அஜித் படத்தில் நடிக்க ஆர்ட்டிஸ்ட் தேவை.?; கடுப்பான போனி கபூர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேர் கொண்ட பார்வை படத்தை அடுத்து மீண்டும் அஜித்துடன் இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் இணைந்துள்ளனர்.

இப்படத்திற்கு தற்காலிகமாக தல 60 எனப் பெயரிட்டுள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தில் நடிக்க நடிகர்கள் தேவை என ஒரு விளம்பரம் வேகமாக பரவியது.

ஆனால் இதை படத்தயாரிப்பாளர் மறுத்துள்ளார்.

இப்படியொரு தவறான செய்தியை வெளியிட்டவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

பிகில் டிரைலரை பாராட்டிய ராஜபக்சே மகன்; விஜய் ரசிகர்கள் கடுப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்ககத்தில் விஜய் நடித்துள்ள பிகில் பட டிரைலர் அக்டோபர் 12ஆம் தேதி வெளியானது.

இந்த டிரைலரை ஒரு சிலர் நெகட்டிவ்வாக விமர்சித்தாலும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த ட்ரெய்லரை பாராட்டி, இலங்கை ராஜபக்சேவின் மூத்த மகன் நாமல் ராஜபக்சே ட்விட் செய்துள்ளார்.

அதில், தேர்தலுக்கு பின் முடிவுக்காக காத்திருக்கவேண்டும், ஆனால் எனக்கு பிடித்த விஜய்யின் புதிய படம் பிகில் இந்த மாதம் ரிலீசாகிறது, அதனை பார்க்க காத்திருக்க முடியவில்லை.

கட்டாயம் இப்படம் விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு கொண்டாட்டம் தான்.’ என பதிவிட்டுள்ளார்.

இருந்தபோதிலும் விஜய் ரசிகர்கள் அவரை அசிங்கமாக திட்டி வருகின்றனர்.

அதில் சில பதிவுகள் இதோ…

விஷால் திருமணம் எப்போது.? ஜிகே ரெட்டி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சங்கம் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பிறகுதான் தன் திருமணம் என விஷால் அறிவித்திருந்தார்.

அதன்படி விஷாலுக்கும்; பிரபல தொழிலதிபரின் மகளான அனிஷா ரெட்டிக்கும், கடந்த மார்ச் 18ல், நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

ஆனால் விஷாலின் கெட்ட காலமோ என்னவோ? பல மாதங்களுக்கு முன் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் கூட இன்னும் வெளியாகவில்லை.

தேர்தல் முடிவுகள் வந்த பின்னரே சங்க கட்டிட பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில் விஷாலின் திருமணம் பற்றி ஜிகே ரெட்டி பற்றி கூறியதாவது…

“நடிகர் சங்கத் தேர்தல்கள் ஓட்டுக்கள் எப்போது எண்ணப்படும் என தெரியவில்லை. எப்போது இருந்தாலும் விஷால் அணி வெற்றி பெறும்.

அதன்பின்னர் கட்டப்படும் நடிகர் சங்க கட்டிடத்தில் விஷால் திருமணம் பார் போற்ற நடைபெறும். அதுவரை பொறுமை தேவை.” இவ்வாறு ரெட்டி கூறியிருக்கிறார்.

90 வயதிலும் நடிக்கும் சாருஹாசனுக்கு சாதனையாளர் விருது வழங்க விஜய்ஸ்ரீ கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளவர் சாருஹாசன். தேசிய விருதுகளையும் பல மாநில விருதுகளை வென்றிருக்கிறார்.

இவர் நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் என்பது நாம் அறிந்த ஒன்றுதான். இவருக்கு தற்போது 90 வயது ஆகிறது.

சில காலங்களாக நடிப்பதை நிறுத்திக் கொண்ட இவரை தாதா 87 படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு கொண்டு வந்தவர் இயக்குனர் விஜய்ஸ்ரீ.

பெண்களை அனுமதியின்றி தொடுவது குற்றம் என்ற எச்சரிக்கை வாசகம் இந்திய சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக இப்படத்திற்காக பயன்படுத்தப்பட்டது.

இந்த படம் அனைத்து தரப்பு மக்களின் பாராட்டையும் பெற்றது.

இந்த நிலையில் சாருஹாசனுக்கு மத்திய அரசின் உயரிய விருதான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட வேண்டும், அதற்கு தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என விஜய் ஸ்ரீ ஜி தெரிவித்துள்ளார்.

90 வயதிலும் தொடர்ந்து நடிக்கும் அவர் இந்திய சினிமா வரலாற்றில் மிகவும் வயதான நடிகராக வாழ்கிறார்.

அவருக்கு மத்திய அரசின் சாதனையாளர் விருது வழங்க தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என தன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

DhaDha 87 director Vijaysris request to TN Govt

தளபதி 64 படத்திலிருந்து விலகிய தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 நடித்து வருகிறார் விஜய்.

இவருடன் விஜய்சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்டனி வர்க்கீஸ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைக்க விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் விலகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

படக்குழுவினருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, படத்தயாரிப்பு பணியில் இருந்து அவர் விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

Producer Xavier Britto is out of Thalapathy 64 movie

மீண்டும் சந்தானத்துடன் இணையும் ‘ஏ1 ஆபாயில்’ மாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சந்தானம் ஹீரேவாக நடித்து இறுதியாக வெளியான படம் ஏ1. இந்த படத்தில் ஹீரோயினாக தாரா அலிஷா நடித்திருந்தார்.

ஒரு காட்சியில் ஆபாயில் சாப்பிட்டால்தான் காதல் என சந்தானம் கண்டிசன் போடுவார். அப்போது ஆபாயில் சாப்பிடவும் தயாராக இருப்பார் இந்த ஐயர் ஆத்து மாமி.

இந்த நிலையில் தற்போது சந்தானம் நடித்து வரும் படத்திற்கும் இந்த நடிகையை சிபாரிசு செய்திருக்கிறாராம்.

ஜெயம்கொண்டான் கண்ணன் இயக்கும் இந்த படத்தில் தாரா அலிஷா தான் நாயகியாம்.

மற்றொரு நாயகியாக சுவாதி என்பவர் நடிக்கிறார்.

டகால்டி, டிக்கிலோனா ஆகிய படங்களும் சந்தானம் நடிப்பில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

A1 fame Tara Alisha again joins with Santhanam

More Articles
Follows