தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஓரிரு தினங்களுக்கு முன் தமிழக அரசை விமர்சித்து.. “ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். அதை கண்டுபிடித்தபின் நிரூபிக்காமல் போவதும் குற்றம்தான். குற்றவாளிகள் நாடாளக்கூடாது” என்று கமல்ஹாசன் தன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து கமலுக்கு தமிழக அமைச்சர்கள் சார்பில் எதிர்ப்பு குரல் கிளம்பியது.
“அரசு மீது அபாண்டமான குற்றங்களை சுமத்துவதை பொறுத்துக்கொள்ள முடியாது. எந்தவித ஆதாரம் இல்லாமல் அரசின் மீது குற்றங்களை சுமத்தி வரும் கமல் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்காது.” என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.
எனவே இதனையடுத்து அமைச்சர் ஜெயக்குமாருக்கு பதிலளிக்கும் விதமாக கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
அமைச்சர் ஜெயக்குமார், ‘ஜெயலலிதா வழி’ என்று சொன்னால் லஞ்ச வழி என்றுதான் தெரிகிறது, நான் சொல்கிறேன் ’ஜெயலலிதா வழி’ என்பது 60 கோடிக்கு குறையாமல் கொள்ளை அடித்தது. உங்கள் அரசின் நடவடிக்கையை நான் எதிர்க்கத் தயார்.
வழக்கைப் போடுங்கள். தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் நான் வாழ்பவன், உங்கள் வழக்கை கணினி மூலம் தொடங்கலாம். நீங்கள் ஜெயலலிதா வழியை விடும் வரை நான் விடப்போவதில்லை.
எனக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் தெரிந்த ஜெயலலிதா வழி 60 கோடி கொள்ளை?
இவ்வாறு சாருஹாசன் தெரிவித்திருக்கிறார்.
மேலும், “கமல் சொல்வது புரியவில்லை என்று சொல்பவர்கள் பொய்யர்கள். பிடிக்கவில்லை என்று சொல்வதற்குப் பதிலாக புரியவில்லை என்கிறார்கள். ஜெயலலிதாவை உயர் நீதிமன்றம் குற்றவாளி என்றது புரியவில்லையா?அல்லது பிடிக்கவில்லையா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் சாருஹாசன்.
Charuhasan supports his brother Kamalhassan in TN Minister warning issue