கபாலி வழியில் கமல் சகோதரர் சாருஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஞ்சித் இயக்கிய கபாலி படத்தில் ரஜினிகாந்த், மலேசியா டானாக நடித்திருந்தார்.

இப்படம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இதே போன்ற கதையம்சம் கொண்ட கேரக்டரில் நடிக்கவிருக்கிறாராம் சாருஹாசன்.

இவர் கமல்ஹாசனின் சகோதரர் என்பது தாங்கள் அறிந்ததே.

அறிமுக இயக்குனர் விஜய்ஸ்ரீ இப்படத்தை இயக்க, ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். பிரகாஷ் நிக்கி இசையமைக்கிறார்.

முதலில் இவ்வேடத்தில் நடிக்க 88 வயதான சாருஹாசன் மறுத்தாராம். பின்னர் இயக்குனர் வறுபுறுத்தவே நடிக்க ஒப்புக் கொண்டு இருக்கிறார்.

இப்படத்தில் சாருஹாசன் உள்பட எவருக்கும் மேக்கப் கிடையதாம். அதாவது இப்படத்தின் டேக்லைன் ‘நோ பவுடர் நோ மேக்கப்’ என்பதுதான் ஹைலைட்

விஜய் தந்தை எஸ்.ஏ.சி.க்கு விபத்து; அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளைய தளபதி விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ். ஏ. சந்திரசேகர் அவர்களுக்கு சற்றுமுன் சிறு விபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள குமரகோம் என்ற இடத்தில் உள்ள ஒரு அலுவலகத்திற்கு சென்று வந்துள்ளார்.

அங்கு கால் தவறி கீழே விழுந்துள்ளார்.

எனவே அவரை உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் வந்தன.

ஆனால் அதை மறுத்துள்ள விஜய் தரப்பு… குளித்துவிட்டு வரும்போது , வழக்கி விழுந்துள்ளார்.

வேறு எந்த விதமான விபத்தும் ஏற்படவில்லை. அவர் நலமுடன் உள்ளார்  என தெரிவித்துள்ளனர்.

 

 

ரஜினிக்கு தேசிய விருது; கபாலி தீர்த்து வைப்பாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியளவில் ரஜினிகாந்துக்கு இருக்கும் மாஸ் கபாலி மூலம் உலக நாடுகளுக்கும் தெரிந்தது.

இதனால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

ஆனால் அவர்களுக்கு இருக்கும் ஒரே குறை படங்களின் மூலம் ரஜினிக்கு இதுவரை தேசிய விருது கிடைக்காததுதான்.

கபாலி படத்தில் ரஜினியின் நடிப்பை பலரும் பாராட்டி வரும் நிலையில், இப்படத்தை தேசிய விருது குழுவுக்கு அனுப்ப இருக்கிறாராம் தயாரிப்பாளர் தாணு.

எனவே, கபாலி மூலம் ரஜினி ரசிகர்களிள் நீண்ட நாள் குறை தீருமா என பார்ப்போம்.

அஜித்-நயன்தாரா-விக்னேஷ் சிவன் இணையும் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடிதான் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது.

இதனையடுத்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கவிருப்பதாக செய்திகள் வந்தன.

ஆனால் அப்படம் என்னவானது என்ற விவரம் தெரியாத நிலையில், விக்னேஷ் சிவன் தன் அடுத்த படத்தை இயக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இப்படத்தை நயன்தாரா தயாரித்து நாயகியாக நடிக்கக்கூடும் எனவும் தெரிய வந்துள்ளது.

இதில் ஒரு மாஸ் ஹீரோ நாயகனாக வேண்டுமென்பதால், அஜித்தின் கால்ஷீட்டை பெறும் முயற்சியில் இருவரும் இணைந்துள்ளனர்.

இதற்காக அஜித்துக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கவும் தயாராக இருக்கிறாராம் நயன்.

ஆனால் அஜித் மௌனம் கலைத்தால்தான் இந்த தகவல்களுக்கு நம்பகத்தன்மை கிடைக்கும் என்பதே உண்மை.

‘அஜித்-57’ படத் தலைப்பு வெளியானதால் பரபரப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படப்பிடிப்பு ஆஸ்த்ரியா நாட்டில் நடைபெற்று வருகிறது.

காஜல், அக்ஷராஹாசன், கருணாகரன், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைக்க, சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்திற்கு ‘துருவன்’ என்ற பெயரிடப்படலாம் என தகவல்கள் வந்துள்ளன.

துருவன் என்ற இந்த கேரக்டர் மகாபாரத இதிகாசத்தில் பிரபலமானது. மேலும் இதற்கு வெற்றியாளர் என்று அர்த்தமும் உள்ளது.

இத்தலைப்பு பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை என்றாலும் இதனால் ரசிகர்கள் பரபரப்பில் உள்ளனர்.

‘உலகையே உருக்கி கமலுக்கு கொடுக்கலாம்…’ பார்த்திபன் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருதுக்கு நடிகர் கமல்ஹாஸன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதற்கான விழா விரைவில் நடைபெற உள்ள நிலையில், பலரும் தங்கள் வாழ்த்துக்களை கமலுக்கு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பார்த்திபன் தனது பாணியில் கமலுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில்…

கமலுக்கு பிரான்ஸ் நாட்டிலிருந்து கிடைத்தற்கரிய செவாலியர் கிடைத்தத் தருணத்தில் அவர் ஆங்கிலத்தில் நன்றி கூறிய ஸ்டைலுக்கே இன்னொரு குட்டி செவாலியரை வழங்கலாம்.

மேலும் அவர் கூறியதாவது…

“கே. பாலச்சந்தர் சார் “அவன் எட்டாம் வகுப்பு கூட முடிக்கல. ஆனா அவனுடைய ஆங்கிலத்தை புரிந்துக்கொள்ள எனக்கே ஒரு தனி டிக்சனரி தேவைப்படுது” என்று கூறியிருக்கிறார்.

கலைக்காக உலகில் உள்ள எல்லா விருதுகளையும் அல்லது உலகையே ஒரு உலோகமாய் உருக்கி அதில் ஒரு கேடயம் செய்து வழங்கினாலும் அதை பெற தகுதியானவர் கமல் சார்.” என்று தெரிவித்துள்ளார்.

More Articles
Follows