கமல் தலைமையில் சினேகன் -கன்னிகா திருமணம்.; பாரதிராஜா அமீர் நேரில் வாழ்த்து

கமல் தலைமையில் சினேகன் -கன்னிகா திருமணம்.; பாரதிராஜா அமீர் நேரில் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல கவிஞரும் நடிகருமான சினேகன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதன் மூலம் படுபிரபலமானார்.

அப்போதே கமலுடன் ஏற்பட்ட நட்பினால் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.

இவர் கமல்ஹாசன் முன்னிலையில் இந்த தன் திருமணம் நடைபெற இருப்பதாக சினேகன் தெரிவித்து இருந்தார்.

அதன்படி இன்று ஜூலை 29-ஆம் தேதி காலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் சினேகன் -கன்னிகா ரவி திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தில் இயக்குனர் பாரதிராஜா, ஞானசம்பந்தன், அமீர் உள்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்தினர்.

விருதுநகர் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் நடிகை கன்னிகா ரவி.

சமுத்திரக்கனி அதுல்யா நடித்த ’அடுத்த சாட்டை’ உள்பட ஓரிரு படங்களிலும் நடித்துள்ளார். டிவி சீரியல் தொடர்களிலும் நடித்துள்ளார்.

இவர் சமூக வலைத்தளங்களில் தான் பயின்ற சிலம்பாட்ட வீடியோக்களை பதிவிடுவார். இதனால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Bigg Boss snehan married Tamil actress Kannika Ravi with Kamal Haasan Blessings

‘வலிமை’ ரிலீஸ் அப்டேட்..: அஜித் ரசிகர்களை அசர வைக்க படக்குழு திட்டம்

‘வலிமை’ ரிலீஸ் அப்டேட்..: அஜித் ரசிகர்களை அசர வைக்க படக்குழு திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரித்துள்ள பிரமாண்டமான படம் ‘வலிமை’.

அஜித் ஜோடியாக ஹூமா குரேஷி நடிக்க வில்லனாக கார்த்திகேயா நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

அண்மையில் வெளியான வலிமை மோசன் போஸ்டரில் பின்னணி இசையை தெறிக்கவிட்டுருந்தார்.

இந்த படத்தின் 90% படப்பிடிப்பு முடிந்து விட்ட போதிலும் வெளிநாட்டில் சில காட்சிகளை படமாக்க உள்ளனர்.

எனவே ‘வலிமை’ படக்குழுவினர் கூடிய விரைவில் ஃபாரீன் பறக்க உள்ளனர்.

அனைத்தையும் முடித்து விட்டு நாடு திரும்பியதும் புதிய போஸ்டரை வெளியிட உள்ளனர்.

அதில் நிச்சயம் ரிலீஸ் தேதி இடம் பெறும் என சொல்லப்படுகின்றது.

2021 தீபாவளிக்கு ரஜினியின் ‘அண்ணாத்த’ ரிலீசாவதால் அதனுடன் மோதாமல் 2021 கிறிஸ்மஸ் அல்லது 2022 பொங்கலுக்கு படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம்.

ஒருவேளை போஸ்ட் புரொடக்சன் பணிகள் விரைவாக முடிந்தால் 2021 அக்டோபரில் கூட ரிலீசாகலாம் எனவும் சொல்லப்படுகிறது.

என்ன தல… அஜித் ரசிகர்களே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.

Ajith’s Valimai release date update is here

‘சார்பட்டா பரம்பரை’யை அடுத்து தலித் மாணவர் தற்கொலையை படமாக்கும் ரஞ்சித்.?

‘சார்பட்டா பரம்பரை’யை அடுத்து தலித் மாணவர் தற்கொலையை படமாக்கும் ரஞ்சித்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித்.

இதனால் இந்தியா முழுக்க பிரபலமானார்.

ஆர்யா நடித்து அண்மையில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ படமும் இயக்குனர் ரஞ்சித்துக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது.

இந்த நிலையில் ரஞ்சித்தின் அடுத்த படம் குறித்த தகவல்கள் உறுதியாகியுள்ளது.

காதல் கதையாக உருவாகும் இந்த படத்திற்கு ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்று பெயரிட்டு இருக்கிறாராம்.

இதல் ஜெயராம் மகன் காளிதாஸ் நாயகனாக நடிக்கவுள்ளார்.

நாயகியாக ‘சார்பட்டா பரம்பரை’ புகழ் மாரியம்மாவாக நடித்த துஷாரா விஜயன் நடிக்கிறாராம்.

கடந்த 2015டில் ஐதராபாத்தில் மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கும், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

அப்போது கலவரத்தில் ஈடுபட்டதாக சில மாணவர்கள் பல்கலைக்கழத்திருந்து நீக்கினர்.

அதில் தலித் மாணவர் ரோஹித் வெமுலாவும் ஒருவர். இதனையடுத்து அந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

தற்போது இந்த சர்ச்சைக்குரிய மோதலை தான் ரஞ்சித் திரைப்படமாக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Ranjith is all set to direct a romance titled Natchathiram Nagargiradhu

நடிகரும் எம்எல்ஏ-வுமான முகேஷின் 2வது மனைவியும் விவாகரத்து கேட்டார்.; இதான் காரணமா.?

நடிகரும் எம்எல்ஏ-வுமான முகேஷின் 2வது மனைவியும் விவாகரத்து கேட்டார்.; இதான் காரணமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள சினிமாவில் மிக பிரபலமானவர் நடிகர் முகேஷ். மலையாளத்தில் இவர் 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். சில டிவி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருக்கிறார்.

இவர் சினிமாவில் பல விருதுகளை வெனறிருக்கிறார்.

தமிழில் மனைவி ஒரு மாணிக்கம், ஜாதி மல்லி, பொன்னர் சங்கர், ஐந்தாம் படை, உள்ளிட்ட சில படங்களில் நடித்து இருக்கிறார்.

தற்போது கேரள மாநிலம் கொல்லம் தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார் முகேஷ். தற்போது இவருக்கு வயது 64.

முகேஷுக்கும் நடிகை சரிதாவுக்கும் 1988-ல் திருமணம் நடைபெற்றது.

கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பிறகு 2011-ல் இவர்கள் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

முகேஷ்க்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக சரிதா குற்றம் சாட்டினார்.

இதன்பின்னர் பரத நாட்டிய கலைஞர் மெத்தில் தேவிகா என்பவரை 2013-ல் நடிகர் முகேஷ் 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு தேவிகாவும் முகேஷை விவாகரத்து செய்ய நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து தேவிகா கூறியுள்ளதாவது…

“முகேஷ் உடன் 8 ஆண்டுகள் வாழ்ந்தும் அவரை என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.

இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவரை புரிந்துகொள்ள முடியாது. எனவே தான் அவரை பிரிய முடிவு செய்தேன். அவர் நல்ல கணவர் இல்லை.

எனக்கு முகேஷ் மீது எந்த கோபமும் இல்லை. விவாகரத்து என்பது தனிப்பட்ட முறையில் நான் எடுத்த முடிவு’’ என கூறியுள்ளார்.

இந்த விவகாரம் மலையாள சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Devika confirms her divorce with Mukesh Could not understand him even after eight years

முதன்முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா

முதன்முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டாக்டர்’ படம் விரைவில் ரிலீசாகவுள்ளது.

இந்த படத்தை முடித்து விட்டு ‘அயலான்’ மற்றும் ‘டான்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன்.

இந்த நிலையில் விரைவில் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்
என்பதை நாம் பார்த்தோம்.

இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்த படத்தை ‘ஜாதி ரத்னாலு’ என்ற காமெடி படத்தை இயக்கிய அனுதீப் இயக்கவிருக்கிறாராம்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்தப் படம் உருவாகுவதால் இதன் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகிறார் சிவா.

இதில் நாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். ராஷ்மிகாவும் ஓகே சொல்லிடுவார் என்றே தெரிகிறது.

Rashmika Mandanna to romance Sivakarthikeyan

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் & ப்ரியா பவானி சங்கர் இணையும் பட அப்டேட்

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் & ப்ரியா பவானி சங்கர் இணையும் பட அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் ஜோடியாக ப்ரியா பவானிசங்கர் நடித்து வருகிறார்.

‘அருண்விஜய் 33’ #AV33 என தற்காலிக பெயரிட்டுள்ளனர்

இதில் யோகிபாபு, பிரகாஷ்ராஜ், ராதிகா, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ஜிவி பிரகாஷ் இசையில் டிரம்ஸ்டிக் புரொடக்ஷன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பழனியில் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா தொற்று ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

New update on Arun Vijay – Hari project

More Articles
Follows