நா முத்துகுமாருக்கு தேசிய விருது நிச்சயம்; பெட்டிக்கடை பாட்டுக்கு பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமுத்திரக்கனி நடிப்பில் லஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்துள்ள படம் “பெட்டிக்கடை”.

இதில் சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக நடிக்கிறார் சமுத்திரக்கனி.

இன்னொரு நாயகனாக மொசக்குட்டி வீரா நடிக்கிறார். கதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக சுந்தர் அஸ்மிதா நடிக்கிறார்கள்.

இவர்களுடன் வர்ஷா பொல்லம்மா, மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன், ஆர்.சுந்தர்ராஜன், திருமுருகன், செந்தி ஆர்.வி.உதயகுமார், ராஜேந்திர நாத், ஐஸ்வர்யா ஆகியோர் நடிக்கிறார்கள்

இந்த படத்தில் அமரர் நா.முத்துகுமார் எழுதிய

“சுடல மாட சாமிக்கிட்ட

என்ன வேண்டிக்கிட்ட

சொல்லு புள்ள ”

என்ற பாடல் யூ டியூப் ரசிகர்களால் 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து பாராட்டு மழையால் கொண்டாடப் பட்டுக் கொண்டிருக்கிறது.

ஏற்கெனவே நிறைய தேசிய விருதுகளை அமரர் நா.முத்துகுமார் பெற்றிருந்தாலும் அவருக்கு இந்த பாடலுக்காகவும் தேசிய விருது கிடைக்கும் என்று மக்கள் பாராட்டுகிறார்கள்.

படம் வரும் 22ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.

ஒளிப்பதிவு – அருள், சீனிவாஸ்

இசை – மரியா மனோகர்

பாடல்கள் – நா.முத்துக்குமார்,சினேகன், இசக்கிகார்வண்ணன் மடத்தமிழ் வேந்தன்

நடனம் – வின்செண்ட் விமல்

ஸ்டண்ட் – மிராக்கிள் மைக்கேல்

எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்

கலை – முருகன்

தயாரிப்பு மேற்பார்வை – செல்வம்

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி தயாரிக்கிறார் இசக்கி கார்வண்ணன்.

Breaking பைரசியால் பைத்தியம் பிடிக்கும் தமிழ் சினிமா; சூர்யா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார் SR பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவிற்கு ஒரு பக்கம் ஏறுமுகம் என்றாலும் மறு பக்கம் இறங்கு முகம்தான்.

தமிழகத்தை தாண்டி பல மாநிலங்களிலும், நாடுகளிலும் தமிழ் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
ஆனால் மற்றொரு புறம் பைரசியால் இறங்கு முகத்தில் உள்ளது.

இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட சூர்யாவின் என்ஜிகே பட டீசர் நேற்று நள்ளிரவே வெளியானது. இதை சூர்யா ரசிகர்கள் பகிரவிட்டாலும் மற்றவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

சென்னை ரோகினி தியேட்டரில் இன்று மாலை 5 மணிக்கு என்ஜிகே டீசர் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

மேலும் கேரளா முதல் வெளிநாடுகளிலும் இந்த கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகளை ரசிகர்கள் செய்திருந்தனர்.
இந்நிலையில் என்ஜிகே பட டீசரை தற்போது காலை 10.30 மணிக்கு வெளியிட உள்ளதாக படத்தயாரிப்பாளர் எஸ்ஆர். பிரபு அறிவித்துள்ளார்.

மேலும் பைரசியை ஒழிக்க ஒரிஜினல் என்ஜிகே டீசரை வெளியிடுகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செல்வராகவன் இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவுடன் ரகுல் பிரித்தி சிங், சாய்பல்லவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ளார்.

சினிமாவை நேசிக்கும் அனைவரும் பைரசியை தடுப்போம். சினிமாவை நம்பியுள்ள பல குடும்பங்களை வாழ வைக்க உறுதியேற்போம்.

To beat Piracy Suriyas NGK Teaser release plans changed

NGK டீசர் லீக்கானது..; அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய சூர்யா வருகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் என்ஜிகே.

இதில் நாயகிகளாக ரகுல் பிரித்தி சிங், சாய் பல்லவி இருவரும் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் சூட்டிங் சில தடங்களால் நின்றுபோனது. பின்னர் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கி தற்போது கோடை விடுமுறைக்கு படம் வருகிறது.

இதன் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில் தற்போது இணையங்களில் கசிந்துள்ளது.
இதற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்த டீசர் 1 நிமிடம் 6 நொடிகள் ஓடக்கூடியது.

இந்த டீசரில் அரசியல் களத்தில் இறங்க சூர்யா ஆயுத்தமாகி வருவதாக தெரிகிறது. இந்த டீசரில் நீங்க இறங்குனா அது சாக்கடையா இருந்தாலும் சுத்தமாகிடும் என சாய்பல்லவி சொல்வதாக டயலாக்குகள் உள்ளது.

மேலும் இதில் சூர்யா விவசாயி போல நடிப்பதாகவும் காட்சிகள் உள்ளது. இறுதியாக காத்திருப்போம் என்ற சூர்யா பேசும் வசனத்துடன் முடிகிறது என்ஜிகே டீசர்.

NGK Teaser Leaked Suriyas Political punch

தல பிறந்தநாளில் அஜித்துடன் மோதும் Mr லோக்கல் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஞானவேல்ராஜா தயாரிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘மிஸ்டர்.லோக்கல்’.

இதில் நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார்.

‘வேலைக்காரன்’ படத்திற்கு பிறகு இவர்கள் ஜோடியாக இணைந்துள்ள படம் இது.

இவர்களுடன் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஹிப் ஹாப் ஆதி இசையக்க தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், மே மாதம் 1ம் தேதி, உழைப்பாளர் தினத்தில் இப்படத்தை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அன்று நடிகர் அஜித்தின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே நாளில்தான் அஜித் நடித்துவரும் தல 59 படமும் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த படத்தை வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Mr Local Sivakarthikeyan clash with with Thala 59 on 1st May

காமெடி நடிகை ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நிறைய படங்களில் காமெடி நடிகையாக வலம் வந்தாலும் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் சந்தானத்துடன் நடித்து பிரபலமானவர் மதுமிதா.

அண்மையில் வெளியான அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தில் அவரின் சகோதரியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை மதுமிதாவிற்கும் அவரது உறவினரும் உதவி இயக்குனருமான மோசஸ் ஜோயல் என்பவருக்கும் நாளை (பிப்ரவரி 15) திருமணம் நடக்கவுள்ளது.

Comedy Actress Jangiri Madhumitha marriage news updates

சிம்புவின் அரசியல் மாநாட்டில் பங்கேற்கிறார் ஜெய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடிப்பில் அண்மையில் வெளியான செக்கச் சிவந்த வானம் மற்றும் வந்தா ராஜாவாதான் வருவேன் ஆகிய இரு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது.

அடுத்ததாக சிம்பு நடிக்கவுள்ள படம் மாநாடு. இப்படம் முழுக்க முழுக்க அரசியல் பின்னணியில் உருவாகிறது.

இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க, வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.

இந்நிலையில் சிம்புவுடன் முக்கிய கேரக்டரில் நடிகர் ஜெய் இணைந்து நடிப்பதாக கூறப்படுகிறது.

எனவே விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

இதற்கு முன்பே வாலு மற்றும் இது நம்ம ஆளு படங்களிலும் ஜெய் சிம்புவுடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jai to play a cameo in Simbus Maanaadu

More Articles
Follows