கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு அனுமதி.; மருந்தை கண்டுபிடித்த நிறுவனர் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்தார்

Biontech founderஉலகையே அச்சுறுத்தும் நோயாக கொரோனா உருவெடுத்துள்ளது.

இதற்கு தடுப்பூசி & மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து, 95 சதவீதம் பலனளிக்கும் கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளன.

இந்த தடுப்பூசிக்கு, இன்னும் சில நாட்களில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கழகத்தின் அனுமதி கிடைத்துவிடும்.

இதனிடையில், இந்த நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு சில தினங்களுக்கு முன்னர் தான் அங்கீகாரம் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் கொரொனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்த முதல் நாடு என்ற பெருமையை பிரிட்டன் பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து பயோஎன்டெக் நிறுவனத்தின் பங்குகள் ஒரே வாரத்தில் 9% உயர்ந்துள்ளதாம்.

அந்நிறுவனத்தின் பங்குகளை தன் வசம் வைத்திருக்கும் பயோஎன்டெக் நிறுவனத்தின் நிறுவனர்களுள் ஒருவரான ஜெர்மனியின் உகுர் சாஹின் (Ugur Sahin) உலகின் டாப் 500 உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் நுழைந்துள்ளார்.

அதாவது ஃபுளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 493-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

கணஅதிகாரிகளாக இருந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Biontech founder ugur sahin joins worlds 500 richest people

Overall Rating : Not available

Latest Post