நம்பிக்கை-அன்பு-கடவுள்-நன்றி.; ஜாமீனில் வந்த பிறகு சல்மான்கான் ட்வீட்

நம்பிக்கை-அன்பு-கடவுள்-நன்றி.; ஜாமீனில் வந்த பிறகு சல்மான்கான் ட்வீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bollywood Actor Salman Khan tweet after came out of Jail1998 ஆம் ஆண்டு மானை வேட்டையாடிய வழக்கை விசாரித்த ஜோத்பூர் நீதிமன்றம், கடந்த சில தினங்களுக்கு முன் (ஏப்ரல் 5) பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது.

அதற்கு மறுநாளே அவர் ஜாமீன் கேட்க அடுத்த நாளே நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது கோர்ட்.

ஜாமீனில் வெளிவந்த பிறகு சல்மான்கான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

“நம்பிக்கையை இழக்காமல் என்னுடன் அன்பாகவும் பக்கபலமாகவும் இருந்த அனைவருக்கும் நன்றி. கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என பதிவிட்டுள்ளார்.

Salman Khan‏Verified account @BeingSalmanKhan
Tears of gratitude . To all my loved ones who are with me and never lost hope . Thank you for being there with all the love and support . God Bless.

Bollywood Actor Salman Khan tweet after came out of Jail

சூர்யா-கார்த்தி படத் தயாரிப்பாளருடன் இணையும் சிபிராஜ்

சூர்யா-கார்த்தி படத் தயாரிப்பாளருடன் இணையும் சிபிராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sibiraj team up with Dream warrior pictures for next projectஜோக்கர், தீரன் அதிகாரம் ஒன்று, அருவி உள்ளிட்ட தரமான படங்களை எடுத்த நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.

எஸ்.ஆர்.பிரபுவின் இதே நிறுவனம்தான் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்தையும் தயாரிக்கிறது.

இந்த படங்களை தொடர்ந்து சிபிராஜ் நடிக்கவுள்ள புதிய படத்தை தயாரிக்கவுள்ளதாம்.

இப்படத்தை மதுபானக்கடை’ பட இயக்குனர் கமலக்கண்ணன் என்பவர் இயக்கவுள்ளார்.

நடப்பு அரசியலை நையாண்டி செய்யும் விதமாக அந்த படத்தை இயக்கியிருந்தார் கமலக்கண்ணன்.

அந்த படம் 2012 ஆம் ஆண்டு ரிலீஸானது. தற்போது 6 வருடங்களுக்கு பிறகு அடுத்த படத்தை இயக்குகிறார் கமலக்கண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

2018 ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

Sibiraj team up with Dream warrior pictures for next project

5 மணிக்கு அண்ணா சாலையில் ஆஜராகுறோம்; அப்புறம் பாருங்க… பாரதிராஜா புதிர்

5 மணிக்கு அண்ணா சாலையில் ஆஜராகுறோம்; அப்புறம் பாருங்க… பாரதிராஜா புதிர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bharathiraja2018ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இன்றைய போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

தமிழகத்தில் காவிரி மற்றும் ஸ்டெர்லைட் போராட்டங்கள் நடைபெறும் போது இந்த போட்டியை இங்கு நடத்த வேண்டாம் என தமிழக பிரபலங்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு எதிரான தங்களின் போராட்டம் எப்படி இருக்கும் என பாரதிராஜா கூறியுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திரைப்படக் கல்லூரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இயக்குநர்கள் பாரதிராஜா, தங்கர் பச்சான், வி.சேகர், வெற்றிமாறன், எம்எல்ஏக்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு, விவசாய அமைப்பைச் சேர்ந்த பெ.மணியரசன் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, அனைத்துக் கட்சியினரும் தங்களது இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறினார்.

இன்று ஏப்ரல் 10 மாலை 5 மணிக்கு அண்ணா சாலையில் கூடுகிறோம். என்ன செய்யப் போகிறோம் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள் என்று பாரதிராஜா கூறினார்.

இதனிடையே, ஐபிஎல் போராட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்வியால் கோபமடைந்த ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான தங்கர்பச்சான், செய்தியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Today 10th April we assemble on Mount Road Then see what we do says Bharathiraja

ஐபிஎல்-ல ரசிக்க போறியா.? தமிழன்னு உரக்க சொல்லப் போறியா.? ஜிவி பிரகாஷ்

ஐபிஎல்-ல ரசிக்க போறியா.? தமிழன்னு உரக்க சொல்லப் போறியா.? ஜிவி பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor GV Prakash statement against IPL in Chennai todayகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

தமிழகமே கொந்தளித்துள்ள நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியால் மக்களை திசை திருப்பக் கூடாது என பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால் திட்டமிட்டபடி போட்டிகள் இன்று சென்னையில் நடைபெற உள்ளது.

ஆனால் காண செல்லும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜி.வி. பிரகாஷ்,

“அடக்கு முறைக்கு அஞ்சி ஒடுங்கி விளையாட்டை ரசிக்க போறியா..? சுதந்திரமா உன் கருத்தை சொல்ல முடியலன்னா விளையாட்டை தவிர்க்க போறியா..?

தடைய தாண்டி தமிழன்னா யாருன்னு ஊருக்கு உரக்க சொல்லப்போறியா..?” என்ற கேள்விகளை எழுப்பியுள்ளார்.

Actor GV Prakash statement against IPL in Chennai today

சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வர பிள்ளையார் சுழி போடும் ஏரோக்ஸ்

சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வர பிள்ளையார் சுழி போடும் ஏரோக்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamil Cinema Strike will come to end soon because of Aerox agreement with TFPCகியூப், யூ.எஃப்.ஓ என டிஜிட்டல் சினிமா சர்வீஸ் புரொவைடர்கள் வசூலிக்கும் வி.பி.எஃப் கட்டணத்தைக் நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் வைத்தனர்.

இதனால் கடந்த மார்ச் 1ஆம் தேதி (இன்று வரை 40 நாட்கள்) முதல் எந்த ஒரு தமிழ் படத்தையும் தயாரிப்பாளர்கள் வெளியிடவில்லை.

இதனால் பழைய படங்களை தியேட்டர்களில் திரையிட்டு வந்தனர் திரையரங்க உரிமையாளர்கள்.

இதனையடுத்து தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்களை கையில் வைத்திருக்கக்கூடிய கியூப் நிறுவனம் 18- 23% வரை வி,பி.எஃப் கட்டணத்தில் குறைக்க பேச்சுவார்த்தையில் இறங்கி வந்தனர்.

ஆனால் இன்னும் தள்ளுபடி வேண்டும் என்ற சூழ்நிலையில் போராட்டம் வேலை நிறுத்தமாகத் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட மற்றொரு டிஜிட்டல் சர்வீஸ் புரொவைடர் நிறுவனமான ஏரோக்ஸ் டிஜிட்டல் சினிமாஸ் (Aerox digital Cinemas) நிறுவனம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தில் 50% க்கும் குறைந்தளவில் வி.பி.எஃப் ஆக வசூலித்துக்கொள்ள தயாரிப்பாளர் சங்கத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த நிகழ்வு முக்கியமான திருப்பமாகக் கருதப்படுகிறது. இதனால் விரைவில் சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வரும் சூழ்நிலை ஆரம்பமாகி வருகிறது.

உயரிய தொழில்நுட்பமான டி.சி.ஐ அந்தஸ்து (DCI approval) பெற்றது இந்த ஏரோக்ஸ் நிறுவனம்.

மேலும் கடந்த 3 வருடங்களாக தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் கியூப் , யு,எஃப்.ஓ அல்லாத சில தியேட்டர்களை ஏரோக்ஸ் நிறுவனம் தன் கைவசம் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Cinema Strike will come to end soon because of Aerox agreement with TFPC

தமிழிசை பயப்பட வேண்டாம்; அரசியலுக்கு வரமாட்டேன்…; சத்யராஜ் சபதம்

தமிழிசை பயப்பட வேண்டாம்; அரசியலுக்கு வரமாட்டேன்…; சத்யராஜ் சபதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I wont enter into politics So Tamilisai no need to fear says Sathyarajகாவிரி விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று நடிகர் சங்கம் சார்பில் மவுன போராட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, நடிகர் சத்யராஜ், இயக்குநர் அமீர், இயக்குநர் வ.கவுதமன் உள்ளிட்டவர்கள் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய பாரதிராஜா,

தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையை தொடங்கியுள்ளேன்.

இந்த பேரவைக்கு எந்த அரசியல் அடையாளமும் கிடையாது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, அரசியல் சாயத்தை கலைத்துவிட்டு தமிழனாக ஒன்று கூடுங்கள்.

ஐபிஎல் போட்டியை தள்ளி வைப்பதில் சட்ட சிக்கல் இருப்பதாக முதலமைச்சர் கூறினார். ஐபிஎல் போட்டியை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும்.

ஆனால் காவிரி போராட்டத்தை திசைத்திருப்பவே ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுகிறதோ என்ற ஐயம் உள்ளது என்றார்.

சத்யராஜ் பேசும்போது,

நடிகர்கள் களத்தில் இறங்கி போராட முடியாது, அரசியல்வாதிகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.

எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை, ஆனால் தமிழகத்தில் வாழும் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்.

தமிழிசை என்னை பார்த்து பயப்படவேண்டிய அவசியம் இல்லை, என்னிடம் அரசியல் சார்ந்த திட்டங்கள் எதுவும் இல்லை.

என் வீட்டுக்கு ஐடி ரெய்டு வந்தால் பயப்படாமல் இருப்பீர்களா? என்று கேட்டுள்ளார். வருமான வரித்துறை வந்தாலும் என்னிடம் ஒன்றும் தேறாது.

காவிரி பிரச்னை தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டாம். போராட்ட மன நிலையில் உள்ள இளைஞர்களை ஐபிஎல் மூலம் திசைதிருப்ப முயற்சி நடக்கிறது” என்றார்.

I wont enter into politics So Tamilisai no need to fear says Sathyaraj

More Articles
Follows