‘காவிரி பிரச்சினையை ரஜினி பேசி தீர்க்கலாம்’ – பார்த்திபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காவிரி தண்ணீர் பிரச்சினை தொடர்பாக, தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கு பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது.

தற்போதும் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து, கர்நாடகாவில் வன்முறை நடந்து வருகிறது.

இதனை கண்டிக்கும் வகையில் நாளை தமிழகத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இப்பிரச்சினை குறித்து நடிகர் பார்த்திபன் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…

‘பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஜினி நெருங்கிய நண்பர். எனவே பிரதமரிடம் ரஜினி பேசி இந்த பிரச்சனைக்கு தீர்வு காண சொல்லலாம்’ என தெரிவித்துள்ளார்.

எழில் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத் தலைப்பு வெளியானது.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து உதயநிதி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் எழில்.

இதில் இவரின் ஆஸ்தான் காமெடி நடிகர் சூரியும் நடிக்கிறார்.

படத்தின் நாயகியாக ரெஜினா நடிக்க, இமான் இசையமைக்கிறார்.

தன் ரெட் ஜெயண்ட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக உதயநிதி தயாரிக்கிறார்.

காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இப்படத்திற்கு சரவணன் இருக்க பயமேன் என பெயரிட்டு இதன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

சூர்யா-விக்னேஷ் சிவன் கூட்டணியில் சுரபி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹரி இயக்கும் சிங்கம்-3 படத்தை முடித்து விட்டு விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் சூர்யா.

அனிருத் இசையமைக்க ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இதில் நாயகியாக நயன்தாரா நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் முக்கிய கேரக்டரில் சுரபி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

பதிலடி கொடுக்க பாய்ந்து வரும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

இவருடன் தமன்னா, ஸ்ரேயா நடித்து வருகின்றனர்.

இதில் சிம்பு மூன்று வேடம் ஏற்பதால், ஒவ்வொரு வேடத்திற்கும் ஒவ்வொரு டீசரை வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சிம்புவின் பாடலை எதிர்த்தவர்களுக்கு பதிலடி கொடுக்க இந்த டீசர்கள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

ரஜினி இல்லேன்னா விஜய்-அஜித் ஓகே சொல்வார்களா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவாஜி கணேசனின் பேரனும் பிரபல நடிகருமான விக்ரம் பிரபு, தயாரித்து நடிக்கும் படம் நெருப்புடா.

தன் பர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் மற்றும் சந்திரா ஆர்ட்ஸ், சினி இன்னோவேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கிறார்.

இதில் தீயணைப்பு வீரராகவும், தீவிர ரஜினி ரசிகராகவும் நடிக்கிறார் விக்ரம் பிரபு.

இவருடன் நிக்கி கல்ராணி, பொன்வண்ணன், “நான் கடவுள்” ராஜேந்திரன், “ஆடுகளம்” நரேன், மதுசூதன் ராவ், நாகிநீடு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

அசோக் குமார் இப்படத்தை இயக்க, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்திலுள்ள ஒரு முக்கியமான கெஸ்ட் ரோலில் ரஜினியை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர்.

ஒரு வேளை அவர் மறுக்கும் பட்சத்தில் விஜய் அல்லது அஜித்தை நடிக்க வைக்க முயற்சிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘காவிரி பிரச்சினையை அரசியல்வாதிகள் பார்த்துக்கொள்வார்கள்.’ – விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிரான கலவரம் நடைபெற்று வருகிறது.

தமிழக வாகனங்கள், மற்றும் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து நடிகர் விஜய்சேதுபதி ஒரு வாட்ஸ்அப்பில் பதிவில் கூறியுள்ளதாவது…

“தமிழர்கள் மீது நடைபெறும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்.

அப்பாவி மக்களை அடிக்காதீர்கள். அவர்களுக்கு ஒரு குடும்பம் இருக்கிறது.

உங்கள் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் கூறுங்கள்.

நாம் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள் இந்த பிரச்சினையை பேசி தீர்ப்பார்கள்.

நாம் இன்று உழைத்தால்தான் நம்மால் சாப்பிட முடியும்.” என்று உருக்கமாக பேசியுள்ளார்.

More Articles
Follows