பீகாரில் பாஜக வென்றால் இலவச கொரோனா தடுப்பூசி..; மத்திய நிதியமைச்சரின் மெகா ப்ளான்

பீகாரில் பாஜக வென்றால் இலவச கொரோனா தடுப்பூசி..; மத்திய நிதியமைச்சரின் மெகா ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nirmala seetharamanபீகார் மாநிலத்தில் உள்ள 243 பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 28-ம் தேதி 3 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

நவம்பர் 10-ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும்.

பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார்.

அதில், முதல் வாக்குறுதியாக கொரோனா தடுப்பூசி பற்றிய தகவல் இடம்பெற்றுள்ளது.

பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வென்றால் , பீகார் மாநில மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

As soon as #COVID19 vaccine will be available for production at a mass scale, every person in Bihar will get free vaccination. This is the first promise mentioned in our poll manifesto: Union Minister Nirmala Sitharaman at the launch of BJP Manifesto for #BiharPolls pic.twitter.com/x4VjVmkA3Q

BJP promises free Covid 19 vaccination in manifesto

மிரட்டும் வெங்காய விலை..; மழையால் தள்ளாடும் தமிழக தலை..; கமல் கண்டனம்

மிரட்டும் வெங்காய விலை..; மழையால் தள்ளாடும் தமிழக தலை..; கமல் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ 100ஐ தாண்டிவிட்டது. இதனால் வெங்காயம் உறிக்காமலே மக்கள் கண்ணீரில் மிதக்கின்றனர்.

இது ஒரு புறமிருக்க சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்ய தொடங்கியுள்ளது.

இவை இரண்டும் குறித்தும் கமல் தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது…

பெரியாரே வந்தாலும் இனி வெங்காயம் என வையார்.

விண்ணில் பறக்கும் வெங்காய விலை பார்த்து நம் அன்னைமார்களும் இனி சமையலில் அதை வையார்.

விலையிறங்குவாயா வெங்காயமே?

ஒரு மணி நேர மழை.

தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை.

வடகிழக்குப் பருவமழை வரட்டுமா என்று மிரட்டுகிறது.

கருணை மழையைச் சேகரிக்க நீர் நிலைகள் தயார் செய்யப்படவில்லை.

கடந்த வெள்ளத்தில் கற்ற பாடமென ஏதுமில்லை.
வடிகால்கள் வாரப்படவில்லை.(1/2)

குழந்தைகள் மருத்துவமனையிலும் நீர் புகுவது குறையவில்லை.

கரையோர மாவட்டங்கள் மேல்
கடைக்கண்ணாவது வையுங்கள்.(2/2)

Actor Kamal Haasan’s sarcastic message on onion price rise

‘சூரரைப் போற்று’ ரிலீஸ் தள்ளி வைப்பு..; ரசிகர்களுக்கு சூர்யா கடிதம்

‘சூரரைப் போற்று’ ரிலீஸ் தள்ளி வைப்பு..; ரசிகர்களுக்கு சூர்யா கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்துள்ள படம் சூரரைப் போற்று.

இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரசிகர்கள் இந்த படத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்த நிலையில் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்தது.

எனவே ஓடிடி அமேசானில் இந்த படத்தை வெளியிட முடிவு செய்து அக்டோபர் 30ல் ரிலீஸ் என அறிவித்தார் சூர்யா.

சூர்யாவின் இந்த முடிவுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் சூர்யா தன் முடிவை மாற்றவில்லை.

இந்த நிலையில் சற்றுமுன் சூரரைப் போற்று படத்தின் ரிலீஸ் ஒத்தி வைப்பு என தெரிவித்து ரசிகர்களுக்கு விளக்க கடிதம் கொடுத்துள்ளார் சூர்யா.

இதோ அந்த கடிதம்…

Suriya’s Soorarai Pottru release postponed due to pending Air force NOC

soorarai pottru

ஓவரா குடிக்கிறார்.. பீட்டரை நம்பி ஏமாந்துட்டேன்.. 100 நாட்களில் வனிதாவுக்கு கசந்த 3வது கணவர்!?

ஓவரா குடிக்கிறார்.. பீட்டரை நம்பி ஏமாந்துட்டேன்.. 100 நாட்களில் வனிதாவுக்கு கசந்த 3வது கணவர்!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vanitha vijayakumar peter paulதளபதி விஜய்யின் ‘சந்திரலேகா’ பட மூலம் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார்.

பின்னர் சினிமாவிலிருந்து வுலகி நடிகர் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு 2 குழந்தைகள் இருந்த நிலையில் சில கருத்து வேறுபாட்டால் அவரை விவாகரத்து செய்தார்.

பின்னர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

அதுவும் 2 வருடமே நீடித்தது. அவரை விட்டும் பிரிந்தார் வனிதா.

இதன்பின்னர் ஒரு நடன இயக்குனருடன் இணைந்து வாழ்ந்தார்.

அவரிடம் இருந்து பிரிந்து பிக் பாஸில் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

இந்நிலையில் கொரோனா லாக்டவுன் சமயத்தில் ஜூன் மாத இறுதியில் பீட்டர் பால் என்பவரை காதலித்து 3வது திருமணம் செய்து கொண்டார்.

பீட்டர் பால் ஏற்கனவே திருமணம் ஆனவர். அவர்களுக்கு 20 வயதில் ஒரு மகன் உள்ளார்.

இதனால் பல பிரச்சனைகளை எதிர்கொண்டார் வனிதா.

இந்த சர்ச்சை முடிந்த பின் தனது 40வது பிறந்தநாளை கொண்டாட பீட்டர் பால் மற்றும் குழந்தைகளுடன் கோவா சென்றார் வனிதா.

அங்கு பீட்டர் பால் மது அருந்தியதால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாம்.

சென்னை திரும்பிய பிறகும் பீட்டர் பால் தொடர்ந்து மதுவுக்கு அடிமையாகி இருக்கிறார் என புகார்களை அடிக்கினார் வனிதா.

இதுகுறித்து வெளியிட்ட வீடியோவில்…

“பீட்டர் பால் ரொம்ப குடிக்கிறார், நம்பி ஏமாந்துவிட்டேன். என்னால் சிரிக்கக் கூட முடியவில்லை.

அவர் வீட்டிற்கும் வருவதில்லை, செல்போனையும் சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார்.

ஹார்ட் அட்டாக் வந்து உயிர் பிழைத்த மனிதர் இப்படி மது அருந்துவதும், புகைப்பிடிப்பதுமாக இருக்கிறார் என புலம்பியிருக்கிறார் வனிதா.

Actress Vanitha Vijayakumar reveals that Peter Paul’s alcoholism ruined their marriage

மதுவை ரகசிய திருமணம் செய்த ஆர்கே. சுரேஷ்..? அப்போ ‘சுமங்கலி’ நடிகை விஷயம் என்னாச்சு..?

மதுவை ரகசிய திருமணம் செய்த ஆர்கே. சுரேஷ்..? அப்போ ‘சுமங்கலி’ நடிகை விஷயம் என்னாச்சு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RK Suresh and Divyaதாரை தப்பட்டை & மருது உள்ளிட்ட படங்களில் மிரட்டல் வில்லனாக நடித்தவர் ஆர் கே சுரேஷ்.

இவர் விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா நடித்த ‘தர்மதுரை’ படத்தின் தயாரிப்பாளர் ஆவார்.

இவர் அண்மையில் பாஜக கட்சியில் இணைந்தார்.

தனக்கும் ‘சுமங்கலி’ சீரியல் நடிகை திவ்யாவுக்கும் திருமணம் நடக்கவுள்ளதாக ஆர்.கே. சுரேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

ஆனால் என்ன நடந்ததோ திருமணம் நடைபெறவில்லை.

“இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. திருமணம் செய்து கொண்டு பிரச்னைகளைச் சந்திப்பதற்கு முன் விலகி விடுவது நல்லது” என திவ்யா தரப்பில் சொல்லப்பட்டது.

இந்நிலையில், ஆர்.கே. சுரேஷுக்கு கடந்த சில தினங்களுக்கு சினிமா ஃபைனான்சியர் மது என்பவருடன் திருமணம் நடந்துள்ளதாம்.

இது ரகசிய திருமணம் என கூறப்படுகிறது.

Actor RK Suresh confirms his marriage with Madhu

‘வலிமை’ அப்டேட்…; ஹைதராபாத் செல்வாரா தல அஜித்..?

‘வலிமை’ அப்டேட்…; ஹைதராபாத் செல்வாரா தல அஜித்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

valimai updateதல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வலிமை’.

யுவன் இசையமைக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்திய இப்பட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் மீண்டும் தொடங்கப்பட்டது.

அங்கு தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கலந்து கொண்ட புகைப்படங்கள் ட்ரெண்டானது.

இந்நிலையில் வலிமை பட ஷூட்டிங் ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளது.

இதற்காக பெரிய அளவில் செட் அமைக்கப்பட்டு வருகிறதாம்.

இங்கு மற்ற நடிகர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளார்கள் என கூறப்படுகிறது.

ஆனால் அந்த செட்டில் அஜித் கலந்து கொள்வாரா?

Ajith to join Valimai shoot soon

More Articles
Follows