தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஜல்லிக்கட்டை இந்த ஆண்டு நடத்த வேண்டும் என லட்சக்கணக்கான இளைஞர்கள் மெரீனா கடற்கரையில் ஒன்று கூடியிருந்தனர்.
மேலும் கமல், சிம்பு, ஜிவி. பிரகாஷ் உள்ளிட்ட நடிகர்களும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
கேரளாவில் யானை, குஜராத்தில் ஒட்டகம் ஆகிய விலங்குகளுக்கு தடையில்லாத போது, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு தடை ஏன்? என விஜயகாந்த் கேட்டுள்ளார்.
தமிழர்களின் பாரம்பரியம் ஜல்லிக்கட்டு என தன் ஆதரவை பதிவு செய்துள்ளார் சூர்யா.
இவர்களைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயனும் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
Sivakarthikeyan @Siva_Kartikeyan
ஏறுதழுவுதல் எம் தமிழர்களின் கலாச்சாரம்,பண்பாடு. அதை மீட்க விரும்பும் பல கோடிபேரில் ஒரு தமிழனாய் நானும் #WeNeedJallikattu