மேஜிக்மேனும் டாக்டரும் இணைந்து மருத்துவ ஊழலை சொல்லும் மெர்சல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்க, ஏஆர். ரஹ்மான் இசையமைப்பில் விஜய் நடித்துள்ள படம் மெர்சல்.

தமிழக சென்சாரில் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் அக்டோபர் 18ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகவுள்ளது.

எனவே வெளிநாட்டுக்கு படத்தை அனுப்பும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

அங்கு பிரிட்டிஷ் சென்சார் குழுவினர் படத்தைப் பார்த்துள்ளனர்.

பெரும்பாலும் ஒரு படம் சென்சார் செய்து முடிக்கப்பட்டால், அந்த பட தகவல்களை அவர்களின் இணையத்தில் வெளியிடுவது வழக்கமான ஒன்றாம்.

இந்நிலையில் ‘மெர்சல்’ படம் குறித்து பிரிட்டிஷ் சென்சார் குழுவினர் குறிப்பிட்டுள்ளதாவது…

மெர்சல் இது ஒரு தமிழ் த்ரில்லர் படம். ஒரு மேஜிக் மேன் மற்றும் டாக்டரும் இணைகின்றனர்.

அவர்கள் இருவரும் இந்திய மருத்துவ துறையில் நடக்கும் ஊழலை மக்கள் அறிய கொண்டு வருகின்றனர்.
படத்தில் ஆக்சன் காட்சிகள் வன்முறை இருக்கும்” என பதிவிட்டுள்ளனர்.

British censor team revealed Mersal story outline

அட அஜித் மகளா இது..; ஆச்சரியத்தில தல ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2015ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான படம் என்னை அறிந்தால்.

இதில் அஜித், த்ரிஷாவின் மகளாக நடித்தவர் பேபி அனிகா.

இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் இவரின் ஒரு புதிய படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் சிறுமியாக இருந்தவர் இதில் பெரிய பெண் லுக்கில் இருக்கிறார்.

அட… அஜித்தின் மகளாக நடித்தவரா? இப்படி ஆகிட்டார்? என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

மேலும் சில ரசிகர்கள் விளம்பர பாணியில்.. ஒரு வேளை காம்ப்ளன் குடித்து நன்றாக வளர்ந்திருப்பாரோ? எனவும் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.

விவேகத்தை விட மெர்சலுக்கு குறைந்த காட்சிகளை ஒதுக்கிய தியேட்டர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்துள்ள மெர்சல் படம் அக். 18ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இப்படம் உலகம் முழுவதும் 3500 தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளது என்பதை பார்த்தோம்.

ஆனால் சில மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டர்களில் மெர்சலுக்கு குறைவான காட்சிகளே ஒதுக்கப்பட்டுள்ளதாம்.

அதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது மெர்சல் படத்தின் ரன்னிங் டைம்தானாம்.

ஆனால், சில மாதங்களுக்கு முன் வெளியான விவேகம் படத்திற்கு நிறைய காட்சிகளை ஒதுக்கியிருந்தார்கள்.

ஏனென்றால் விவேகம் 2 மணி நேரம் 28 நிமிடம்தான் இருந்தது.

ஆனால், மெர்சல் 2 மணி நேரம் 43 நிமிடம் ஓடக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

Mersal will be screened less than Vivegam shows in Multiplex

ரசிகர்கள் கிண்டலை தவிர்க்க ஜுலிக்கு சமுத்திரக்கனி அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிவு மறைவு இல்லாத நடவடிக்கையால் ரசிகர்களிடையே ஓவர் பாப்புலர் ஆனார் ஓவியா.

ஆனால் இவருக்கு நேர் எதிராக நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றவர் ஜல்லிக்கட்டு போராட்ட புகழ் ஜுலி.

இவர் தற்போது எங்கு சென்றாலும், எந்த நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டாலும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் கலந்துக்கொண்ட ஒரு நிகழ்ச்சியில் இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனியும் கலந்துக்கொண்டார்.

அப்போது ஜுலியை சந்தித்த அவர், என்ன கிண்டல் செய்தாலும், நீ எதையும் பொருட்படுத்தாமல் இருந்துவிடு. நாளடைவில் அவர்களே அதை மறந்துவிடுவார்கள் என்று அட்வைஸ் கூறியுள்ளார்.

Samuthirakani advice to Bigg Boss fame Julie

சிங்கம் சிங்கிளாத்தான் வரும்; ரஜினி டயலாக்கை கலாய்த்த சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் முதன்முறையாக நடித்த படம் சிவாஜி தி பாஸ்.

இப்படத்தில் ஒரு காட்சியில் போஸ்வெங்கட் ரஜினியை பார்த்து தனியா வந்து மாட்டிக்கிட்டியே என்பார்.

அதற்கு ரஜினி தன் ஸ்டைலில்… கண்ணா.. பன்னிங்கதான் கூட்டமா வரும். சிங்கம் சிங்கிளதான் வரும் என்பார்.

இந்த பன்ச் டயலாக் செம ஹிட்டாது.

இந்நிலையில் சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம் சக்க போடு போடு ராஜா.

சிம்பு இசையமைத்துள்ள இப்படத்தை விடிவி கணேஷ் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் இன்று சற்றுமுன் வெளியானது.

இதில்… ஒரு சண்டைகாட்சியில் சிவாஜி பட காட்சியைப் போல், சிங்கிளா வந்து மாட்டிக்கிட்டியே என்பார் ஒருவர்.

அவரை அடித்துவிட்டு சந்தானம் பன்ச் டயலாக் பேசுவார்.

பன்ச் டயலாக் பேசிட்டு அடிப்பது அப்போ. இப்போ பன்ச் டயலாக் பேசுவறன அடிக்கிறது இப்போ என்று பேசுவது போல் உள்ளது.

இது ரஜினி டயலாக்கை கலாய்ப்பது போல் உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Santhanam made fun of Rajini punch dialogue

மெர்சல் வழக்கு எதிரொலி; 2600 இணையதளங்களுக்கு கோர்ட் தடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீதேனாண்டாள் பிலம்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள மெர்சல் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படம் வருகிற அக். 18ல் உலகமெங்கும் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்…

மெர்சல் படத்திற்கு கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளோம். புதுப்படங்களை திருட்டுத்தனமாக இணையத்தளங்களில் வெளியிடுவதால் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.

எனவே மெர்சல் படத்தை திருட்டுத்தனமாக வெயியிடும் இணையத்தளங்களை தடை செய்ய கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த அனிதா சுமந்த் தீர்ப்பில் கூறியதாவது…

மெர்சல் படத்தை திருட்டுத்தனமாக வெளியிடுவதற்கு 2600 இணையத்தள சேசை நிறுவனங்களுக்கு தடை விதித்தார்.

மேலும் இது தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

More Articles
Follows