தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள படம் தானா சேர்ந்த கூட்டம்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் இரண்டு பாடல்கள் இதுவரை வெளியிட்டுள்ளனர்.
இப்படத்தின் மற்ற பாடல்கள் மற்றும் டிரைலர் விரைவில் வெளியாகவுள்ளது.
இப்படத்தை அடுத்த ஆண்டு 2018 பொங்கல் தினத்தில் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் இதே நாளில் ஆர். கே. சுரேஷ் நடித்துள்ள பில்லா பாண்டி படத்தையும் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் அஜித்தின் தீவிர ரசிகராக ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சலீம், தர்மதுரை ஆகிய படங்களைத் தொடர்ந்து ஆர். கே. சுரேஷே இப்படத்தை தயாரித்து வருகிறார்.
இவருடன் முக்கிய கேரக்டரில் யோகிபாபு நடித்து வருகிறார்.
சரவணஷக்தி இயக்க, கதை, திரைக்கதை வசனம் எழுதுகிறார் எம்.எம்.எஸ். மூர்த்தி. இளையவன் என்பவர் இசையமைக்கிறார்.
Billa pandy clash with Thaana serndha kootam on Pongal 2018