் கொண்டு சென்றுவிட்டார்கள். உடனே தேவரய்யா அவர்கள் இங்கு நான் பேசி முடிப்பதற்க்குள் அபேட்சகர் (வேட்பாளர் )வரவில்லை என்றால் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது என்று சிம்ப்ளாக சொன்னார். பிறகு அவர் பேசி முடிப்பதற்குள் அவரை காரில் கொண்டு வந்துவிட்டுவிட்டார்கள். அப்படியோரு மனிதார் தேவரய்யா.

என் அப்பாவுக்கும் அவருக்குமே சின்ன கசப்பு ஏற்பட்டது பின்னர் அவர்கள் நல்ல நண்பர்களாகிவிட்டார்கள். முத்துராமலிங்க தேவர் அய்யா படத்தை நான் ஏன் கும்பிடுகிறேன் என்றால் அவர் ஒரு வீரம் விளைந்த மண். முத்துராமலிங்க தேவர் சாதாரணமாகத்தான் பேசுவார், மரியாதையாக பேசுவார். ரஜினிகாந்த்திடமே அவரது பேச்சை கொடுத்திருக்கிறேன்.

தேவரய்யா இனத்துக்கே பெரிய வீரமுண்டு. தேசிய தலைவர் படத்தில் வக்கீலாக நடிக்கிறேன். தேவரய்யாவை விடுதலை செய்ய வாதாடும் வக்கீலாக நடிக்க வேண்டுமென்றார்கள் அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன். நந்தனத்திலும் மதுரையில் இருக்கும் தேவரய்யா சிலையில் கம்பீரமாக இருக்கும். மதுரையில் இருக்கும் விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை மட்டும் தான் வைக்க வேண்டும். வேறு யார் பெயரையும் வைக்கக் கூடாது.

தயாரிப்பாளர் எம்.எம். பாபு பேசும்போது ,’ தேசிய தலைவர் படத்தை மக்களிடம் கொண்டு சென்று பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி. என்றார்.

தயாரிப்பாளர் எஸ்.எஸ்.ஆர்.சத்யா, பிஆர் டைமண்ட் பாபு அனைவரையும் வரவேற்றனர்.

முன்னதாக படத்தில் இடம்பெறும் இசைஞானி இசையில் அற்புதமாக உருவான, ’தேவரை போல யாரும் பொறக்கவுமில்லை பொறக்க போறதுமில்லை’ என்ற பாடல் திரையிடப்பட்டது. தேவர் ஜெயந்தியை முன்னிட்டு இந்த ஒரு பாடலை மட்டும் வெளியிட்டனர். விரைவில் மற்ற பாடல்களுடன் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என படக்குழுவினர் தெரிவித்தனர்.

Actor JM Basheer emotional speech at Desiya Thalaivar audio launch

நல்லவனா இருந்து என்னத்த கண்ட..; தேவரய்யா வரலாறை படிச்சா இப்படி சொல்ல மாட்டீங்க – அரவிந்த்ராஜ்

நல்லவனா இருந்து என்னத்த கண்ட..; தேவரய்யா வரலாறை படிச்சா இப்படி சொல்ல மாட்டீங்க – அரவிந்த்ராஜ்

ஜல்லிக்கட்டு மூவிஸ் பட நிறுவனம் சார்பில் எம்.எம்,பாபு, எஸ்.எஸ்.ஆர்.சத்யா, ஜி.ஜெயந்தினி பக்தியுடன் இப்படத்தை தயாரிக்க ஜே எம் பஷீர் நடிக்கும் ‘தேசிய தலைவர்’ இசை வெளியீடு

இசைஞானி இளையராஜா இசையில் உருவாகிறது

ஜல்லிக்கட்டு மூவிஸ் பக்தியுடன் வழங்கும் படம் தேசிய தலைவர். உலகையே தன் பக்கம் திருப்பிப் பார்க்க வைத்து எழைகளுக்குக்காகவும் தன் இனத்துக்காகவும் வாழ்வையும் தன்னையும், தனது சொத்துக்களையும் அர்ப்பணித்த ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு படமாக தேசிய தலைவர் உருவாகிறது.

இதில் தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவராக ஜே.எம் பஷீர் நடிக்கிறார். மேஸ்டரோ இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார். ஊமை விழிகள் உள்ளிட்ட பலவேறு வெற்றிப்படங்களை இயக்கி அளித்த திரைப்படக் கல்லூரி மாணவர் ஆர்.அரவிந்தராஜ் இயக்குகிறார்.

பாரதிராஜா, ராதாரவி, முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

சினேகன் பாடல்கள் எழுதுகிறார். அகிலன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ. எம் சவுத்ரி மூலக்கதை அமைத்திருகிறார். வெங்கட் எடிட்டிங் செய்கிறார். மணிமொழியன் ராமதுரை அரங்கம் அமைக்கிறார். மிரக்கல் மைக்கேல் ஸ்டண்ட் அமைக்கிறார். பி ஆர் ஒ டைமண்ட் பாபு. கே.எஸ்.கே செல்வா.

தேசிய தலைவர் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு தேவர் ஜெயந்தி தினமான அக்டோபர் 30ம் தேதி சென்னையில் உள்ள சிகரம் அரங்கில் நடந்தது. இதில் படக் குழுவினர் கலந்துகொண்டு பேசினார்கள்.

விழாவில் திரைப்பட இயக்குனர் ஆர்.அரவிந்தராஜ் பேசியதாவது:

இன்றைக்கு நமது கதையின் கதாநாயகன் மறைந்த தேவரய்யாவின் 114 பிறந்த நாள். இந்நாள் ஒரு சிறப்பான நாளாகும். அவர் பிறந்த நாளும் இறந்த நாளும் ஒரே நாள்.. ஒரு சிலருக்குத்தான் இந்த பாக்யம் கிடைக்கும். குருவுக்கும் சித்தருக்குதான் இதுபோன்ற நாள் கிடைக்கும் என்கிறார்கள்.

அவர் ஒரு சித்தராக வாழ்ந்தார். அதனால்தான் அவரது பிறந்த நாளையும் இறந்த நாளையும் தேவரின் குரு பூஜை என்று சிறப்பாக கொண்டாடி வருகிறோம்.

தேவர் என்று சொன்னாலே இன்றைய இளைஞர்களுக்கு தேவர் பெயர் கேள்வி பட்டிருக்கிறேன் நந்தனத்தில் சிலை இருக்கிறது. என்பது மட்டும்தான் தெரிகிறது, ஆனால் தேவரய்யா இந்திய விடுதலைக்கு அவரது பங்கு எப்படிப்பட்டது, அரசியலில் நேர்மையான, உண்மையான, தூய்மையான அரசியல்வாதியாக அவர் தன்னுடைய வாழ்க்கையை நடத்தினார் என்பதையெல்லம் இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது முக்கியமான விஷயம்.

தேவரய்யா பற்றி படிக்கும்போது என் மனதில் ஒரு கேள்வி எனக்கு மட்டுமல்ல எல்லோர் மனதிலும் இருப்பது. நான் நல்லவனாகத்தான் இருக்கிறேன் நல்லவனாக இருந்து என்னத்தை கண்டேன். நல்லவனாக இருந்தால் கஷ்டம் மேல் கஷ்டம் தான் வருகிறது. என்று எண்ணுவேன்.

தேவரய்யா வரலாற்றை நான் படிக்கும்போது அவர் எந்தவொரு இடத்திலும் தன்னுடைய கொள்கையையோ நேர்மையையோ தூய்மையையோ கைவிட்டதில்லை. அப்போதுதான் எனக்கு ஒருபெரிய உண்மை தெரிந்தது. தேவரய்யா காலத்தில் வாழ்ந்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறர்கள். எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள். அதில் பலர் மறக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் தேவரய்யா பற்றி இன்றளவும் நாம் கொண்டாடுகிறோம் என்றால் அவர் வாழ்ந்த உண்மையான வாழ்க்கைக்கு கிடைத்த பரிசுதான் அது. அந்த வரலாறு எந்தவிதத்திலும் சிதைந்துவிடாமல் தேசிய தலைவர் படத்தில் நன்றாக சொல்லப்பட வேண்டும் என்ற முனைப்போடு தயாரிப்பளர்கள் இருக்கிறார்கள். அதற்கு ஒத்துழைப்பும் கொடுக்கிறார்கள். அதற்கு ஒரு சிறிய உதாரணம்… இந்த படத்துக்கு யாரை இசை அமைப்பாளராக போட வேண்டும் என்ற பேச்சு வந்தபோது நான் இசைஞானி இளையாராஜா போடலாம் என்றேன்.

ஏனென்றால் ராஜ சார்தான் போற்றி பாடடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே என்ற பாடல் தந்தவர். இன்றைக்கு காலை கூட எல்லா இடத்திலும் அந்த பாடல் கேட்டுக்கொண்டிருக்கிறது. அவர் ஏற்படுத்தின அந்த வரலாற்றை உடைக்க வேண்டுமென்றால் அவரால் மட்டும்தான் முடியும் அதனால் ராஜாசார் பண்ணாதான் நல்லா இருக்கும் என்று சொன்னவுடனே அதற்கு எல்லோரும் உடன்பட்டனர்.

உடனடியாக ராஜா சாரைபோய் எல்லோரும் பார்த்தோம். அதற்கு நம்ம டைமண்ட் பாபு சார்தான் மிகப்பெரிய உதவியாக இருந்தார். எதற்கு இதை சொல்கிறேன் என்றால் நான் கிட்டதட்ட 15 படங்களுக்கு மேல் செய்திருக்கிறேன். நான் ராஜா சாரிடம் பண்ணுகிற முதல் படம் இது. அந்த வாய்ப்பு இந்த படத்தின் மூலமாக தயாரிப்பாளர் ஏற்படுத்தி கொடுத்தார்கள் அதற்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

பாட்டை பார்த்தோம் முதல் தடவையாக ராஜா சாரோட உட்காந்து பாட்டை பார்க்கும்போது எனக்கு சின்ன உதறல்தான். அவர் ஒரு சீனியர் என்பதால்தான் இந்த உணர்வு இருந்தது. ஆனாலும் மனதில் பட்டதை சொல்லாமல் இருக்கக்கூடாது என்று சொன்னேன். நம்ம கேட்கிற விஷயங்களை கூட அவர், உனக்கும் ஞானம் இல்லடா என்று சொல்லாமல் மாற்றங்கள் செய்து கொடுத்தார். அது பெருமையாக இருந்தது.

இந்த படத்தின் மற்றொரு சிறப்பான விஷயம் என்னவென்றால் நம் பஷீர் சாரின் நண்பர் சவுத்ரி என்பவர் இந்த கதையை நாம் செய்யலாம் தேவர் விழாவுக்கு நல்ல இருக்கும் என்றார். அவர் தந்த புத்தகங்களை படிக்க படிக்க எனக்குள் ஆர்வம் பெருகியது. தேவரய்யா பற்றிய படமோ, டி வி சீரியலோ செய்யணும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. அது இவ்வள்வு பெரிய ஒரு பொக்கிஷமாக கிடைக்கும் என்பது இங்கு வந்த பிறகுதான் தெரிந்தது. அதற்கு மீண்டும் ஒருமுறை தயாரிப்பாளர்களுக்கும். பஷீர் சாருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அரவிந்தராஜ் பேசினார்.

Director ArvindRaj praises Muthu Ramalinga Devar in recent function

ரஜினியை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்; என்னதான் பிரச்சினை ஒரு பார்வை

ரஜினியை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்; என்னதான் பிரச்சினை ஒரு பார்வை

அக்டோபர் 28ஆம் தேதி இரவு 9 மணியளவில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்.

இது தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ரஜினிகாந்த் நலமுடன் வீடு திரும்ப அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

ரஜினி ஓரிரு நாட்களில் குணமுடன் வீடு திரும்புவார் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.
ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் செய்திக் குறிப்பு வெளியிட்டது.

அதில், `நடிகர் ரஜினிகாந்தின் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் ஏற்பட்டிருந்த அடைப்பு தற்போது சரி செய்யப்பட்டிருக்கிறது. மருத்துவ நிபுணர்களின் சிகிச்சைக்குப் பின் ரஜினிகாந்த் உடல் நலம் தேறி வருகிறார். சிகிச்சை முடிந்து இன்னும் சில நாள்களில் வீடு திரும்புவார்.’ எனத் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து பிரபல மருத்துவர் ஒருவரும் கருத்து தெரிவித்துள்ளார். அதில்…

“இதயத்திலிருந்து மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் கழுத்துப்பகுதி வழியாக செல்லும்.

அந்த குழாய்யில் அடைப்பு ஏற்பட்டுள்ளது- எனவே லேசான மயக்கமோ, நினைவு தப்பிப் போவதற்கோ வாய்ப்புகள் உள்ளது.

எனவே பாதிப்பு வராமல் தடுக்கவும் சீரான ரத்தம் ஒட்டம் நடக்கவும் Carotid Artery revascularization முறையில் சரிசெய்துள்ளனர்.

ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட 2 காரணங்கள் உண்டு. ஒன்று கொலஸ்ட்ரால். மற்றொன்று ரத்தக்குழாய் சுருங்குதல்.

எனவே அப்போது அடைப்பை சரிசெய்து ஸ்டண்ட் வைத்து ரத்த ஓட்டத்தை சரிசெய்யலாம். எனவே அவர் விரைவில் குணமாகி வீடு திரும்புவார்.” என பிரபல மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு சென்று ரஜினியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்துள்ளார்.

இத்துடன் ரஜினிகாந்துக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்தும் டாக்டர்களிடம் கேட்டு அறிந்து சென்றார்.

புனீத் ராஜ்குமார் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்.; 3 ரசிகர்கள் மரணம்

புனீத் ராஜ்குமார் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்.; 3 ரசிகர்கள் மரணம்

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உடல் இன்று அக்டோபர் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அரசு மரியாதையுடன் அவரது அப்பா ராஜ்குமார் சமாதி அருகே தகனம் செய்யப்பட உள்ளது.

புனித் ராஜ்குமார் உடலுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் கர்நாடக அமைச்சர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் மக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் மைதானத்தில் உடல் வைக்கப்பட்டது. ரசிகர்கள் வரிசையில் சென்று அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையில் புனித் மறைவு கேட்டு ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இத்துடன் புனித்தின் மரண செய்தியறிந்து மாரடைப்பில் இருவர் மரணம் அடைந்ததாகவும் செய்திகள் வந்துள்ளன. இறந்த ஒரு ரசிகரின் பெயர் பரசுராம் தேவம்மன்வார் என கூறப்படுகிறது.

Karnataka CM Bommai pays tribute to actor Puneeth Rajkumar

மீண்டும் ‘அண்ணாத்த’..: ரஜினி மகள் கனவை நிறைவேற்றுவாரா சிவா..?

மீண்டும் ‘அண்ணாத்த’..: ரஜினி மகள் கனவை நிறைவேற்றுவாரா சிவா..?

சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த், குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘அண்ணாத்த’.
இந்த படம் தீபாவளிக்கு வெளியாகிறது.

இப்படத்தை தனது பேரன்களுடன் சமீபத்தில் பார்த்தார் ரஜினிகாந்த். பேரனின் மகிழ்ச்சி குறித்தும் ரஜினி தன் குரலில் பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் ரஜினி மகள் சௌந்தர்யாவும் அண்ணாத்த குறித்து பேசியுள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, “சிவா சார்.. ‘அண்ணாத்த” படத்துல நீங்க என்ன பண்ணியிருக்கீங்கன்னு மக்கள் இன்னும் பார்க்கலை.. ஆனா, நான் பார்த்துட்டேன்.

படம் பார்த்துட்டு நான் வெளிய வந்து, உங்க கைய பிடிச்சிக்கிட்டு கண்ணுல ஆனந்த கண்ணீரோடு நின்னேன். நீங்க பண்ணது மேஜிக் இல்லை, அதுக்கு மேல என்ன சொல்லணும்னே தெரியலை. வார்த்தை இல்லை.

தலைவரோட வெறித்தனமான ஒரு ரசிகையாவும், அப்பாவோட மகளாவும் நீங்க அப்பாவை பார்த்துக்கிட்ட முறைய வச்சி, கண்ணடிப்பா, நீங்க, அப்பா, உங்க மொத்த குழு ‘அண்ணாத்த’ படத்துக்கப்புறம் திரும்பவும் வேலை பார்க்கணும் சார்,” என
சௌந்தர்யா அதில் தெரிவித்துள்ளார்.

ரஜினி மகளின் ஆசையை சிவா நிறைவேற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Soundarya Rajini Praising Annaatthe movie and Director Siva On Hoote App

More Articles
Follows