இளைஞர்களுக்கு அடிப்பணிந்தது மத்திய அரசு… ஜல்லிக்கட்டு நடத்த ஒப்புதல்

இளைஞர்களுக்கு அடிப்பணிந்தது மத்திய அரசு… ஜல்லிக்கட்டு நடத்த ஒப்புதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jallikattuஜல்லிக்கட்டை நடத்திட வேண்டும் என தமிழக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நான்கு நாட்களாக இப்போராட்டம் வரலாறு காணாத வகையில் உருவாகி உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு இளைஞர்களின் போராட்டங்களுக்கு அடிப்பணிந்து அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

சட்டம், சுற்றுக்சுழல் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் இந்த ஒப்புதலை அளித்துள்ளது.

ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை பிறப்பிக்க கவர்னர் நாளை தமிழகம் வருகிறார்.

தமிழக அரசு அனுப்பியுள்ள அவசரச் சட்டத்துக்கான வரைவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

வரைவானது தற்போது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

எனவே ஓரிரு தினங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இது நிரந்தரமான சட்டமா? என்பதுதான் தெரியவில்லை.

Central Govt clears TN Govt ordinace for Jallikattu

பெப்சி-கோக் விற்க மாட்டோம்.. பிரபல திரையரங்கம் அறிவிப்பு

பெப்சி-கோக் விற்க மாட்டோம்.. பிரபல திரையரங்கம் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pepsi Coke cool drinksதியேட்டர்களில் சினிமா பார்க்க சென்றால், டிக்கெட் விலையை விட கூல் ட்ரிங்ஸ் மற்றும் பர்கர் போன்றவைகளின் விலையே அதிகமாக உள்ளது.

இவையனைத்தும் வெளிநாட்டு பானங்கள் என்பது நாம் அறிந்ததே.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பான அறப்போராட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் நடந்து வருகிறது.

இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இனி வெளிநாட்டு பானங்களை எங்கள் தியேட்டரில் விற்கமாட்டோம் என ராமநாதபுரத்தில் உள்ள D சினிமாஸ் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், பவண்டோ, டொரினோ போன்ற உள்ளூர் தயாரிப்புகளை மட்டுமே விற்க முடிவெடுத்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Pepsi Coke Sales wont be there at tamil nadu theatres

ஒரு கோடி கொடுத்த உதவிய லாரன்ஸ்க்கு தமிழ் ராக்கர்ஸின் மரியாதை

ஒரு கோடி கொடுத்த உதவிய லாரன்ஸ்க்கு தமிழ் ராக்கர்ஸின் மரியாதை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jallikattu protest lawranceஜல்லிக்கட்டை நடத்தி வலியுறுத்தி தமிழக இளைஞர்கள் அறவழிப் போராட்டங்களை 4 நாட்களாக நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டங்களுக்கு தினமும் சென்று நேரில் ஆதரவு கொடுத்து வருகிறார் லாரன்ஸ்.

போராட்ட களத்தில் இருந்த ஒரு கைக்குழந்தைக்கு தமிழ் அரசன் என்று பெயர் வைத்தார்.

மேலும் ரூ. 1 கோடி பணத்தையும் கொடுத்து, உணவுகளை வழங்கி வருகிறார்.

இவையில்லாமல் போராட்டத்தில் உள்ள பெண்களுக்கு உதவிடும் வகையில் தன் கேரவனையும் கொடுத்துள்ளார்.

இவரின் உயர்ந்த எண்ணங்களை மதித்து தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளம் லாரன்ஸ் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள சிவலிங்கா படத்தை மட்டும் அன்றே இணையத்தில் வெளியிட மாட்டோம் என தெரிவித்து இருக்கிறார்களாம்.

தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையத்தளம் படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் நாளே அன்றே இணையத்தில் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

TamilRockers ‏@Tamilrockersoff
We will not release #Sivalinga on the same day, #respect #wesupportjallikattu

Tamil Rockers site said they wont release Sivalinga movie on net on same release date

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் 16 வயது மாணவர் உயிரிழப்பு

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் 16 வயது மாணவர் உயிரிழப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jallikattu protest turns tragic as 16yr old electrocuted in Salemஉலக அரசியலே பார்த்திராத வகையில் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு அறப்போராட்டம் நடந்து வருகின்றது.

எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் தற்போது வரை இளைஞர்கள் அமைதியான முறையில் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் சேலம் பகுதியில் சில இளைஞர்கள் ரயிலை மறிக்க முற்பட்டுள்ளனர்.

அப்போது எதிர்பாராவிதமாக மின்சாரம் தாக்கி 17 வயது இளைஞர் லோகேஷ் காலமானார்.

இதையறிந்த மாதவன் கூறியதாவது…

I am heart broken … this is not correct -pls pray for-#Logesh he is just 16. Guys pls maintain peace.do this sensibly.#Jallikattu
— Ranganathan Madhavan (@ActorMadhavan)

Jallikattu protest turns tragic as 16-yr-old electrocuted in Salem

‘நடிகர்களை அனுமதிக்கிறாங்க; அரசியல்வாதிகளை விடமாட்டுறாங்க…’ – தொல்.திருமாவளவன்

‘நடிகர்களை அனுமதிக்கிறாங்க; அரசியல்வாதிகளை விடமாட்டுறாங்க…’ – தொல்.திருமாவளவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thirumavalavan interview about Students Jallikattu Protestதமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு தொடர்பாக போராட்டங்கள் வெடித்து வருகின்றன.

இதுகுறித்து பேச மக்கள் நல கூட்டணி சார்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தார் விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.

அப்போது அவர் பேசியதாவது…

ஜல்லிக்கட்டு நடத்திட வேண்டும் என மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருவதை வரவேற்கிறோம்.

ஆனால் அவர்கள் ஒரு அமைப்பை மட்டும் சுட்டிக்காட்டி சாடி வருவது ஏன்? அவர்களுக்கு பின்னால் யாரோ இருக்கிறார்கள்.

போராட்ட களத்திற்கு நடிகர்கள் அனுமதிக்கும் அவர்கள், அரசியல்வாதிகளை விடமாட்டுறாங்க.” என்று பேசினார்.

Thirumavalavan talks about Students Jallikattu Protest

மோடியை சந்தித்த பின்னரும் சென்னை திரும்பாத ஓபிஎஸ்

மோடியை சந்தித்த பின்னரும் சென்னை திரும்பாத ஓபிஎஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ops_modiஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என தமிழக இளைஞர்கள் இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று டெல்லி சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

ஆனால் ஜல்லிக்கட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருப்பதால், மத்திய அரசு ஒன்றும் செய்ய முடியாது என மோடி தெரிவித்து விட்டார்.

இதனையறிந்த போராட்டக்காரர்கள் தங்கள் அறவழிப் போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இவர்களுக்கு பொதுமக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மாலை சென்னை திரும்ப இருந்த முதல்வர் தன் பயணத்தை ரத்து செய்துவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

More Articles
Follows