தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
வழக்கம்போலவே இப்படத்திற்கும் வெளியீட்டின் போது சில எதிர்ப்புகள் உருவாகியுள்ளது.
கபாலி படத்தை தடை செய்ய வேண்டும் என லிங்கா படத்தால் நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்கள் ஒரு புறம் கோரி வருகின்றனர்.
சுக்ரா பிலிம்ஸ் நிறுவனம் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளனர்.
மேலும் இலங்கை தமிழர் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களில் அக்கறை இல்லாத ரஜினி, தமிழர்கள் நலனுக்காக பாடுபடுவது போல காட்சிகளை கபாலியில் வைத்துள்ளார்.
இதன் மூலம் இளைஞர்களை மூளை சலவை செய்கிறார் எனவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவையில்லாமல், ரஜினி ரசிகர்களுக்கும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.
கபாலி படத்தை வரவேற்க ரஜினி கட்அவுட்டுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்யவுள்ளனர்.
ஏழை மக்கள் பாலுக்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க இதுபோன்ற பாலாபிஷேகத்தை ரசிகர்கள் செய்ய கூடாது என பால் முகவர்கள் தெரிவித்துள்ளனர்.
