‘வழிநடத்திட வாருங்கள்…’ ரஜினியை அழைக்கும் பிஜேபி பிரமுகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 25 வருடங்களாகவே, ரஜினியை அரசியலுக்கு அழைக்க பலர் முயற்சி செய்து வருகின்றனர்.

அவ்வப்போது ரஜினியும் தன் சினிமாக்களில் இது தொடர்பாக வசனங்களை பேசி கைத்தட்டல்களை அள்ளி வருகிறார்.

ஆனால் தன் அரசியல் நிலையை ஆண்டவன் முடிவு செய்வார் என்று தன் ஸ்டைலில் கூறிவருவது நாம் அறிந்ததே.

இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தால் தமிழக மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

எனவே பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து தமிழகத்தை வழி நடத்திட வேண்டும் என பிஜேபி பிரமுகர் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

இக்கடிதம் தற்போது இணையங்களில் ரைவலாகி வருகிறது.

BJP member invite Rajini to lead Tamil Nadu

கால் கேர்ள்ளாக மாறிய கபாலி மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பேராண்மை படத்தில் நிறைய நாயகிகள் இருந்தாலும் தன் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் தன்ஷிகா.

இவர் கபாலி படத்தில் ரஜினியின் மகளாக நடித்து உலகப்புகழ் பெற்றார்.

இந்நிலையில் இவர் தற்போது சினம் என்ற குறும்படத்தில் விலை மாதுவாக நடித்து இருக்கிறார்.

திருநேசன் தயாரித்துள்ள இப்படத்தை ஆனந்த் மூர்த்தி என்பவர் இயக்கியிருக்கிறார்.

Kabali fame Dhanshika in Sinam Short film

‘பீட்டா அமைப்பில் என் மகள் இல்லை…’ த்ரிஷா அம்மா விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படும் பீட்டா அமைப்புக்கும் த்ரிஷாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறி ரசிகர்கள் த்ரிஷாவை இணையத்தளங்களில் திட்டி வருகின்றனர்.

இதனால் தன் ட்விட்டர் அக்கௌண்ட்டை த்ரிஷா நீக்கியதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இதுகுறித்து த்ரிஷாவின் தாயார் உமா கூறியதாவது…

“த்ரிஷாவின் டுவிட்டர் கணக்கை ஹேக் செய்து தவறான கருத்தை பதிவு செய்துள்ளனர்.

மேலும் ஜல்லிக்கட்டிற்கு எதிரான எந்த கருத்தையும் த்ரிஷா தெரிவிக்கவில்லை. என் மகள் பீட்டா அமைப்பிலும் இல்லை.” என்றார்.

My daughter is not in PETA says Trisha mother Uma

பாட்ஷாவை தொடர்ந்து கமலின் அடுத்த ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

22 வருடங்களுக்கு முன்பு வெளியாகி பாக்ஸ் ஆபிஸை தெறிக்க விட்ட படம் பாட்ஷா.

இப்படத்தை மெருக்கேற்றி மீண்டும் திரையிட உள்ளனர்.

அண்மையில் நடந்த இதற்கான ப்ரிமீயர் ஷோவில் இப்படம் பலத்த வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கமல், பிரபு குஷ்பூ இணைந்து நடித்த வெற்றி விழா படம் இதுபோல் மெருகேற்றப்பட்டு மீண்டும் திரைக்கு வரவுள்ளது.

பிரதாப் போத்தன் இப்படத்தை இயக்க, இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தை பிரபு தயாரித்திருந்தார்.

Kamalhassans Vetri Vizha re release

‘ரஜினி அரசியலுக்கு வந்தால் எதிர்ப்பேன்…’ சரத்குமார் சவால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழத்தில் அசாதாரண சூழல் நிலவுவதாக  ‘துக்ளக்’ ஆண்டு விழா நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசினார்.

ரஜினி பேசியதற்கு நடிகர் சங்க முன்னாள் தலைவரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து செய்தியாளர்களிடம் சரத்குமார் பேசியதாவது…

“ரஜினிகாந்த் ஒரு சிறந்த மனிதர். மிகப் பெரிய சூப்பர் ஸ்டார். அதனை நான் ஒப்புக் கொள்கிறேன்.

கருத்துக்கள் சொல்லும்போது எப்போது தேவைப்படுகிறதோ அப்போது மட்டும் சொல்லிவிட்டு, மற்ற நேரங்களில் அமைதியாக இருப்பதை கருத்துக்களாக ஏற்றுக் கொள்ள முடியாது.

எந்த வகையான அசாதாரண சூழல் தமிழகத்தில் நிலவுகிறது என்பதை ரஜினிகாந்த் தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழ்நாட்டு அரசியல் குறித்து கருத்து கூற அவருக்கு எந்த தகுதியும் இல்லை.

தேவைப்படும்போது கர்நாடகாவில் வேறொரு கருத்து சொல்வது, இங்கு வேறொரு கருத்து சொல்வது என இருக்கக் கூடாது.

அவர் தமிழக அரசியலுக்கு வந்தால் எதிர்க்கும் முதல் ஆளாக நான் நிற்பேன்.” என்றார்.

சரத்குமாரின் பேச்சுக்கு ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து, அவரது கொடும்பாவியை எதிர்த்து வருகின்றனர்.

Sarath kumar speech about Rajinikanth and politics

கேரளாவில் பட்டைய கிளப்ப பைரவா வகுத்த திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்யின் பைரவா உலகமெங்கும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஆனால் கேரளாவில் நடைபெறும் தியேட்டர்கள் உரிமையாளர்கள் பிரச்சினையால் அங்கு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் பைரவா படத்தை கேரளாவில் விநியோகம் செய்துள்ள Ifar International தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பைரவா படம் விநியோக குறித்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

அதாவது இப்படம் மொத்தம் 302 திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு முன்பு, 230 தியேட்டர்களில் வெளியாகி இருந்த இப்படம், தற்போது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் பட்டைய கிளப்ப தயாராகிவிட்டனர்.

More Articles
Follows