ஆன்லைன் சூதாட்டம்: விராட் கோலி-தமன்னாவை கைது செய்ய வழக்கு

ஆன்லைன் சூதாட்டம்: விராட் கோலி-தமன்னாவை கைது செய்ய வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

virat kohli tamannaah bhatiaகொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக்கோரியும், அதை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்டோரை கைது செய்யக்கோரியும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்டதிற்கு அடிமையானதால் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து ஆன் லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் மெட்ராஜ் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடிகை தமன்னா போன்ற பிரபலங்களை வைத்து விளம்பரங்கள் வெளியிட்டு இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்படுவதாக அந்த மனுவில் கூறியிருந்தார்.

சூதாட்டத்திற்காக, வட்டிக்கு பணம் வாங்கி பின்னர் அதை கட்டமுடியாத சூழல் ஏற்படும்போது, இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ப்ளூவேல் விளையாட்டால் பல இளைஞர்கள் தற்கொலை செய்தனர் என்றும் அதற்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளதை சுட்டிக்காட்டினார்.

அத்தகைய ஆன்லைன் சூதாட்ட நிறுவன விளம்பரத்தில் நடித்த விராட் கோலி, தமன்னா உள்ளிட்டோரையும் கைது செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு, மனு தொடர்பாக மூன்று வாரங்களில் பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.

கடவுள் நம்பிக்கையில்லை..; விநாயகர் சிலைக்கு உதயநிதி விளக்கம்..

கடவுள் நம்பிக்கையில்லை..; விநாயகர் சிலைக்கு உதயநிதி விளக்கம்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

udhayஆகஸ்ட் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினம் கொண்டாடப்பட்ட நிலையில் நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் விநாயகர் சிலை படம் ஒன்றை பதிவிட்டார்.

இது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையானது.

பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் கட்டிக்காத்த பகுத்தறிவு (நாத்திகம்) கொள்கையை உதயநிதி மோசம் செய்துள்ளதாக சர்ச்சையானது.

இந்த நிலையில் இதுகுறித்து உதயநிதி விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

மத்திய பாசிச பாஜக மற்றும்‌ மாநில அடிமை எடுபிடி அரசுகளின்‌ மக்கள்‌ விரோத நடவடிக்கைகள்‌, ஊழல்கள்‌ குறித்து நான்‌ பகிரும்போது அவற்றை எடுத்து விவாதித்து பேசுபொருளாக்காதவர்கள்‌ தற்போது பிள்ளையார்‌ சிலையின்‌ புகைப்படத்தைப்‌ பகிர்ந்ததைப்‌ பரபரப்பாக விவாதிக்கிறார்கள்‌. நாட்டில்‌ எவ்வளவோ பிரச்சினைகள்‌ இருக்கும்போது அதையெல்லாம்‌ விட்டுவிட்டு இதைப்பிடித்துக்கொண்டு வெவ்வேறு விதமாகக்‌ கயிறு திரிப்பதைப்‌ பார்க்கையில்‌, இங்கு எது நடந்தாலும்‌ அதைக்‌ கழகத்துக்கு எதிரானதாகத்‌ திசைதிருப்பும்‌ சந்தர்ப்பவாதிகளின்‌ சதி வேலைகளைப்‌ புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு விஷயத்தை இங்கே நான்‌ தெளிவுபடுத்த விரும்புகிறேன்‌.

எனக்கோ, என்‌ மனைவிக்கோ கடவுள்‌ நம்பிக்கை கிடையாது. ஆனால்‌ என்‌ தாயாருக்கு அந்த நம்பிக்கை உண்டு என்பதை அனைவரும்‌ அறிவர்‌. எங்கள்‌ வீட்டில்‌ ஒரு பூஜை அறையும்‌ உண்டு.

அதில்‌ எங்கள்‌ மூதாதையர்களின்‌ உருவப்‌ படங்கள்‌ உள்ளன. மேலும்‌ என்‌ தாயார்‌ நம்பும்‌ சில கடவுள்‌ படங்களும்‌ உண்டு. முக்கியமான முடிவெடுக்கும்போது அங்குள்ள மூதாதையர்களின்‌ படங்கள்‌ முன்‌ நின்று அவர்களை மனதில்‌ நினைத்துவிட்டு செய்வது எங்கள்‌ வழக்கம்‌.

பிள்ளையார்‌ சதுர்த்திக்காக அம்மா ஒரு பிள்ளையார்‌ சிலையை வாங்கியிருந்தார்‌. அந்த சிலையை நேற்றிரவு பார்த்த என்‌ மகள்‌, “இந்த சிலையை எப்படி செய்வார்கள்‌” என்று கேட்டார்‌.

இந்த சிலை களிமண்ணில்‌ செய்தது. தண்ணீரில்‌ கரைக்க எடுத்துச்‌ சென்றுவிடுவார்கள்‌” என்றேன்‌. “இந்த சிலையை எதற்குத்‌ தண்ணீரில்‌ போடணும்‌’ என்று கேட்டார்‌. அதுதான்‌ முறை என்கிறார்கள்‌. அடுத்த வருஷத்துக்குப்‌ புதிதாக வேவறான்று வாங்குவார்கள்‌” என்றேன்‌.

“கரைப்பதற்கு முன்‌ இந்த சிலையுடன்‌ ஒரு போட்டோ எடுத்துக்‌கொடுங்கள்‌” என்று கேட்டார்‌. அவரின்‌ விருப்பத்தின்‌ பேரில்‌ நான்தான்‌ அந்தப்‌ புகைப்படத்தை எடுத்தேன்‌. மகள்‌ ரசித்த அந்த சிலையை அவரின்‌ விருப்பத்துக்காக என்‌ டிவிட்டர்‌ பக்கத்திலும்‌ பகிர்ந்தேன்‌. அவ்வளவே.

பாஜக கூண்டில் கர்நாடக சிங்கம்..; முன்னாள் IPS அண்ணாமலை விளக்கம்

பாஜக கூண்டில் கர்நாடக சிங்கம்..; முன்னாள் IPS அண்ணாமலை விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

annamalai ipsசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் கட்சி தொடங்கவுள்ளார் என்பதை அறிவித்துள்ளார்.

அதே சமயத்தில் ’நான் முதல்வர் வேட்பாளர் இல்லை’ என தெரிவித்திருந்தார்.

எனவே பலரும் தங்களின் இஷ்டப்படி கர்நாடகாவில் கம்பீரமாக பணியாற்றிய கர்நாடக சிங்கம் என அழைக்கப்பட்ட முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை என்பவர் தான் ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளர் என கூறிவந்தனர்.

இது தொடர்பாக ரஜினி ஒரு வார்த்தை கூட கூறியதில்லை. ஆனால் ரஜினியை வம்பிழுக்கவே இப்படியொரு வதந்தியை சிலர் கிளப்பிவிட்டனர்.

இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 25ஆம் தேதி டெல்லியில் முரளிதரராவ் தலைமையில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

விழாவில் அண்ணாமலை பேசியதாவது…

“அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு”

என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.

அந்த குறளில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் பிரதமர் மோடிக்கும், பாஜக தலைவர்களுக்கும் இருப்பதாக கூறினார்.

மேலும் நான் பதவி நோக்கத்தில் கட்சியில் இணையவில்லை. கட்சி எடுக்கும் முடிவும் நான் கட்டுப்படுவேன் என கூறினார்.

வனிதாவின் 3வது கணவர் பீட்டர் பால் ஆஸ்பத்திரியில் அனுமதி

வனிதாவின் 3வது கணவர் பீட்டர் பால் ஆஸ்பத்திரியில் அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vanitha peter paulகடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை 3வதாக திருமணம் செய்துக் கொண்டார் நடிகை வனிதா.

இந்த திருமணம் சர்ச்சையானது என்பதை பலமுறை பார்த்துவிட்டோம்.

இந்த நிலையில் பீட்டர் பாலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாம்.

இதனையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வந்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகை வனிதா தனது சமூக வலைத்தளத்தில்…

‘சொல்வதற்கு நிறைய இருக்கு.. என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. கடவுள் சக்தி மிக்கவர். நம்பிக்கையுடன் இருங்கள்.

எல்லாம் ஒரு காரணத்திற்காக நடக்கிறது. வாழ்க்கை மிகவும் கடினமானது. எல்லாம் சரியாகிவிடும். கடினமானதை ஏற்றுக்கொண்டு திரும்பக் கொடுங்கள்.’ என்று பதிவிட்டுள்ளார்.

நித்தியானந்தாவின் கைலாசா நாட்டிற்கு செல்ல ஆசைப்படும் மீரா மிதுன்

நித்தியானந்தாவின் கைலாசா நாட்டிற்கு செல்ல ஆசைப்படும் மீரா மிதுன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

meera mithun nithya nandhaஇந்திய அரசால் தேடப்படும் குற்றவாளி சாமியார் நித்தியானந்தா.

இவர் எவருக்கும் தெரியாத ஏதோ ஒரு இடத்திற்கு சென்று அங்கு கைலாசா என்ற நாட்டையே உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும் அந்த நாட்டின் அதிபர் என்றும் பிரகடனப்படுத்திக் கொண்டார்.

மேலும் சில நாட்களாக ரிசர்வ் வங்கி ஆஃப் கைலாசா என்று வங்கியை தொடங்கி கரன்சிகளை அச்சடித்து வருகிறார்.

இந்த நிலையில் நித்யானந்தா குறித்து மீரா மிதுன் தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

நித்தியானந்தா பற்றி நெகட்டிவான செய்திகளே வருகிறது. ஆனால் அவர் புதிய நாட்டை ஆரம்பித்து ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகிறார். அவருடைய நாட்டிற்கு செல்ல நானும் விருப்பப்படுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

கார்த்திக் ராஜு இயக்கும் த்ரில்லர் படத்தில் ‘பிக்பாஸ்’ ரைசா

கார்த்திக் ராஜு இயக்கும் த்ரில்லர் படத்தில் ‘பிக்பாஸ்’ ரைசா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

raiza wilsonகொரோனா என்ற வார்த்தை அனைவருடைய வாழ்க்கையிலும் ஏதோ ஒரு விஷயத்தில் மாற்றத்தை உண்டாக்கியுள்ளது. ஆனால், சிலர் கொரோனா காலத்தையே தங்களுக்கு சாதகமாக்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். அதில் இயக்குநர் கார்த்திக் ராஜுவும் ஒருவர். கொரோனா அச்சுறுத்தலா அவர் இயக்கி வந்த ‘சூரப்பனகை’ படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. பரபரப்பாக ஓடிக்கொண்டே இருந்த கலைஞர்களுக்கு எப்போதுமே சும்மா வீட்டில் உட்கார்ந்திருப்பது பிடிக்காது.

கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியவுடன், குறைந்த குழுவினர் கொண்டு பணிபுரியும் வகையில் கதையொன்றை யோசித்து எழுதினார் கார்த்திக் ராஜு. அது நல்லதொரு த்ரில்லராக முடியவே, ‘சூர்ப்பனகை’ தயாரிப்பாளர் ராஜ்சேகர் வர்மாவும் நானே தயாரிக்கிறேன் என்று கூறவே உடனடியாக தொடங்கி முடித்தும் விட்டார்கள். கொரோனா காலத்தில் உருவான இந்த உணர்வுப்பூர்வமான த்ரில்லர் படத்தில் ரைசா வில்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

குறைந்த நடிகர்கள் எனும் போது, நல்லதொரு தொழில்நுட்பக் குழு அமைந்தால் படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமையும். அந்த வரிசையில் தனது தொழில்நுட்பக் குழுவினர், படக்குழு மற்றும் கதைக்களம் குறித்து இயக்குநர் கார்த்திக் ராஜுவிடம் கேட்ட போது, “வேல்ராஜ் சார் (ஒளிப்பதிவாளர்), திலிப் சுப்பராயன் (சண்டைப் பயிற்சியாளர்), சாம் சிஎஸ் (இசையமைப்பாளர்), சாபு ஜோசப் (எடிட்டர்) மற்றும் நான், நாங்கள் ஏதாவது ஆக்கப்பூர்வமாக செய்யவேண்டும் என்று தீர்மானித்தோம். குறைவான படக்குழுவினருடன் படப்பிடிப்பை நடத்த நாங்கள் அனுமதி பெற்றோம். என்னுடைய ‘சூர்ப்பனகை’ படத்தை தயாரித்த ராஜ்சேகர் வர்மா இந்த படத்தையும் தயாரித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் இந்தக் கதைக்கு ஏற்ற களமாக இருந்தது. கொரோனா தொற்று இல்லாத அந்த கிராமத்தில் 500-க்கும் குறைவான குடும்பங்களே வசிக்கிறார்கள். படப்பிடிப்புக்கும் முன்பும், பின்பும் நடிகர்கள், படக்குழுவினர் உட்பட 28 பேருக்கும் கோவிட் 19 பரிசோதனை செய்யப்பட்டது. முழுபடப்பிடிப்பும் முடித்து திரும்பிவிட்டோம், தற்போது எடிட்டிங் வேலைகளும் முடிந்துவிட்டது. டப்பிங் பணிகள் இன்று தொடங்கவுள்ளது.

இது ஒரு தாய், ஒரு மகள் மற்றும் ஒரு பதின்வயது இளைஞர் ஆகியோரை பற்றிய படம். ரைசா வில்சன் மற்றும் ஹரீஷ் உத்தமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ் பதிப்பில் பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் ‘கைதி’ படத்தில் கார்த்தியின் மகளாக நடித்த மோனிகாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எமோசனலான த்ரில்லர் பாணியில் இந்தப் படம் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார் கார்த்திக் ராஜு.

விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது. கண்டிப்பாக பார்வையாளர்களை அடுத்தக் காட்சி என்ன என்று யூகிக்க முடியாத நிலையிலும், அதே வேளையில் நல்ல காமெடியுடனும் இந்த த்ரில்லர் இருக்கும் என்கிறது படக்குழு.

More Articles
Follows