தணிக்கைத் துறையினரின் பாராட்டு பெற்ற படம் ‘வன்முறை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர்யா ஆதி இண்டர்நேஷனல் மூவீஸ் சார்பில் தயாரிப்பாளர் அப்துல் லத்தீப் வடுக்கோட் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வன்முறை’.இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியிருக்கிறது.

கதை நாயகனாக ஆர் கே சுரேஷ் நடித்துள்ளார். பிரதான நாயகியாக அர்ஷிதா ஸ்ரீதர் நடிக்க , வினோத்,நேகா சக்சேனா, சார்மிளா
மற்றும் நடிகர்கள் அபுபக்கர், ரத்னவேலு, மாஸ்டர் ஷகர் அப்துல் லத்தீப் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தை இயக்கியிருப்பவர் மஞ்சித் திவாகர் இவர் கேரள வரவு.தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார். ஒளிப்பதிவாளர் அய்யப்பன், திரைக்கதையாசிரியர் ரிஜேஷ் பாஸ்கர்,இசையமைப்பாளர் சிவ சுகுமாரன்,கலை இயக்குநர் பீஜேஷ் நின்மாலா, சண்டைப் பயிற்சி இயக்குநர் ஜாக்கி ஜான்சன்,புகைப்படக் கலைஞர் அஜீஸ்,என இயக்குநருடன் இணைந்த திறமைக்கரங்களின் கூட்டு முயற்சியில் ‘வன்முறை’ படம் உருவாகியுள்ளது.

நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளும் கொடுமைகளும் அதிகரித்துவரும் நிலையில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவே அச்சப்படும் சூழல் நிலவுகிறது. பெண்களுக்கு எதிரான பல குற்றங்கள் உண்மைகள் வெளியே தெரியாமலேயே புதைக்கப்படுகின்றன.

கண்முன்னே பொள்ளாச்சியில் நடந்த தொடர் கொடூரங்கள் அச்சமூட்டும் சம்பவங்களாக கண்முன் நிழலாடுகின்றன .
தெலுங்கானாவில் நடைபெற்ற கொடுமையும் மக்கள் மனதில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது .பொள்ளாச்சி, தெலுங்கானா போன்ற சம்பவங்களை மையமாக வைத்து இந்த ‘வன்முறை’ படம் உருவாகி உள்ளது. பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் எச்சரிக்கையூட்டும் வகையிலும் ‘வன்முறை’ படம் உருவாகியுள்ளது .

கேரளாவிலிருந்து தமிழகம் வரும் இளம்பெண்ணுக்கு ஒரு கொடுமை நேர்கிறது .அது பற்றி விசாரிக்கும் கடமையும் பொறுப்பும் நிறைந்த போலீஸ் அதிகாரியாக வரும் ஆர்.கே .சுரேஷ் அதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சியூட்டும் உண்மைகளைத் தேடிச்செல்கிறார் அவற்றைப் பற்றி ஆராய்கிறார். பெண்களுக்கு எதிரான குற்றங்களின்ஆரம்பம் எங்கே இருக்கிறது என்று அறிவதற்காக அவர் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளும் பொறுப்பான கடமைகளும் படம் பார்ப்பவரை படபடக்க வைக்கும் .படத்தில் வில்லனாக வரும் வினோத் கிருஷ்ணனின் கொடூர செயல்கள் பதறவைக்கும். அவரைப் போன்ற கொடூர ஆண்கள்
சமூகத்தில் பெண்ணை ஒரு நுகர் பொருளாகக் கருதும் மனப்பான்மை கவலைப்பட வைக்கும்.

தமிழில் படம் இயக்குவது பற்றி கேரள இயக்குநர் மஞ்சித் திவாகர் கூறும்போது,
“தமிழகத்தில் அறிமுகமாவதில் நான் பெருமைப்படுகிறேன். புதிய முயற்சிகள் அனைத்திற்கும் கைகொடுக்கும் ரசிகர்கள் தமிழ் ரசிகர்கள் .இங்கே தமிழர்கள் ஆள் யார் என்று பார்ப்பதில்லை திறமையை மட்டுமே பார்க்கிறார்கள். எனவேதான் நம்பிக்கையுடன் இங்கே தமிழ்ப்படம் இயக்க வந்திருக்கிறேன். இது பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை மணியாக இருக்கும்.” என்கிறார்.

படத்தை பார்த்த தணிக்கைத் துறையினர் “இது எல்லாருக்குமான படம். முக்கியமாக பெண்களுக்கு எச்சரிக்கை தரும் வகையில் உருவாகியுள்ள படம் ” என்று பாராட்டி உள்ளனர். மகிழ்ச்சியில் உள்ளது படக்குழு.

‘வன்முறை’ ஜனவரி மூன்றாம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

தலைவர் படத்திற்கும் தல ஃபார்முலா..? சிவா மீது சீறும் ரஜினி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இமான் இசையமைத்து வரும் இந்த படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 168 என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இதில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அண்மையில் இதன் சூட்டிங் ஸ்பாட்டில் தேசிய விருது பெற்றமைக்காக கீர்த்தி சுரேஷ்க்கு கேக் ஊட்டி பாராட்டு தெரிவித்திருந்தார் ரஜினி.

இப்பட சூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

இது கிராமத்து கதை என்பதால் மதுரை மாநகரம் போல செட் போட்டு எடுத்து வருகிறார்களாம்.

இப்படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என ரஜினி ரசிகர்கள் காத்துகிடக்கின்றனர்.

பெரும்பாலும் ரஜினி பட சூட்டிங் ஆரம்பிக்கும் முன்பே அப்பட தலைப்பை அறிவிப்பது வழக்கம்.

ஆனால் அஜித், விஜய் படங்கள் அப்படியில்லை. சூட்டிங் பாதி முடிந்த பின்புதான் அதன் தலைப்பை ஏதோ பெரிய விஷயம் போல பில்டப் கொடுப்பார்கள்.

இதுவரை தளபதி 64 படத்தலைப்பை அறிவிக்கவில்லை.

அஜித்தின் அடுத்த பட தலைப்பு வலிமை என அறிவித்துவிட்டார்கள். ஆனால் அந்த படத்தை வினோத் இயக்கி வருகிறார்.

ஆனால் இதற்கு முன் அஜித்தின் வீரம், விவேகம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களை சிவா தான் இயக்கினார். அவர் பாதி சூட்டிங்கை முடித்த பின்பு தான் தலைப்பை அறிவித்தார். அவர்தான் இப்போது ரஜினி படத்தை இயக்கி வருகிறார்.

எனவே தலைவர் படத்திற்கு தல பார்முலா தேவையில்லை. படத்தலைப்பை விரைவில் அறிவியுங்கள் என கோரிக்கை வைத்துள்ளனர்.

அதுவும் படத்தலைப்பு ரஜினியின் கேரக்டர் பெயராக இருந்தால் நன்றாக இருக்கும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பெரும்பாலும் ரஜினி கேரக்டர்கள் பெயரில் அதாவது… பாட்ஷா, கபாலி, காலா, பேட்ட என படத்தலைப்புகள் வைக்கப்பட்டது. ஆனால் விரைவில் வெளியாகவுள்ள தர்பார் என்ற தலைப்பு ரஜினியின் கேரக்டர் பெயர் இல்லை.

அதில் ரஜினியின் பெயர் ஆதித்யா அருணாச்சலம் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Rajini fans request to Director Siva in Thalaivar 168 title

Velammal Students shine at National Standard Examination

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Velammal Nexus Schools congratulate the students who excelled in the National Standard Examination (NSEP, NSEC, NSEB & NSEA) 2019 (stage one) and have been qualified for the Indian National Olympiads (INO) (stage two), conducted by Homi Bhabha Center for Science Education (HBCSE), Mumbai.

Our students who have cleared the National Science Examination in Physics-11, Chemistry-27, Biology-18, Astronomy-06.

NSE exams test the knowledge of the students in Science at all India level and is the first stage to the worldwide Olympiad programme that follows a five stage process.

The management is proud and congratulates the 62 brilliant achievers and blesses them to soar greater heights in future.

சித்தார்த் குமாரனின் பிறந்த நாளை கொண்டாடும் உலக நாட்டு ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பல ஆண்டுகளாகச் சின்னத் திரையுலகில் விஜய் மற்றும் ஜீ டிவி சேனல்கள் மூலம் இல்லங்கள் தோறும் சென்று பிரபலமானவர் சித்தார்த் குமாரன்.

ஜோடி நம்பர் 1, டான்ஸ் ஜோடி டான்ஸ் என்று பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களை மகிழவைத்தவர்.

என் பெயர் மீனாட்சி, ஆபீஸ், சரவணன் மீனாட்சி என்று தொடர்ந்து பலர் மனசில ரெக்க கட்டி பறக்கும் அழகிய தமிழ் மகன், சூப்பர் டான்சர், Mr. கில்லாடி, என்று தொடர்ந்து இன்று வருகிற தேன்மொழியில் ஊராட்சி மன்றத் தலைவராக என்று எத்தனையோ வேடமேற்று ரசிகர்களின் மனதில் நிரந்தர இடத்தை பிடித்தவர்.

சின்னத்திரை மூலம் பலரது இல்லங்களில் அறிமுகமாகி உள்ளங்களில் நுழைந்து கடல் கடந்து, கண்டங்கள் கடந்து ரசிகர்களைப் பெற்றிருக்கும் சித்தார்த் குமாரன் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

சித்தார்த்துக்கு Sidharth_kumaaran_fanclub என்ற பெயரில் கனடா, அமேரிக்கா, ஐரோப்பா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஸ்ரீலங்காவில் ரசிகர் மன்றங்கள் சில ஆண்டுகளாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் மாடலிங், திரைப்பட, விளம்பர படப்பிடிப்புகளுக்கு www.actorsidharth.com – ல் இவரைத் தொடர்பு கொள்ளவும்!

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சித்தார்த்!

Sidharth Kumaaran fans celebrating their Hero birthday in worldwide

விஜய் & விஜய்சேதுபதி இணைந்து தரும் 2020 புத்தாண்டு விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 64 படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

இவருடன் மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, ரம்யா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை டிசம்பர் 31ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Thalapathy 64 first look will be 2020 New year treat

பாரதிராஜாவின் ‘குற்றப் பரம்பரை’ யை தயாரிக்கும் சுரேஷ் காமாட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் இமயம் என மக்களால் அன்பாக அழைக்கப்படும் பாரதிராஜா தற்போது நடிகராகவும் நல்ல பெயரை எடுத்து வருகிறார்.

சமீபத்தில் சிவகார்த்திகேயனின் தாத்தாவாக ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இந்த நிலையில் தனது கனவுப் படைப்பான ‘குற்றப் பரம்பரை’ என்ற படத்தை தற்போது ஒரு வலை தொடராக (Web Series) இயக்கவிருக்கிறாராம் பாரதிராஜா.

இதனை பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கவுள்ளார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, சமீபத்தில் வெளியான ‘மிகமிக அவசரம்’ படத்தை இயக்கியிருந்தார்.

மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தையும் தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bharathiraja to make Kuttra Parambarai as a web series

More Articles
Follows