The Iron Lady படத்தில் ஜெயலலிதா-சசிகலா யார் தெரியுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வரலட்சுமி நடித்து வரும் ‘சக்தி’ என்ற படத்தை மிஷ்கின் உதவியாளர் பிரியதர்ஷினி இயக்கி வருகிறார்.

இப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை.

அதற்குள் தன் அடுத்த பட அறிவிப்பை தமிழகமே வியக்கும் அளவுக்கு அறிவித்தார்.

ஆம். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக இயக்கி, தயாரிக்கப் போவதாக அறிவித்தார்.

இப்படத்திற்கு ‘தி ஐயர்ன் லேடி’ (The Iron Lady) என்று டைட்டில் வைத்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நித்யா மேனன் நடிக்கவுள்ளதாகவும் சசிகலா வேடத்தில் வரலட்சுமி நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

இது உறுதியாகும் பட்சத்தில் அதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

ரஜினி தான்யா பழைய முகம்; கபாலியை கைவிட்ட கடுப்பில் ராதாரவி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கபாலி படத்தை ரஞ்சித் இயக்க, கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்தார்.

இந்த படம் கடந்த 2016ல் வெளியாகி உலகளவில் பேசப்பட்டது.

இதில் ஒரு முக்கிய கேரக்டரில் ராதாரவி நடிக்கவிருந்தாராம். ஆனால் இறுதியாக ராதாரவி பழைய முகமாக இருக்கிறார். அதனால் புது முகத்தை போடலாம் என ரஞ்சித் கலைப்புலி தாணுவிடம் சொல்லிவிட்டாராம்.

அந்த படத்தில் பழம்பெரும் நடிகர் சங்கிலி முருகன் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார் என்பது வேறு கதை.

இது நடந்து முடிந்து 3 வருடங்கள் ஆகிவிட்டபோதிலும், தற்போது அதுபற்றிய ஒரு தகவலை நடிகர் ராதாரவி ஒரு நிகழ்ச்சியி பேசியுள்ளார்.

என்னை பழைய முகம் என்று வேண்டாம் என சொல்லிவிட்டார். ஆனால் நான் அப்போதே இருப்பதிலேயே ரஜினி தானே பழைய முகம் என்று நான் சொன்னேன் என்கிற தகவலையும் ராதாரவி அந்த நிகழ்ச்சியில் சொல்லியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் கபாலி இயக்குனர் ரஞ்சித்தும் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்தை சந்தித்தது வாழ்க்கையில் கிடைத்த ஆசி… : சாக்‌ஷி அகர்வால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியின் காலா படத்தில் மருமகளாக நடித்திருந்தார் நடிகை சாக்‌ஷி அகர்வால்,

இவர் தற்போது சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்திலும் நடித்து வருகிறார்.

அஜித்துடன் தான் நிற்கும் ஒரு போட்டோவை தன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதில், ‘அஜித்தை சந்தித்தது ஆசிர்வாதமாக உணர்கிறோன். என் வாழ்க்கை முழுவதும் மனதில் வைத்திருப்பேன். பெரிய ரசிகையாக உணர்ந்த தருணம் இது’ என பதிவிட்டுள்ளார்.

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு பட டைட்டில் லுக் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சக்தி’ என்ற படத்தை வரலட்சுமி நடிப்பில் இயக்கி வருகிறார் பிரியதர்ஷினி.

அந்த படம் இன்னும் ரிலீசாகாத நிலையில் தன் படத்தை அதிரடியாக சில மாதங்களுக்கு முன்பே அறிவித்தார் பிரியதர்ஷினி.

அதுவும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக இயக்கி, தயாரிக்கப் போவதாக அறிவித்தார்.

இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் தலைப்பு போஸ்டரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.

இப்படத்திற்கு ‘தி ஐயர்ன் லேடி’ (The Iron Lady) என்று டைட்டில் வைத்துள்ளனர்.

விரைவில் படத்தின் தொடக்க விழா நடக்கும் என போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.

இவையில்லாமல் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தை, இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் விஜய் ஆகியோரும் தனித்தனியாக இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Ex Chief Minister Late Jayalalithaa biopic titled The Iron Lady

வாம்மா விஜயலட்சுமி…; ஜோதிகாவை ஜோராக வரவேற்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வித்யாபாலன் நடித்து ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான தும்ஹாரி சுலு படத்தை காற்றின் மொழி என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளார் ராதா மோகன்.

வித்யாபாலன் வேடத்தில் ரேடியோ ஜாக்கியாக ஜோதிகா நடித்துள்ளார்.

அவரது கணவராக விதார்த் நடித்துள்ளார். முக்கிய கேரக்டரில் தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு நடித்துள்ளார்.

பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இப்படம், அடுத்த மாதம் அக்டோபர் 18-ம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் இப்பட டீசரை வெளியிட்டுள்ளனர்.

ஹலோ எப்.எம்.-ல் வேலை பார்க்கும் ஆர்.ஜே., விஜயலட்சுமியாக ஜோதிகா நடித்துள்ளார்.

ஒரு இல்லத்தரசியாகவும் அதேசமயம் தனக்கே உரித்தான அதே பழைய குறும்புத்தன பெண்ணாகவும் ஜோதிகா அசத்தியுள்ளார்.

இது பெண்களை மட்டுமில்லாமல் ஆண்களையும் கவர்ந்துள்ளது.

Jyothika promises a lot of fun as RJ Vijayalakshmi in Kaatrin Mozhi teaser

 

https://www.filmistreet.com/video/kaatrin-mozhi-teaser/

காதலன் காந்தி தற்கொலை; கொசு மருந்து குடித்து நிலானி தற்கொலை முயற்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத்திரை நடிகை நிலானி மற்றும் உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் இருவரும் காதலித்து வந்தார்கள்.

திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

ஆனால் நிலானிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதால் காந்தி தற்கொலை செய்துக் கொண்டார்.

இந்நிலையில், நிலானி, காந்தி இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்ததை பார்த்தோம்.

எனவே போலீசுக்கு பயந்து நிலானி தலைமறைவானார்.

பின்னர் திடீரென சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார் நடிகை நிலானி.

அங்கு உதவி இயக்குநர் காந்தியின் தற்கொலைக்கு தான் காரணமல்ல என்றும், காந்தி தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டதாகவும் புகார் மனு அளித்தார்.

மேலும் காந்தி தன்னை தொடர்ந்து டார்ச்சர் செய்ததாகவும், கூறினார்.

இந்நிலையில், நடிகை நிலானி இன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

அவரது வீட்டில் இருந்த கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கி விழுந்த அவர் கே.கே.நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

More Articles
Follows