தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இந்த திரைப்படத்திற்கு 80 நாட்களாகியும் இதுவரை தணிக்கை சான்றிதழ் தரப்படவில்லை.
காரணம் சொல்லாமல் 2 முறை சென்சார் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.
இதுகுறித்து இப்பட இயக்குனர் கூறியதாவது…
வரலாற்றுச் சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணியில் இருக்கும் உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக நாச்சியாள் பிலிம்ஸ் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம்.
மெரினா புரட்சி திரைப்படத்தை பொங்கலுக்குள் தணிக்கை முடித்து திரையிட வேண்டும் என்று கோரியிருக்கிறோம்.
மாண்புமிகு நீதியரசர் அவர்கள் எதிர்த்தரப்பான தணிக்கைத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்கள். நீதி வெல்லும்.” என இயக்குனர் M S ராஜ் தெரிவித்துள்ளார்.
