இந்து கடவுள் பற்றி ஆபாச பேச்சு..; கருப்பர் கூட்டம் சேனல் மீது பாஜக புகார்

bjp tn leaderஅண்மைக்காலமாக அதிக சர்ச்சைக்குள்ளான சேனலாக மாறியுள்ளது ‘கருப்பர் கூட்டம்’ என்ற யூடியுப் சேனல் மாறியுள்ளது.

இந்த யூடியுப் சேனலை தடை செய்யக்கோரி, பாஜக சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது..

இந்துக்கள் வழிபடும் கடவுளை ஆபாசமாக பேசி,வீடியோ வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதனால், அந்த யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும்.

மேலும் அந்த சேனல் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையில்… சென்னையில் அண்ணா சாலை மற்றும் பூந்தமல்லி சாலையில் உள்ள பெரியார் சிலைகளுக்கு, மாநகர காவல் துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

Overall Rating : Not available

Latest Post