மீண்டு(ம்) வரும் சிட்டிசன் பட டைரக்டர்.; எஸ்ஏசி நாஞ்சில் சம்பத் ரங்கராஜ் பாண்டே வாழ்த்து

மீண்டு(ம்) வரும் சிட்டிசன் பட டைரக்டர்.; எஸ்ஏசி நாஞ்சில் சம்பத் ரங்கராஜ் பாண்டே வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹீரோ சினிமாஸ். சி.மணிகண்டன் வழங்க கதிரவன் கதாநாயகனாக நடிக்கும் படம் மீண்டும். இப்படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி சரவணன் சுப்பையா இயக்கி உள்ளார். இவர் அஜீத்குமார் நடிப்பில் பரபரப்பாக பேசப்பட்ட வெற்றிப்படமான சிட்டிசன் படத்தை இயக்கியவர்.

மீண்டும் படத்தில் கதிரவன் ஜோடியாக அனகா நடித்திருக்கிறார். இவர் டிக்கிலோனா, நட்பே துணை படங்களில் நடித்தவர். பிரணவ் ராயன், அனுராதா, துரை சுதாகர், சுபா பாண்டியன், அபிதா செட்டி, யார் கண்ணன், எஸ்.எஸ்.ஸ்டான்லி, சுப்ரமணியம் சிவா, தர்ஷினி, இந்துமதி, மணிகண்டன், கேபிள் சங்கர், ஆதர்ஷ், மோனிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்,

கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதி உள்ளார். நரேன் பாலகுமாரன் இசை அமைத்திருக்கிறார். சீனிவாசன் தேவாம்சம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜா முகமது எடிட்டிங் செய்திருக்கிறார். சூப்பர் சுப்பராயன் சண்டை பயிற்சி அளித்திருக்கிறார். மணிமொழியன் ராமதுரை அரங்கம் அமைத்திருக்கிறார்.

நடனத்தை ஐ ராதிகா அமைத்துள்ளார். பி.ஆர். ஒ டைமண்ட் பாபு. விஜய் நடித்த புலி படத்தை தயாரித்த பி.டி.செல்வகுமார் மீண்டும் படத்தை வர்த்தகம் செய்துள்ளார்.. தமிழகமெங்கும், காமதேனு பிலிம்ஸ் சார்பாக பாலாஜி விநியோகிக்கிறார்.

இரண்டு தந்தை, ஒரு பெண் ஒரு குழந்தை என்ற மாறுபட்ட கதையம்சமுள்ள இப்படத்தில் கடற்படையினரிடம் சிக்கி தமிழ் மீனவர்கள்படும் சித்ரவதையை தத்ரூபமாக்கி படமாக்கி உள்ளனர். இந்தியா மீது மறைமுக தாக்குதல் நடத்தும் இலங்கை, சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகளின் விஞ்ஞான ரீதியான் தாக்குதலையும் இப்படத்தில் சொல்லியிருக்கின்றனர்.

பட கதாநாயகன் கதிரவன் இப்படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளில் உயிரை பணயம் வைத்து நடித்துள்ளார். இதற்காக ஆறு நாட்கள் நிர்வாணமாக சித்ரவதை செய்யப்படும் காட்சிகளில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது,

மீண்டும் படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் பாடல்கள் முன்னோட்டம் நேற்று சென்னை பிரசாத் லேபில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனி, பேச்சாளர் நாஞ்சில் சம்பத், பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, திரைப்பட இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பேரரசு முன்னிலை வகித்து படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டனர்.

விழாவில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது:

மீண்டும் சரவணன் சுப்பையா. திறமையுள்ளவர்கள் எல்லாம் ஏன் நடுவில் கொஞ்சம் சினிமாவை விட்டு ஒதுங்கிட்டீங் களா? சினிமா ஒதுக்கி விட்டதா என்று தெரியவில்லை. சரவண சுப்பையா இயக்கிய சிட்டிசன் படம் யாரும் நினைத்துப்பார்க்க முடியாத விஷயங்களை பேசியது. சினிமா பொழுது போக்காக எடுக்கிறோம் அதில் சில நல்ல விஷயங்களை சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு சிலர்தான். சிட்டிசன் படத்தில் தனது திறமையை நிரூபித்தவர் இயக்குனர் சரவண சுப்பையா. 70. 80 களில் வெற்றியும் கொடுப்போம், தோல்வியும் கொடுப்போம்

ஆனால் வெற்றியை மட்டும் மனதில் வைத்துக் கொள்வார்கள். வாய்ப்புகள் தொடர்ந்து வரும். இப்போது ஒவ்வொரு படமும் சோதனையானது. ஒரு படம் சறுக்கினாலும் அவ்வளவுதான் நம்மை மறந்துவிடுவார்கள். சரவணன் சுப்பையா மீண்டும் படம் மூலம் மீண்டும் வந்திருக்கிறார். சிட்டிசன் இயக்குனராக மீண்டும் உங்களை கொண்டு வந்து நிறுத்தும்.

படத்தின் டிரைலர் ரொம்ப நன்றாக இருந்தது. படத்தில் ஹீரோவை கொடுமைபடுத்தும் காட்சியும் இருக்கிறது, ஒரு குழந்தையை வைத்து சென்டிமென்ட் காட்சியும் இருக்கிறது. ஹீரோ கதிரவன் மிகவும் கடுமையாக உழைத்திருக்கிறார். நன்றாக உழைப்ப வனை சினிமா விடாது. சினிமாவை காதலித்தால் உண்மையான காதலிபோல் அது நம்மை கைவிடாது. ஏதாவது ஒருவிதத்தில் நம்மை பிடித்து இழுத்துக்கொண்டே இருக்கும். இங்கு லியோனி வந்திருக்கிறார். முதன்முறை யாக அவரை நான் சினிமாவுக்கு அழைத்து வந்தேன்.

செந்தூரப்பாண்டி படத்தின் நூறாவது நாள் விழாவுக்கு காதலா வீரமா என்ற தலைப்பை வைத்து பட்டிமன்றம் நடத்திக்கொடுத்தார். அதேபோல் நாஞ்சில் சம்பத் இங்கு வந்திருக்கிறார். அவர் இருக்கும் மேடையில் நீ எப்படி தைரியமா பேசற என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ளவேண்டி உள்ளது. அடுத்து பாண்டே வந்திருக்கிறார்.

திறமையானவர் ஆனால் வழிதவறி எங்கேயோ போய்கொண்டிருக்கிறாரோ என்று நினைக்கிறேன். இவர் தமிழகத்துக்கு தமிழர்களுக்கு உறுதுணையாக இருந்தால் நல்லது.

நாஞ்சில் சம்பத் பேசியதாவது:

அனைவரையும் கலையால் வணங்குகிறேன் தமிழால் ஆராதிக்கிறேன். எனக்கு இப்படியொரு வாய்ப்பு எப்படி கிடைத்தது என்று நேற்று முதலே நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். நண்பர் சரவனன் சுப்பையா திருவள்ளூரில் நடந்த பட்டிமன்றத்தில் எனக்கு எதிர் திசையில் பேசினார் அன்றைக்கு அவர் மீது நான் கடும் கோபத்திலிருந்தேன். முரணான தகவலாக பேசுகிறாரே என்று எண்ணினேன். ஒருநாள் சந்திப்பில் அவர் உள்ளத்தில் நான் விழுந்திருக்கிறேன். நேற்று என்னை அழைத்த மாத்திரத்தில் இந்த விழாவில் கலந்துகொள்ள இசைவு கொடுத்தேன்.

அதேபோல் பி டி செல்வகுமார் கலப்பை அமைப்பு மூலம் பல குடும்பங்களுக்கு உதவியவர். மீண்டும் என்ற திரைப்படம் சரவணன் சுப்பையா இயக்கத்தில் வரவிருக்கிறது. அனகாவின் நடிப்பும், கதிரவன் நடிப்பும் கண்டு என் உடம்பு சில்லிட்டுப் போனது, என்னுடைய எலும்பையே உருக்கி விட்டது. மீண்டும் படத்தின் கதை அமைப்பு சமூக பிரக்ஞ்னை, சமகால சமூகத்தில் நிகழ்கின்ற சம்பவத்தை புள்ளியாக வைத்துக்கொண்டு அதில் கோலமாக விரித்து தந்திருக்கின்றன் சரவணன் சுப்பையா. ஒரு மிகப் பெரிய கலைஞனாக மீண்டும் படம் மூலம் அவதாரம் எடுத்திருக்கிறார். சமூக நீதியை நோக்கி சினிமா நகர்ந்து வருகிறது என்று இன்றைக்கு தமிழ் இந்துவில் செய்திக் கட்டுரை படித்தேன். நானும் இன்றைக்கு சினிமாவை நோக்கி வந்துக்கொண்டிருக்கிறேன். எல் கேஜி படத்தில் நான் நடித்தபிறகு சினிமாவால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை தெரிந்துக்கொண்டேன். மீண்டும் படம் பெரிய வெற்றி படமாக அமையும்.

ரங்கராஜ் பாண்டே பேசியதாவது:

திரையுலகம் எப்போதுமே மிகப்பெரிய ரீச்சை கொண்டதாக இருக்கிறது. 23 ஆண்டுகள் பத்திரிகை மீடியாவில் கிடைத்தைவிட நேர்கொண்ட பார்வை படத்தில் அஜீத்துடன் நடித்த பிறகு பெரிய வரவேற்பு கிடைத்தது.

சினிமா அவ்வளவு பெரிய வலிமை கொண்டது. ரஜினி அரசியலுக்கு வந்தால் தங்கள் கட்சி என்னவாகும் என்று பலர் கவலைப்பட்டதற்கு காரணம் திரையுலகம் அவரை பிரபலப்படுத்தி வைத்திருந்தது.

அப்படிப்பட்ட வீரியம் திரையுலகுக்கு இருக்கிறது. அதனாலேயே சமூக கருத்தை வலியுறுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. இன்றைக்கு சினிமா எடுப்பது சவாலாகிவிட்டது. சினிமாக்காரர்கள் எல்லாம் சமூக விஷயத்திலும் தலையிட ஆரபித்து விட்டார்கள்..

சினிமாவைப் பற்றி அரசியல்வாதிகள் நிறைய விமர்சனம் செய்துக் கொண்டிருந்தார்கள். இப்போது அரசியலுக்கு உள்ளே இவர்கள் நேரடியாக வருவதால் ஒரு கேரக்டருக்கு பெயர் வைப்பதற்கு கூட நிறைய யோசிக்க வேண்டி உள்ளது. மீண்டும் பட டிரைலர் பார்த்தபோது இது த்ரில்லர் படமா, சமூக பிரச்னையை பேசும் படமா என்று யோசித்தேன். சவாலான விஷயத்தை இதில் சரவணன் சுப்பையா கையாண்டிருக்கிறார். இது சரவண சுப்பையாவுக்கு ஒரு கம்பேக் ஆக, மிகப்பெரிய உயரத்துக்கு இட்டுச்செல்லும் மைல்கல்லாக இருக்கும். இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும்.

இயக்குனர் ரவிமரியா பேசியதாவது:

திண்டுக்கல் லியோனி, நாஞ்சில் சம்பத் ஆகியோரின் பேச்சை கேட்க வந்திருக்கிறேன். அதேபோல் ரங்கராஜ் பாண்டே ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் பிறந்தவர் என்று சொன்னார். பி டி செல்வகுமார் இன்றைக்கு ஆபத் பாண்டவராக இருக்கிறார்.. ஜெயில் படம் வெளிவரமுடியாத சூழல் இருந்தபோது அதை வெளிக்கொண்டு வர எல்லா உழைப்பும் தந்தவர். மீண்டும் பட ஹீரோவை பற்றி சொல்லி ஆக வேண்டும் கிட்டதட்ட முழுநிர்வாணமாக இந்த படத்தில் கதிரவன் நடித்திருக்கிறார். டிரைல்ரை பார்க்கும்போது கண்கலங்கிவிட்டேன்.

அவருக்கு பெரிய இடம் சினிமாவில் காத்திருக்கிறது. அதேபோல் படத்தின் ஒளிப்பதிவு திருப்பதி லட்டு மாதிரி இருக்கிறது. தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களெல்லாம் மீண்டும் படத்தை பார்த்து இயக்குனர் சரவணன் சுபையாவை பாராட்டிவிட்டார்கள். இந்த படத்தில் இரண்டு அப்பாக்கள் ஒரு அம்மா என்ற கதை அம்சம் கொண்டது. மீண்டும் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படமாக இருக்கும்.

இவ்வாறு பேசினார்கள்.

Celebrities wishes to citizen director’s Meendum movie

09-09-2022-ல் இந்திய சினிமா வரலாற்றில் எழுதப்படவுள்ள ஓர் அத்தியாயம்

09-09-2022-ல் இந்திய சினிமா வரலாற்றில் எழுதப்படவுள்ள ஓர் அத்தியாயம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரம்மாஸ்திரம் படத்தின் தென்னிந்திய பதிப்பை இயக்குநர் SS ராஜமௌலி, அமிதாப் பச்சன், கரண் ஜோஹர், நாகார்ஜுனா, ரன்பீர் கபூர், ஆலியா பட், அயன் முகர்ஜி மற்றும் Fox Star Studios உடன் இணைந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் வெளியிடுகிறார்.

SS.ராஜமௌலியின் பாகுபலி படத்தை இயக்குநர் கரண் ஜோஹர் வழங்கினார்.

இன்று, SS.ராஜமௌலி, அயன் முகர்ஜியின் பிரம்மாண்டமான படைப்பான “பிரம்மாஸ்திரம்” படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளில் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

சமீபத்தில் படத்தின மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல ஒரு வரவேற்பை பெற்றது.

அடுத்தாண்டு செப்டம்பர் 9, 2022 அன்று இந்திய சினிமா வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்படவுள்ளது. மேலும் இந்த பிரம்மாண்டமான மற்றும் பெரிய பட்ஜெட்டில் உருவான பிரம்மாஸ்திரம் திரைப்படத்தை உலகின் பல்வேறு பகுதிகளில் வெளியிடுவதற்காக இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைய உள்ளனர்.

மூன்று பாகமாக வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிக்கின்றனர். அவர்களுடன் நாகார்ஜுனா அக்கினேனி, மௌனி ராய் மற்றும் அமிதாப்பச்சன் என உச்ச நட்சத்திரங்கள் அனைவரும் முதல் முறையாக இணைகின்றனர், இவர்கள் அனைவரும் படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் தற்போது இயக்குநர் SS.ராஜமௌலி இணைந்தது, இதன் பெருமையை மேலும் அதிகரித்துள்ளது. பாகுபலி போன்ற திரைப்படத் தொடரின் மூலம் உலகளவில் பிரபலமான ஒரு இயக்குனர் இந்த படத்தை வெளியிடுவது கூடுதல் சிறப்பு.

இது குறித்து SS.ராஜமௌலி கூறுகையில்,

பிரம்மாஸ்திரம் திரைப்படத்தை நான்கு தென்மொழிகளிலும் பார்வையாளர்களுக்கு வழங்குவதில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன். பிரம்மாஸ்திரம் படத்தின் கரு தனித்துவமானது,

இது கதை மற்றும் காட்சியிலும் பிரதிபலிக்கிறது. பல வழிகளில், இது பாகுபலியின் உழைப்பையும், காதலையும் எனக்கு நினைவூட்டுகிறது. நான் பாகுபலிக்கு செய்ததைப் போலவே, பிரம்மாஸ்திரம் திரைப்படத்தை உருவாக்குவதில் அயன் அதிக நேரத்தை செலவிடுவதையும், அதைச் சரியாகப் உருவாக்குவதில் காட்டும் பொறுமையையும் நான் பார்த்துகொண்டிருக்கிறேன்.

இந்தத் திரைப்படம் பழங்கால இந்தியப் பண்பாட்டின் கருப்பொருளை, நவீன தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன VFX உடன் இணைத்து உருவாக்கபட்டுள்ளது.

எனது திரைப்பயணத்தில், நான் நினைத்து மகிழக்கூடிய ஒன்றாக அயனின் சினிமா இருக்கும். அயனின் பார்வை இந்திய சினிமாவில் ஒரு புதிய அத்தியாயமாக இருக்கும், மேலும் பாகுபலிக்குப் பிறகு Dharma Productions உடன் மீண்டும் இணைந்திருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

கரண் நல்ல படங்களை கண்டுணர்வதில் ஆழ்ந்த புரிதலும், உணர்வும் கொண்டவர், அவருடன் மீண்டும் சேர்ந்து, Fox Star Studios உடன் இணைந்து இந்தப் படத்தை வழங்குவதில் பெருமைப்படுகிறேன்.

நடிகர் நாகார்ஜுனா அக்கினேனி கூறும்போது…

இயக்குநர் அயன் மற்றும் பிரம்மாஸ்திரம் திறமையான குழுவினருடன் இணைந்து பணியாற்றியது மிக அருமையான அனுபவம். பண்டைய இந்தியா மற்றும் நவீன இந்தியா இரண்டின் கலவையாக உருவான இந்தப்படைப்பு என்னை மிகவும் கவர்ந்தது.

மேலும் இது போன்ற ஒரு மிகப்பிரமாண்ட திரைப்படத்தில் ஒரு பகுதியாக நானும் இருப்பது உற்சாகமாக இருக்கிறது. இயக்குநர் திரு.ராஜமௌலி இந்த படத்தில் இணைந்திருப்பது பெருமையான விசயம். மேலும் 2022 ஆம் ஆண்டில் எனது ரசிகர்களுக்கு இப்படத்தை வழங்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இயக்குநர் கரண் ஜோஹர் கூறியதாவது…
“பிரம்மாஸ்திரம் மிகப்பெரும் ஆச்சர்யங்கள் தரும், வியத்தகு படைப்பாகும். இந்த தொலைநோக்கு திரைப்படத்தில் நானும் பாங்கேற்றிருப்பது பெருமை. பிரம்மாஸ்திரம் என்பது அயனின் பார்வை, அவர் வளர்த்த குழந்தை.

இப்படம் மிகப்பிரமாண்டமானது உலகளாவிய ரசிகர்களை சென்றடையும் தகுதி கொண்டது. பாகுபலி திரைப்படம் பல சாதனைகளை முறியடித்தது மட்டுமல்லாமல், இட மற்றும் மொழி எல்லைகளைக் கடந்து நமது முதல் உண்மையான தேசியத் திரைப்படமாக உயர்ந்தது, அதே போலான உயரத்தை இந்த பிரம்மாஸ்திரம் படமும் அடைய, இப்படத்தில் இணைவதில் இயக்குநர் ராஜமௌலியை விட சிறந்தவர்கள் யாரும் இல்லை! இது என் மனதிற்கு பெரு மகிழ்ச்சியை அளித்துள்ளது, அவர் இப்போது இந்த படத்தின் ஒரு பகுதியாக இருக்கிறார் என்பது என் நம்பிக்கையை பலப்படுத்துகிறது.

இயக்குநர் அயன் முகர்ஜி கூறுகையில்…

“பிரம்மாஸ்திரம்” நான் பல ஆண்டுகளாக கண்டு வரும் கனவு. இது ஒரு மூன்று பாகங்கள் அடங்கிய தொகுப்பு. இதுவரையிலான பயணம் அத்தனை எளிதானதாக இல்லை. இந்தப் படத்திற்காக நான் அனைத்தையும் தந்திருக்கிறேன். நான் தொடர்ந்து இதில் என்னால் முடிந்த பணியினை செய்து கொண்டே இருப்பேன். எஸ்.எஸ்.ராஜமௌலி சார் போன்ற ஒரு அற்புதமான வழிகாட்டி இந்தப்படத்திற்குள் வருவதை நான் பாக்கியமாக உணர்கிறேன். அவரது பாகுபலி திரைப்படம் தான் எனது கனவை தைரியமாக தொடர எனக்கு நம்பிக்கை அளித்தது. மேலும் அவரது பெயர் பிரம்மாஸ்திரம் படத்துடன் இணைத்திருப்பது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும்.

பிரம்மாஸ்திரம் படம் குறித்து…

பிரம்மாஸ்திரம் – டிரையாலஜி, 3-பகுதிகள் கொண்ட திரைப்படமாகும். இது இந்தியாவின் முதல் அசல் பிரபஞ்சத்தின் தொடக்கமாகும் – அஸ்தராவர்ஸ் அறிமுகப்படுத்தும். இது ஒரு புதிய சினிமா அனுபவத்தை தரும், இந்திய புராணங்களில் ஆழமாக வேரூன்றிய கருத்துக்கள் மற்றும் கதைகளால் ஈர்க்கப்பட்டு, அந்த பின்னணியில் நவீன உலகில் கதை அமைக்கப்பட்டுள்ளது.

பேண்டஸி சாகசம், நல்லது மற்றும் தீமை, காதல் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் காவியக் கதை, இவை அனைத்தும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்தியாவில் இதுவரை திரையில் பார்த்திராத வகையில் இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

Fox Star Studios, Dharma Productions, Prime Focus மற்றும் Starlight Pictures இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், மௌனி ராய் மற்றும் நாகார்ஜுனா அக்கினேனி ஆகியோரின் நட்சத்திரக் கூட்டணியின் நடிப்பில், இந்த பிரமாண்ட இந்திய படைப்பு, இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 இந்திய மொழிகளில் 09.09.2022 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

Ranbir Kapoor and Alia Bhat’s Brahmastra gets a release date

‘ஒபாமா’ படத்தை ஒப்புக் கொண்ட விஜய்சேதுபதி..; நானி பாலாவின் ப்ளாஷ்பேக்

‘ஒபாமா’ படத்தை ஒப்புக் கொண்ட விஜய்சேதுபதி..; நானி பாலாவின் ப்ளாஷ்பேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

J.B.J பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ஜெயசீலன் தயாரித்துள்ள படம் ” ஒபாமா “

இந்த படத்தில் பிரித்வி பாண்டியராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக பூர்நிஷா நடித்துள்ளார். மற்றும் ஜனகராஜ், கே.எஸ்.ரவிக்குமார், இயக்குனர் விக்ரமன், ரமேஷ் கண்ணா, தயாரிப்பாளர் T.சிவா,தளபதி தினேஷ், கோதண்டம்,கயல் தேவராஜ், செம்புலி ஜெகன் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு – தினேஷ் ஸ்ரீனிவாஸ்
இசை – ஸ்ரீகாந்த் தேவா
பாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து
எடிட்டிங் – B.லெனின்
நடனம் – சேகர்
ஸ்டண்ட் – தபதி தினேஷ்
மக்கள் தொடர்பு – மௌனம் ரவி, மணவை புவன்
தயாரிப்பு – ஜெயசீலன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நானி பாலா.

படம் பற்றி இயக்குனர் நானி பாலா கூறியதாவது..

இன்றைய காலகட்டத்தில் நடந்து கொண்டிருக்கும் பல சமூகம் சார்ந்த கருத்துக்களை காதல், காமெடி கலந்து ஜனரஞ்சகமாக உருவாக்கியுள்ளோம்.
இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஒரு முன்னணி நடிகர் நடிக்க உறுதி அளித்து இருந்தார்.

ஆனால் அவர் ஷூட்டிங் நேரத்தில் நடிக்க மறுத்துவிட்டார். அதனால் நான் ரொம்பவும் அப்செட் ஆகிவிட்டேன் அதை பார்த்த நடிகர் ஜனகராஜ் அவர்கள் என்னிடம் வந்து இரு குட்டி நான் ஒரு முயற்சி செய்கிறேன் என்றார். பின் அவரு 96 படத்தின் டைரக்டர் பிரேம் அவர்களிடம் இந்த மாதிரியான படம் விஜய்சேதுபதி அவர்கள் நடிப்பாரா என்று கேட்க, அவரும் உங்களுக்காக கேட்டு பார்க்கறேன் என்றார்!

அதை கேட்டு அவரும் அண்ணனுக்காக நடித்து கொடுக்கலாம் என்று சொல்லிவிட்டார். இதை அவர் சொன்ன போது என்னால் நம்ப முடியலே! அவரை கேட்டால் நடிப்பார் என்று எப்படி தோன்றியது என்று ஜனகராஜிடம் கேட்டேன்? அதற்கு ஜனகராஜ் அவரோடு பழகிய போது தெரிந்தது என்றார். அது சீனியர் ஒருவருக்கான மரியாதை, தொழிலுக்கு காட்டும் நன்றி தான் அதற்கு காரணம் என்றார்.

உடனே நான் அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை எழுதி 96 படத்தின் இயக்குனருக்கு வாட்ஸ் அப் செய்ய, அதை அவர் விஜய் சேதுபதி சாருக்கு அனுப்ப அதை படித்த அவர் என் போன் நம்பர் வாங்கி என்னிடம் Brother படிச்சு பார்த்தேன் நல்லாருக்கு நேரில் டிஸ்கஷன் செய்து எடுப்போம் என்றார்.

பிறகு அவர் வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் காட்சியை அவரோடு நேரில் டிஸ்கஷன் செய்தேன், பிறகு நடித்து கொடுத்தார். மிகவும் சந்தோஷமாக இருந்தது.

நான் ஆண்பாவம் படம் முதல் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறேன் பலரையும் கண்டு இருக்கிறேன். ஆனால் மக்கள் செல்வன் பட்டத்திற்கு ஏற்ற மனிதர் தான் விஜய் சேதுபதி.

படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து விட்டது. விரைவில் இந்த ஒபாமாவின் ஆட்டத்தை திரையில் காணலாம் என்கிறார் இயக்குனர் நானி பாலா.

Vijay Sethupathi plays cameo role in Obama

விஜயகாந்த் Vs விஜய் போட்டிக்கு தீர்ப்பு வழங்கிய ‘திண்டுக்கல்’ லியோனி

விஜயகாந்த் Vs விஜய் போட்டிக்கு தீர்ப்பு வழங்கிய ‘திண்டுக்கல்’ லியோனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹீரோ சினிமாஸ். சி.மணிகண்டன் வழங்க கதிரவன் கதாநாயகனாக நடிக்கும் படம் மீண்டும். இப்படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி சரவணன் சுப்பையா இயக்கி உள்ளார். இவர் அஜீத்குமார் நடிப்பில் பரபரப்பாக பேசப்பட்ட வெற்றிப்படமான சிட்டிசன் படத்தை இயக்கியவர்.

மீண்டும் படத்தில் கதிரவன் ஜோடியாக அனகா நடித்திருக்கிறார். இவர் டிக்கிலோனா, நட்பே துணை படங்களில் நடித்தவர். பிரணவ் ராயன், அனுராதா, துரை சுதாகர், சுபா பாண்டியன், அபிதா செட்டி, யார் கண்ணன், எஸ்.எஸ்.ஸ்டான்லி, சுப்ரமணியம் சிவா, தர்ஷினி, இந்துமதி, மணிகண்டன், கேபிள் சங்கர், ஆதர்ஷ், மோனிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்,

கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதி உள்ளார். நரேன் பாலகுமாரன் இசை அமைத்திருக்கிறார். சீனிவாசன் தேவாம்சம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜா முகமது எடிட்டிங் செய்திருக்கிறார். சூப்பர் சுப்பராயன் சண்டை பயிற்சி அளித்திருக்கிறார். மணிமொழியன் ராமதுரை அரங்கம் அமைத்திருக்கிறார்.

நடனத்தை ஐ ராதிகா அமைத்துள்ளார். பி.ஆர். ஒ டைமண்ட் பாபு. விஜய் நடித்த புலி படத்தை தயாரித்த பி.டி.செல்வகுமார் மீண்டும் படத்தை வர்த்தகம் செய்துள்ளார்.. தமிழகமெங்கும், காமதேனு பிலிம்ஸ் சார்பாக பாலாஜி விநியோகிக்கிறார்.

இரண்டு தந்தை, ஒரு பெண் ஒரு குழந்தை என்ற மாறுபட்ட கதையம்சமுள்ள இப்படத்தில் கடற்படையினரிடம் சிக்கி தமிழ் மீனவர்கள்படும் சித்ரவதையை தத்ரூபமாக்கி படமாக்கி உள்ளனர். இந்தியா மீது மறைமுக தாக்குதல் நடத்தும் இலங்கை, சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகளின் விஞ்ஞான ரீதியான் தாக்குதலையும் இப்படத்தில் சொல்லியிருக்கின்றனர்.

பட கதாநாயகன் கதிரவன் இப்படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளில் உயிரை பணயம் வைத்து நடித்துள்ளார். இதற்காக ஆறு நாட்கள் நிர்வாணமாக சித்ரவதை செய்யப்படும் காட்சிகளில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது,

மீண்டும் படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் பாடல்கள் முன்னோட்டம் நேற்று சென்னை பிரசாத் லேபில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனி, பேச்சாளர் நாஞ்சில் சம்பத், பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, திரைப்பட இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பேரரசு முன்னிலை வகித்து படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டனர்.

விழாவில் இயக்குனர் பேரரசு பேசியதாவது:

இங்கு வந்திருக்கும் திண்டுகல் லியோனிக்கும் நாஞ்சில் சம்பத்துக்கும் எனக்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது. நான் ஊர் பெயரில் படம் எடுப்பவன் அதேபோல் லியோனியும், சம்பத் அய்யாவும் ஊர் பெயரை தன் பெயருடன் வைத்திருக்கிறார் கள். சினிமாவுக்கு பயங்கர சக்தி இருக்கிறது. யாரெல்லாம் சினிமாவை விமர்சித்தார்களோ அவர்களையெல்லாம் சினிமா அரவணைத்துவிட்டத்து. சாலமன் பாப்பையா, ராஜா, திண்டுக்கல் லியோனி, பாண்டே அனைவரையும் சினிமா தனக்குள் இழுத்துவிட்டது இவர்கள் எல்லாம் சினிமாவில் நடித்துவிட்டார்கள்.

மீண்டும் திரைப்பட இயக்குனர் சரவணன் சுப்பையா அவரை சுற்றி மிகபெரிய நட்பு வட்டமிருக்கும் திறமையான இயக்குனர். மீண்டும் படம் எப்போதோ வெளிவரவேண்டியது. என்ன காரணமோ தாமதமாகி விட்டது. இப்போது சினிமா சிக்கலிலிருக்கிறது முன்பு ரிலீஸுக்கு முன் பிர்சனை வரும் இப்போது ரிலீஸுக்கு பிறகு பிரச்னை வருகிறது. ஒரே குழப்பமாக் இருக்கிறது. 500, 600 படம் ரிலீஸாகாமல் இருக்கிறது.

இதற்கெல்லாம் தயாரிப்பாளர்கள் சங்கம் தான் தீர்வு காண வேண்டும். சினிமாவை வைத்து யார் யாரோ சம்பாதிக்கிறார்கள் ஆனால் சினிமாவுக்கு முதல்போட்டவர்கள் சம்பாதிக்க முடிய வில்லை. மீண்டும் பட டிரைலர் சூப்பராக இருக்கிறது. தரமாக இருக்கிறது. இந்த படம் மிக பெரிய வெற்றி அடையும்.

தயாரிப்பாளர் பி டி.செல்வகுமார்: பேசியதாவது:

சிறிய படங்கள் வெளியவதற்கு நிறைய சிரமம், கஷ்டப்பட வேண்டி உள்ளது, பெரிய படங்களுக்கு பிரச்னை இல்லை. சிட்டிசன் படம் மூலமாக அஜீத்துக்கு திரும்பி பார்க்கிற படத்தை தந்தவர் சரவணன் சுப்பையா. அவர் இயக்கி இருக்கும் படம் மீண்டும் . சிட்டிசன் படத்தில் சரவணன் சுப்பையா எப்படிபேசப்பட்டாரோ அதுபோல் மீண்டும் படம் மூலம் பேசப்படுவார். கதிரவன் ஹீரோ நிறைய படம் எடுக்கலாம் என்ற எண்ணம் வைத்திருக்கிறார். மீண்டும் படத்துக்கு ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

திண்டுக்கல் லியோனி பேசியதாவது:

ஒரு திரைப்படத்தின் வெளியீட்டு விழா, எல்லோருக்கும் பழக்கமான மேடை. இதில் சம்பந்தமில்லாமல் ஆட் அவுட்டாக உட்கார்ந்திருப்பது நானும் நாஞ்சில் சம்பத்தும்தான். இது எனது 2வது மேடை. முதல் மேடை போஸ் வெங்கட் இயக்கிய கன்னிமாடம் படம். சரவணன் சுப்பையா இயக்கத்தில் வரும் மீண்டும் எனது இரண்டாவது மேடை.

சினிமாவில் நடிப்பது எவ்வளவு கஷ்டம் என்பது கங்கா கவுரி படத்தில் நான் நடித்தபோது எனக்கு தெரிந்தது. வேதனை படணும் என்று இயக்குனர் சொன்னார். அந்த ஒரு காட்சியில் நான் நடிப்பதற்கு மூன்றரை மணி நேரம் ஆனது. அன்றைக்கு தான் சினிமாவை விட்டேன். தண்டல் பாண்டியன் வேடத்தில் அதில் நடித்தேன். அதற்கு பிறகு தற்போது ஆலம்பனா படத்தில் இப்போது நடித்திருக்கிறேன்.

சரவணன் சுப்பையா இயக்கிய சிட்டிசன் படத்தில் அஜீத்துக்கு அப்படியொரு கிளைமாக்ஸ் காட்சி வைத்திருப்பார். மாபெரும் உலக நடிகராக அந்த படம் அஜீத்தை மாற்றும் அளவுக்கு சரவணன் சுப்பையா அமைத்திருப்பார். அவருக்கு இப்படம் சிட்டிசன் போல் மீண்டும் ஒரு வெற்றி படமாக அமையும். இப்பட கதாநாயகன் கதிரவன் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்.

குடும்ப கதையம்சம், வெளிநாட்டு தரத்துடன் இணைந்து படத்தை கொடுத்திருக்கிறார் சரவணன் சுப்பையா. இசையும் மிக அற்புதமாக தந்திருக்கிறார் இசை அமைப்பாளர். .கலைப் படைப்பு நம் வாழ்க்கையில் ஒரு நிலையாவது மாற்ற வேண்டும்.

அதுதான் சிறந்த கலைப் படைப்பு. அதுபோன்ற படத்தை இயக்குனர் சரவணன் சுப்பையா மீண்டும் மீண்டும் தரவேண்டும் இப்படம் மக்கள் மீண்டும் பார்க்கும் வெற்றி படமாக அமையும். என்னை முதன்முதல் சினிமா மேடைக்கு அழைத்து வந்தவர் எஸ் ஏ.சந்திரசேகர். அவரால்தான் சென்னையை நான் முதன்முதலாக பார்த்தேன்.

வெற்றிக்கு காரணம் காதலா? வீரமா? என்ற தலைப்பில் அந்த படத்திற்காக ஒரு பட்டிமன்றம் நடத்த சொன்னார் எஸ்ஏசி. அதே சமயம் வீரம் தலைப்பு ஜெயித்தால் விஜய்காந்த் வெற்றி. ஆனால் என் மகன் விஜய் கோபித்துக் கொள்வார்.

அதுபோல காதல் தலைப்பு ஜெயித்தால் விஜயகாந்த் கோபித்துக் கொள்வார் என சொன்னார். நான் பாத்துகிறேன் விடுங்க என்று எஸ்ஏசியிடம் சொன்னேன்.

இறுதியாக பட்டிமன்ற போட்டி முடிவில் தமிழர்களின் வெற்றிக்கு இரண்டுமே காரணம். காதலும் வீரமும் தேவை என தீர்ப்பு வழங்கினேன்.” என்றார் லியோனி.

ஹீரோ கதிரவன் பேசியதாவது:

மீண்டும் படத்துக்காகவும் எனது கம்பெனிக்காகவும் நேரம் ஒதுக்கி இங்கு வந்த அனைவருக்கும் எனது நன்றி திண்டுக்கல் லியோனி, நாஞ்சில் சம்பத், ரங்கராஜ் பாண்டே, இயக்குனர் எஸ் ஏ சி சார் இவர்கள் எல்லாம் இங்கு வந்தது எனக்கு பெருமையாக இருக்கிரது. இவர்கள் எல்லோருக்கும் நான் ரசிகன் ஒரு ரசிகன் விழாவுக்கு நீங்கள் எல்லோரும் வாழ்த்த வந்திருக்கிறீர்கள். அது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

இயக்குனர் சரவணன் சுப்பையா பேசியதாவது:

இந்த இடத்துக்கு என்னை அழைத்து வந்த தயாரிப்பாளர் மணிகண்டனுக்கு நன்றி அவர் இல்லாவிட்டால் இப்படியொரு வாழ்க்கை கிடைத்திருக்காது. மிகப்பெரிய அர்ப்பணிப்பை நடிப்பில் அவர் கொடுத்திருக்கிறார். எனது இரண்டு கண்களாக ஒளிப்பதிவாளர் மற்றும் இசைப்பாளர். அவ்வளவு உழைப்பு கொடுத்திருக்கிறார்கள். பின்னணி இசை ஆங்கில பட பாணியில் இருந்தாலும் முழுக்க முழுக்க இந்திய இசை தான் அமைத்திருக்கிறார்.

இந்த படம் வெளியிட பல இடத்தில் பேசி பார்த்தோம் கைகொடுக்க வில்லை இக்கட்டான இந்த சூழலில்தான் பிடி செல்வகுமார் கைகொடுத்தார். அவர் இல்லாவிட்டால் இந்த படம் வருமா என்பது தெரியாது.

இந்த விழாவுக்கு பாண்டே வந்திருக்கிறார். நான், நாஞ்சில் சம்பத்துடன் பட்டிமன்றத்தில் மோதியது உண்மை புறம்பான கருத்தை அப்போது சொல்லவில்லை. அவர் நம்பரை வாங்கி வைத்திருந்தேன். அவரை அழைத்தேன் அவரும் உடனே வருவதாக சொன்னார். திண்டுக்கல் லியோனி எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருப்பவர். நீ சிறந்த சிந்தனையாளன். இன்னொரு சிட்டிசன் கொடு என்றார். சரி என்றேன் . மிகவும் எளிமையானவர். அதேபோல் எஸ் ஏ சி,, பேரரசு, ரவிமரியா வந்திருக்கிறார்கள். ஸ்டான்லி, கேபிள் சங்கர், சுபா தர்ஷினி, தேன்மொழி இப்படத்தில் நடித்திருக் கிறார்கள். இந்த படத்தில் அற்புதமான பாடல் வரிகளை வைரமுத்து எழுதி என்னை ஊக்குவித்தார். முக்கியமாக ஒத்துழைப்பு கொடுத்த டைமண்ட் பாபு அதேபோல் இடையில் ஒரு நிகச்சிக்கு எற்படு செய்துகொடுத்த விஜய முரளி கெஸ்ட் அப்பியரன்ஸ் வந்துபோனார் அவருக்கும் எனது நன்றி . ஆனால் டைமண்ட் பாபுவோட உதவி அளப்பரியது. அவருடன் பிடி செல்வகுமார் அசோசியேட் செய்து சிறப்பான விழாவாக இதை மாற்றிவிட்டார்கள். இந்த படத்தை பார்த்து என்னை கைதூக்கி விடுங்கள் வெற்றி பெற்றால் மிக நல்ல படங்களை தொடர்ந்து தருவேன் .

இவ்வாறு பேசினார்கள்.

Leone verdict for Vijay Vs Vijayakanth event

ஒலிப்பதிவுக்காக ஒரு பயணம்..; விருதுகளை குவித்த ‘சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’

ஒலிப்பதிவுக்காக ஒரு பயணம்..; விருதுகளை குவித்த ‘சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நபீஹா மூவீஸ் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் நுபாயஸ் ரகுமான் தயாரித்துள்ள படத்திற்கு கவித்துவமாக ” சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை ” என்று பெயர் வைத்துள்ளனர்.

சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை கேட்கும் நாயகனாக ருத்ரா நடித்துள்ளார்.

சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை தரும் நாயகியாக சுபிக்‌ஷா நடித்துள்ளார். மற்றும் சுபலக்ஷ்மி, ராட்சசன் வினோத் சாகர், கணபதி, பீட்டர் ஹார்ட்லி, மகேஷ் பத்மநாபன், சுனந்தா ஆகியோர் நடித்துள்ளனர்

ஒளிப்பதிவு – பிஜு விஸ்வநாத்
இசை – ராஜேஷ் அப்புகுட்டன் – ருத்ரா
பாடல்கள் – கட்டளை ஜெயா
எடிட்டிங். – சுதாகர்
கலை இயக்கம் – மகேஷ் ஸ்ரீதர்
நடனம் – ராபர்ட், ரேகா
ஸ்டண்ட் – விஜய்
வசனம் மற்றும் இணை இயக்கம் – L.கணபதி
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு மேற்பார்வை – அன்பு
தயாரிப்பு – நுபாயஸ் ரகுமான்
THREE FACE Creations Release
கதை, திரைக்கதை, இயக்கம் – மகேஷ் பத்மநாபன்

படம் பற்றி நாயகன் ருத்ரா கூறியதாவது…

நாயகன் கதிர் (ருத்ரா ) ஆடியோ கிராபியில் கோல்ட் மெடலிஸ்ட், குடும்ப சூழ்நிலை காரணமாக தன் சொந்த ஊரில் நண்பனின் ஸ்டுடியோவில் வேலை பார்க்கிறான். சென்னையில் ரேடியோ ஜாக்கியாக இருக்கும் ஸ்ருதி ( சுபிக்‌ஷா ) ஒரு ஆடியோ டாக்குமெண்டரிக்காக வனப்பகுதிக்கு வர அவளுக்கு உதவி செய்ய, கதிர் நியமிக்கப்படுகிறான்.

ஒலிப்பதிவுக்காக அவர்கள் மேற்கொள்ளும் பயணத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.
அவள் அவனது திறமையை அங்கீகரிக்க மறுக்கிறாள். ஆனால் அவனோ அதை பொருட்படுத்தாமல் அவளுக்கு ஏற்படும் இன்னல்களை சமாளித்து தன் வேலையில் கவனமாக இருந்து பணியை முடித்துக்கொடுக்கிறான். அந்த டாகுமெண்ட்ரி பல விருதுகளை அவளுக்கு பெற்றுத்தர அதற்கு தகுதியானவன் கதிர் என்பதை உணர்கிறாள்.

தொடர்ந்து, BBC க்காக ஆடியோ டாக்குமெண்ட்ரி செய்யவரும் டேவிட் ஸ்ருதியை நாட அவள் தன் பெயரை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக கதிரை சாமர்த்தியமாக பேசி உதவிக்கு அழைக்கிறாள். அவளின் ஆசை வார்த்தைகளை உண்மை என்று நம்பும் கதிர் அவளிடம் மனதை பறிகொடுக்கிறான்.

ஸ்ருதி ஒரு சந்தர்ப்பவாதி, கதிரை வைத்து தன் காரியத்தை சாதித்துக்கொள்கிறாள் என்பதை உணர்ந்த டேவிட் கதிரை தனியாக சந்தித்து அவளைப்பற்றிய உண்மைகளை எடுத்துரைத்து இனியும் அவளிடம் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கிறார். ஸ்ருதியின் சுய ரூபம் என்ன, கதிரின் காதல் என்னவாயிற்று என்பதற்கு பதில் திரையில் கிடைக்கும் என்கிறார் நாயகன் ருத்ரா.

கதையின் நாயகன் அறிமுகமாகும் காட்சியில் தேனீக்களின் ஓசையை பதிவிடுவதற்காக சுமார் 200 உயர மரத்தில் எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் எடுத்துக்கொள்ளாமல், டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார்.. மயிர் கூச்செரியும் அச்சம்பவம் திரையில் பார்ப்பதற்கு பிரம்மிப்பாக இருக்கும்.

படத்தின் ஒரு முக்கியமான காட்சி அருவியின் அருகே படமாக்கப்பட்டது.. கதானாயகன் ருத்ராவுடன் நாயகி சுபிக்‌ஷா பங்குகொள்ளும் காட்சி, அருவியின் சத்தத்தை பதிவு செய்ய நீர் பாய்ந்தோடும் பாறைகளில் ரிக்கார்டிங் சாதனங்களுடன் செல்லும் போது வழுக்கி விழுந்து கதானாயகனுக்கு இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டது, அதனால் ஏற்பட்ட வலியை பொருட்படுத்தாமல் காட்சி செவ்வனே நிறைவேற தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் தந்த ருத்ராவின் ஈடுபாட்டை பாராட்டியே ஆக வேண்டும்.

வாகனங்கள் செல்ல முடியாத வனப்பகுதியினுள் படப்பிடிப்பு குழுவினர் ஜிம்மி ஜிப் போன்ற மிக கனம் வாய்ந்த உபகரணங்களை தோளில் சுமந்து காடு மலை மேடுகள் கடந்து விலங்கினங்கள், ஊர்வன வற்றின் இடையூரையும் பொருட்படுத்தாது தங்களின் முழு ஒத்துழைப்பை குடுத்தது படத்தின் மேலும் கதையின் மேலும் அவர்களுக்கு இருந்த ஈடுபாட்டை தெளிவாக காட்டுகிறது.

வருகின்ற 24 ம் தேதி THREE FACE Creations பட நிறுவனம் இந்த படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார்கள்.

” சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை ” படம் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு 6 விருதுகளை அள்ளியிருக்கிறது.

1.Goa international Film competition

Best South Indian movie
Best Actor

2. 7 Colours International film Festival

Best Screen Play
Best Actor

3. Silver Screen International Festival

Best Actor
Best movie in other language..

Sakkarai Thookkala Oru Punnagai movie wins 6 awards at film festival

கமல் இன்ஸ்பிரேசன்.. சிவகார்த்திகேயனுடன் நடிக்கனும்.. – நானி ஆசை

கமல் இன்ஸ்பிரேசன்.. சிவகார்த்திகேயனுடன் நடிக்கனும்.. – நானி ஆசை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கில் முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கும் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் “ஷியாம் சிங்கா ராய்”.

Niharika Entertainment சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி தயாரித்துள்ள இப்படத்தை, இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் இயக்கியுள்ளார்.

மறுபிறவியை மையமாக கொண்டு, இப்படத்தில், நானி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். சாய்பல்லவி, க்ரித்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளனர்.

தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள “ஷியாம் சிங்கா ராய்” படம் டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா, நானி, சமுத்திரகனி, சாய் பல்லவி, தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி உட்பட படக்குழுவினர் கலந்து கொள்ள பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

இவ்விழாவில்….

நடிகர் சமுத்திரகனி பேசியதாவது…

நானி என் தம்பி, ஒரு தமிழ் படத்தோடு அவர் வருவதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு உதவி இயக்குனராக இருந்து படிப்படியாக உயர்ந்து, ஒரு சாம்ராஜ்யத்தை கட்டமைத்திருக்கிறார். அவர் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். நிமிர்ந்து நில் தெலுங்கு பதிப்பு நானி தான் செய்தார், 90 நாள் அவருடைய கடும் உழைப்பை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்.

ஒரு நல்ல விஷயம் கிடைத்தால் கடுமையாக உழைப்பவர் அவர். இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தரும். சாய் பல்லவியின் தங்கையுடன் சமீபத்தில் தந்தையாக ஒரு படத்தி நடித்தேன் அவரும் எனக்கு மகள் போல தான். மிகச்சிறப்பான நடிகையாக வளர்ந்து வருகிறார் அவருக்கு வாழ்த்துக்கள். படம் தமிழிலும் மிகப்பெரிய வெற்றியை பெற வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி பேசியதாவது….

டிசம்பர் 24 தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் ஷியாம் சிங்கா ராய் வெளியாகிறது. எங்கள் குழு சிறந்த படத்தை தந்துள்ளது. அனைவரும் தியேட்டரில் சென்று பாருங்கள், உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் நன்றி.

நடிகை சாய்பல்லவி பேசியதாவது…

எப்போதுமே நான் ஒரு கதையை படிக்கும்போது, மனதில் விஷுவல் தமிழில் தான் தெரியும், தமிழகத்தில் பிறந்து வளர்ந்ததால் அப்படி இருக்கலாம்.

பலதடவை இந்த கதைகள் தமிழில் வந்தால் நன்றாக இருக்கும் என்று தோணும், இந்த படக்கதை படிக்கும்போது, நம் மொழியில் எடுக்கலாமே என தோன்றியது. அப்போது தயாரிப்பாளர் 4 மொழியில் எடுப்பதாக சொன்னார் ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

தமிழ் படம் பார்க்கும் உணர்வை இந்த படம் தரும். இப்படத்தில் தேவதாசி பற்றி தெரிந்து கொள்வதற்காக, சில விஷயங்கள் கேட்டு தெரிந்து கொண்டேன், இயக்குநர் குழுவும் ஆராய்ச்சி செய்துள்ளார்கள், படத்திற்கு தேவையானதை செய்துள்ளோம். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.

நடிகர் நானி பேசியதாவது….

நான் ஆரம்பத்தில் சென்னையில் ஷீட் செய்யும் போது சமுத்திரகனி சாரை பார்க்காமல் போக மாட்டேன். அவர் இப்போது தெலுங்கில் பிஸியான நடிகராகிவிட்டார். எல்லா பேட்டிகளிலும் நான் ஏன் நடிகரானேன் எனக் கேட்கும் போது, கமல் சார் படங்கள் மணி சார் படங்கள் தான் காரணம் என்று சொல்லியிருக்கிறேன்.

தமிழ் படங்களுடன் எனக்கு உணர்வுப்பூர்வமான பந்தம் இருக்கிறது. அவற்றை பார்த்து தான் வளர்ந்திருக்கிறேன். நான் ஈ படத்திற்கு பிறகு இங்கு வரும்போது ரசிகர்கள் மிகப்பெரிய அன்பை தந்திருக்கிறார்கள். ஆனால் அடுத்த சில படங்கள் இங்கே சரியாக போகவில்லை.

எனவே தெலுங்கில் கவனம் செலுத்தி விட்டு, தமிழில் சரியான படத்தை செய்ய காத்திருந்தேன். ஷியாம் சிங்கா ராய் படத்தின் கதை கேட்டபோது தமிழிலும் செய்யலாம் என சொன்னேன். உங்களுக்கு சரியான படத்தை கொண்டு வந்ததாக நினைக்கிறேன்.

ஷியாம் சிங்கா ராய் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் உங்கள் அனைவரையும் வந்து சந்திக்கிறேன். நான் கேரக்டருக்காக உடல் எடை எதுவும் மாற்றவில்லை ஏனெனில் இரண்டு பாத்திரங்களையும் ஒரே நேரத்தில் படமாக்கினோம், படமாக்கும் போது சிறந்த அனுபவமாக இருந்தது.

கதை பெங்காலில் நடக்கும், படம் பார்க்கும் போது உங்களுக்கு கனெக்ட் ஆகும். உங்களுக்கு முழுதாக புரியும். நான் கமல் சார், ரஜினி சாரின் தீவிர ரசிகன். இப்போது ஆந்திராவிலும் இங்கும் பல படங்கள் ஹிட்டாகி வருகிறது. தமிழ் நடிகர் ஒருவரும் தெலுங்கு நடிகர் ஒருவரும் இணைந்து படங்கள் உருவாகும் காலம் வரும் என்று நினைக்கிறேன்.

உலகத்திலேயே ஒரு இயக்குநரின் படத்தில் நான் நடிக்க ஆசைப்படுகிறேன் எனக்கேட்டால் மணி சாரை தான் சொல்வேன். அவரின் தீவிர ரசிகன் நான். நான் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கலாம், நல்ல கதை கிடைக்கும் போது இங்கு எல்லோருடனும் நடிக்கலாம்.

கமல் சார் படங்கள் பார்த்து தான் வளர்ந்திருக்கிறோம் அதனால் அவர்களின் இன்ஸ்பிரேஷன் தானாக வந்துவிடும். அதை யாரும் மாற்ற முடியாது. இந்தப் படம் தமிழ் ஆடியன்ஸுக்கு ஸ்பெஷலான படமாக இருக்கும் நன்றி.

தொழில்நுட்ப குழு

எழுத்து இயக்கம் – ராகுல் சன்கிரித்யன்

இசை – மைக்கே J மேயர்

ஒளிப்பதிவு – சானு ஜான் வர்கீஸ்

படத்தொகுப்பு – நவீன் நூலி

தயாரிப்பு நிறுவனம் – Niharika Entertainment

தயாரிப்பாளர் – வெங்கட் S போயனபள்ளி

Actor Nani speech at Shyam Singha Roy Tamil Trailer Launch Event

More Articles
Follows