ரஜினி மன்னிப்பு கேட்டு ரூ. 101 கோடி தரனும்; காலா மீது வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் வரும் வியாழன் (ஜீன் 7ல்) ரிலீசாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மும்பை வாழ் தமிழரான திரவியம் நாடாரின் மகன் ஜவஹரின் வழக்கறிஞர் ரஜினிக்கு அனுப்பி இருக்கும் வக்கீல் நோட்டீசில் அவர் கூறியிருப்பதாவது:-

காலா படம் மும்பையில் வாழ்ந்த தமிழரான திரவியம் நாடார் என்பவரின் கதையை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எனது கட்சிக்காரரின் தந்தை திரவியம் நாடார் 1957-ல் தூத்துக்குடியில் இருந்து மும்பை சென்றவர்.

தூத்துக்குடி அப்போது கடும் வறட்சியாலும் பஞ்சத்தாலும் அவதிப்பட்டதால் அவர் பம்பாயில் புலம்பெயர்ந்தார்.

இயல்பிலேயே உதவும் குணம் கொண்ட அவர் மும்பை தமிழர்களுக்காக பாடுபட்டவர்.

அவரது காலகட்டத்தில் மும்பையில் வாழ்ந்த தமிழர்கள் பல கொடுமைகளை அனுபவித்தனர். அவர்களுக்கு காவலராக விளங்கியவர்.

“இந்தப் படத்தின் கதை என்னுடைய அப்பா தொடர்பானது என்று தெரிகிறது.

தமிழகத்தில் இருந்து மும்பை சென்ற என் தந்தை தாராவி தமிழ் மக்களுக்கு பல நல்ல வி‌ஷயங்களை செய்துள்ளார்.

அவர்களை பொறுத்தவரை அவர் தெய்வம். அவரை அங்குள்ள மக்கள் காட்பாதர் எனப் பொருள்படும் வகையில், ‘காத்வாலா சேட்’ என்றே அழைப்பர்.

காலா படத்திலும் அது குறித்து கூறப்பட்டுள்ளது. அதோடு என் தந்தை சர்க்கரை வர்த்தகத்தில் மிகப்பெரிய ஆளாக திகழ்ந்தவர். இதுவும் படத்தில் வருகிறது.

ஆனால், நிஜத்திற்கு விரோதமாக படத்தில் காட்வாலா சேட் இன வேறுபாட்டைத் தூண்டுவது போல் காட்சிகள் இருப்பதாகத் தெரிகிறது. என் தந்தை சட்ட விரோதமான செயல்கள் எதிலும் ஈடுபடாதவர்.

எனவே இப்படத்தால் எங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

எனவே, அவருக்கும் காலாவுக்கும் என்ன சம்மந்தம் என்பதற்கு நடிகர் ரஜினி மற்றும் தனுஷ், 36 மணி நேரத்தில் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பும், விளக்கமும் அளிக்க வேண்டும்.

இல்லையேல் வழக்கு தொடரப்படும். படம் வெளியாக அனுமதிக்க மாட்டேன். அவதூறுக்காக ரஜினி ரூ.101 கோடி தரவேண்டும். நிபந்தனையற்ற மன்னிப்பும் கேட்க வேண்டும்.

இவ்வாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

காலா ரிலீஸை தடுக்க முடியாது; ரஜினிக்கு ஆதரவாக பிரகாஷ்ராஜ் குரல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கர்நாடகத்தில் காலா படத்தை திரையிட சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினி பேசியதால் இந்த பிரச்சினை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கர்நாடக திரைப்பட வர்த்தக சபையும் படத்திற்கு தடை விதித்துள்ளது.

மேலும் மக்கள் விரும்பினால் மட்டுமே படத்தை இங்கு திரையிட அனுமதியளிப்போம் என்றளவில் கூறிவிட்டார் கர்நாடக முதல்வர் குமாரசாமி.

இந்நிலையில், காலா விவகாரம் குறித்து பேசிய பிரகாஷ் ராஜ்,

பொழுதுபோக்குக்காக எடுக்கப்படும் ஒரு திரைப்படத்தையோ அல்லது ஒரு கலையையோ சமூக பிரச்சனையை சுட்டிக்காட்டி எதிர்ப்பது சரியல்ல.

இந்த விவகாரத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க அரசு உறுதியளிக்க வேண்டும்.

படத்திற்கு எதிராக யார் போராடினாலும், காலா படம் வெளியாவதை யாராலும் தடுக்க முடியாது.” என பிரகாஷ் ராஜ் கூறியிருக்கிறார்.

கவுதம் மேனனுடன் கைகோர்த்த ஜோடி அதர்வா-ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனராக அறியப்பட்டாலும் கவுதம் மேனன் தயாரிப்பாளராக படங்களை தயாரித்தும் வருகிறார்.

ஒன்றாக என்டர்டெயின்மெண்ட் மூலம் படங்களை தயாரிக்கும் அவர் அண்மைகாலமாக பாடல் ஆல்பங்களையும் தயாரித்து வருகிறார்.

ஏற்கனவே இவர் `கூவா’, `உளவிறவு’ உள்ளிட்ட ஆல்பங்களை வெளியிட்டுள்ளார்.

இதில் `உளவிறவு’ பாடலில் மலையாள நடிகர் டோவினோ தாமஸ், தொலைக்காட்சி பிரபலம் திவ்யதர்ஷினி ரொமான்ஸ் செய்யும்படியாக அந்த பாடல் உருவாகி இருந்தது.

இந்நிலையில், `போதை கோதை’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் அடுத்த ஆல்பத்தை வெளியிடவுள்ளனர்.

இதில் அதர்வா – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ளனர்.

மதன் கார்க்கி எழுதியிருக்கும் இந்த பாடலுக்கு கார்த்திக் இசையமைத்திருக்கிறார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து தலைப்பை எதிர்க்கும் ரோசக்கார தெலுங்கர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஹரஹர மஹாதேவகி’ என்ற அடல்ட் படத்தை எடுத்த சந்தோஷ் பி.ஜெயக்குமார் மீண்டும் அடல்ட் ஆபாசப் படத்தை எடுத்தார்.

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்று தலைப்பிடப்பட்ட இப்படத்தை

ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.

இதில் கவுதம் கார்த்திக், வைபவி, ஷா ரா, யாஷிகா, கருணாகரன், ராஜேந்திரன், பால சரவணன், ஜான்விஜய், மதுமிதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படம் இளைஞர்களிடையே பாப்புலராக பேசப்பட்டாலும் கடும் விமர்சனங்களை சந்தித்தது.

திரையுலகினரிடையே கலவையான எதிர்ப்பும் ஆதரவும் கிடைத்தது.

இந்நிலையில் எப்போதும் தெலுங்கு மார்கெட்டை குறிவைக்கும் ஞானவேல்ராஜா இப்படத்தை அங்கு வெளியிட முயற்சி செய்து வருகிறார்.

தமிழில் இடம்பெற்ற அதே டைட்டில் அர்த்தப்படி தெலுங்கில் பதிவு செய்தார்.

அதாவது ’சீக்காட்டி கதிலோ சீத்தாகுத்துடு’ என்ற அந்த டைட்டிலில் பதிவிட அங்கு தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் அனுமதி மறுத்துவிட்டதாம்.

‘இப்படியெல்லாம ஒரு சினிமாவுக்கு டைட்டில் வைப்பீங்க? இது ரொம்ப கேவலமாக இருக்கு. இதை இங்கு அனுமதிக்கமாட்டோம்’ என்று கூறிவிட்டார்களாம்.

எனவே தலைப்பை மாற்ற இருட்டு அறையில் ஆலோசனை செய்கிறார்களாம் இந்த முரட்டு குத்து அணியினர்.

மீண்டும் சிவகார்த்திகேயன்-பொன் ராம் கூட்டணியில் கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடித்த ரஜினிமுருகன் என்ற படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ்.

அப்படம் மாபெரும் வெற்றிப் பெறவே, ராசியான இந்த ஜோடி மீண்டும் ரெமோ படத்தில் இணைந்தது.

இதன்பின்னர் விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோருடன் இணைந்து நடித்துவிட்டார்.

அந்த படங்களின் வெற்றி அவருக்கு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை அந்தஸ்தை ஏற்படுத்திக்கொடுத்தது.

தற்போது தமிழில் விஜய்-62, விக்ரமின் சாமி-2, விஷாலின் சண்டக்கோழி-2, என சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

பொன்ராம் இயக்கும் சீமராஜா படத்தில்தான் ஒரு கெஸ்ட் ரோல் வேடம்.

இதில் சமந்தா, சூரி ஆகியோர் நடிக்க, இமான் இசையமைத்து வருகிறார்.

Keerthy Suresh joins with Sivakarthikeyan for 3rd time in Seemaraja

காலா கதையை சொல்லி தியேட்டருக்கு அழைக்கும் நிர்வாகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் ஜூன் 7-ந்தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

கடந்த சில வருடங்களாக ரஜினியின் படங்களுக்கு வெளிநாட்டில் அதிக மார்கெட் உள்ளது.

எனவே இப்படத்தை அமெரிக்காவில் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடவுள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் காலா வெளியாகும் தியேட்டர்களில் ஒன்றான சினிமார்க் என்ற தியேட்டரின் டுவிட்டர் பக்கத்தில், தற்போது காலா படத்தின் ஒன்லைன் ஸ்டோரி பதிவிடப்பட்டுள்ளது.

அதில்… திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து மும்பையிலுள்ள தாராவி பகுதிக்கு சிறு வயதிலேயே செல்கிறார் கரிகாலன்.

ஒரு கட்டத்தில் மக்களின் வரவேற்பை பெற்ற அவர் அந்த பகுதியில் டானாக மாறுகிறார். பின்னர் அங்குள்ள மக்களின் பிரச்சினைக்காக போராடுகிறார்.

அந்த காலாவை காண வாருங்கள் என பதிவிட்டுள்ளனர்.

ஒரு இந்திய திரைப்படத்தின் கதைச்சுருக்கம் அமெரிக்க தியேட்டரின் சமூகவலைதளத்தில் வெளியாவது இதுவே முதல்முறையாம்.

Rajinikanth Kaala movie story line leaked

More Articles
Follows