பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை சினிமாவாகிறது

karnam malleswari biopicதேசிய தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்களின் வாழ்க்கையை திரைப்படமாக்கி வருவது தற்போது அதிகரித்து வருகிறது-

இந்த நிலையில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கையும் திரைப்படமாக உருவாகிறது.

அவரின் பிறந்தநாளை முன்னிட்டு இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தெலுங்கில் ‘ராஜு காடு’ என்கிற படத்தை இயக்கிய சஞ்சனா ரெட்டி இந்தப்படத்தை இயக்க உள்ளார். கோனா பிலிம் கார்ப்பரேஷன் இந்தப்படத்தை தயாரிக்கிறது.

பல மொழிகளில் இந்தப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

கர்ணம் மல்லேஸ்வரியாக நடிக்கப்போவது யார்? என்ற அறிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

ஆந்திராவை சேர்ந்த கர்ணம் மல்லேஸ்வரி தனது 13 வயதில் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்றார்..

2000-ல் சிட்னியில் நடந்த ஒலிம்பிக்கில் 69 கிலோ. எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிலிருந்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஒரே பெண்மணி என்ற பெருமையை பெற்றார். ஆந்திர பிரதேசத்தின் இரும்புப்பெண்’ என்கிற பெருமையும் இவருக்கு உள்ளது.

Overall Rating : Not available

Latest Post