பப்ஜிக்கு தடை…; FAUG வீடியோ கேம் ஆரம்பித்து அக்‌ஷய்குமார் நிதியுதவி

பப்ஜிக்கு தடை…; FAUG வீடியோ கேம் ஆரம்பித்து அக்‌ஷய்குமார் நிதியுதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

faug video game akshay kumarஇளைஞர் சமுதாயத்தை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் பப்ஜி, கட் கட் உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

இந்த செய்தியை நம் தளத்தில் ஓரிரு தினங்களுக்கு முன் ப்ரேக்கிங் செய்தியாக பார்த்தோம்.

இந்த நிலையில் பப்ஜிக்கு இணையாக FAU-G என்ற அதிரடி கேமை தொடங்குவதாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ஆத்மநிர்பர் இயக்கத்தின் கீழ் அச்சமற்ற மற்றும் யுனைடெட்-கார்ட்ஸ் எனும் FAU-G அதிரடி கேமை தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

“பொழுதுபோக்கு தவிர, இந்த கேம் விளையாடுபவர்கள் நமது ராணுவ வீரர்களின் தியாகங்களைப் பற்றியும் அறிந்து கொள்வார்கள்.

இந்த கேமின் நிகர வருவாயில் 20% பாரத் கே வீர் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கப்படும்” என அக்சய்குமார் குறிப்பிட்டுள்ளார்.

Bollywood super star Akshay Kumar announces the launch of action game FAU-G

தியேட்டர்கள் திறப்பு..: தென்னிந்தியாவை புறக்கணிக்கும் மத்திய அரசு.?

தியேட்டர்கள் திறப்பு..: தென்னிந்தியாவை புறக்கணிக்கும் மத்திய அரசு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

theatre opening in indiaகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன.

தற்போது 6 மாதங்களை கடந்துள்ள நிலையில் செப்டம்பர் 1 முதல் சினிமா சூட்டிங்கு அனுமதி அளிக்கப்பட்டது.

எனவே தியேட்டர்கள் திறக்க அனுமதி கேட்டு வருகின்றனர் திரையுலகினர்.

இதனையடுத்து வரும் செப்டம்பர் 8ம் தேதியன்று புதுடில்லியில் இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதற்கான அழைப்பை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் மேற்கு வங்காளம், புதுடில்லி, உத்தரப்பிரதேசம், குஜராஜ்த், மகாராஷ்டிரா ஆகிய ஆகிய மாநிலங்களில் உள்ள சில சங்கங்களுக்கும், பிவிஆர் சினிமாஸ் நிறுவனத்திற்கும் மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

ஒரு ஆண்டிற்கு தமிழ், தெலுங்கு மலையாள, கன்னட உள்ளிட்ட மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களை தயாரிக்கின்றனர்.

ஆனால் தென்னிந்திய சினிமாவுக்கு இந்த ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

தென்னிந்தியத் திரையுலகம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தென்னிந்திய திரையுலக பிரபலங்களிடம் பெரும் சலசலப்பை உருவாக்கியது.

இதனையடுத்து இந்த தகவல் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் (NFDC) அகில இந்திய இயக்குனர் ராஜேஷ் கண்ணாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

எனவே உடனடியாக தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் அமைப்பை சார்ந்தவர்கள் அதே ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வழிவகை செய்யப்படும் என தெரிவித்திருக்கிறாராம்.

Kollywood condemns on theatre opening meeting by central government

‘பாட்டு’ போட்டு பஹத் பாசிலுடன் இணையும் அல்போன்ஸ் புத்திரன்

‘பாட்டு’ போட்டு பஹத் பாசிலுடன் இணையும் அல்போன்ஸ் புத்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

alphonse puthren fahadh faasilநேரம் மற்றும் பிரேமம் படங்களை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன்.

இந்த படங்களில் மலையாள நடிகர்களே நாயகன் நாயகியாக நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப கதைக்களத்தை அமைத்திருந்தார்.

இவரின் சூப்பர் ஹிட்டான பிரேமம் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தாலும் தமிழில் யாரும் ரீமேக் செய்ய முன்வரவில்லை.

காரணம் ஒரிஜினல் படத்திலேயே தமிழ் ரசிகர்களுக்கான காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் அல்போன்ஸ் புத்திரன் தன் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அடுத்த படத்தை இவரே இசையமைத்து இயக்கவிருக்கிறாராம். எனவே இந்த படத்திற்கு பாட்டு என தலைப்பு வைத்துள்ளார்.

இதில் பஹத் பாசில் நாயகனாக நடிக்க UGM எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இது மலையாள சினிமாக உருவாகுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.

Fahadh Faasil to act in Alphonse Puthren’s Paattu

ஒரு அறிவிப்பு தரப்போகிறோம் என்பதையே ஒரு அறிவிப்பாக்கும் சினிமாக்கள்

ஒரு அறிவிப்பு தரப்போகிறோம் என்பதையே ஒரு அறிவிப்பாக்கும் சினிமாக்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

movie update in kollywoodஒரு படம் ரிலீசுக்கு தயாரானால் டிரைலர் வெளியீடு, இசை வெளியீடு, பத்திரிகையாளர் சந்திப்பு உள்ளிட்ட 2 3 நிகழ்ச்சிகளே இருக்கும்.

ஆனால் தற்போதெல்லாம் மார்க்கெட்டிங் யுக்தி என்ற பெயரில் ஒவ்வொரு சிங்கிள் டிராக்காக வெளியிட்டு அதை மில்லியன் கணக்கில் ஹிட்டாக்கி தங்கள் படத்தை பேசும் பொருளாக்குவது தயாரிப்பாளர்கள் கை வண்ணம்.

நிச்சயம் அதில் எந்த தவறும் இல்லைதான். போட்டிகள் நிறைந்த இந்த உலகில் எதையாவது செய்து நம் பொருளை விளம்பரப்படுத்த வேண்டும்.

கோடிக்கணக்கில் தயாரிக்கப்பட்ட தன் படத்தை சம்பந்தப்பட்டவர்கள் விளம்பரப்படுத்துவது நியாயமான ஒன்றுதான்.

ஆனால் ஒரு பாடல்/ஒரு அப்டேட் வெளியாவதை அறிவிக்கும்போது… அந்த பாடல் எப்போது? எந்த நேரம் வெளியீடு என்பதை முன்பே அறிவிக்காமல் இன்று மாலை அல்லது நாளை காலை ஒரு அறிவிப்பு வரும் காத்திருங்கள் என்பார்கள்.

அதனையடுத்து வரும் மற்றொரு அறிவிப்பில் அடுத்த வாரம் இந்த நாளில் நாங்கள் ஒரு பாடலை வெளியிட உள்ளோம் என்பதை அறிவிப்பார்கள்.

காலையில் முதல் அறிவிப்பு வெளியாகும் போதே குறிப்பிட்ட பாடல் இந்த நாளில் இந்த நேரத்தில் வெளியாகும் என்பதை முறையாக அறிவிக்கலாமே? என்பதே பலரின் கேள்வியாகவுள்ளது.

ஒருவேளை இதுவும் மார்கெட்டிங்கின் அடுத்த கட்ட யுக்தியோ..?

movie promotions atrocities in kollywood

பாசிட்டிவ் பாலிடிக்ஸ்.: எனது குரு ரஜினியால் மட்டுமே முடியும்; ஆன்மிக அரசியலில் லாரன்ஸ்

பாசிட்டிவ் பாலிடிக்ஸ்.: எனது குரு ரஜினியால் மட்டுமே முடியும்; ஆன்மிக அரசியலில் லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

raghava lawrence rajinikanthநண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு வணக்கம்…

இன்று நான் மிக முக்கியமான ஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறேன். கடந்த மாதம் நான் ஒரு விஷயத்தை பதிவு செய்திருந்தேன் அரசியலில் நுழையாமல் கூட நாங்கள் சேவை செய்ய முடியும் என்று.

இந்த அறிக்கையின் பின்னணியில் எனது காரணம் என்னவென்றால், நான் பல சமூகப் பணிகளைச் செய்து கொண்டிருக்கும்போது, எனது நண்பர்கள், ரசிகர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் பல அரசியல்வாதிகள் என்னிடம் கேட்கிறார்கள், நான் அரசியலில் நுழைவதற்கு இதையெல்லாம் செய்கிறேனா என்றும், மேலும் சிலர் என்னால் அரசியலில் நுழைந்தால் இன்னும் அதிகமாகச் செய்ய முடியும் என்று அறிவுறுத்துகிறார்கள்.

கொரோனா காலகட்டத்தில் நான் செய்த சேவையின் மூலம் அரசியலில் நுழையும் அழுத்தம் அதிகரித்துள்ளது.

“நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு வணக்கம். இன்று நான் முக்கியமான ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அரசியலுக்குள் நுழையாமல் சமூக சேவை செய்வேன் என்று கடந்த மாதம் எனது சமூகவலைதள பதிவில் தெரிவித்திருந்தேன். அதன் பின்னணியில் இருக்கும் காரணத்தை இங்கே கூறுகிறேன்.

நான் ஏராளமான சமூக சேவை பணிகளை செய்து வருவதால் எனது நண்பர்கள், அரசியல்வாதிகள், செய்தியாளர்கள் ஆகியோர் நான் அரசியலுக்கு வரவேண்டும் என்பதால் தான் இவற்றை செய்கிறேனா என்று கேட்கின்றனர். சிலர் அரசியலில் நான் இணைந்தால் இன்னும் அதிகமாக சேவை செய்ய முடியும் என்று அறிவுரை கூறினார்கள்.

முக்கியமாக கொரோனா பிரச்னைக்கு பின்னர் அழுத்தம் அதிகரித்திருக்கிறது. அனைவருக்கும் நான் ஒரு பொதுவான நபர் என்று சொல்ல விரும்புகிறேன். ஆதரவற்ற குழந்தைகளுக்காக எனது வீட்டில் ஒரு ஹோம் நடத்தி வருகிறேன். எனக்கு உதவி தேவைப்படும்போதெல்லாம் நான் அரசிடம் உதவி கோருகிறேன். கலைஞர், ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் பலரது இதய அறுவை சிகிச்சைகளுக்காக உதவி செய்துள்ளனர்.

அதேபோல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்டோரும் நான் சேவை செய்ய பல்வேறு வகைகளில் உதவி வருகிறார்கள்.

அரசியலில் நுழைந்தால் தனி மனிதனாக உதவி செய்வதை விட அதிகம் செய்ய முடியும் என்பதை நான் அறிவேன்.

எதிர்மறை அரசியல் செய்வது எனக்கு பிடிக்காது. அரசியலில் இருந்தால் எதிர்மறையாக ஒருவரை பேச வேண்டியிருக்கும். ஏனென்றால் நான் அனைவரையும் மதிக்கிறேன்.

யாராவது ஒருகட்சி தொடங்கி அதில் எதிர்மறை அரசியல் செய்ய வேண்டாம், யாரைப்பற்றியும் தவறாக பேசி புண்படுத்த வேண்டாம் என்ற நிலை இருந்தால் அப்போது நான் அவர்களுடன் சேர்ந்து பொது சேவையில் ஈடுபடுவேன்.

இந்தியாவில் அப்படி ஒரு நேர்மறை அணுகுமுறையுடைய கட்சியை ஆரம்பிக்க எனது குரு ரஜினிகாந்தால் மட்டுமே முடியும் என்று நம்புகிறேன்.

அரசியல் காரணங்களுக்காக அவர் இதுவரை யாரையும் காயப்படுத்தியதில்லை. அவர் கட்சி ஆரம்பித்தால் யாரையும் காயப்படுத்தமாட்டார் என்று நம்புகிறேன்.

ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் தொடங்கினால் அவரது லட்சக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவனாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவை செய்ய காத்துக் கொண்டிருக்கிறேன். சேவையே கடவுள்.” என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இறுதியாக அந்த அறிக்கையில்… நவம்பர் மாதத்தைக் குறிப்பிட்டு கேள்விக்குறியுடன் முடித்திருக்கிறார்.

இதன் மூலம் நடிகர் ரஜினிகாந்த் நவம்பர் மாதத்தில் புதிய கட்சியை தொடங்க இருப்பதாக உறுதியாகியுள்ளது.

Master Raghava Lawrence announces his political entry joining with Rajinikanth

பிரபல பின்னணி பாடகர் மதுபாலகிருஷ்ணன் தமிழில் பாடும் முதல் ஆல்பம் பாடல்

பிரபல பின்னணி பாடகர் மதுபாலகிருஷ்ணன் தமிழில் பாடும் முதல் ஆல்பம் பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

singer madhu balakrishnanரஜினி, அஜித், பிரஷாந்த்* போன்ற முன்னணி நடிகர்களுக்காக பாடிய பிரபல இந்திய பின்னணி பாடகர் மதுபாலகிருஷ்ணனை யாராலும் மறக்க முடியாது.

தனக்கென்றும் தனது குரலுக்கும் உலகளவில் பெரும் ரசிகர்களை கொண்டுள்ளவர் என்பது தான் உண்மை. இவர் இப்போது தமிழில் முதல் முதலில் ஆல்பம்காக *என்ன நடந்தது, என்ன நடந்தது* என்று தொடங்கும் இனிமையான பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

இந்த ஆல்பம் பாடலில் நடிக்க இருக்கும் முன்னணி நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றது அக்குழுவினர்.

இவர் சமீபத்தில் *உலகளவில் மாபெரும் வெற்றி பெற்ற பாகுபலி2ம்* பாகத்தின் மலையாளம் படத்தில் ஒரு புகழ்பெற்ற *ஆர்க்கும் தொல்காதே* பாடலையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

singer madhu balakrishnans new tamil album details

More Articles
Follows