சின்னத்திரை பிரபலங்கள் வாழ்த்து மழையில் ரியோ & பவித்ராவின் ‘கண்ணம்மா என்னம்மா’

சின்னத்திரை பிரபலங்கள் வாழ்த்து மழையில் ரியோ & பவித்ராவின் ‘கண்ணம்மா என்னம்மா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளம் திறமையாளர்களை, அவர்களின் திறமைகளை பொது வெளியில் பிரபலபடுத்தும் வகையில், சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், Noise and Grains புதிய இளம் திறமையாளர்களின் உருவாக்கத்தில் ஆல்பம் பாடல்களை உருவாக்கி வருகிறது.

அஸ்கமாரோ, குட்டிப்பட்டாஸ் பாடல்களின் பிரமாண்ட வெற்றியினை தொடர்ந்து, Noise and Grains தயாரிப்பில் ஐந்தாவது ஆல்பம் பாடலாக, ரியோ ராஜ் மற்றும் பவித்ரா லக்‌ஷ்மி நடிப்பில் உருவாகியுள்ள ஆல்பம் பாடல் “கண்ணம்மா என்னம்மா”. தேவ் பிரகாஷ் இசையில் இப்பாடலை பிரிட்டோ JB இயக்கியுள்ளார்.

நேற்று இப்பாடலின் வெளியீட்டு விழா, சின்னத்திரைபிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், சூப்பர் சிங்கர் பாடகர்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கலை நிகழ்வுகள், நடனம் என கோலகலமாக நடைபெற்றது. பாடலை நடன இயக்குநர் சாண்டி வெளியிட பிரபலங்கள் பெற்றுக்கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்ட செஃப் தாமு, நடிகை சுனிதா “கண்ணம்மா என்னம்மா” பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.

*நடிகர் ரக்‌ஷன் பேசியதாவது…*

ரியோ என் மச்சான். இவங்களோட திறமைய நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. கொஞ்ச வாரம் முன்னாடி, என்னோட சாங் ரிலீஸானப்ப ரியோவை கால் பண்ணி, மச்சான் உன்ன கூப்பிடனுமானு கேட்டேன், ஆனா உன் போட்டோ இருந்தாவே, நான் வந்துருவேனு சொன்னான். அந்தளவு நாங்க க்ளோஸ். பவித்ரா பத்தி இங்க சொல்லனும் அவங்க ஒரு நல்ல குக். இவங்க ரெண்டு பேருமே எங்க செல்லம். இவங்க நடிச்ச பாடல் கண்டிப்பா பெரிய ஹிட்டாகும் நன்றி.

*பாடகர் ஷாம் விஷால் பேசியதாவது..*

பிரிட்டோ போன் செய்து கண்ணம்மா என ஒரு பாடல் இருக்கு பாடுகிறாயா எனக் கேட்டார். நான் கண்ணம்மா என ஆரம்பிக்கிற மாதிரி ஒரு பாடலும் பாடியதில்லை. அதற்காகத் தான் காத்திருந்தேன் அதனால் உடனே ஓகே சொன்னேன். கண்ணம்மா பாடல் எனக்கு மிக முக்கியமான பாடலாக இருக்கும். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.

*Noise & Grains சார்பில் கார்த்திக் பேசியதாவது..*

எங்களை அணுகும் சுயாதீன கலைஞர்களை வைத்து, பல வருடங்களாகவே பாடல்களை உருவாக்கி வருகிறோம். கொரோனாவிற்கு பிறகு ஒரு மார்க்கெட் ஓபனாகியுள்ளது, அதனை சரியான வகையில் உபயோகப்படுத்தி கொள்ள வேண்டும் என்பது தான் எங்கள் குறிக்கோள்.

அதைத்தான் தற்போது செய்து வருகிறோம். குட்டிப்பட்டாஸ் பாடல் செய்து கொண்டிருந்தபோது, ஏதேச்சையாக ரியோவை சந்தித்த போது, எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருந்தோம் அப்போது தான் இந்த ஐடியா பற்றி சொன்னார் அது எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனடியாக செய்யலாம் என முடிவு செய்து இந்த பாடலை உருவாக்கினோம்.

*Noise & Grains சார்பில் மகாவீர் பேசியதாவது…*

Noise & Grains மூலம் இந்த முயற்சி பல வருடங்களாக நாங்கள் பேசி வந்ததுதான். இந்த நிறுவனத்தில் அனைத்தையுமே திட்டமிட்டு தான், பெரிய அளவில் செய்து வருகிறோம்.

அனிருத் வைத்து ஆரம்பித்ததில் இருந்து, நிகில் அண்ணாவை வைத்து பிரஸ் மீட் வைத்து, அறிமுகப்படுத்தியது வரை எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்து வருகிறோம். சுயாதீன கலைஞர்களை தேர்ந்தெடுத்து, அவர்களை அனைவரும் கொண்டாடும் வகையில் தர வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்.

*இயக்குநர் பிரிட்டோ பேசியதாவது..*

ரீகன் தான் இந்தப்பாடல் குறித்து முதலில் சொன்னான். ரியோவிடம் சொன்ன போது அவன் வேண்டாம் என்று தான் சொன்னான். அதன் பின் பாடல் கேட்ட பிறகு, அவனுக்கு பிடித்து, அதை வீடியோ செய்யலாம் என முடிவு செய்து, சின்னதாக நாங்களே மொட்டை மாடியில் எடுத்தோம். அதை ரியோ அவரது நண்பர்களான அபு மற்றும் சால்ஸ் இருவரிடமும் காட்ட, அவர்களுக்கு இது பிடித்து போய் உதவி செய்ய, இந்தப்பாடல் பெரிய அளவில் உருவானது.

ஒளிப்பதிவாளர் S.மணிகண்ட ராஜா உதவியில் இந்தப்பாடலை ஒரே நாளில் உருவாக்கினோம். இந்தப்பாடல், மிகப்பெரிய அளவில் வெளியாவது மிகப்பெரும் மகிழ்ச்சி அனைவருக்கும் நன்றி.

*நடன அமைப்பாளர் அபு & சால்ஸ் கூறியதாவது…*

எனக்கு முதன் முதலில் ஆல்பம் செய்த போது பயமாக இருந்தது. இப்போது பயம் போய் விட்டது. பிரிட்டோ மிகப்பெரிய சுதந்திரம் தந்தார். ரியோ, பவித்ரா பெரிய அளவில் ஒத்துழைப்பு தந்தனர். அவர்கள் நிறைய டேக் எடுக்கவில்லை. மிகச்சிறப்பாக செய்தார்கள். அவர்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. எங்களையும் உங்களுடன் இணைத்து கொள்ளுங்கள் நன்றி.

*நடிகர் ரோபோ சங்கர் பேசியதாவது…*

ஒரு பிரமாண்ட ஆடியோ லாஞ்ச் போல் இது இருக்கிறது. இதனை உருவாக்கிய அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். பிரிட்டோ என் அன்புத்தம்பிக்கு வாழ்த்துக்கள். பாடல் மிக அருமையாக இருந்தது. பெரும் பிரபலங்களை மேடையிலேயே இயக்கும் நிகில் இப்போது படம் நடித்து முடித்து விட்டார் அவருக்கு வாழ்த்துக்கள். ரியோவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி.

*ஈரோடு மகேஷ் பேசியதாவது…*

அன்புத்தம்பி ரியோ எனக்கு மிகவும் பிடித்தவர். ரியோவுக்கும், பவித்ராவிற்கும் வாழ்த்துக்கள். சுயாதீன கலைஞர்களை அறிமுகப்படுத்தி அவர்களை வளர்த்து விடும் Noise & Grains க்கு வாழ்த்துக்கள் நன்றி.

*ராஜமோகன் பேசியதாவது..*

விஜய் டீவி பிரபலங்கள் இங்கு நிறைந்துள்ளார்கள். குக் வித் கோமாளி மூலம் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்திய பவித்ராவிற்கு, இந்த மேடை கிடைத்திருப்பது மகிழ்ச்சி.

எங்கு சென்றாலும் மனைவியை தைரியமாக அழைத்து செல்லும் எங்கள் தம்பி ரியோவிற்கு வாழ்த்துகள். இந்தப்பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

*டி எஸ் கே பேசியதாவது…*

கண்ணம்மா எல்லோருக்கும் வெற்றியை தந்துள்ளது. அதே போல் ரியோ பவித்ராவிற்கு இந்த பாடல் வெற்றியை தர வாழ்த்துக்கள். பிரிட்டோ என்னுடன் காலேஜில் படித்தவர், அவருடைய மேடையில் இன்று நிற்பது மகிழ்ச்சி. கார்த்தி எதை செய்தாலும் பிரமாண்டமாக செய்கிறார்கள், அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். கண்ணம்மா பிரமாண்ட வெற்றி பெற வாழ்த்துக்கள்.

*சூப்பர் சிங்கர் ஷோ இயக்குநர் ரௌஃபா பேசியதாவது..*

சுயாதீன கலைஞர்கள் நிறைய பேர் வரவேண்டும் என இரண்டு வருடம் முன்னரே ஏ. ஆர்.ரஹ்மான் சார் சொல்லியிருக்கிறார். அதே போல் Noise & Grains புதிய கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கி வருகிறது. இந்தப்பாடல் வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

*நடிகர் ஜித்தன் ரமேஷ் பேசியதாவது…*

முதன் முதலா ஹாலிவுட்டில், பாலிவுட்டில் வந்துகொண்டிருந்த ஆல்பம் தமிழில் வராதா என நினைப்பேன். இப்போது சில பாடல்கள் தமிழில் வந்து ஹிட்டாக ஆரம்பித்துள்ளது. இப்போது ரியோ நடித்து பாடல் வந்திருப்பது மகிழ்ச்சி. ரியோ, பவித்ரா இருவருக்கும் என் வாழ்த்துக்கள் நன்றி.

*பிக்பாஸ் புகழ் சோம்சேகர் பேசியதாவது…*

இந்த பாடல் பிரிட்டோ ஒரு சாதாரண வெர்ஷனாக போட்டு காட்டினார். பின் இதனை முழுப்பாடலாக அழகாக உருவாக்கியுள்ளனர். பிரிட்டோ சூப்பராக செய்துள்ளார். அனைவருக்கும் வாழ்த்துகள். பாடல் கண்டிப்பாக வெற்றி பெறும் நன்றி.

*நடிகர் பிரஜின் பேசியதாவது….*

ரியோ எனக்கு பிறகு ஆங்கராக வந்தவர் என்றாலும் இன்று அவர் ஜெயிப்பது மிக மகிழ்ச்சி. பிரிட்டோ என்னுடன் நடித்துள்ளார் ஆனால் அப்போதே உனக்கு இயக்கம் தான் சரியாக வரும் என்று சொன்னேன். இப்போது இம்மாதிரி பாடல்கள் வந்து, ஜெயிப்பது மகிழ்ச்சி.

எல்லோருக்கும் வெற்றி மிகவும் முக்கியம் ரியோ, பவித்ரா நன்றாக செய்துள்ளார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் நன்றி.

*நடன இயக்குநர் சாண்டி பேசியதாவது..*

பாடல் செமையா இருக்கு, சூப்பரா இருக்கு. ஒரு பாடல் பார்த்தால் ஜாலியாக இருக்கனும் அதை சூப்பராக செய்திருக்கிறார்கள். அபு, சால்ஸ் டீமாக கலக்கியிருக்கிறார்கள். ரியோ முன்னாடியே இந்த பாடலை காட்டி விட்டார். பவித்ரா சூப்பரா டான்ஸ் ஆடுவார் இப்பாடலில் அருமையாக செய்துள்ளார். பிரிட்டோ நன்றாக இயக்கியிருக்கிறார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

*நடன இயக்குநர் ஃஷெரிஃப் பேசியதாவது..*

ரியோ, பவித்ரா இருவருமே சூப்பர் டான்ஸர்ஸ் இருவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அபு என்னிடம் வேலை பார்த்தார் அவர் தனியாக செய்த பாடலை பார்க்கத்தான் வந்தேன். இந்த மாதிரி தனி ஆல்பங்கள் வருவது மகிழ்ச்சி. இப்பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

*நடிகர் ரியோ பேசியதாவது…*

என் நட்புக்காக இங்கு வந்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. ஒரே நாளில் இதை பிளான் பண்ணி, பிரிட்டோ மிக அழகாக எடுத்து விட்டார். ஷாம் விஷால் அருமையாக பாடியுள்ளார்.

Noise & Grains மிக அழகாக வெளியிட்டு விட்டார்கள், அவர்களுக்கு நன்றி. இது அவர்களுக்கு ஆரம்பம் தான் இன்னும் நிறைய செய்வார்கள், எல்லோரும் பாடலை பார்த்து ரசியுங்கள் நன்றி.

*பவித்ரா லக்‌ஷ்மி பேசியதாவது…*

ஒரு ஆடியோ லாஞ்ச் என்பது ஒவ்வொரு நடிகருக்கும் கனவு. அது பெரிய படம் பெரிய நடிகர் இருந்தால் தான் நடக்கும் என்றில்லாமல், திறமையிருந்தால் அனைவருக்கும் அந்த மேடை கிடைக்கும் என்பதை நிரூபித்த Noise & Grains க்கு நன்றி.

இந்த பாடலை ஷாம் விஷால் பாடியிருக்கிறார் என்றவுடனே, நான் ஓகே சொல்லிவிட்டேன். சூப்பர் சிங்கரிலிருந்தே அவருக்கு நான் ரசிகை. பிரிட்டோ இதனை அற்புதமாக இயக்கியிருக்கிறார். எனக்காக இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

இயக்கம் – பிரிட்டோ JB
இசை – தேவ் பிரகாஷ்
பாடல்கள் – A S தாவூத்
பாடியவர்கள் – ஷாம் விஷால்
நடனம் – அபு & சால்ஸ்
ஒளிப்பதிவு – S.மணிகண்ட ராஜா
படத்தொகுப்பு – கிருஷ்ணா குமார் கிரியேட்டிவ் டைரக்டர் – கார்த்திக் ஶ்ரீனிவாஷ்
பிஸினஸ் டைரக்டர் – மஹாவீர் அசோக் கண்டன்ட் டைரக்டர் – டோங்க்லி ஜம்போ
கலை – சசிகுமார்
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்
கலரிஸ்ட் – ப்ராங்ளின் V
பப்ளிசிட்டி டிசைனர் – சிவா தமிழரசன் எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் – வைஷாலி SV

Celebrities wishes to Rio and Pavithra for Kannamma Eannamma

ஆயுதபூஜைக்கு தியேட்டர்களில் ‘அண்ணாத்த’ டீசர் விருந்து..: அனுமதி இலவசம்

ஆயுதபூஜைக்கு தியேட்டர்களில் ‘அண்ணாத்த’ டீசர் விருந்து..: அனுமதி இலவசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தாண்டு 2021 தீபாவளிக்கு ரஜினி நடித்த ‘அண்ணாத்த‘ படம் உலகமெங்கும் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’.

இந்தப் படத்தில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, நயன்தாரா, பிரகாஷ் ராஜ், கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

ரஜினி படத்திற்கு இமான் இசையமைப்பது இதுவே முதன்முறை. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதனிடையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த செப்டம்பர் 10 காலை 11 மணிக்கு ‘அண்ணாத்த’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அன்று மாலை 6 மணிக்கு மோஷன் போஸ்டரும் வெளியாகி இணையத்தை அதிர வைத்தது.

இதன்பின்னர் அண்ணாத்த பாடல்… சாரல் சாரல் காத்து ஆகிய படங்களும் வெளியானது. ரஜினி மிக இளமையாக இருப்பதாக ரசிகர்கள் & மக்களும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் தற்போது ”அண்ணாத்த’ டீசர் ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

ஆயுதபூஜையை முன்னிட்டு அக்டோபர் 14 மாலை 6 மணிக்கு டீசர் என அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் அண்ணாத்த டீசர் வெளியீட்டு விழா*

தூத்துக்குடி மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் தலைவரின் அண்ணாத்த திரைப்பட டீசர் *கிளியோபட்ரா திரையரங்கில் 14.10.21 வியாழன் இரவு 9 மணிக்கு சிறப்பு பாடல்களுடன்* கொண்டாடப்படுகிறது.

*அனுமதி இலவசம்*

ரசிகர்கள் அனைவருக்கும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி அன்புடன் அழைக்கிறோம்.

Annaatthe teaser will be screened in this theatre

சூர்யாவை அரசியலுக்கு அழைத்தவர்… இன்று திரைத்துறைக்கு வந்துவிட்டார்

சூர்யாவை அரசியலுக்கு அழைத்தவர்… இன்று திரைத்துறைக்கு வந்துவிட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைப்பட இயக்குநரான இளம் காளைகள் கட்சி தலைவர் நேதாஜி கார்த்திகேயன்

ஜல்லிக்கட்டு போராடத்திற்கு பிறகு இளம் காளைகள் கட்சியை தொடங்கியவர் நேதாஜிகார்த்திகேயன்..

நீட் தேர்விற்கு எதிராக சூர்யா கருத்து தெரிவித்த போது சூர்யா அரசியலுக்கு வர வேண்டும் என கூறி சுவரொட்டி ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்

தற்போது N.K.Films Productions என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதை தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளார்..

தமுக்கம் வென்றான் என்ற திரைப்படத்தை இயக்க உள்ளதாக படத்தின் First look ஐ வெளியிட்டுள்ளார்…

மதுரையின் வரலாறு மற்றும் பழங்குடி போராளிகளின் கதை களத்தை வைத்து எடுக்கபட உள்ளதாக தெரிவித்துள்ளார்…

Politician Nethaji Karthikeyan turns hero

மறைந்த நடிகர் ஶ்ரீகாந்தின் நினைவலைகளை பகிர்ந்த நடிகர் சிவக்குமார்

மறைந்த நடிகர் ஶ்ரீகாந்தின் நினைவலைகளை பகிர்ந்த நடிகர் சிவக்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ஶ்ரீகாந்த் 1965 இல் இயக்குநர் ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். இவர் நிறைய படங்களில் சிவாஜி கணேசன், சிவக்குமார், முத்துராமன் , ஜெய்சங்கர் போன்ற நடிகர்களோடு துணைப் பாத்திரங்களில் நடித்தார். பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களோடு எதிர்நாயகனாகத் தோன்றினார். தமிழ் சினிமாவின் பெரிய நட்சத்திரங்கள் கலைஞர்கள் போற்றக்கூடிய நடிகராக விளங்கினார்.

தற்போது 82 வயதான தங்கப்பதக்கம் ஸ்ரீகாந்த் நேற்று காலமானார். தன் நண்பரின் மறைவையொட்டி நடிகர் சிவக்குமார் அவர் குறித்து நினைவுக்குறிப்புகளை பகிர்ந்துள்ளார்.

எனது அருமை நண்பர் திரு ஶ்ரீகாந்த் 1965 ஏப்ரலில் ஜெயலலிதாவின் முதல் ஜோடியாக ஶ்ரீதரின் வெண்ணிற ஆடை படத்தின் கதாநாயகனாக அறிமுகமானார். ஈரோட்டில் பிறந்து, அமெரிக்க தூதரகத்தில் பணி புரிந்து, K பாலசந்தரால் மேடை நடிகராக பிரபலமடைந்த வெங்கி என்கின்ற ஶ்ரீதர் , மேஜர் சந்திரகாந்த் என்ற கதையின் நாடகத்தில் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் தான் ஶ்ரீகாந்த். திரைப்படத்தில் அறிமுகமாகும்போது அதே பெயரையே ஒப்புக் கொண்டு நடித்தார். நாகேஷ் நகைச்சுவையில் விஸ்வரூபம் எடுத்தார், வாலி கவிதையால் கரை கண்டார் , வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் துவக்க நாட்களில் சாப்பாட்டுக்கே திண்டாட்டம் போட்ட போது, தன் கையால் சமைத்து போட்டு, மாம்பலம் கிளப் ஹவுசில் இருவரையும் காப்பாற்றியவர் ஶ்ரீகாந்த். கதாநாயகனாக நிற்க முடியவில்லை என்றாலும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள் , ராஜநாகம்’ போன்ற முக்கிய படங்களில் முத்திரை பதித்தார். என்னோடு இணைந்து, ‘மதன மாளிகை, சிட்டுக் குருவி, இப்படியும் ஒரு பெண், அன்னக்கிளி, யாருக்கும் வெக்கமில்லை , நவக்கிரகம்’ என பல படங்களில் நடித்தவர். சமீபத்தில் 80 வயது பூர்த்தி அடைந்த விழா கொண்டாடினார். இன்று அவரது ஒரே மகள் மீரா வீட்டில் ஶ்ரீகாந்த் , லீலாவதி , மீரா கணவர் zach அலெக்சாண்டர், பேத்தி காவேரி ஆகியோரையும் சந்தித்து ஓவியம் , சினிமா என்று இரண்டு காஃபி டேபிள் புக்ஸை கொடுத்து வாழ்த்தி வந்தேன்.
இன்று அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
#RIPSrikanth

– நடிகர் சிவகுமார்

Sivakumar shared working experience with Actor Srikanth

பிக்பாஸ் வீட்டிலிருந்து திருநங்கை நமீதா வெளியேற்றம்.; வைல்டு கார்டு என்ட்ரீயாக சிவகார்த்திகேயன் பட நடிகை

பிக்பாஸ் வீட்டிலிருந்து திருநங்கை நமீதா வெளியேற்றம்.; வைல்டு கார்டு என்ட்ரீயாக சிவகார்த்திகேயன் பட நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 5 சீசன் அக்டோபர் 3-ந் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகிறது.

இதில் 10 பெண், 7 ஆண், 1 திருநங்கை என மொத்தம் 18 பேர் பங்கேற்றுள்ளனர்.

முதல் வார முடிவதற்குள் திருநங்கை நமீதா மாரிமுத்து என்பவர் (கொரோனா தொற்று) உள்ளிட்ட மருத்துவ காரணங்களால் வெளியேறினார்.

எனவே தற்போது 17 போட்டியாளர்கள் உள்ளனர்.

ஒரு மாதம் முடிவடைந்த பின்னரே வைல்டு கார்டு என்ட்ரியாக மற்ற போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படுவார்கள் என்பதே வழக்கமாக இருந்தது.

இத கொஞ்சம் பாருங்க : ‘‘பிக்பாஸ்’ ஷனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய நபர்..; நடிகை என்ன செய்தார் தெரியுமா.?

தற்போது நமீதாவுக்கு பதிலாக ஒரு வைல்டு கார்டு மூலம் ஒரு போட்டியாளரை உள்ளே அழைக்கவிருக்கிறார்களாம்.

ஆயுதபூஜை முடிந்த பின்னர் அக்டோபர் 16-ந் தேதி முதல் நடிகை ஷாலு ஷம்மு பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லவிருக்கிறார்.

சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ & ‘மிஸ்டர் லோக்கல்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு என்பது குறிப்பிடத்தக்கது

Sivakarthikeyan film actress as wild card entry in Bigg Boss 5 house

மீண்டும் பிசாசு 2 கூட்டணி.; எஸ்ஜே. சூர்யாவை இயக்கும் மிஷ்கின்

மீண்டும் பிசாசு 2 கூட்டணி.; எஸ்ஜே. சூர்யாவை இயக்கும் மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகள் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் மிஷ்கின்.

அவ்வப்போது படங்களில் நடித்தும் சில படங்களை தயாரித்தும் உள்ளார்.

தற்போது ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி நடிப்பில் பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார் மிஷ்கின்.

இப்பட இறுதிக்கட்ட பணிகளில் மிஷ்கின் கவனம் செலுத்தி வரும் நிலையில் அவரின் அடுத்த படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

இதில் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்க நடிகர் விதார்த் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளராம்.

பிசாசு 2 படத்தை தயாரித்து வரும் முருகானந்தமே இந்த படத்தையும் தயாரிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

எனவே விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.

SJ Suryah’s next with Director Mysskin

More Articles
Follows