உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் கால் டாக்ஸி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கே.டி.கம்பைன்ஸ் சார்பில் ஆர். கபிலா தயாரிப்பில், தமிழகத்தில் கால்டாக்ஸி டிரைவர்கள் தொடர் கொலைகள் செய்யப்படுவதின் பின்னணியில் உள்ள உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, சஸ்பென்ஸ் திரில்லர் கலந்த திரைப்படமாக உருவாகியுள்ள படம் “கால்டாக்ஸி”.

இந்த படத்தில் சந்தோஷ் சரவணன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக “மெர்லின்” , “மரகத காடு” ,“டக்கு முக்கு டிக்கு தாளம்”, ஜீவி, போன்ற படங்களில் நடித்த அஸ்வினி நடிக்கிறார். மேலும் நான் கடவுள் ராஜேந்திரன், மதன்பாப், இயக்குனர் ஈ.ராமதாஸ், ஆர்த்தி கணேஷ், பசங்க சிவகுமார், முத்துராமன் பெல்லி முரளி, சந்திரமௌலி, போராளி திலீபன், சேரன்ராஜ் மற்றும் அஞ்சலிதேவி ஆகியோர் நடித்திருக்கின்றார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்: நடனம்- இராபர்ட், இருசன்; ஸ்டண்ட்- எஸ்.ஆர்.ஹரிமுருகன், எடிட்டிங்- டேவிட் அஜய், ஒளிப்பதிவு- எம்.ஏ.ராஜதுரை, பாடல்கள், இசை- பாணன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பா.பாண்டியன். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியுள்ள “ தமிழரசன் “ படத்தின் படப்பிடிப்பு இனிதே நிறைவுற்றது.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி பிரமாண்ட தயாரிக்கும் , இசைஞானி இளையராஜா இசையில், பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியுள்ள “ தமிழரசன் “ படத்தின் படப்பிடிப்பு இனிதே நிறைவுற்றது.

வரும் 29 ம் தேதி மாலை 5 மணியளவில் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது. படம் ஜனவரி மாதம் திரைக்கு வர உள்ளது.

*சினிமாவில் சொன்ன சொல்லைக் காப்பாற்ற மாட்டார்கள்: முக்தா பிலிம்ஸின் 60 ஆவது ஆண்டு வைர விழாவில் சிவகுமார் பேச்சு.!*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முக்தாபிலிம்ஸின் அறுபதாவது ஆண்டு வைர விழா சென்னை குமாரராஜா முத்தையா அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரையுலகினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர் .

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜி.கே. வாசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முக்தாபிலிம்ஸில் பணியாற்றிய கலைஞர்களுக்கு நினைவுக் கேடயங்கள் வழங்கி கவுரவித்தார்.
நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் பேசும்போது,
“1954 ல் ‘அந்தநாள்’ படம் எடுத்தபோது அதில் ஒரு உதவி இயக்குநராக வேலை பார்த்தவர் முக்தா சீனிவாசன் அவர்கள். 1957- ல் அவர் முதலாளி என்ற படம் எடுத்தார் .அதில் வரும் ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே’, பாடல் தமிழ் நாட்டையே கலக்கியது. தேவிகா அதில் அறிமுகமானார் . அந்தப் படத்தை நான் எட்டாவது படிக்கும்போது ஒரு பள்ளிச் சிறுவனாக இருந்து பார்த்தவன். அதற்குப் பிறகு 12 வது முடித்து ஓவியக் கல்லூரி முடித்து சினிமாவுக்கு வந்தபோது அதே தேவிகா எனக்கு ஜோடியாக நடித்தார். “இந்தப் பையனா ஹீரோ? “என்று என்னை இளக்காரமாக அவர் பார்த்தது இன்னும் என் நினைவில் இருக்கிறது. 1961-ல் முக்தா சொந்தக் கம்பெனி தொடங்கினார். அதில் ஜெமினி கணேசன் சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். அவர் முக்தா பிலிம்ஸின் ஆரம்ப காலத்தில் ஆதரவாக இருந்தவர் என்பதை மறக்க முடியாது.
ஏ.ஜி.எஸ் ஆபீஸில் வேலை பார்த்து வந்த கே பாலச்சந்தர் லாஸ் ஆப் பேயில் சம்பளமில்லாமல் நிறைய லீவ் போட்டுவிட்டு சினிமாவில் ஈடுபட்டார். அப்படி வந்த அவர் முக்தா நிறுவனத்துக்காக ‘பூஜைக்கு வந்த மலர்’ என்ற படத்தில் வசனம் எழுதினார். சினிமாவை நம்பி வேலையை விடுவதா? சினிமாவை நம்பலாமா என்று குடும்ப நிலைமையை நினைத்து கவலையாக இருந்தார். முக்தா வீட்டிலிருந்து மாதம் 500 ரூபாய் வரும். அதனால் வீடு நிம்மதி அடைந்தது . அப்படி கே.பிக்கு தைரியம் கொடுத்தது முக்தா நிறுவனம்
அப்படி ஒரு முறை சொன்னால் சொன்னபடி சரியாக இருப்பவர்கள்தான் முக்தா நிறுவனத்தினர்.

‘சூரியகாந்தி’ படம் எடுத்தார்கள். கதாநாயகன் முத்துராமன். ஜெயலலிதா நடித்திருந்தார். இந்தப் படத்தின் நூறாவது நாள் விழாவில் எப்போதும் சினிமாவை வெறுக்கும், சினிமாவை விமர்சிக்கக் கூடிய பெரியார் கலந்து கொண்டு சிறப்பித்தார் .அது பெரிய பெருமை.
இந்த நிறுவனத்தில் சிவாஜி 11 படங்கள் நடித்தார். ரஜினி ஒரு படத்தில் நடித்துள்ளார் .கமல் இரண்டு படங்களில் நடித்தார். நான் இரண்டு படங்களில் நடித்தேன். இங்கே நேர்மை நாணயம் உழைப்பு என்று எழுதப்பட்டு இருந்தது .அதற்கு உண்மையான உதாரணமாக இருந்தவர்தான் முக்தா சீனிவாசன் அவர்கள். சினிமாவில் சொன்ன சொல்லை யாரும் காப்பாற்றுவது இல்லை. ஆனால் இந்த விஷயத்தில் சினிமாவில் மூன்று பேர் விதிவிலக்காக உறுதியாக இருந்தார்கள். மாடர்ன் தியேட்டர்ஸ், சின்னப்ப தேவரின் தேவர் பிலிம்ஸ் , முக்தா பிலிம்ஸ் நிறுவனம்.இந்த மூன்று நிறுவனங்களிலும் சொன்ன சொல்லைக் கடைசி வரை காப்பாற்றினார்கள்.

முக்தா அவர்கள் படத்தில் நான் ‘அவன் அவள் அது’ படத்தில் நடித்தபோது சம்பளம் பேச முக்தா சீனிவாசனின் சகோதரர் ராமசாமி வந்தார் .உதாரணமாக நான் 25 ஆயிரம் ரூபாய் கேட்டால் அவர் 15 ஆயிரம் என்றார். என் சம்பளத்தை முடிவு செய்வதற்கு நீங்கள் யாரென்று சண்டைபோட்டேன். போய் விட்டார். 15 நாள் கழித்து வந்தார். படத்தின் படப்பிடிப்பு நாட்கள் ,பிலிம் ரோல்கள் என்று பட்ஜெட் எல்லாம் சொல்லி சமாதானப்படுத்தி அவர் கேட்ட தொகைக்கே நடிக்க வைத்து விட்டார். சிக்கனமாக இருப்பார்கள்.ஆனால் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவார்கள்.
40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தும் திட்டங்கள் எல்லாம் சொல்லி என்னை சமாதானப்படுத்தி விட்டார். நான் சண்டை போட்டாலும் என்னை சமாதானப்படுத்தி நடிக்க வைத்து விட்டார் ராமசாமி. அப்படி ஒரு நிர்வாகி அவர்.

நான்’ ராமன் பரசுராமன் ‘படத்தில் நடிக்க சிங்கப்பூர், ஜப்பான் என்று வெளிநாடு போனபோது முக்தா அவர்கள் படத்திற்கு வருவதற்கு ஒருநாள் தாமதமானது. பதற்றமானார்கள். கோபப்பட்டார்கள். முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாத சூழல். உடன் நடிக்கும் லட்சுமி ,நிழல்கள் ரவி காத்திருக்கவேண்டும். நான் அவர்களைச் சமாதானப் படுத்தி விடுகிறேன் என்றேன். அவர்களைச் சமாதானப்படுத்தி நான் முதல் நாள் படப்பிடிப்பு நடத்தச் சொன்னேன். வெளிநாட்டிலிருந்து வந்த நான் தாமதமாகச் செல்கிறோமே என்ற குற்ற உணர்ச்சியோடு படப்பிடிப்பிற்குப் போனேன். நான் நுழையும்போதே என் கையில் சொன்னபடி பணத்தை திணித்தார் ராமசாமி .இதுதான் அவர்களின் நாணயம்.
படப்பிடிப்பிலும் திட்டமிட்டு நடத்துவதால் சிக்கனமாக நடத்துவார்கள் .காஷ்மீருக்கு படப்பிடிப்பு என்றால் நாலாவது நாள் குழு சென்றால் ஆறுநாட்கள் முன்பே சமையல் தட்டுமுட்டு சாமான்கள் எல்லாம் அனுப்பி விடுவார்கள்.

நான் வாஹினி ஸ்டுடியோவில் ஒரு படத்தில் சத்யராஜுடன் சேற்றில் புரண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்தேன். அப்போது அந்த நிலையில் என் ஜெர்க்கின் பையில் பணத்தை திணித்துவிட்டு போனார். அவர்தான் ராமசாமி கொடுக்க வேண்டிய பாக்கிப் பணம் அது.எப்படி இருந்தாலும் எங்கிருந்தாலும் முக்தாவின் பணம் தேடி வந்துவிடும். அப்படிப்பட்ட வார்த்தை நாணயத்துக்குச் சொந்தக்காரர்கள் தான் அவர்கள்.

ஒழுக்கத்திற்கு சீனிவாசன் என்றால் நேர்மைக்கு ராமசாமி .இப்படிப்பட்ட மகா மனிதர்கள் சம்பந்தப்பட்ட விழாவில் நானும் கலந்து கொண்டு பேசியதற்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி கூறி விடைபெறுகிறேன் நன்றி. ” என்றார்.

இந்த விழாவில் பழம்பெரும் நடிகைகள் செளகார் ஜானகி, வாணிஸ்ரீ, சங்கீதா, சச்சு ,எஸ். என். லட்சுமி, சத்யப்ரியா, நடிகர்கள் ராஜேஷ், ராதாரவி, எஸ்.வி .சேகர் , ஒய்.ஜி.மகேந்திரன், கிரேஸி பாலாஜி, ஆனந்த்பாபு, தயாரிப்பாளர் ஜெயந்தி கண்ணப்பன் , திருமதி லதா ரஜினிகாந்த், இயக்குநர்கள் சந்தான பாரதி, சித்ரா லெட்சுமணன்,பாடகிகள் பி. சுசிலா, எல் .ஆர். ஈஸ்வரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாட்டை முக்தா ராமசாமி குடும்பத்தினர் மற்றும் முக்தா சீனிவாசன் குடும்பத்தினர் இணைந்து செய்திருந்தார்கள் .
விழாவில் கலந்து கொண்ட மூத்த கலைஞர்கள் தங்களுக்குள் கலந்துரையாடி மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர் . இதுபார்ப்பதற்கு ஒரு குடும்ப விழா போலவே இருந்தது.

பட்டைய கிளப்பும் “பட்டாஸ்” படத்தின் “ஜிகிடி கில்லாடி” சிங்கிள் பாடல்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் “பட்டாஸ்” படம் அதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் பாடல்கள் மூலம் கொண்டாட்ட அதிர்வலைகளை ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது. முதல் சிங்கிளான “ஜில் ப்ரோ” மற்றும் இரண்டாவதாக வெளியான “மொரட்டு தமிழன்டா” இரண்டும் பெரு வெற்றி பெற்ற நிலையில் இப்போது மூன்றாவதாக அனிருத் குரலில் வெளியாகியிருக்கும் “ஜிகிடி கில்லாடி” சிங்கிள் பாடல் ஒரே இரவில் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனங்களை கவர்ந்திழுத்து பெரு வெற்றியடைந்துள்ளது. “பட்டாஸ்” படத்தின் மூன்று பாடல்களும் ரசிகர்களின் ஃபேவரைட்டாக மாறியது இசையமைப்பாளர்களான விவேக், மெர்வின் குழுவை இன்பத்தின் உச்சிக்கு அழைத்து சென்றிருக்கிறது. மேலும் அவர்களது நெருங்கிய நண்பரான அனிருத்துடன் இணைந்து இப்பாடல் உருவாகியிருப்பது, அவர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

அனிருத்துடன் இணைந்து பணியாற்றியது குறித்து இசையமைப்பாளர் விவேக் கூறியதாவது…

அனிருத் எப்போதும் எங்களுக்கு நண்பருக்கு மேலானவர். அவர் எங்களின் சகோதரர் போன்றவர். அவரை எங்கள் இசையில் பாட வைப்பது எங்களது நெடுநாளைய கனவு. ஜிகிடி கில்லாடியில் அது நிறைவேறியிருப்பது எங்களுக்கு பெரு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. “ஜிகிடி கில்லாடி” பாடல் எங்கள் மனதுக்கு நெருக்கமான ஒன்று. தனுஷ் அனிருத் கூட்டணி என்பது எப்போதும் வெற்றி கூட்டணி. இப்பாடலின் அசுர வெற்றி அதனை மீண்டும் நிரூபித்து எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியிருக்கிறது என்றார்.

“பட்டாஸ்” படத்தில் பணிபுரிந்தது குறித்து விவேக் கூறியாதவது…

நாங்கள் இருவரும் தனுஷ் சாரின் “பட்டாஸ்” படத்தில் கடந்த 8 முதல் 9 மாதங்களாக பணிபுரிந்து வருகிறோம். இந்த பயணத்தின் ஒவ்வொரு நொடியும் பெரும் மகிழ்சியானதாகவே இருந்திருக்கிறது. பாடல்களை உருவாக்க ஆரம்பித்த தருணம் முதல் இப்போது ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கும் இந்த தருணம் வரை எங்களுக்கு மகிழ்ச்சியின் பயணமாகவே அமைந்துள்ளது. ஒரு வகையில் இந்த பணியில் எங்கள் முன் மிகப்பெரிய பொறுப்பு இருந்தது. நானும் மெர்வினும் ஒரு விசயத்தில் உறுதியாக இருந்தோம் நாங்கள் செய்யும் பாடல்களில் புதுமையையும், நேர்த்தியையும், பாடலுக்குரிய நியாயத்தையும் உண்மையாக தர உழைத்தோம். எந்த இடத்திலும் இது எங்களது முந்தைய பாடல்களை பிரதிபலித்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். “பட்டாஸ்” எங்கள் சினிமா பயணத்தில் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. இப்போது மூன்று பாடல்களும் மிகப்பெரிய வெற்றிபெற்றிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறது. மற்ற பாடல்களும் இதே போன்று இனிமையானதாக, புத்துணர்வு தரும் பாடல்களாக இருக்கும். என்றார்.

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் T.G. தியாகராஜன் தயாரிக்க இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ள “பட்டாஸ்” படத்தில் தனுஷ் இரு வேடங்களில் நடித்திருக்கிறார். மெஹ்ரீன் பிர்ஸாடா, சினேகா இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். நவீன் சந்திரா எதிர்மறை நாயகன் பாத்திரத்தில் நடித்துள்ளார். 2020 ஜனவரி 16 வெளியாகும் இப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லரை பிரமாண்டமாக வெளியிட தயாரிப்பு தரப்பு திட்டமிட்டு வருகிறது.

சாலை பாதுகாப்பு படிப்பில் Ph.D முடித்து படம் இயக்கிய Dr மாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: புதுமுகங்கள் டாக்டர் மாறன், ‘அம்மணி’ புகழ் ஸ்ரீமகேஷ், தீஷா, தாரா, மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, ‘போஸ்டர்’ நந்தகுமார், விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயன், ராதா, மடிப்பாக்கம் சுரேஷ், கன்னட பட உலகில் கதாநாயகியாக நடித்து வரும் ரூபிகா, நடன இயக்குனர் சிவசங்கர்.

தொழில்நுட்பக் கலைஞர்கள் : தயாரிப்பு: டிஜி திங்க் மீடியா ஒர்க்ஸ் சார்பில் டாக்டர் சி.மணிமேகலை,

கதை, திரைக்கதை, வசனம் இயக்கம்: டாக்டர் மாறன், இசை: ‘வேதம் புதிது’ தேவேந்திரன், பாடல்கள்: விஜய்சாகர், டாக்டர் கிருதயா, இயக்குநர் டாக்டர் மாறன், நடனம்: சிவசங்கர், சந்திரிக்கா, களை: நடராஜ், ஒளிப்பதிவு: பாலாஜி, படத்தொகுப்பு: சுரேஷ் அர்ஸ்,

திரைப்பட கல்லூரியிலும் படித்து பட்டயம் பெற்றுள்ள டாக்டர் மாறன், ‘இனிய பயணம்’, ‘பொன்னான நேரம்’ என இரு குறும் படங்களை இயக்கி உள்ளார்.

எஸ்.ஆர்.எம் பல்கலைகழத்தில் பி.எச்.டி. (Ph.D) படித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ள இவர், இவருடைய சாலை பாதுகாப்பு ஆய்வறிக்கையின்படி பொதுமக்கள் பலன் அமையும் வகையில் “பச்சை விளக்கு” படத்தை சுவராஸ்யமாக திரைக்கதை அமைத்து இயக்கி உள்ளார்.

படம் பற்றி இயக்குனர் டாக்டர் மாறன் கூறும்போது,

“விதி மீறிய காதலும், விதி மீறிய பயணமும் ஊர் போய் சேராது என்பதை இந்தப் படம் விளக்கும். காவல்துறை குறித்து எத்தனையோ படங்கள் வெளி வந்திருந்தாலும் அதில் புதுமையான கதையுடன் இந்தப் படம் இருக்கும்.

காவல் துறையின் ஒரு பிரிவின் பெருமையை போற்றும் பாடமாகவும் இந்தப் படம் இருக்கும். இந்தப் படத்தின் கருத்தை இதுவரை எந்த மொழியிலும் சொல்லவில்லை.

இமான் அண்ணாச்சி தனது வழக்கமான பாணியில் மிகுந்த நகைச்சுவை கலந்து சாலை பாதுகாப்பு விதிகளை மக்கள் ரசிக்கும்படி சொல்லி நடித்திருக்கிறார்.

மனோபாலா காமடி வயிறு குலுங்கும்படி சிறப்பாக அமைந்துள்ளது. நெல்லை சிவா, நாஞ்சில் விஜயன் காமடி காட்சிகள் என்றும் பேசும்படி அமைந்து இருப்பது மேலும் ஒரு சிறப்பாகும்.

இந்தப் படத்தில் என்னுடன் ‘அம்மணி’ புகழ் மகேஷ் இன்னொரு நாயகனாக நடித்திருக்கிறார்.

அவருடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் அற்புதமான வேடம். கதாநாயகி தீஷா மிக அருமையாக நடித்து அந்தப் பாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளார். மற்றொரு நாயகியான தாரா தனது சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்.

இந்தப் படத்தில் ‘வேதம் புதிது’ பட புகழ் தேவேந்திரன் இசையில் நான்கு பாடல்கள் உருவாகி உள்ளன. பாடல்களை விஜய்சாகர், டாக்டர் கிருதயா, நான் ஆகியோர் எழுதி உள்ளோம்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, திருப்போரூர், திருவண்ணாமலை உட்பட பல இடங்களில் படமாக்கி இருக்கிறேன். இந்தப் படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து மக்களும் பார்க்க வேண்டிய திரைப்படமாக உருவாகி உள்ளது” என்று தெரிவித்தார்.

Maran completed PhD in Traffic rules and directed Pachai Vilakku

 

ரிஷி ரித்விக் & பிரேர்னா இரண்டு பேர் மட்டுமே நடித்த த்ரில்லர் ‘டோலா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இரண்டு கலைஞர்களை மட்டுமே வைத்து ஹாரர் திரில்லர் படமாக வெறும் 10 நாட்களில் உருவாகியிருக்கும் ‘டோலா’ படத்தின் வெளியீட்டு விழா இன்று (25.12.2019) நடைபெற்றது.

அவ்விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர்கள் மற்றும் சிறப்பு விருந்திருனர்கள் பேசியதாவது

தயாரிப்பாளர் டாக்டர் ஷாம் குமார் பேசும்போது,

நான் இந்த இடத்திற்கு வருவதற்கு காரணம் என் நண்பர்கள் தான். ஊக்குவிக்க முடியவில்லையென்றாலும் கைதட்டி விடாமலாவது இருங்கள். தயாரிப்பாளர்களை வரவேற்க வேண்டும்.

அப்போது தான் பெரிய படங்கள் உருவாகும். ஒரு ஜிம் பாயாக வந்தவன் இன்று தயாரிப்பாளராக நிற்கிறேன். அதுதான் சினிமா. சினிமாவை நேசியுங்கள், அதேபோல் குடும்பத்திலுள்ளவர்களையும் நேசியுங்கள்.

நான் இந்த நிலைக்கு வருவதற்கு என் குடும்பமும் ஒரு காரணம். ஒரு நல்ல படம் தயாரிக்க வேண்டும் என்று நினைத்துதான் இப்படத்தை எடுத்தேன். இப்படத்திற்குப் பிறகு ‘ரகுடு’ என்ற கேங்ஸ்டர் படம் அதிகப் பொருட்செலவில் எடுக்கவிருக்கிறோம் என்றார்.

சண்டை பயிற்சியாளர் டேஞ்சர் மணி பேசும்போது,

சண்டைக் காட்சிகள் என்று தனியாக இல்லாமல் பாடலுடன் வருவதுபோல் வித்தியாசமாக செய்திருக்கிறோம். சிறுசிறு விஷயங்களை எடுத்து சண்டைக் காட்சிகளைப் படமாக்கியிருக்கிறோம். கதாநாயகன் அட்டு டூப் போடாமல் நடித்திருக்கிறார் என்றார்.

கதாநாயகன் ரிஷி ரித்விக் பேசும்போது,

இந்த படத்தில் நாயகனாக நடிப்பதற்கு என்னை அழைத்து கதை கூறினார்கள். இரண்டு பேர் தான் என்றாலும் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஒளிப்பதிவாளர், இயக்குநர் மற்றும் அனைவரின் கடுமையான உழைப்பால் 10 நாட்களுக்குள் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். சினிமாத் துறையில் வித்தியாசமாகவும், சிறப்பாகவும் செய்தால் தான் நிலைத்து நிற்க முடியும்.

மேலும், சண்டைக் காட்சிகளில் நான் நன்றாக நடித்திருப்பதற்கு பாண்டியன் மாஸ்டர் தான் காரணம். சிலம்பம் முதல் எனக்கு அனைத்தையும் கற்றுக் கொடுத்தார்கள். நாயகி பிரேர்னாவும் சண்டைக்காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார் என்றார்.

இசையமைப்பாளர் அணில் மற்றும் மணி பேசும்போது,

இப்படத்தில் நாங்கள் இருவரும் இணைந்து இசையமைத்திருக்கிறோம். ஹாரர் திரில்லர் படம் என்பதால் எந்த இடத்திற்கு என்ன மாதிரியான இசையைக் கொடுக்க வேண்டுமென்று ஆலோசித்து செய்திருக்கிறோம் என்றார்.

கதாநாயகி பிரேர்னா பேசும்போது,

இயக்குநர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். எனக்கு தமிழ் தெரியாததால் கதாநாயகன் ரிஷி ரித்விக் படப்பிடிப்பில் எனக்கு மிகவும் உதவி புரிந்தார் என்றார்.

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது,

‘டோலா’ படத்தின் டிரைலரைப் பார்க்கும்போது இயக்குநர் நன்றாக இயக்கியிருக்கிறார் என்பது தெரிகிறது. இசையும் நன்றாக இருக்கிறது.

இக்காலகட்டத்தில் சிறிய படம், பெரிய படம் என்ற வித்தியாசமில்லை. கதை நன்றாக இருந்தால் எந்த பட்ஜெட் படமாக இருந்தாலும் வெற்றியடையும் என்றார்.

‘ஜாகுவார்’ தங்கம் பேசும்போது,

‘டோலா’ படத்தை 10 நாட்களிலேயே படத்தின் படப்பிடிப்பை முடித்திருக்கிறார்கள். நானும், பாக்யராஜும் நாமும் இதுபோன்று குறைந்த நாட்களில் ஒரு படத்தை எடுக்க வேண்டுமென்று பேசிக்கொண்டிருந்தேன்.

கதாநாயகன் ரிஷியை 4 வருடங்களாக தெரியும். அமைதியான பண்புள்ள மனிதர். அவர் குணத்திற்கு நிச்சயம் வெற்றிபெறுவார்.

இப்படத்தின் டிரைலரையும், பாடல்களையும் பார்க்கும்போது ஒரு சில காட்சிகளில் பயம் ஏற்படும் அளவிற்கு சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள். இவர்களின் கடின உழைப்பிற்கு இப்படம் நிச்சயம் வெற்றிபெறும்.

நானும், கே.ராஜனும் சிறிய பட்ஜெட் படங்களுக்கு 100 திரையரங்கம் கிடைக்க வேண்டுமென்று போராடிக் கொண்டிருக்கிறோம்,

திரைப்படங்களில் மது அருந்துவது போன்ற காட்சிகளை எடுக்காதீர்கள். குறைந்தபட்சம் கதாநாயகனாகனாவது மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிக்காமல் இருக்க வேண்டும் என்றார்.

இயக்குநர் கஸ்தூரி ராஜா பேசும்போது,

தயாரிப்பாளருக்கு முதல் படம் எடுப்பது சாதாரண விஷயம் கிடையாது. அதிலும், படம் வெளியிடும் அளவிற்கு வருவதே வெற்றி தான். நடிப்பதில் பெரிய கலை இயக்குநரின் கருவை உள்வாங்கி முகபாவனை கொடுப்பதற்கு திறமை வேண்டும்.

அந்த பணியைச் செவ்வனே செய்திருக்கிறார் நாயகி பிரேர்னா. நாயகன் ரிஷியும் நாயகியுடன் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார். அணில் மற்றும் மணி இருவரும் நன்றாக இசையமைத்திருக்கிறார் என்றார்.

இயக்குநர் ஆதிசந்திரன் பேசும்போது,

இப்படத்தைப் பற்றி பேசுவதற்கு பல விஷயங்கள் இருக்கின்றது. நான் ஏகலைவன் போல் இயக்குநர் பாக்யராஜிடம் இயக்கத்தைக் கற்றுக் கொண்டேன்.

பொதுவாக நான் பாடல்களிலும், இசையிலும் தலையிடுவேன். என் விருப்பத்திற்கேற்றாற்போல் இசையமைத்துக் கொடுத்த அணில் மற்றும் மணி இருவருக்கும் நன்றி. ஒளிப்பதிவாளரைப் பற்றி காட்சிகளே கூறும். தயாரிப்பாளர் ஷாம் நல்ல மனிதர் என்றார்.

நடிகர் சரண்ராஜ் பேசும்போது,

என்னையும் என் மகனையும் வைத்து ‘ரகுடு’ படத்தைத் தயாரிக்கிறார் ஷாம்குமார். அசோக் இப்படத்தை இயக்குகிறார். இந்த வாய்ப்பைக் கொடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நன்றி.

இயக்குநர் பாக்யராஜ் படம் இயக்குவதாக இருந்தால் நான் அப்படத்தை தயாரிப்பேன். கதாநாயகன் யாராக இருந்தாலும் நான் தயாரிப்பேன் என்றார்.

இயக்குநர் பாக்யராஜ் பேசும்போது,

‘டோலா’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களைப் பார்க்கும்போது ஒரு சிலரைத் தவிர மற்ற அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் புதுமுகம் தான். காட்சி அமைப்புகளைப் பார்க்கும்போது ஒளிப்பதிவாளருக்கு இது முதல் படம் மாதிரி தெரியவில்லை.

கதாநாயகியும் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். எப்போதும் நல்ல கதையம்சம் கொண்ட படம் வெற்றிபெறும். இப்படமும் வெற்றிபெற வாழ்த்துக்கள் என்றார்.

‘டோலா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் நிறைவாக ‘டோலா’ படத்தின் இசைத் தகடு வெளியிடப்பட்டது. அதன்பின்பு ஜோக்கர்ஸ் கிரியேஷன்ஸ்-ன் இரண்டாவது தயாரிப்பான ‘ரகுடு’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது.

Rishi Rithvik and Prerna starring Dola movie

More Articles
Follows