‘புளு பிலிம்’ ஜானி சின்சுடன் நித்யானந்தாவா.?; சிவசேனா போர்க்கொடி

‘புளு பிலிம்’ ஜானி சின்சுடன் நித்யானந்தாவா.?; சிவசேனா போர்க்கொடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Blue film fame Johnny Sins and Nithyananda photos in Puppy movieவருண், யோகி பாபு நடிக்க உருவாகி வருகிறது ‘பப்பி’. இப்படத்தினை ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார்.

அடல்ட் காமெடி படமாக உருவாகியுள்ள இப்படம் செப்டம்பர் மாதம் ரிலீசாகவுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தினை தடை செய்ய வேண்டும் என்று சிவசேனா அமைப்பினர் காவல்துறை ஆணையாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

அதில் இப்பட டிரைலரில் ஒரு பக்கம் புளு பிலிம் படங்களில் நடிக்கும் ஜானி சின்ஸ் என்பவரின் புகைப்படமும் மற்றொரு பக்கம் நித்யானந்தாவின் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.

எனவே இது இந்து மக்களின் மனதை புண்படுத்துவதாக புகார் மனு அளித்துள்ளனர்.

Blue film fame Johnny Sins and Nithyananda photos in Puppy movie

இதோ அந்த மனு….

Blue film fame Johnny Sins and Nithyananda photos in Puppy movie

தீபாவளிக்கு முன்பே விஜய் தரும் ’பிகில்’ விருந்து

தீபாவளிக்கு முன்பே விஜய் தரும் ’பிகில்’ விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijays Bigil likely to be release before Diwaliஅட்லி இயக்கத்தில் உருவாகும் பிகில் படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, கதிர், இந்துஜா, வர்ஷா பொல்லம்மா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் சிங்கப்பெண்ணே பாடல் வெளியானது.

விரைவில் வெறித்தனம் என்ற பாடல் வெளியாக உள்ளது.

இப்படத்தை இந்தாண்டு தீபாவளி அதாவது அக்டோபர் 27ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்து இருந்தனர்.

ஆனால் தீபாவளி தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதால் அதற்கு முன்னதாக 24-ந்தேதியே (வியாழக்கிழமை) வெளியிடப் போகிறார்களாம்.

ஏஆர். ரஹ்மான் இசையைமத்து வரும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Vijays Bigil likely to be release before Diwali

முதற் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த அதர்வா , அனுபமா

முதற் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த அதர்வா , அனுபமா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectநட்சத்திர நடிகர் நடிகையரிடையே புதிதாக ஒரு ஜோடி இணையும்போது ரசிகர்களிடையே ஓர் எதிர்பார்ப்பு ஏற்படுவது இயல்புதானே! ரொமாண்டிக் காமெடி எனப்படும் நகைச்சுவை கலந்த காதல் கதை ஒன்றில், அதர்வா முரளியுடன் ஜோடி சேர்ந்து அமர்க்களப்படுத்த இருக்கிறார் அனுபாமா பரமேஸ்வரன். ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை போன்ற ரொமாண்டிக் காமெடிப் படங்களைக் கொடுத்து வெற்றிக் கொடி நாட்டிய இயக்குநர் ஆர்.கண்ணன் இந்த புதிய ஜோடியுடன் களம் இறங்கியிருக்கிறார் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் ஏகத்துக்கும் எகிறியிருக்கிறது.
முதல் கட்ட படப்பிடிப்பை பூர்த்தி செய்திருக்கும் படக்குழு, இந்தக் குறுகிய காலத்திலேயே படத்தின் முக்கிய பகுதிகள் அடங்கிய ஐம்பது சதவீதக் காட்சிகளை படமாக்கியிருக்கிறது.

இது குறித்து பேசும்போது, முதல் கட்ட படப்பிடிப்பை நாங்கள் இருபது நாட்கள்தான் நடத்தினோம் என்றாலும், இதிலேயே கிட்டத்தட்ட பாதி படப்பிடிப்பை முடித்து விட்டோம். சென்னை புறநகர் பகுதியான நீலாங்கரையில் பிரத்யேகமாக ஒரு அரங்கு அமைத்து படப்பிடிப்பை நடித்தியிருக்கிறோம். மேலும் புதுப்பேட்டை பகுதியில் சண்டைக் காட்சி ஒன்றையும் படமாக்கியிருக்கிறோம். ஏராளமான பொதுமக்கள் மத்தியில் நடைபெறும் இந்த சண்டைக் காட்சியை நான்கு நாட்களில் ஸ்டண்ட மாஸ்டர் செல்வா மிகச் சிறப்பாக படமாக்கிக் கொடுத்தார்.
நாயகன் அதர்வாவை டைரக்டர்ஸ் டிலைட் என்றால் மிகையாகாது. தன் நடிப்புத் திறனை அவர் மேம்படுத்தி வருவதை இந்தப் படப்பிடிப்பின்போது கண்கூடாகப் பார்த்தேன். இந்தப் படத்தின் கதையும் அவரது பாத்திரமும் இதற்கு முன் அவர் நடித்த படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. நான் வடிவமைத்த பாத்திரம் அவரது சிறப்பான நடிப்பால் படத்தில் முழுமையடைந்திருப்பதை நான் ரஷ் பிரதிகளைப் பார்க்கும்போது உணர்ந்தேன்.
அனுபாமா பரமேஸ்வரன் பார்வையாளர்களின் மனதில் இடம் பிடிக்கக்கூடிய வலுவான பாத்திரத்தில் தோன்றுகிறார். கிட்டத்தட்ட 96 படத்தில் த்ரிஷா ஏற்ற வேடத்தைப் போன்றது இது. அனுபாமாவின் அப்பா வேடத்தில் ஆடுகளம் நரேன் நடித்திருக்கிறார். நகைச்சுவையாகவும், உண்ர்வுபூர்வமாகவும் நடிக்க வேண்டிய இந்த பாத்திரத்தை தன் இயல்பான நடிப்பால் நியாயப்படுத்தியிருக்கிறார்.இதேபோல் காளி வெங்கட், ஜெகன், வித்யுத்லேகா ஆகியோரும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து செவ்வனே செய்திருக்கின்றனர். காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ள கல்லூரி ஒன்றில் ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவர்களுடன் நடத்திய படப்படிப்புதான் சாவாலாக இருந்தது என்றாலும், அதையும் வெற்றிகரமாக முடித்து விட்டோம். இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடக்க இருக்கிறது. செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கி சுமார் இருபது நாட்கள் இந்த படப்பிடிப்பு இருக்கும்.
96 படம் மூலம் கவனம் ஈர்த்த ஒளிப்பதிவாளர் சண்முக சுந்தரம் கேமராவைக் கையாள, கபிலன் வைரமுத்து வசனங்களை தீட்டுகிறார். ராஜ் குமார் கலை இயக்குநர் பொறுப்பு ஏற்க, ஆர்.கே.செல்வா படத்தொகுப்பை கவனிக்கிறார். உடை வடிவமைப்பாளராக ஜே.கவிதாவும் நடன இயக்குநராக சதீஷும் பொறுப்பேற்றிருக்கின்றனர். ராஜ் ஸ்ரீதர் நிர்வாகத் தயாரிப்பாளராகப் பொறுப்பேற்று உள்ளார்.

திரைக்கதை எழுதி இயக்கும் ஆர்.கண்ணன் தனது மசாலா பிக்ஸ் நிறுவனத்தின் சார்பில், எம்.கே.ஆர்.பி.புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தயாரிக்கிறார்.
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் உலகெங்கும் இப்படம் திரையிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

‘இது என் காதல் புத்தகம்’ பட கதை: குழந்தை பெத்துக்க எதுக்குடா படிப்பு.?

‘இது என் காதல் புத்தகம்’ பட கதை: குழந்தை பெத்துக்க எதுக்குடா படிப்பு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Idhu en Kaadhal Pudhagam movie news updatesரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் “இது என் காதல் புத்தகம்“

அறிமுக நாயகி அஞ்சிதாஸ்ரீ இப்படத்தின் கதாநாயகியான “தேவயாணி“ கதாபாத்திரத்தை ஏற்க, ஜெமிஜேகப், ராஜேஷ்ராஜ், சூரஜ்சன்னி, கர்னல் மோகன்தாஸ், கொலப்புள்ளி லீலா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – அருண்கிருஷ்ணா
இசை – ஸ்ரீமாதவ்
பாடல்கள் – விஷ்ணுவிகடன்
எடிட்டிங் – சாஜித் முகமது
கலை – லால் திரிகுளம்
ஸ்டன்ட் – மது பீட்டர்
நடனம் – தண்டபாணி
தயாரிப்பு ஒருங்கிணைப்பு – ஆண்டனி நிலம்பூர்.
தயாரிப்பு – ரோஸ்லேண்ட் சினிமாஸ்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் மது G கமலம்.

இவர் மலையாளத்தில் நான்கு படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் உட்பிரதேசமான நாட்டுப்புற கிராமம் ஒன்றில் நிகழ்கிற கதைக்களம் இது. பெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்துகிற படம் இது.

கல்வியறிவை முழுமையாக எதிர்க்கிற ஊர் தலைவர் விவசாயம் செய்வதற்கும், திருமணம் முடித்து பிள்ளை பெறுவதற்கும் உங்களுக்கு எதற்கடா கல்வி என்று சொல்லுகிறார். ஆனால் அவரது ஒரே மகளான தேவயாணி (நாயகி)க்கு படிப்பின் மீது நாட்டம் ஏற்படுகிறது.

அதனால் தந்தையின் சிந்தனைக்கு எதிராக செயல்பட தொடங்குகிறாள் அதனால் அவள் என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கிறாள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.

இசைக்கு முக்கியத்துவம் நிறைந்த இந்த படத்தில் டாக்டர் வைக்கம் விஜயலெட்சுமி பாடிய பாடல் உட்பட நான்கு பாடல்கள் உள்ளன. விரைவில் வெள்ளித்திரையில் “இது என் காதல் புத்தகத்தை “ படிக்கலாம் என்கிறார் இயக்குனர் மது G கமலம்.

Idhu en Kaadhal Pudhagam movie news updates

கதிரின் ‘ஜடா’-வுக்கு கை கொடுத்த விக்ரம் வேதா டீம்

கதிரின் ‘ஜடா’-வுக்கு கை கொடுத்த விக்ரம் வேதா டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vikram Vedha team support to Kathir for Jadaa Teaser releaseவிஜய்சேதுபதி மாதவன் நடிப்பில் வெற்றிபெற்ற ‘விக்ரம்வேதா’ திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் தம்பியாக நடித்திருந்தவர் நடிகர் கதிர்.

பலரின் பாராட்டுக்களை பெற்றிருப்பார்.

தற்போது விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து அறிமுக இயக்குனர் குமரன் இயக்கிய ‘ஜடா’ படத்தில் கால்பந்தாட்ட வீரராக நடித்திருக்கிறார். பொயட் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்திருக்கிறது.

யோகிபாபுவும், கதிரும் இந்த படத்தில் கால்பந்தாட்ட வீரர்களாக நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் டீசரை விக்ரம்வேதா திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் மாதவன், விஜய்சேதுபதி, ஷரத்தா, வரலட்சுமி, இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி, தயாரிப்பாளர் சசி உள்ளிட்ட படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சென்னை கால்பந்தாட்ட இளைஞனாக கதிர், யோகிபாபு, மற்றும் ஆடுகளம் கிஷோர், லிஜீஸ் நடித்திருக்கிறார்கள்.

முக்கியமாக கதாபாத்திரத்தில் ஓவியர் ஸ்ரீதர் நடித்திருக்கிறார்.

ஆக்‌ஷன், மற்றும் திரில் கலந்த கால்பந்தாட்ட விளையாட்டின் இன்னொரு பக்கத்தை சுவாரசியமான திரைக்கதையோடு விரைவில் டிரைலர், மற்றும் பாடல் வெளியீட்டோடு படம் வெளியாகிறது.

Vikram Vedha team support to Kathir for Jadaa Teaser release

எம்.ஜி.ஆருக்கு பிறகு ரஜினி படம்தான் ரொம்ப புடிக்கும்… – அமைச்சர் கடம்பூர் ராஜூ

எம்.ஜி.ஆருக்கு பிறகு ரஜினி படம்தான் ரொம்ப புடிக்கும்… – அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN Minister Kadambur Raju talks about Rajinis new political partyகோவில்பட்டி அருகே தமிழக செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவரிடம் ரஜினி கட்சி ஆரம்பித்த உடன் அதிமுக கூட்டணி வைக்குமா? என்று கேள்வி கேட்டனர்.

எம்.ஜி.ஆர். படங்களுக்கு பிறகு ரஜினி படங்களைத்தான் நான் விரும்பி பார்த்திருக்கிறேன்.

ரஜினி அரசியலுக்கு வருவது அவரது தனிப்பட்ட விருப்பம். அதை தடுக்க முடியாது.

ரஜினி கட்சி ஆரம்பித்தார் அ.தி.மு.க., கூட்டணி சேருமா என கேட்கின்றனர். அதெல்லாம் நேரம் வரும்போது முடிவெடுப்போம்.” என்றார்.

TN Minister Kadambur Raju talks about Rajinis new political party

More Articles
Follows