கரு.பழனியப்பன் இயக்கத்தில் அருள்நிதி ஜோடியாக பிந்துமாதவி

கரு.பழனியப்பன் இயக்கத்தில் அருள்நிதி ஜோடியாக பிந்துமாதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bindhu madhavi and arulnithiநீண்ட நாட்களுக்கு பிறகு அரசியல் சார்ந்த கதையை படமாக்கவுள்ளார் கரு.பழனியப்பன் என்பதை பார்த்தோம்.

அருள்நிதி நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு ‘புகழேந்தி எனும் நான்’ என பெயரிட்டுள்ளனர்.

தற்போதுள்ள இந்திய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் நாயகியாக பிந்து மாதவி நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிந்து மாதவி கூறும்போது,

“நல்ல கதையாகவும் நல்ல கேரக்டராகவும் அமைய காத்திருந்தேன். அப்படி எனக்கு அமைந்த படம் ‘புகழேந்தி எனும் நான்’.

இது அரசியல் சார்ந்த படம் என்றாலும் நாயகி கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ளது.

மேலும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை எழுதும் கரு.பழனியப்பன் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.

அன்புசெழியனுக்கு ஆதரவளித்த விஜய்ஆண்டனியை கிண்டல் செய்த கரு.பழனியப்பன்

அன்புசெழியனுக்கு ஆதரவளித்த விஜய்ஆண்டனியை கிண்டல் செய்த கரு.பழனியப்பன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karu Pazhaniappan statement against Vijay Antony in AnbuChezhiyan Finance issueபிரபல பைனான்சியரும் தயாரிப்பாளருமான அன்புசெழியன் மிரட்டியதன் காரணமாக சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலை செய்துக் கொண்டார்.

இது திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பலரும் அன்புசெழியனுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த நிலையில், சரத்குமார், விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் அன்புசெழியனுக்கு ஆதரவாக பேசினர்.

மேலும் அன்புசெழியனுக்கு ஆதரவாக விஜய் ஆண்டனி ஒரு செய்தி வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் விஜய் ஆண்டனியின் கருத்துக்கு எதிராக இயக்குநர் கரு.பழனியப்பன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

கரு பழனியப்பன்‏ @karupalaniappan

விஜய் ஆண்டனி…
உங்களுக்கு நல்லவராய் தோன்றுபவர், ஆறு மாதம் முன்னர் வரை சசிகுமாருக்கும் நல்லவர்தான்!

விஜய் ஆண்டனி, நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற அதிர்ஷ்டமும், கடனை திருப்பிச்செலுத்தும் உறுதியும், அன்புச்செழியன் பற்றிய நிலைப்பாடும், மாறாதிருக்க பரம பிதா அருள் பாலிக்கட்டும்..! என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார் கரு.பழனியப்பன்.

Karu Pazhaniappan statement against Vijay Antony in AnbuChezhiyan Finance issue

அதர்வாவுடன் இணையும் தனுஷ் பட நாயகி

அதர்வாவுடன் இணையும் தனுஷ் பட நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Megha-Aakash-1தனுஷ் நடித்து வரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நாயகியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார்.

மேலும் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகும் ‘ஒரு பக்க கதை’ படத்திலும் இவர் நாயகியாக நடித்துள்ளார்.

இந்த இரண்டு படங்களும் இன்னும் வெளியாகவில்லை.

அதற்குள் அதர்வாவுடன் இணையும் வாய்ப்பு மேகா ஆகாஷ்க்கு கிடைத்துள்ளது.

‘இவன் தந்திரன்’ படத்தை தொடர்ந்து கண்ணன் இயக்கும் படத்தில்தான் இந்த வாய்ப்பு அவருக்கு வந்துள்ளது.

Dhanush heroine Megha Akash to romance with Atharva

தலைமறைவான அன்புசெழியனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

தலைமறைவான அன்புசெழியனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Police Issued Lookout Notice Against Financier Anbu Chezhiyanஇயக்குனர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் என்பவர் பைனான்சியர் அன்புச்செழியனிடம் கந்துவட்டி முறையில் கடன் வாங்கியிருந்தார்.

கடன் நெருக்கடி அதிகரித்த நிலையில், அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டார்.

எனவே தற்கொலைக்கு தூண்டியதாக அன்புசெழியன் மீது வழக்கு பதிவு செய்யப்பட, இதனையறிந்த அன்புச்செழியன் தலைமறைவானார்.

தற்போது அவரை போலீசார் தேடி வரும் நிலையில், அன்புச்செழியனுக்கு எதிராக காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வெளிநாடுகளுக்கு அவர் தப்பிச் செல்வவதை தடுக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Police Issued Lookout Notice Against Financier Anbu Chezhiyan

சிவகார்த்திகேயன்-சந்தானம்-தினேஷ் போட்டியில் இணைந்தார் சல்மான்கான்

சிவகார்த்திகேயன்-சந்தானம்-தினேஷ் போட்டியில் இணைந்தார் சல்மான்கான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

christmas release 2017இந்த வருட கிறிஸ்துமஸ் தினத்திற்கு பல படங்கள் இடையே பலத்த போட்டி நிலவும் என தெரிகிறது.

கிறிஸ்துமஸ் தினம் டிசம்பர் 25 திங்கட்கிழமை வருவதால் டிசம்பர் 22ஆம் தேதி வெள்ளிக்கிழமையை குறிவைத்து பல படங்களின் ரிலீஸ் தேதியை அறிவித்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வளர்ந்துள்ள வேலைக்காரன் படம் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதே நாளில்தான் சிம்பு இசையமைப்பில் சந்தானம் நடித்துள்ள சக்க போடு போடு ராஜா படமும் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்புகளை தொடர்ந்து அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் வளர்ந்துள்ள உள்குத்து படமும் டிசம்பர் 22ல் வெளியாகிறது.

இந்நிலையில் சல்மான்கான் நடிப்பில் உருவாகியுள்ள டைகர் ஜிந்தா ஹே என்ற ஆக்சன் படமும் டிசம்பர் 22ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சல்மான்கான் படங்களுக்கு தமிழகத்தில் நல்ல எதிர்பார்ப்பு இருப்பதால் கிறிஸ்மஸ் நாளில் பலத்த போட்டி நிலவும் என சொல்லப்படுகிறது.

30 கிலோ உள்ள MG 42 துப்பாக்கியை கொண்டு 5000 குண்டுகளை சுட்ட சல்மான்கான்

30 கிலோ உள்ள MG 42 துப்பாக்கியை கொண்டு 5000 குண்டுகளை சுட்ட சல்மான்கான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tiger zinda hai stillsசல்மான்கான் டைகர் ஜிந்தா ஹே, சல்மான் பைட், சல்மான்கான் ஆக்சன், சல்மான்கான் படங்கள், செய்திகள், சல்மான்கான் டைகர் ஜிந்தா ஹே டிச22
டைகர் ஜிந்தா ஹே’ என்றவுடன் நம் நினைவுக்கு வருவது நெஞ்சை உறைய வைக்கும் அப்படத்தின் பிரம்மாண்டமான சண்டைக்காட்சிகள் தான்.

நம்மை பதட்டத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்று வாயை பிளந்து பார்க்க வைக்கும், பரப்பரப்பான சண்டைக் காட்சிகளை கொண்ட, பாலிவுட் ஸ்டார் சல்மான் கான் டைகராக நடிக்கும் டைகர் ஜிந்தா ஹே 2017 ஆம் ஆண்டில் வெளியாகும் ஆக்ஷன் படங்களிலேயே மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாகும்.

படத்தின் டைகர் கதாபாத்திரம், ஆபத்தான மற்றும் கனரக ஆயுதங்களை ஏந்தி சண்டையிடும் கதாபத்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

படத்தில், சல்மான் வைத்திருக்கும் எந்திர துப்பாக்கியின் பெயர் MG 42. இதை வைத்து டைகர் எதிரிகளை துவம்சம் செய்யும் காட்சிதான் படத்தில் மிக முக்கியமான காட்சியாக உள்ளது.

இதுபோன்ற கனரக ஆயுதங்களை கொண்டு உருவாக்கப்படும் காட்சிகள் அவ்வளவு சுலபமல்ல.

MG 42 ஒரு நவீன தொழில் நுட்பத்தில் உருவான கனரக எந்திர துப்பாக்கியாகும். துப்பாக்கியின் எடை மட்டும் 25 முதல் 30 கிலோ இருக்கும்.

இதனுடன் தோட்டாக்களை கொண்ட மேகஸீன்களை இணைக்கும் போது இது ஒரு ஆபத்தான அழிவின் ஆயுதமாகவே மாறிவிடும்.

படத்தின் இயக்குனர் அலி அபாஸ் இக்காட்சி பற்றி கூறும் பொழுது “சல்மான் கான் போன்ற ஆக்ஷன் படத்திற்காகவே உடலை மெருக்கேற்றி வைத்திருக்கும் சிறந்த நடிகரை ஆக்ஷன் காட்சிகளில் காண்பிக்கும் போது அவருடைய உருவத்திற்கும், டைகர் ஜிந்தா ஹே போன்ற பலமான திரைக்கதைக்கும் சரியான ஆயுதமாய் MG 42 இருந்தது”.

மேலும், “படத்தின் ஹைலைட்டாக இருக்கும் இந்தக் காட்சிக்காக, சல்மான் 5000 குண்டுகளை சுட்டுள்ளார். இக்காட்சிகள் தொடர்ந்து 3 நாள்களுக்கு படமாக்கப்பட்டது.

படப்பிடிப்பின் முக்கிய தருணமாய் இந்நிகழ்வு இருந்தது. ஏனெனில் இந்தக் காட்சிகள் வெப்பமான இடத்தில் படம்பிடிக்கப்பட்டதோடு, கனரக துப்பாக்கியும் விரைவிலேயே சூடாகி விடும் என்பதால் நாங்கள் ஒரே மாதிரியான இரண்டு துப்பாக்கிகளை பயன்படுத்தி ஒரு சவாலான சூழ்நிலையில் படமாக்கினோம்”

சல்மான்கான், கேட்ரினா கைஃப் மீண்டும் இனணயும் இந்த டைகர் ஜிந்தா ஹே திரைப்படம் பார்வையாளர்களை சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் உலக தரம் வாய்ந்த ஒரு ஆக்ஷன் த்ரில்லராக இருக்கும்.

டைகர் ஜிந்தா ஹே வரும் டிசம்பர் 22-ல் வெளியாகிறது.

More Articles
Follows